வைகைப்புயல்..யானைப்புயல்!

Wednesday, May 27, 2009


தூத்துக்குடின்னா முத்து..ஊத்துக்குளின்னா வெண்ணெய்..
மதுரைன்னா ‘அ’..ஸாரி..மல்லி. இதேபோல வடிவேலு,பிரபுதேவான்னா எனக்கு நினைவுக்கு வர்றது..யானை! அந்த யானைக்கதையை ஊர்வலம் விடவா?

வடிவேலுக்கும் பிரபுதேவாவுக்கும் ‘பட்டைய கௌப்பற ரெட்டையர்’ங்கற ‘கெமிஸ்ட்ரி‘ (அர்த்தம் தெரியாதவங்க டான்ஸ் மாஸ்டர் கலாகிட்ட கேட்டுக்கோங்க!) செமையா ஒர்க் அவுட் ஆகியிருந்த நேரம். ‘ராசய்யா’ படத்துக்காக முதுமலையில ஷூட்டிங். ஏதோ ஒரு கோவத்துல வடிவேலு ஒரு யானையோட ‘பெட்டக்ஸ்’(!) சைடுல நின்னுகிட்டு காச்மூச்னு திட்டறமாதிரி காட்சி.

பொறுத்துப் பாத்து வெறுத்துப்போன யானைக்கு கடுங்கோவம்
வந்துருது. அதுவும் தெகிரியமா முன்னால நின்னு பேசாம..‘பின்னால’ நின்னு குமுறுற
வடிவேலுவோட மூஞ்சில ‘சரக்’குன்னு ‘அச்சமின்றி மிச்சமின்றி எச்சத்தை’ பாய்ச்சுது! இந்த சீனுக்காக யானை ‘கக்கா’ மாதிரி இருக்கணுமேனு கிலோகணக்குல மருதாணிய
வாங்கி,மிக்ஸியில போட்டு ‘நைய்ய’ அரைச்சுட்டாங்க!

டைரக்டர் ‘ஆக்ஷன்’னு சொன்னதுமே ஒரு அஸிஸ்டன்ட்..
மருதாணிய அள்ளி வடிவேலு மூஞ்சில ‘சப்’புன்னு அப்பணும். மணக்கமணக்க மருதாணி உருண்டைகள் ரெடி. சீன் ஸ்டார்ட் ஆகப்போகுது. அப்போ பாத்து யானைக்கு பின்னால நின்ன அந்த அஸிஸ்டன்ட் திடீர்னு ‘‘ஆஹா! யானைக்கு கரெக்ட்டா ‘கக்கா’
வரும்போலிருக்கு. அதுக்கான அத்தனை அறிகுறியும் தெரியுது சார்!’’னு குஷியா போட்ட கூச்சல்ல..யானைக்கே கூச்சம் வராத குறை.

இதை பாத்த வடிவேலு பெருமிதமா டைரக்டரைப் பாத்து
‘‘சார்..இந்த வடிவேலு பிறவி நடிகன்! ஒரிஜினலாவே யானை என் முகத்துல சாணம்
போடட்டும் சார்’’னு குரல் கொடுக்கறாரு. பிரபுதேவாவும் டைரக்டரும் ‘முகம் மலர’
பாக்கறாங்க. டேக் ரெடி! யானையோட ‘பேக்’ ரெடி!

ஆக்ஷன்! கேமரா ஓடுது. அதேஜோர்ல ‘கௌம்பிருச்சுய்யா
கௌம்பிருச்சு’ங்கற எஃபெக்ட்ல வடிவேலு..யானையோட ‘பெட்டக்ஸ்’கிட்ட மூஞ்சியை வெச்சுகிட்டு கோபம் கொப்பளிக்க எக்ஸ்பிரஸன் காட்டறாரு! ஒட்டுமொத்த யூனிட்டும்
திகிலோட பாத்துகிட்டிருக்கு. அஸிஸ்டன்ட்டும் ‘மருதாணியும் கையுமா’ வீசறதுக்கு ரெடியா நிக்கறாரு. ஆனா வழக்கம்போல இந்த விதி இருக்கே விதி..அது இந்த தடவை ‘விசிலடிச்சு’ விளையாடிச்சு பாருங்க!

காட்சி கலகலக்கணும்ங்கிறதுக்காக பீச்சி அடிக்கற ‘வஸ்து’வுக்காக வடிவேலு யானையோட ‘பின்னழகு‘கிட்ட ரொம்ப க்ளோஸா முகம் காட்டி நிக்க..அடக்கருமமே! வந்தது அதுவல்ல..வேறொண்ணு! ‘விளைவு’..‘‘ஊழிக்காத்துல சிக்கி உசுருக்கு போராடுறமாதிரி’’ காத்துல கைவிரிச்சு கதறுன வடிவேலு..அப்பிடியே
‘அந்தர்பல்டி’ அடிக்கப்போயி..ஒருவழியா பேலன்ஸ் பண்ணி சொந்தக்கால்ல நின்னாரு!

‘நடந்த அசம்பாவிதத்தை’ உன்னிப்பா கவனிச்சு உஷாரான
பிரபுதேவா ‘போதுமான முன்னேற்பாட்டோட’ பாதுகாப்பான தூரத்துல நின்னுகிட்டு ’’தலைவா..என்ன ஆச்சு?’’னு சிரிக்காம கேக்க..‘யானைப்புயல்‘ல சிக்கித் தப்பின ‘வைகைப்புயல்’ ‘‘ஸ்ஸ்..அப்பப்பப்பா! மூச்சு எம்புட்டு முக்கியம்னு இப்பத்தாம்ப்பா
தெரியுது. என் உசுரு தப்புனது எந்த சாமி புண்ணியமோ?’’னு பலஹீனமா சொல்லிட்டு ‘விருவிரு’னு யானையோட மூஞ்சிப்பக்கம் போனாரு!

என்னாகுமோ..ஏதாகுமோனு பாகனோ பதறிப்போய் பாக்க..
யூனிட்டோ டென்ஷனாக நோக்க..மூஞ்சி புண்ணாகிப்போன வடிவேலு, நேருக்கு நேரா
யானையைப் பாத்து ‘‘சீச்சீ..இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு!’’னு சீரியஸா சொல்ல..அப்போ வெடிச்ச சிரிப்புல யூனிட்டே சிதறிடுச்சு!

46 comments:

Selva Kumar said...

I'm first. I like ur writings. Do u hav any interested topic about Markandeyan Sivakumar. I'm his fan. If anything there pls share it with us

வினோத் கெளதம் said...

என்ன சொல்றது..வழக்கம் போல் கலக்கல் நடை..

Bhuvanesh said...

அந்த சம்பவத்த விட உங்க எழுத்து நடை சிரிப்ப கூட்டி பெருக்கீருக்கு!!

biskothupayal said...

லக லகலக லக !!!!!!!!!!!!!!!!
லகலக லக லகலக!!!!!!!!!!!!!!!!!

அன்புச்செல்வன் said...

//பீச்சி அடிக்கற ‘வஸ்து’வுக்காக வடிவேலு யானையோட ‘பின்னழகு‘கிட்ட ரொம்ப க்ளோஸா முகம் காட்டி நிக்க..அடக்கருமமே! வந்தது அதுவல்ல..வேறொண்ணு!//

அண்ணன் வடிவேலு வாஸ்து பாக்கம நின்னுருப்பார் போல, அதான் வஸ்து வரல.

ஆகாய நதி said...

நல்லா விழுந்து விழுந்து சிரித்தேன்... இருங்க இருங்க அவர்கிட்டயே உங்கள் மாட்டிவிடுறேன் இப்படியெல்லாம் பழசைக் கிளறுராங்கனு... அவர் எங்களுக்கு உறவுக்காரராக்கும்(நெசமாதாங்க!)

butterfly Surya said...

உண்மையிலேயே அவர் யதார்த்த மனிதன். அதான் அவர் எல்லோராலும் கொண்டாடப்படுகிறார்.

சிரிப்புக்கு வைகை.

பதிவுக்கு உதய்..

முப்பதாவது பதிவிலும் முப்பத்திரண்டு பல் தெரிய சிரிக்க வச்சடிங்கோ....

முரளிகண்ணன் said...

உங்களுக்கும் தமிழ் சாக்லெட் நடைக்கும் நல்ல கெமிஸ்டிரி

சென்ஷி said...

//முரளிகண்ணன் said...

உங்களுக்கும் தமிழ் சாக்லெட் நடைக்கும் நல்ல கெமிஸ்டிரி//

ரிப்பீட்டே :)

Nags said...

மொத்த யூனிட்டும் ஒரு முறை தான் சிரித்தது ... உங்கள் எழுத்து நடை பதிவை படித்து முடிப்பதற்குள் பல முறை சிரிக்க வைத்து விட்டது ..keep it up

MAHESHWAR said...

Nandri Sooriyan Sir. I am waiting for some news about Vivek also.

கிரி said...

:-))))))))

सुREஷ் कुMAர் said...

ஒரு குறிப்பிட்ட வரியை சொல்லி நல்லா இருக்குன்னு சொல்லமுடியலை..
முழு இடுகயுமே சூப்பரோ சூப்பர்.. நெம்ப ரசிச்சேன்..

எம்.பி.உதயசூரியன் said...

//Do u hav any interested topic about Markandeyan Sivakumar.//

SELVAAA..SEEKKIRAME SOLRENNN PAAA!

எம்.பி.உதயசூரியன் said...

//என்ன சொல்றது..வழக்கம் போல் கலக்கல் நடை..//

VINOTH G.. 'கலக்கல் போல் வழக்கமா'
சொல்லிட்டிங்கோ!

எம்.பி.உதயசூரியன் said...

//அந்த சம்பவத்த விட உங்க எழுத்து நடை சிரிப்ப 'கூட்டி பெருக்கீருக்கு'!!//

இப்படி 'விளக்குமாறு' யார் சொன்னது
BHUVANESH?

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-)))))

யானைன்னதும் என்னன்னு பார்க்க வந்தேன்.

சூறாவளியில் சிக்கிய புயல்:-))))

எம்.பி.உதயசூரியன் said...

//லக லகலகலக லகலக//

'பிஸ்கோத்து' தின்னுறப்போ நம்ம 'பயலுக்கு' இப்படியா
சத்தம் வரும்?!

எம்.பி.உதயசூரியன் said...

//அண்ணன் வடிவேலு வாஸ்து பாக்கம நின்னுருப்பார் போல, அதான் வஸ்து வரல.//

அட..அட..அன்புச்செல்வன் சொல்றது 'வாஸ்துவம்'!

எம்.பி.உதயசூரியன் said...

//அவர்கிட்டயே உங்கள் மாட்டிவிடுறேன் இப்படியெல்லாம் பழசைக் கிளறுராங்கனு... அவர் எங்களுக்கு உறவுக்காரராக்கும்(நெசமாதாங்க!)//

ஹைய்யோ ஆகாய நதி..'பழசைக்
கிளறல'! இப்ப 'நிங்கள் எங்களுட' உறவுக்காரராக்கும்!

எம்.பி.உதயசூரியன் said...

//முப்பதாவது பதிவிலும் முப்பத்திரண்டு பல் தெரிய சிரிக்க வச்சடிங்கோ//

சிரிப்புக்கு வைகை..
கருத்துக்கு வண்ணத்துபூச்சியார்!
100க்கு 100!

எம்.பி.உதயசூரியன் said...

//உங்களுக்கும் தமிழ் சாக்லெட் நடைக்கும் நல்ல கெமிஸ்டிரி//

ரிப்பீட்டே :)//

முரளிகண்ணன்.. சென்ஷி! உங்க நடை
SWEET HISTORY!

எம்.பி.உதயசூரியன் said...

//பதிவை படித்து முடிப்பதற்குள் பல முறை சிரிக்க வைத்து விட்டது.keep it up //

NAGS..இது 'HE HE' IT UP!

நர்சிம் said...

கண்முன் விரியும் காட்சிகள் கொண்ட எழுத்திற்கு நன்றி பாஸ்.

sowri said...

:) Eppadinga eppadi !

செந்தில்குமார் said...

அட போங்கண்ணே.. 'கலக்கல் பதிவு.. அருமையான எழுத்து நடை... படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன்...' இந்த மாதிரி எல்லாத்தையும் ஏற்கனவே சொல்லிட்டேன்...

இனிமேல் உங்களுக்கு பின்னூட்டம் போடறதுக்கு நான் எங்கயாவது போயிட்டு படிச்சுட்டு தான் வரணும்...

அருமை... அசத்தல்... அட்டகாசம்..

எம்.பி.உதயசூரியன் said...

//Nandri Sooriyan Sir.//

MAHESHWAR SIR..எதுக்கு அட்வான்ஸ் தேங்க்ஸ்? உங்க விவேக் கலக்கலா வர்ராராக்கும்!

எம்.பி.உதயசூரியன் said...

கிரி..உங்களுக்கு'வாளMEEனு' மாளவிகா ரொம்ப பிடிக்கும் போல!

எம்.பி.உதயசூரியன் said...

//முழு இடுகயுமே சூப்பரோ சூப்பர்.. நெம்ப ரசிச்சேன்..//

சுரேஷ்குமார்..இரு'ஹை'கூப்பி
வணங்கறேன்!

உண்மைத்தமிழன் said...

நடந்ததைவிட உங்களது எழுத்தே நகைச்சுவைக்கு உயிர் கூட்டிவிட்டது..

எம்.பி.உதயசூரியன் said...

//ஹைய்யோ ஹைய்யோ:-)))//

அலசி துவைச்சிட்டிங்க துளசிகோபால்!

எம்.பி.உதயசூரியன் said...

//கண்முன் விரியும் காட்சிகள் பாஸ்//

ஆகா..சினிமாவுக்கு வந்துருங்க நர்சிம்!

எம்.பி.உதயசூரியன் said...

//:) Eppadinga eppadi !//

SOWRI SIR..யானை வர்ற மாதிரி
எப்பவாச்சும் வர்ரிங்கோ!

எம்.பி.உதயசூரியன் said...

//உங்களுக்கு பின்னூட்டம் போடறதுக்கு நான் எங்கயாவது போயிட்டு படிச்சுட்டு தான் வரணும்.//

வேண்டாம் செந்தில்குமார்! யானையோட 'பின்னூட்டம்' மாதிரி
ஆயிரப் போகுது!?

எம்.பி.உதயசூரியன் said...

//நடந்ததைவிட உங்களது எழுத்தே நகைச்சுவைக்கு உயிர் கூட்டிவிட்டது..//

எப்பவுமே நம்ம 'தமிழன்' சொல்வது 'உண்மை'!(லகலக லக!)

தினேஷ் said...

//‘யானைப்புயல்‘ல சிக்கித் தப்பின ‘வைகைப்புயல்’ ‘‘ஸ்ஸ்..அப்பப்பப்பா! மூச்சு எம்புட்டு முக்கியம்னு இப்பத்தாம்ப்பா
தெரியுது. என் உசுரு தப்புனது எந்த சாமி புண்ணியமோ?’’//

”எழுத்துப்புயல்” அவர்களே நல்ல பதிவு ...

எம்.பி.உதயசூரியன் said...

//யானைப்புயல்‘ல சிக்கித் தப்பின ‘வைகைப்புயல்’ ”எழுத்துப்புயல்” அவர்களே நல்ல பதிவு //

ஸ்ஸ்..அப்பப்பப்பா! சூரியன்.. இந்த 'பாசப்புயல்'ல இருந்து
தப்ப முடியலப்பா!

பானு said...

காலையில்,பிள்ளைகளுக்கும்,அவருக்கும் வடிவேலு கதைய சொன்னதில,எல்லாரும் சிரிப்பாய் சிரித்து விட்டார்கள்.Orkutல,ஒரு A/C start பண்ணிருங்க, நாங்கல்லாம் உங்க Fans ஆகி,உங்களுக்கும் ஒரு community, create பண்ணிருவோம்ல.சினிமாவில் நுழையும் முன்பே,Fans Club,வைத்து இருந்தவர் என பெருமை பட்டுக்கலாம்ல.

Sridhar said...

// மதுரைன்னா ‘அ’..ஸாரி..மல்லி. //

எனக்கு நீங்க :)

எம்.பி.உதயசூரியன் said...

//பிள்ளைகளுக்கும்,அவருக்கும் வடிவேலு கதைய சொன்னதில, சிரிப்பாய் சிரித்து விட்டார்கள்//

குடும்பமே கூடி சிரிச்சதில ரொம்ப
மகிழ்ச்சி பானு MAM! ORKUT A/C START பண்ணிடறேன். இந்த அன்பு COMMUNITYயே பெருமையா இருக்கு! உங்க வாழ்த்துக்கள் எனக்கான உற்சாகம்! பிள்ளைகள்,SIR.. எல்லாரயும் விசாரித்ததாக சொல்லுங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//மதுரைன்னா ‘அ’..ஸாரி..மல்லி. // //எனக்கு நீங்க :)//

'மருதக்காரய்ங்க' அத்தினிபேரும் நம்ம
SRIDHAR சாருக்கு மருவாதி பண்றாய்ங்கப்பு!

butterfly Surya said...

இன்று பதிவேதும் இல்லையா..??

ஆவலாய் வந்தேன்.

எம்.பி.உதயசூரியன் said...

//இன்று பதிவேதும் இல்லையா..?? ஆவலாய் வந்தேன்.//

இன்று போய் நாளை வாராய்! வண்ணத்துபூச்சியார்..பல பதிவுகளை
படிச்சிகிட்டிருந்தேன்! நாளைக்கு 'கல்யாண காமடி'!

butterfly Surya said...

'கல்யாண காமடி'!

வழக்கம் போல் கலக்கல்..

நாளை பின்னூட்டத்திற்கான முன்னோட்டம்...

butterfly Surya said...

லக லகலக லக ???????

ஈ ரா said...

//ஊழிக்காத்துல சிக்கி உசுருக்கு போராடுறமாதிரி’’ காத்துல கைவிரிச்சு கதறுன வடிவேலு..//

தல,

சான்சே இல்ல....சிரிச்சு முடியல.....

அன்புடன்

ஈ ரா

 
சுடச்சுட - by Templates para novo blogger