’சர்வரோக நிவாரணி’ சுஜாதா

Thursday, August 5, 2010
நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.
இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.
அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.
‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!
பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர்,சுஜாதா,பாரதிராஜா,பாக்யராஜ்,சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.
பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா
படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.


சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்!
ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னை மட்டுமே மெச்சிக்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!


இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா..
படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின்
வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!

ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா
பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை
‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன்.
எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.
ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

37 comments:

செந்தழல் ரவி said...

என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

மேடையில பேசறதுக்காக போறப்போ..சுஜாதா இடுப்புல
‘இருக்கவா நழுவவா’னு குஜாலா ஊசலாடுது வேட்டி


ரெண்டு முறை வருது !!

மதன்செந்தில் said...

சுஜாதாவின் எழுத்துக்களை போலவே நல்லா எழுதி இருக்கீங்க.. இனி எத்தனை எழுத்தாளர்கள் வந்தாலும் சுஜாதாதான் மாதிரி..

நன்றி தலைவனை நினைவு கூர்ந்தமைக்கு..

டம்பி மேவீ said...

wow .... mind blowing flow....

narrative arrests me

இராமசாமி கண்ணண் said...

சூப்பர் எழுத்து நடை..

chinnasamy said...

சுஜாதாவை விரும்பாதவன் மூளையில முள்வேலி தான் போட்டிருக்கும்.

பத்மநாபன் said...

அருமை உதயசூரியன்.. ஆசானின் சிறப்பே அதுதான் வரிக்கு வரி சிரிக்கவைக்கிறது.


//எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும்.// இதை படித்துவிட்டு விவஸ்த்தை இல்லாமல் பொய் எழுதும் எழுத்தாளர்கள் திருந்தட்டும் அல்லது வருந்தட்டும்.

//ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.// அவரது வாசகனுக்கே உரித்தான நகைச்சுவை.

//காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு// சத்தமில்லாமல் வந்த நறுக்.

//ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ // வெடிச்சிரிப்பு நகைச்சுவை..

சிரிச்சு முடிச்சிட்டு அடுத்த ரவுண்ட் வர்றேன்..

வாழ்த்துக்களும்,நன்றியும்.

Annamalai Swamy said...

நன்றாக எழுதியிருகிறீர்கள் நண்பரே! நடை அருமை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வார்த்தை ஜாலத்துல நீயும் கட்டிப் போடுற சாமி..!

நம்ம ஆசானை இன்னிக்கு நினைச்சாலும் கண்ணுல தண்ணி குபீர்ன்னு பொங்குது..!

Cable Sankar said...

சுஜாதாவை பற்றி நினைவுகூறும் போதும், உங்களது வழக்கமான சுவாரஸ்யத்தைமீறி அவரது எழுத்தைப் போலவே படு சுவாரஸ்யம்.. தல தலதான்

Cable Sankar said...

சுவாரஸ்யமான நடை.. தல தலதான்..

ராம்ஜி_யாஹூ said...

சுஜாதா பற்றி எழுதியமைக்கு நன்றிகள்

ஆதவா said...

சுஜாதா சார் மாதிரி இன்னொருத்தர் சான்ஸே இல்லைங்க.. நான் இப்போதான் ஏதோ தக்கி முக்கி எழுதிட்டு இருக்கேன். இந்த கால கட்டத்தில அவர் இல்லாதது ரொம்பவும் வருத்தமா இருக்கு......

அப்பறம்ன்.... உங்க எழுத்து நடை.......... சொல்லவேண்டியதேயில்லை, நீங்கள் பத்திரிக்கையில் வேலை செய்பவர். சரளமாகத்தான் வரும்.


ஒரே ஒருமுறை ஆ,.வியில் மூன்றுவரிகளுக்குள் ஏதோ ஒரு பாணியில் கவிதை எழுதச் சொன்னார் (கற்றதும் பெற்றதும் என்று நினைக்கிறேன்) அது எழுதி அனுப்பி ஆ.வியில் வந்தது.... அதைவிட என் எழுத்தை படித்தார் என்று எனக்குள் பெரிய துள்ளல்..... அப்போ நான் ரொம்ப சின்னப்பையன்.. எல்லோரிடமும் ஆ.வியை எடுத்துக் கொண்டுபோய் காண்பித்தேன்!!

சுஜாதாவின் கடைசி திரைப்படம், எந்திரன்........ நிச்சயம் பார்க்கவேண்டும்.. அவருக்காக!!

பத்மநாபன் said...

//கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே! //

அதுக்கு ஒரு நல்ல மனசு வேண்டும், அது வாத்தியாரிடம் நிறைய இருந்தது

//போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க// இப்படி போட்டது போட்டபடி ஜாவா படிக்க ஒரு முறை சொல்லியிருக்கார் அவ்வளவு Authenticity.

சொர்க்கம் தாங்காது நித்ய அகண்ட பஜனை நடக்கும் என்பார். நரகம் இப்பொழுது சுவாரஸ்யமாக இருக்கும்.
//உ.த அவர்களின் பின்னோட்டம்
நம்ம ஆசானை இன்னிக்கு நினைச்சாலும் கண்ணுல தண்ணி குபீர்ன்னு பொங்குது.. // தமிழ் எனும் மொழி கொண்டு வாசிப்பு என்கிற அறிவினால் எற்பட்ட உறவுதான், நன்றியாக குபீரென்று பொங்கவைக்கிறது.

ஸ்ரீ.... said...

வசீகர எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய சிறப்பான இடுகை. அவரிடமே பாராட்டு வாங்கிவிட்டீர்கள். நான் பாராட்டுவதற்கு ஏதுமில்லை. உங்கள் இடுகைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....

எம்.பி.உதயசூரியன் said...

//!செந்தழல் ரவி said.
ஊசலாடுது வேட்டி ரெண்டு முறை வருது !//

ஆமா பாஸ். ஸாரி, கொஞ்சம் ஊசலாடிடுச்சு!

எம்.பி.உதயசூரியன் said...

//மதன்செந்தில் said...நன்றி தலைவனை நினைவு கூர்ந்தமைக்கு//

நன்றி மதன். மறக்க முடியாத அற்புத மனிதர் அவர்!

எம்.பி.உதயசூரியன் said...

//டம்பி மேவீ said...wow .... mind blowing flow....narrative arrests me//

thanks a lot டம்பி!

எம்.பி.உதயசூரியன் said...

//இராமசாமி கண்ணண் said...
சூப்பர் எழுத்து நடை//

பாராட்டுக்கு மகிழ்ச்சி சார்! தமிழ் தந்த தர்மம்.

எம்.பி.உதயசூரியன் said...

// chinnasamy said...
சுஜாதாவை விரும்பாதவன் மூளையில முள்வேலி தான் போட்டிருக்கும்//

வைதவர் சிலரையும் வாழ்த்திய உயரிய
வைணவர் சுஜாதா!

எம்.பி.உதயசூரியன் said...

// பத்மநாபன் said...‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.// அவரது வாசகனுக்கே உரித்தான நகைச்சுவை.//

சுஜாதாவின் வாசகன் என்பதே நமக்கெல்லாம் பெருமை சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//Annamalai Swamy said...
நன்றாக எழுதியிருகிறீர்கள் நண்பரே! நடை அருமை//

அண்ணாந்து பார்க்க வைத்த அன்னாரின் எழுத்துக்களைப் படித்ததால் கிடைத்த
நடை இது நண்பரே! நன்றி.

எம்.பி.உதயசூரியன் said...

//உண்மைத் தமிழன்..நம்ம ஆசானை இன்னிக்கு நினைச்சாலும் கண்ணுல தண்ணி குபீர்ன்னு பொங்குது..!//

உண்மை தமிழன்! நிரப்ப முடியாத ஒரு
மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு
போயே போய்விட்டார் அந்த மகா வெற்றியாளர்!

எம்.பி.உதயசூரியன் said...

//Cable Sankar said...
சுஜாதாவை பற்றி நினைவுகூறும் போதும், உங்களது வழக்கமான சுவாரஸ்யத்தைமீறி அவரது எழுத்தைப் போலவே படு சுவாரஸ்யம்//

கேபிள் சங்கர் பாராட்டு நோபல் பரிசு மாதிரி. இதுக்குக் காரணம் சுஜாதா எழுத்துக்களைப் படிச்சு பத்திகிச்சு நம்ம திரி!

எம்.பி.உதயசூரியன் said...

//ஆதவா said...ஆ,.வியில் மூன்றுவரிகளுக்குள் ஏதோ ஒரு பாணியில் கவிதை எழுதச் சொன்னார் அது எழுதி அனுப்பி ஆ.வியில் வந்தது.... அதைவிட என் எழுத்தை படித்தார் என்று எனக்குள் பெரிய துள்ளல்....//

சுஜாதா ரசித்த ஆதவா...வாழ்த்துக்கள்!

எம்.பி.உதயசூரியன் said...

// ஸ்ரீ.... said...வசீகர எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய சிறப்பான இடுகை. அவரிடமே பாராட்டு வாங்கிவிட்டீர்கள்//

சில பாராட்டுகள் கல்வெட்டு. அதில் முக்கியமானது சுஜாதாவின் ‘ஷொட்டு’.

Anonymous said...

Any special occasion for remembering Sujatha today ?

வினோத்கெளதம் said...

சுஜாதா சார் எப்போதுமே சுவாரசியம் தான் உங்கள் நடையில் இன்னும் சுவாரசியம்..

ஸ்ரீ.... said...

நண்பரே,

விகடனில் உங்கள் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

ஸ்ரீ....

R.Gopi said...

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத்துலக ஜாம்பவான் திரு.சுஜாதா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்...

அதுவும் உங்க ஸ்டைல்ல எழுதி, படிக்கறப்போ.....

“தல” சும்மா சூப்பரா இருந்தது....

நிறைய எழுதுங்கள் “தல”....

எம்.பி.உதயசூரியன் said...

//வினோத்கெளதம் said...சுஜாதா சார் எப்போதுமே சுவாரசியம் தான்//

என்றும் 16 அவர்தானே வினோத்!

எம்.பி.உதயசூரியன் said...

//.ஸ்ரீ said...விகடனில் உங்கள் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பரே! தாய்வீட்டு வாழ்த்து அது!

எம்.பி.உதயசூரியன் said...

//R.Gopi said...நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத்துலக ஜாம்பவான் திரு.சுஜாதா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்..நிறைய எழுதுங்கள் //

பகிர்தலுக்கு நன்றி கோபி!

எம்.பி.உதயசூரியன் said...

**** ஜெவாசகன் said...
//யாரோ சுஜாதா பற்றி குளறியதற்கு நீங்க குமுறுன குமுறலை நான் வாசித்தேன் நண்பரே//

அய்யா , ஊர் பேர் தெரியாத வெறும்பயல்களுக்கெல்லாம் “அவரை “ பற்றியெல்லாம் பேச என்ன தகுதி****

நிஜப்பெயர் சொல்லாத முகம் தெரியாத நண்பா! ஒருவரது அபிமான எழுத்தாளர் பற்றி விமர்சனம் வந்தால், அவரது தீவிர வாசகருக்கு கோபம் வருவது இயல்பானதே...இதோ, உங்களுக்கு வந்தது போல! இருப்பினும் குறிப்பிட்ட அந்த பதில் யாரையும் சங்கடப்படுத்தக்கூடாது என்பதால் பின்னூட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது. ஓகே?

ஜெவா said...

நயத்தகு நன்றி

aartee said...

thanks 4 writing about sujatha in his own way.

surendar said...

super sir sujatha sir mathiri innorothar varamudiyathu enga thalaya pathi eluthanathaukku romba romba nandre.

விஜயன் said...

எழுத்துலக ஜம்பவான் சுஜாதாவை பற்றி ஒரே வார்த்தையிலும்(’சர்வரோக நிவாரணி’) ஒற்றை வரியிலும்,கட்டுரையாகவும்.முப்பரிமாண விமர்சனம் தந்துள்ளீர்கள்.. அருமை.சுஜாதாவின் எழுத்துக்களின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் நானும் பெறுமைப்படுகிறேன். தமிழ் மொழியில் புது புது அர்த்தங்கள் வைத்தவர் சுஜாதா.(உங்கள் கட்டுரையில் "சிறும்பாலும்" என்கிற வார்த்தை கவனிக்க).சுஜாதா வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு வேறிடம் செல்லவில்லை.பல எழுத்தாளர்கள் உருவாக சூரியனாக சுடர் விடுவார்.

 
சுடச்சுட - by Templates para novo blogger