‘சர்வரோக நிவாரணி’ சுஜாதா!

Friday, May 22, 2009





முன்குறிப்பு: நேத்து காலைவரைக்கும் மனசு இனம்புரியாத கவலைல சிக்கித்தவிச்சது. அப்புறமா ‘நக்கீரன்’ அட்டைப்படக் கட்டுரை படிச்சபிறகு ‘இனம்’ புரிஞ்ச நிம்மதி! இந்த சந்தோஷத்தோட அட்டகாசமா நம்ம பட்டையக் கௌப்புவோமா? (ஸாரி..வண்ணத்துபூச்சியார்! ‘புத்தகப் பிரியரின்’ மேட்டர் கொஞ்சம் ‘எ‘சகுபிசகா இருக்கு! அதை உங்களுக்கு ஸ்பெஷலா மெயில் பண்றேன். ப்ளீஸ்!)
நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.
இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.
அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.
‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!
பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர்,சுஜாதா,பாரதிராஜா,பாக்யராஜ்,சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.
பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

‘ஐயையோ..அப்புறம் என்னாச்சு’? அடுத்த பதிவு வரை வயித்துல நெருப்பையும், இடுப்புல வேட்டியையும் கட்டிகிட்டிருங்க!

28 comments:

Venkatesh Kumaravel said...

மீ த பர்ஸ்டு?
வழக்கம் போல.. வார்தை ஜாலத்தில் மயங்கி நிற்கிறேன்.. சீக்கிரம் அடுத்த பதிவு போடவும்..

செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
செந்தில்குமார் said...

மீண்டும் ஒரு கலக்கல் பதிவு...

// ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்! //

தமிழ் உங்களுக்கு 'சோறு' மட்டும் இல்ல சார், ஒரு நான்-வெஜ் ஃபுல் மீல்ஸ்-ஏ போடும்... அந்த அளவுக்கு தமிழ் உங்க கைல... அல்லது.... கணினில வெளையாடுது.. அசத்துங்க ... தொடர்ந்து அசத்துங்க...

எம்.பி.உதயசூரியன் said...

//தமிழ் உங்களுக்கு 'சோறு' மட்டும் இல்ல சார், நான்-வெஜ் ஃபுல் மீல்ஸ்-ஏ போடும்//

‘அட!’..அப்போ செந்தில்குமார்கிட்ட நூறு நான்-வெஜ் ஃபுல் மீல்ஸ் டோக்கன்
வாங்குங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//சீக்கிரம் அடுத்த பதிவு போடவும்.//

'சுடச்சுட' வெங்கிராஜாவுக்கு அடுத்த 'சுஜாதா மீல்ஸ்' போடுங்க!

Anonymous said...

மொதலாளி! அந்த அட்டை படம் டுபாக்கூர் என்று இணையத்தில் தோலுரித்து காட்டிட்டாங்க. பத்திரிக்கையில் இருக்கும் உங்களுக்கு கூடவா இது தெரியாது

தினேஷ் said...

‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’

அது போல நேரத்த வீணடிக்காம அடுத்த பதிவை போடுங்க தலை...

Anand said...

//"இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!"//

அசத்தல்..!!

எம்.பி.உதயசூரியன் said...

//பத்திரிக்கையில் இருக்கும் உங்களுக்கு கூடவா இது தெரியாது//

'அப்புறமா ‘நக்கீரன்’ அட்டைப்படக் கட்டுரை படிச்சபிறகு'னு தெளிவா பதிவுல இருக்கு.. நல்லா படிங்க மொதலாளி!

எம்.பி.உதயசூரியன் said...

//‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!//

சூது வாது இல்லாத சூரியனுக்கு.. அடுத்த பதிவு போட்ருங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!"//

ஆனந்த்..'கற்றது உடலளவு'ங்கிறது இதுதான் போல!

தீப்பெட்டி said...

அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க பாஸ்..

வினோத் கெளதம் said...

தல தல (சுஜாதா) தான்..


அப்புறம் அது என்ன புத்தக மேட்டர் சூர்யா சார்க்கு மட்டும் தான் மெயில் பன்னுவிங்கள..:))

சென்ஷி said...

//சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘//

:-))

கலக்கல்! வார்த்தைப்பிரயோகங்கள் ‘அட’ போட வைக்கிறது.

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

அன்புச்செல்வன் said...

//பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா.//

எனக்குக் கூட அதே சந்தேகமுங்க சார்.....

உண்மைத்தமிழன் said...

அட..

எங்க வாத்தியார் கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கார்..

முகத்துல ஒரு தேஜஸ் எப்பவுமே இருக்குன்னு..

சத்தியமான உண்மை..

Sridhar said...

அசத்தல்.வழக்கம் போல அருமை

எம்.பி.உதயசூரியன் said...

//அது என்ன புத்தக மேட்டர் சூர்யா சார்க்கு மட்டும் தான் மெயில் பன்னுவிங்கள..:))//

காப்பி டு வினோத் கௌதம்!
HAPPY YA JI!

எம்.பி.உதயசூரியன் said...

//அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க//

பதிவு பத்த வெச்சாச்சு தீப்பெட்டியார்!

எம்.பி.உதயசூரியன் said...

//வார்த்தைப்பிரயோகங்கள் ‘அட’ போட வைக்கிறது.//

ஏதோ தமிழ் தந்த யோகம் .சென்ஷி சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’.. எனக்குக் கூட அதே சந்தேகமுங்க சார்//

பர்சனல பார்சல் கட்டறீங்களா அன்பு? தீவாளி லேகியம் கூட
சாப்புட்டதில்ல!

எம்.பி.உதயசூரியன் said...

// எங்க வாத்தியார் கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கார்..//

குருவோட குறும்பு உண்மைத்தமிழன்கிட்ட ஜாஸ்தியா வெளையாடுது!

எம்.பி.உதயசூரியன் said...

//அசத்தல்.வழக்கம் போல அருமை//

சார்..என்னை திட்டற மாதிரி ஒரு பதிவு போடவா?

butterfly Surya said...

தமிழ் நாட்டில் லாட்டரி இல்லையா..??? யார் சொன்னது..???

அடிக்க போறேன் ஜாக்பாட்..

////////உங்களுக்கு ஸ்பெஷலா மெயில் பண்றேன். ப்ளீஸ் ..//////

Bhuvanesh said...

//ஸாரி..வண்ணத்துபூச்சியார்! ‘புத்தகப் பிரியரின்’ மேட்டர் கொஞ்சம் ‘எ‘சகுபிசகா இருக்கு! அதை உங்களுக்கு ஸ்பெஷலா மெயில் பண்றேன். ப்ளீஸ்!)//

இது என்ன சின்ன புள்ள தானமா இருக்கு ??

butterfly Surya said...

/ஸாரி..வண்ணத்துபூச்சியார்! ‘புத்தகப் பிரியரின்’ மேட்டர் கொஞ்சம் ‘எ‘சகுபிசகா இருக்கு! அதை உங்களுக்கு ஸ்பெஷலா மெயில் பண்றேன். ப்ளீஸ்!)//

இது என்ன சின்ன புள்ள தானமா இருக்கு ??////

அட.. இதுக்கு போயி கோவிக்கலாமா,??

உதய் சார் இவருக்கும் ஒரு காப்பி போடுங்க..

Bhuvanesh said...

//உதய் சார் இவருக்கும் ஒரு காப்பி போடுங்க..//

அண்ணே காப்பி இன்னும் வரல !!

எம்.பி.உதயசூரியன் said...

//உதய் சார் இவருக்கும் ஒரு காப்பி போடுங்க..//அண்ணே காப்பி இன்னும் வரல !!/

வரும்ணே..BUT காப்பி கடை வச்சு குடுக்கறது யாருணே?

 
சுடச்சுட - by Templates para novo blogger