சிம்ரன் அய்யர் ஸ்பீக்கிங்!

Wednesday, April 29, 2009


ஒட்டுமொத்த ரசிகர்கூட்டமே விசிலடிச்சு ரசிப்பாங்கன்னு கனா கண்ட ஒரு ‘திடீர்‘ நடிகர்...ஒத்த ரசிகரா குத்தவெச்சு உக்காந்து விசும்பி அழுகற சோகக்கதைய சிரிக்காம கேளுங்கண்ணே!போன வாரத்துக்கு மொத வாரம்..மதுரைக்கு போயிருந்தேன்ணே. நம்மூர்ணே. நண்டுசிண்டுகள பாத்துட்டு..அல்லுசில்லு வேலைகளயும் முடிச்சிட்டு..பசங்களோட மீனாட்சியம்மன் கோயிலுக்கு போனோம். மனசா தரிசனம் பண்ணோம்ணே.

அப்புறமா..பக்கத்துலேர்க்கற ஆரியபவனுக்கு போயி ஆறாத காபிய சுருக்குன்னு குடிச்சம்ணே. அப்ப..எதுத்த பெஞ்ச்ல உக்காந்து மெதுவடைய துண்டுதுண்டா விண்டு..மெண்டு திண்டுகிட்டிருந்த ‘பெஞ்சக்குச்சி‘ சைஸ் அய்யர்..என்னை பாத்து அஞ்சு இஞ்ச்சுக்கு சிரிச்சார்ணே.(எப்டிண்ணே நம்ம மதுரை பாஷை?)

இவரை எங்கியோ பாத்தது மாதிரி இருக்கேனு பாத்தா...‘அய்..‘பிதாமகன்‘ புகழ் சிம்ரன் அய்யர்! நான் அவரை கண்டுபிடிச்சதை..அவர் கண்டுபிடிச்சப்போ ‘அமெரிக்காவ கண்டுபிடிச்ச கொலம்பஸ் ஹேப்பி‘ அய்யர் முகத்தில தெரிஞ்சதுண்ணே.கொரில்லாவையே மறந்துபோறவய்ங்க மத்தியில இந்த கொசுவை ஞாபகமில்லாதவங்களுக்காக இந்த கொசுவத்தி சுருள்ணே.. (அதான் பழைய ஃப்ளாஷ்பேக்ணே!) ‘பிதாமகன்‘ படத்துல சிம்ரன்,விக்ரம்,சூர்யா,கருணாஸ் ஆடிக்கலக்கற ‘முத்தைத்தரு பத்தித்திருநகை‘ ரீமிக்ஸ் பாட்டுல..தொத்தலான சிம்ரனை இப்படி பாடிகிட்டே வத்தலா சுத்துவார்ல..அவர்தான்ணே இந்த சீனிவாசன் அய்யர்! படம் வந்தபிறகு சீனிவாச அய்யரை ‘சிம்ரன் அய்யர்‘னு பட்டப்பேரு வெச்சு மதுரை ஜனங்க கூப்பிட..‘அந்த சொக்கநாதரே வந்து ஆயிரம் பொன் தந்த மாதிரி‘ சொக்கிப்போயிட்டாரு நம்ம அய்யர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல அர்ச்சகரா இருக்கார்ணே.‘‘இப்போ நீங்க சிம்ரன் அய்யரா..இல்ல..சீனிவாசன் அய்யரா?’’னு லபக்தாஸ் மேனிக்கு கேட்டேன். ‘வட்டக்கப்புல‘ வந்த காபியையும், தன்னோட ஆத்தாமையையும் சேர்த்து ‘சர்ர்ர்‘னு ஒரே ஆத்தாஆத்துனாரு பாருங்க..‘‘சார்..நோக்கு தெரியுமோ? எல்லாம் விதிப்படிதான் நடக்கும்ங்கறேன். பல வருஷத்துக்கு முன்னால நம்ம(!) சிம்ரன் மதுரைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருந்தா. அவாள பக்கத்துல பாத்துடணும்னு அடிச்சுப்புடிச்சு ட்ரை பண்ணேன். ம்ஹீம். சித்திரை திருவிழாவுல சிக்குன சித்தெறும்பு மாதிரி திணறிட்டேன். மனசு கேக்கல.‘தாயே மீனாட்சி..லோகநாயகியான உன்னை தினமும் கிட்டத்திலேர்ந்து தரிசிக்கற கண்ணால..ஒரு சாதாரண நடிகைய பாக்க நெனச்சது தப்பா?‘னு புலம்பினேன். அம்மனுக்கு தாங்குமா? ‘‘போடா படவா..நீ அந்த சிம்ரனோடவே நடிச்சு பேர் வாங்கிக்கோ‘‘னு அருள்பாலிச்சிட்டா. அதை நீங்களே பாத்தீங்களோன்னோ?‘‘

இப்படி கேட்டுட்டு டம்ளர்லேர்ந்து கொதிக்கற காபியை அவரோட உள்தொண்டைக்குள்ள ஊத்துனாரு பாருங்க..ஆத்தே..என் வாயில புகை வந்ததுங்ணே. அதே சூட்டோட ஆரம்பிச்சாரு..‘‘நன்னா செதுக்கி வெச்ச சிற்பம் மாதிரின்னா சிம்ரன்! அந்த சிம்ரன் அனுபவத்தை (சாமி சாமி) நீங்க கேக்கவேல்லியே’’ன்னவர்கிட்ட..தேனியில அந்த பாட்டு ஷூட்டிங் நடந்தப்போ நான் உள்பட நம்ம பத்திரிகையாளர் படையே அங்கே இருந்துச்சுன்னு சொன்னேன்.

இன்னும் குஷியான அய்யர்,‘‘அப்ப என்ன நடந்துச்சு தெரியுமோல்லியோ? அப்படியே சிம்ரனை சுத்திகிட்டே நான் பாடணும். நானென்ன சிவாஜியா? ஒரே டேக்ல ஓகே பண்ண? ஆறேழு டேக் வாங்கிட்டேன். ஆனா பாருங்கோ..துளிகூட கோச்சுக்கலையே சிம்ரன்’’னு சொன்னவர்..வெள்ளந்தியா அடுத்து சொன்னதை வில்லங்கமா நெனச்சு வில்லச்சிரிப்பு சிரிக்காம படிங்கண்ணே..‘‘அந்த ஒல்லிப்பிச்சான் இடுப்பை வெச்சுகிட்டு ஆறேழு டேக்லயும் ஒரேமாதிரி வளைச்சு நெளிச்சு ஆடிகிட்டேர்ந்தா சிம்ரனுக்கு இடுப்பு வலிக்காதா பின்னே! நானும் சளைக்கறதா இல்ல. ஆனாலும் சிம்ரன் அந்த வலியை காட்டிக்காம,‘உங்களால பேஷா செய்யமுடியும்..நல்லா பண்ணுங்க அய்யரே’னு சிம்ரன் ஊக்கப்படுத்தினது இன்னும் என் காதுல ஒலிச்சிகிட்டே இருக்கறது!’’னு அடுத்த மடக்கு காபிய குடிச்சாரு.

அப்போ..பக்கத்து டேபிள்ல உக்காந்த ரெண்டு லேடீஸ் ‘‘யேய்..ஆமாடி! அவரேதான்’’னு பேசிகிட்டே அய்யர் பக்கம் திரும்பி,‘‘நீங்கதானே பிதாமகன்ல சிம்ரனோட நடிச்சவரு?’’னு கேக்க..‘‘ சாட்சாத் நானேதான்’’னு ‘எப்புடி..சாதிச்சிட்டோம்ல‘ங்கிறமாதிரி ஒரு லுக் விட்டு சிரிச்சாரு. அப்படியே என்கிட்ட‘‘பாத்திங்களோன்னோ..இதான் இப்ப எனக்கு பிராப்ளமே. இந்த ஜனங்கள்ளாம் அடுத்து நான் என்ன படத்துல ஆக்ட் பண்ணப்போறேன்னு அக்கறையா விஜாரிக்கறா. ஆனா நம்ம திறமைக்கு (போடுங்கோ) தக்கனாப்ல ரோல் அமையணுமோல்லியோ? அட்லீஸ்ட்..நம்ம நமீதா.. இல்ல.. நயன்தாரா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரோட நடிச்சாலாவது எனக்கான ரீஎன்ட்ரி பேஷா இருக்குமோல்லியோ? அதான் அவா மேனேஜர்ஸ், சில டைரக்டர்ஸ்னு கான்டாக்ட் பண்ணிகிட்டிருக்கேன்’’னார்.

எந்திரிச்சவர் தன்னோட இடுப்பிலிருந்த செல்ஃபோனை உருவி ‘கீக் கீக்‘னு டயல் பண்ணி ‘‘ஹேல்லோ.. சிம்ரன் அய்யர் ஸ்பீக்கிங்’’னு ஜூட்டிக்கா பேசுனாரு. ஆப்போசிட்ல என்ன ஆப்புனு தெரியல..ஆஃப் ஆயிட்டாரு. அப்படியே நடைய கட்டினோம்.

மனசுக்குள்ள உக்காந்து மணியடிக்கிற சினிமா ஆசையும், கோயில்ல நின்னு மணியடிக்கிற மந்திர ஓசையும் பாடாய்ப்படுத்த..அங்கிட்டும் இங்கிட்டுமா தொங்கிட்டு கெடக்கற இந்த ‘மதுரைல மாட்ன சுந்தரபாண்டியனை‘ நெனச்சு சிரிக்கறதா.. அழுகறதா? சொல்லுங்கண்ணே!

17 comments:

Sridhar said...

வழக்கம் போல் கலக்கல். சீக்கிரம் சிம்ரன் அய்யர் நயந்தார அய்யர் ஆக வாழ்த்துக்கள். ஹி ஹி ஹி

சிம்ரன் படம் அருமை சார்

butterfly Surya said...

வழக்கம் போல் கலக்கல்.

Sridhar சார். வழக்கமா இதை நான் தான் சொல்லுவேன்.

முந்தி விட்டீர்களே.

நானும் இதையே சொல்றேன்.

எம்.பி.உதயசூரியன் said...

NAMMA VEETTU POOCCHEDIYIL UTKAARNDHAPODHU
VASEEGARA RASANAIYODU
MAGIZHA VAITHADHU "VANNATHUPOOCHI"YIN VARUGAI!

SIRAGU VIRITHU ADHU PARANDHAPODHUDHAAN
UNARNDHU RASITHEN
ADHAN ULAGA AZHAGAI!
"VANNATHUPOOCHIYE"..
NEE EMAKKU PERUMAI!

ENDRUM NATPUDAN..
M.P.UDAYASOORIYAN @ FRIENDS.

அன்புச்செல்வன் said...

//நம்ம வீட்டு பூச்செடியில் உட்கார்ந்தபோது
வசீகர ரசனையொடு
மகிழ வைத்தது "வண்ணத்துபூச்சி"யின் வருகை!

சிறகு விரித்து அது பறந்தபோதுதான்
உணர்ந்து ரசித்தேன்
அதன் உலக அழகை!
"வண்ணத்துப்பூச்சியே"..
நீ எமக்கு பெருமை!

என்றும் நட்புடன்..
-M.P.உதயசூரியன்//

ஆஹா... கவிஞர் உதயசூரியன் பே(!?)....

மஞ்சள் ஜட்டி said...

சீனிவாச அய்யர் ---> சிம்ரான் அய்யர் ---> "சாமான்" அய்யர்....???? நம்ம ஆளுங்க விடுற ஜொள்ளுக்கு அளவே இல்லை...

கோவி.கண்ணன் said...

//அவர் கண்டுபிடிச்சப்போ ‘அமெரிக்காவ கண்டுபிடிச்ச கொலம்பஸ் ஹேப்பி‘ அய்யர் முகத்தில தெரிஞ்சதுண்ணே.//
:)

சிம்ரன் அய்யர்

எம்.பி.உதயசூரியன் said...

அன்பு..பே! கலக்கல்..பே!
ஹி ஹி ஹி..ஹேப்பி..பே!

Anonymous said...

சிம்ரன் படம் அருமை.

butterfly Surya said...

மொக்கையும் ஜொள்ளும் அக்கப்போரும், அடிதடியும் மிகுந்த வலையுலகில் வராது வந்த மாமணியே வருக வருக..


அண்டங்களையும் அதிர வைக்கும், முண்டங்களையும் சிரிக்க வைக்கும் வலையுலக நகைச்சுவை சக்ரவர்த்தியே..... இந்த வண்ணத்து பூச்சியின் வலைக்கு வந்து கவிதை பாடிய பெருந்தகையே.. கவிஞரே.. நீவிர் வாழ்க. அவரும் (அந்தணன் ) வாழ்க.. வாழ்க..

உங்கள் எழுத்து பதிவேறும் நாளெல்லாம் எங்களுக்கு {மே 7 } தான். அதாங்க உலக சிரிப்பு தினம்.

லிம்ப் திரவத்தை ஒட வைக்க Lump பா கொடுக்கிறீங்களே..

உமது எழுத்து கிழக்கே உதிக்கும் சூரியன் போல் என்றும் உதிக்கட்டும்.


எங்கள் ஒட்டு உதய சூரியனுக்கே...

{அம்மா கட்சி காரங்க தப்பா நினைச்சுகாதிங்க... இது வேற உதயசூரியன்.

Sridhar said...

மொக்கையும் ஜொள்ளும் அக்கப்போரும், அடிதடியும் மிகுந்த வலையுலகில் வராது வந்த மாமணியே வருக வருக

நீங்களும் கவிதை பே யா(!?)....

{அம்மா கட்சி காரங்க தப்பா நினைச்சுகாதிங்க)

நிச்சயமா நினைக்க மாட்டாங்க. ஏன்ன உதய சூரியனுக்கு அந்த பெயர் வச்சதே நம்ம எம்.ஜி.ஆர் தான்

butterfly Surya said...

நீங்களும் கவிதை பே யா(!?)....
/// ஸ்ரீதர் சார் அய்யய்யோ இல்லை..


பே... பேசும் படம். சினிமா மட்டும் தான்...


உதய சூரியனுக்கு அந்த பெயர் வச்சதே நம்ம எம்.ஜி.ஆர் தான்/// அட இந்த பெயர்காரணத்துக்கு பதிவேதும் இல்லையா உ.சூ சார்.

விரைவில் எதிர்பார்க்கிறோம்.

எம்.பி.உதயசூரியன் said...

ஸ்ரீதர் சார் !
வண்ணத்துபூச்சி
வலைவிரிச்சிட்டாரே..காரணத்தை சீக்கிரம் சொல்றேன்!

Venkatesh Kumaravel said...

//அண்டங்களையும் அதிர வைக்கும், முண்டங்களையும் சிரிக்க வைக்கும் வலையுலக நகைச்சுவை சக்ரவர்த்தியே..... இந்த வண்ணத்து பூச்சியின் வலைக்கு வந்து கவிதை பாடிய பெருந்தகையே.. கவிஞரே.. நீவிர் வாழ்க//
அல்டிமேட்டு! பெரிய ரிப்பீட்டேய்!

செம காமெடி பதிவு! தற்போது பிரபலமாக இருக்கும் ஜனரஞ்சகமான பதிவர்கள் பட்டியலில் கூடிய விரைவில் சேரப்போகிறவர்.. வாழ்த்துக்கள்ணே!

கண்ணா.. said...

ஹல்லல்லோ.....அஜித் பதிவு போட்டு ..... நான் அதுக்கு கமெண்டும் போட்டனே.......

அத காணலையே.....

என்னாங்க நடக்கு இங்க

எம்.பி.உதயசூரியன் said...

WELDON KANNA! NEENGA EPPAVUME FIRST MATTUMALLA! BEST KANNA BEST!
VAANGA THALA VAANGA! ( Kanna, unga comment.ku replyum pannitten thideernu page display problem aagiduchu. saantham plz.

butterfly Surya said...

வண்ணத்துபூச்சி
வலைவிரிச்சிட்டாரே..காரணத்தை சீக்கிரம் சொல்றேன்!/////

அப்படி போடுங்க.....

Bala said...

சிம்ரன் படம் அருமை.

 
சுடச்சுட - by Templates para novo blogger