‘‘மு.க.ஸ்.’’துதி!

Saturday, May 30, 2009


அடி ஆத்தி! ‘திருவிளையாடல்’ கதையை கொஞ்சம் மாத்திப்
போடுங்க. அண்ணன் ‘அஞ்சாநெஞ்சன்‘ ‘மதுரை மயிலேறி கேபினட் மந்திரியா டெல்லிக்கு போயிட்டாரு. தம்பி ‘தளபதியோ‘ தமிழகத்தை சுத்திவந்து ‘துணை முதல்வரா‘ ஆயிட்டாரு! ஆகமொத்தம்..தி.மு.க. இளைஞரணி இப்போ ‘ஹேப்பி சுந்தராம்பாளா’ மாறி பாடற லேட்டஸ்ட் ரீமிக்ஸ் பாட்டு.. ‘‘பலம் நீயப்பா!’’

எல்லாம் ‘கலைஞர் துணை’! ‘தளபதி’ இப்போ ‘துணை
மன்னராகி’விட்டார். மாத்துக்கருத்துள்ளவங்க கூட சமயத்துல ஏத்துக்கற ‘அரசியல் விமர்சகர்’ சோ சொன்னாரு..‘‘முதல்வர் பதவிக்கு தகுதியானவர் மு.க.ஸ்டாலின்!’’னு!
ஸோ..அடுத்த பாரா ப்ளீஸ்.

‘முதல்வர் மகன்‘..‘தளபதி’ங்கற ஒளிவட்டமெல்லாம் இல்லாம படுஎளிமையா இருக்கற மு.க.ஸ்டாலினை ஒரு பத்திரிகையாளர்ங்கற முறையில பலமுறை சந்திச்சிருக்கேன். அக்டோபர் 1996. சென்னை மாநகர மேயராகிறார் மு.க.ஸ்டாலின். ‘முதல் பேட்டி‘ ‘குங்குமம்’ பத்திரிகைக்காக எடுத்தவன்ங்கிறதால என்னை எப்பவுமே ஞாபகம் வெச்சுருப்பார். அன்னிக்கு கவர்னரை பாத்துட்டு பவர்ஃபுல்லா கோபாலபுரம் இல்லத்துக்கு வர்றாரு.

வந்து குவிஞ்ச மாலைகள்.சால்வைகளை பாத்து தொண்டர்கள் மத்தியில ‘‘பனகல் பார்க்ல இதைவெச்சே பூக்கடையும்,துணிக்கடையும் ஆரம்பிச்சுரலாமே’’னு ஆனந்தமா முனகல் கேக்குது. மதியம் ஒரு மணி. பெருமையா வாழ்த்தின அத்தனைபேரையும் பொறுமையா அனுப்பிச்சுட்டு நம்ம பேட்டிக்காக ரெடியானார் ஸ்டாலின்.

கூடவே ஸ்டாலினின் அன்பு நண்பர் ‘அன்பில்‘ பொய்யாமொழி!
‘முரசொலி‘ ஃபோட்டோகிராபர் ராஜேஷ் கிறிஸ்டோபர் ‘ப்ரூஸ்லீ‘‘ மாதிரி நின்னு கூட்டத்தை விலக்கி உள்ளே கூட்டிட்டுப் போனார். அண்ணா..ஸ்டாலின் டைமிங்கா ஜோக்
அடிப்பார்னு சொன்னா நம்பமாட்டீங்க!

என்னைப் பாத்ததுமே பொய்யாமொழி ‘‘உதயசூரியன்
வந்துட்டாரு!’’ன்னாரு. உடனே ஸ்டாலின் ஜாலியா ‘‘உதயசூரியனாலதான வந்தோம்!’’னாரு உள்ளர்த்தத்தோட! சுத்தியிருந்த அத்தனைபேரும் ‘‘ஹோ‘னு சிரிச்சோம். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தோட்டா ஸ்பீடுல பதில் சொன்னாரு ஸ்டாலின்.

அப்புறம் கேஷுவலா ‘‘எந்நேரமும் பரபரப்பா இருக்கற அரசியல் வி.ஐ.பி.கள் மேல ‘குடும்பத்தை கவனிக்க அவருக்கு நேரமில்லை’னு ஒரு பொது புகார் இருக்கே! நீங்க எப்படி?’’ன்னேன். ‘‘வேணாம் வம்பு’’ன்னு ‘மோனாலிஸா ஸ்மைலோட’
ஸ்டாலின் சொன்னாரு..‘‘உண்மைதான். தலைவர் கலைஞருக்கு நாங்க படிக்கற காலத்துல என்ன படிக்கறோம்,என்ன செய்றோம்னு பாக்க நேரம் இருந்ததில்ல. அதே பழக்க
வழக்கம்தான் எனக்கும் வந்துருச்சு!’’ன்னார்.

அந்த பேட்டியிலும், அடுத்தவாட்டி சந்திச்சப்பவும் ஸ்டாலின்கிட்ட ‘விளாட்டா’ நான் கேட்ட இன்னொரு ‘கலாட்டா’ கேள்வி..‘‘உங்க இளமையோட
ரகசியம்தான் என்ன?’’ அதுக்கு அவர் வெச்சிருக்கற ‘எவர்க்ரீன்’ பதில்..‘இதுக்காக தங்கபஸ்பமா சாப்பிடமுடியும்? என்னோட உடல்வாகு அப்படி அமைஞ்சிருச்சு.
கூடுமானவரை காலைல எக்சர்சைஸ் பண்றேன். ஆனா எனக்குத் தெரிஞ்ச ரகசியத்தை
சொன்னா சிரிப்பீங்க. நேரத்துக்கு சாப்பிடறதில்ல..தூங்கறதில்ல! ஒருவேளை இதுதான்
சரியான காரணமோன்னு நினைக்கிறேன்!’’னு சொல்லி சைலன்ட்டா சிரிச்சார்.

இன்னும் நினைச்சு சிரிக்கற இன்னொரு சந்திப்பு இது. ‘குங்குமம்’ இதழில் ‘பயணச்சிறகுகள்’ங்கற தலைப்புல தன்னோட வெளிநாட்டு பயண அனுபவங்களை மு.க.ஸ்டாலின் தொடரா எழுதினாரு. அதுல ஒரு வாரம்..மிக முக்கியமான ஒரு தகவலை சேக்கறதுக்காக வரச்சொல்லியிருந்தாரு. உடனே போனேன்.

நீட்டா டி.டி.பி. பண்ணிவெச்சிருந்த அந்த கட்டுரையை என்கிட்ட குடுத்தாரு. அப்படியே ‘‘உதயசூரியன்..‘பயணச்சிறகுகள்’ படிக்கறீங்களா?’’ன்னாரு. ‘‘தவறாம படிக்கறேன் சார். பல தகவல்களோட எழுதறீங்க. புது வாசகர்கள்கிட்டேர்ந்து நிறைய லெட்டர்ஸ் வருது சார்’’னேன்.

பதிலுக்கு ஸ்டாலின் ‘‘அப்படியா? அதெல்லாம் ஒருவேளை நம்ம இளைஞரணி தம்பிகள் எழுதினதா இருக்கப்போகுது!’’னு சிரிச்சுகிட்டே சொல்ல..‘இவ்ளோ நுட்பமா கவனிக்கறாரே’னு நானும் ‘கப்சிப்’பா சிரிச்சேன். அப்புறமா ‘‘அந்த லெட்டர்ஸோட சேர்த்து.. ‘குங்குமம்’ ரெகுலர் வாசகர்கள் எழுதறதையும் குடுங்க!’’ன்னாரு அவருக்கே உரிய புன்னகையோடு.

ஒரு கவுன்சிலரே கும்பலா அடிப்பொடிகளோட வர்றப்போ..அந்தமாதிரி படையோட வந்து கடுப்படிக்காம..சிம்பிளா நடைபோட்டு வந்து நகர மக்களை ஈஸியா நகரவெச்சவரு ஸ்டாலின்! சென்னைல மேம்பாலங்கள் கட்டப்பட்டப்போ..
எல்லாரும் ‘குதிகாலை தூக்கி ஜாக்கிங் செய்ற அதிகாலைலயே‘ அதிகாரிகளோட வந்து
ஸ்பாட் விசிட் பண்ணிட்டு சைலன்ட்டா போயிடுவாரு.

இப்படித்தான் ஒருமுறை..கோடம்பாக்கம் மேம்பால கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்தாரு. அஞ்சாறு அதிகாரிகள் மட்டுமே கூட இருந்தாங்க.
கொஞ்சம் தள்ளி தனியா வந்து பாலத்தோட மறுபுறத்தை பார்வையிட்டாரு. அப்போ அங்கிட்டு நடந்துபோன ரெண்டுபேர் ‘டி.ஷர்ட்..ட்ராக் சூட்‘ போட்டு ஸ்டைலா நின்னுருந்த ஸ்டாலினை பாத்துகிட்டே ‘‘மு.க.ஸ்டாலின் மாதிரியே இருக்கார்ல!’’னு சொல்றாங்க.

இதை கேட்டதுமே ஸ்டாலின் சிரிச்சுகிட்டே ‘‘அதே
ஸ்டாலின்தாங்க நான்!’’னு சொல்ல..‘‘வணக்கம் சார்..ஸாரி சார்’’னு அந்த பாதசாரிகள் உளறி குளறுனது சுவாரஸ்யமா இருந்துச்சு. வேறென்ன தலைவா..டைட்டிலுக்கு மேட்ச்சா இந்த மேட்டர் ஆச்சா!

22 comments:

அன்புச்செல்வன் said...

மேயராக, அமைச்சராக, கட்சியின் இளைஞரணி செயலாளராக, துனைப்பொது செயலாளராக, பொருளாளராக ஜொளித்த மு.க.ஸ்டாலின் அவர்கள் துனை முதல்வராகவும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்!

லக்கிலுக் said...

கலக்கல் வாத்தியாரே!

‘ஆ’ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு படிச்சேன்.

- ஏற்கனவே உங்க ‘ஆ’வை படிச்ச ஒரு வாசகன்

சென்ஷி said...

தலைப்பு அட்டகாசம் :)

தீப்பெட்டி said...

சரியான நேரத்துல வந்த சிறப்பான பதிவு பாஸ் ...

வினோத் கெளதம் said...

மு.க.ஸ்டாலின் இளமை ரகசியம் சொன்ன மாதிரி அவர் சரியான நேரத்தில் சாப்பிடமல் தூங்காமல்
இருப்பதால் தானோ..

அது சரி உங்களின் இளமை ரகசியம்..!!

எம்.பி.உதயசூரியன் said...

//மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகவும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்!//

அன்புச்செல்வன் வாழ்த்துக்கள் 'உரியவருக்கு'அனுப்பப்படுகிறது!

எம்.பி.உதயசூரியன் said...

//கலக்கல் வாத்தியாரே! ஏற்கனவே உங்க 'ஆ’வை படிச்ச ஒரு வாசகன்//

'ஆ’ லக்கிலுக்! 'பதிவுலக முதல்வரே' வருக! குட்டி பாப்பா 'ங்கா' சொல்லுதா?

எம்.பி.உதயசூரியன் said...

// தலைப்பு அட்டகாசம்!//

சென்ஷி..நீங்க ‘தலை‘ன்னு நிரூபிச்சுட்டீங்க!

பானு said...

Timely Topic!

Sridhar said...

திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அவரின் நகைச்சுவை உணர்வு இதுவரை சரியாக பதிவு செய்யப்படவில்லை என கருதுகிறேன்.

இந்த பதிவு நல்ல ஆரம்பம்

sowri said...

தலைப்பு செய்திகளுக்கு க்காகவே திரு உதயசூரியன் MP ஆகிறார்

எம்.பி.உதயசூரியன் said...

// சரியான நேரத்துல வந்த சிறப்பான பதிவு பாஸ்//

கந்தக தீப்பெட்டியின் சந்தன வாழ்த்து!

முரளிகண்ணன் said...

உங்க இனிசியல் உங்களுக்கு பட்டமா
வரணும் பாஸ்.

எம்.பி.உதயசூரியன் said...

//அது சரி உங்களின் இளமை ரகசியம்..!!//

வினோத்..ஒரு சுள்ளான்கிட்ட கேக்கற கேள்வியா இது?

எம்.பி.உதயசூரியன் said...

//Timely Topic!//

பானு Mam.. உங்க வாழ்த்துக்கள்தான் நமக்கான ‘ஆஸ்தி’!

எம்.பி.உதயசூரியன் said...

//அவரின் நகைச்சுவை உணர்வு இதுவரை சரியாக பதிவு செய்யப்படவில்லை என கருதுகிறேன்.
இந்த பதிவு நல்ல ஆரம்பம்//


ஆனந்தம் ஸ்ரீதர் சார்! ‘அவரது‘ ஹியூமர் சென்ஸ் உங்களுக்கும் நல்லா தெரியுமே!

எம்.பி.உதயசூரியன் said...

//தலைப்பு செய்திகளுக்குக்காகவே உதயசூரியன் MP ஆகிறார்//

SOWRI சார்..மக்கள் வாக்கும் கிடைச்சு, உங்க வாக்கும் பலிச்சா அப்போ
இது தலைப்புச்செய்திதானே!

எம்.பி.உதயசூரியன் said...

//உங்க இனிசியல் உங்களுக்கு பட்டமா
வரணும் பாஸ்.//

கூட்டணி போட்டு இறங்கிரலாமா தலைவா?

செந்தில்குமார் said...

தல,

//பெருமையா வாழ்த்தின அத்தனைபேரையும் பொறுமையா அனுப்பிச்சுட்டு நம்ம பேட்டிக்காக ரெடியானார் ஸ்டாலின்//

எப்படி இப்படி ?? மிடியல... உங்களோட பதிவுல நீங்களும் தமிழும் விளையாடுற அழகே அழகு தான் !!

நீங்க எந்த பிரபலத்தை பற்றி எழுதினாலும், உங்களோட எழுத்தின் வசீகரம் அந்த பதிவ ரொம்ப அருமையா எங்களுக்கு கொண்டு வந்து கொடுக்குது... சுவையான சம்பவங்கள், நகைச்சுவை-னு உங்க அதிரடி சூப்பர் !!

தொடருங்கள் !!

எம்.பி.உதயசூரியன் said...

//செந்தில்குமார் said..
நீங்க எந்த பிரபலத்தை பற்றி எழுதினாலும், உங்களோட எழுத்தின் வசீகரம் அந்த பதிவ ரொம்ப அருமையா எங்களுக்கு கொண்டு வந்து கொடுக்குது//

தலைவா..நான் தர்றது நீச்சத்தண்ணிதான். ஆனா அதை ‘அமிர்தம்டா‘னு ருசிக்கற
உங்களை மாதிரி நண்பர்களின் அருமையான ரசனைதான் அற்புதம்!

butterfly Surya said...

எப்பவோ கொடுத்திருக்க வேண்டும். தலைவர் சமயம் பார்த்து தான் எதையும் செய்வார். வாழ்த்துகள்.

நிறைய நம்பிக்கை உள்ளது அவரிடம். சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை மேலும் சிறப்பிக்க வேண்டும்.

I love his simplicity.

பதிவுலக முதல்வர் உதய் சாருக்கு வழக்கம் போல் வாழ்த்துகளும் நன்றியும்.

மெயில்.. ?? இன்னும் கிடைக்கவில்லை..??

அவ்வ்வ்வ்வ்வ்

butterfly Surya said...

கேட்க மற்ந்துட்டேன்.

“கல்யாண காமெடி” ..??

 
சுடச்சுட - by Templates para novo blogger