Friday, July 3, 2009
வெள்ளிநுரை விளையாடற அலையோரமா நின்னா.. நாம ‘மீனவ நண்பன்‘! கொஞ்சம் தள்ளி உழைப்பாளர் சிலையோரமா நின்னா..நாம ‘உழைப்பாளி’!
ரிப்போர்ட்டர்ங்கறதால..‘போர்ட்டர்‘ முதல் ஓட்டுநர் வரை எல்லாருமே நமக்கு நல்ல
தோஸ்த்துகதான்!
‘அம்மா மெஸ்‘ எதிரே..ஆட்டோக்காக நிக்கறேன். ‘முந்தி வர்ற இந்த மூணு சக்கர தேரெல்லாம்‘ நாலுசக்கர வாகன ரேஞ்சுக்கு ரேட் கேக்க..அஞ்சி நின்னேன். அப்போ பாத்து வந்த ஒரு ‘ஆட்டோபாந்தவன்‘..‘‘தலைவா! எப்டி க்றீங்க? ஏறி குந்துங்க. வீட்டாண்ட இட்டர்றேன்!‘‘னு பாசமா சொல்ல..‘அட..நம்மாளு‘னு ‘ஆட்டோமேட்டிக்கா‘ ஏறி உக்காந்தேன்.
அந்த ஆட்டோ டிரைவர்..மணிகண்டன். பார்வைக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும்..‘தார் பூசின தங்கக்கட்டி‘! சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரை கூப்பிட்டு பாராட்டியிருக்காரு! ‘நிஜ பாட்ஷா‘வை ‘சூப்பர் பாட்ஷா‘ மெச்சினதுக்கு காரணம்?
‘ஆறறிவு எந்திரன்கள்‘ பரபரப்பா ஓடிகிட்டிருக்கற சென்னை
மாநகரம்! ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிற இந்த நகரத்துல..ஆனந்தக்கண்ணீர் வழியவைக்கிற சம்பவம் அபூர்வமா நிகழும். அப்படி ஒரு சம்பவம்..சில வருஷங்களுக்குமுன்னால சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு முன்னால நடந்துருக்கு!
தி.நகர் பஸ் ஸ்டாண்ட். மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை பராக்கு பாத்தபடியே நின்னுகிட்டிருக்காங்க பதிமூணு வயசு சிறுமிகள் ரெண்டுபேர். ‘எப்படியாவது ரஜினி அங்கிளை நேர்ல பாத்துடணும்’ங்கற ஆசையில அன்னை, தந்தைக்குத் தெரியாம சேலத்துலேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறி
வந்துட்டாங்க.
அசட்டுத்துணிச்சல்ல அசலூருக்கு வந்தாச்சு. ஆனா ‘ரஜினி வீட்டுக்கு எப்படி போறது?’ வழிதெரியாம முழி பிதுங்கி நிக்கறாங்க. வழக்கம்போல வழியில வந்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த சிறுமிகள்கிட்ட நைஸா பேச்சு குடுக்கறாரு. வெள்ளை மனசுப் பிள்ளைகள் ரெண்டு பேரும் விஷயத்தை சொல்லிட்டாங்க!
‘‘அடடே! நானும் ரசிகன்தாம்மா! உங்க ரெண்டுபேரையும் ரஜினி அங்கிள் வீட்டுக்கே கூட்டிட்டுப்போறேன் வாம்மா!’’னு ஆட்டோக்காரர் சொல்ல.. ‘‘சரிங்க அங்கிள்’’னு அப்பாவிப்பிள்ளைகளும் ஆட்டோல ஏறிக்கொள்ள..சீறிக்கிளம்பிச்சு ஆட்டோ! சுத்திமுத்தி நின்ன லோக்கல் ஆசாமிகளும் ‘கலி முத்திப்போச்சுமா‘னு கிலியை கிளப்பிட்டாங்க!
பாசமுள்ள வாசகர்களே! இனிமேல் நீங்க படிக்கப்
போகும் சம்பவம்..ப்ச்! என்னத்த சொல்ல? வேண்டாம்..தொடர்ந்து படிங்க!
‘விருட்‘னு வந்து நிக்கற ஆட்டோலேர்ந்து ரெண்டு சின்னப்பிள்ளைக செம குஷியோட ஓடிவர்றாங்க! இதைப்பாத்து குழம்பிப் போனாங்க போயஸ் கார்டன்ல இருக்கற ரஜினி வீட்டு செக்யூரிட்டிகள்! தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் ஆசையா வந்து ‘பாவம்..சின்னப்புள்ளைக ஆசைப்பட்டுச்சு! அதான் கூட்டி வந்தேன்‘‘னு ‘கைப்புள்ளத்தனமா‘ சொல்றாரு.
நொந்துபோன செக்யூரிட்டிகள் ஆட்டோ டிரைவர்கிட்ட ‘‘ஏப்பா.. அந்த புள்ளைகளுக்கு வெவரம் பத்தாது. ஆனா உனக்கோ வெவரமே கெடையாது‘‘னு திட்டிமுடிச்சாங்க. வந்த ‘ரெட்டைவால்களோ’ ‘‘ரஜினி அங்கிளை பாக்காம போக
மாட்டோம்’’னு அழுது அடம்புடிக்க..‘‘சார் படம் புடிக்க போயிருக்காருமா‘‘னு பதில்
சொல்லியும் ‘புள்ளப்பூச்சியா‘ குடைஞ்சிருக்குக புள்ளைங்க!
ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ‘ரஜினி ஃபோட்டோ‘ல்லாம் தந்து பிள்ளைகளை சமாதானப்படுத்தி ‘ஆத்தாடி‘ன்னு பெருமூச்சு விடறதுக்குள்ள..அடுத்த பிரச்னை வந்துருச்சு! ‘இந்த வாண்டுகளை ஊருக்கு திருப்பி அனுப்பறது எப்படி?‘னு பதறுறாங்க செக்யூரிட்டிக! அந்த ஆட்டோக்காரரோ ‘‘பத்திரமா நான் அனுப்பி வெக்கிறேங்க!‘‘னு அக்கறையா சொல்றாரு.
‘‘தம்பி..உன்னை நம்பி எப்படிப்பா அனுப்பறது?’’னு செக்யூரிட்டிகள் மறுக்க..‘‘தலைவர் மேல சத்தியமா நான் பத்திரமா அனுப்பிச்சிடறேங்க!‘‘னு ஆட்டோக்காரர் கெஞ்ச..‘போயஸ் கார்டன்ல பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம்
மாதிரி‘ ஒரு ‘பாசப்போராட்டமே‘ நடக்குது. இதுக்கு நடுவே அந்த பிள்ளைககிட்ட ஒரு செக்யூரிட்டி நைஸா அட்ரஸை விசாரிக்கறாரு.
‘கிளிப்பிள்ளையா‘ பிள்ளைகள் வீட்டு அட்ரஸை ஒப்பிக்க..‘அடப்
பாவிப்பய புள்ளைகளா‘‘னு ஒரு செக்யூரிட்டி சந்தோஷத்துல அணில்பிள்ளையா குதிக்கறாரு. ஏன்னா..அதுல ஒரு புள்ளை அவரோட பொண்டாட்டி வகையறாவுல சொந்தக்காரரோட மகள்! அப்புறமென்ன..அந்த சொந்தகாரருக்கு தகவல் சொல்றாங்க. அங்கேதான்
க்ளைமாக்ஸே!
‘‘ஆமாமுங்க! முட்டாயை தின்னுகிட்டுத் திரிஞ்ச ரெண்டு
முட்டாப்பய புள்ளைகளும் ரஜினியை பாக்கணும்னு மெட்ராஸ்க்கு ஓடிவந்துருக்குன்னு
ஆட்டோக்காரத் தம்பி மணிகண்டன்ங்கறவர் ஃபோன் பண்ணி சொல்லிட்டாருங்க! அதான் அவங்க தாய்மாமன் கௌம்பி வந்துகிட்டிருக்காருங்க!’’னு ஒரு பிள்ளையோட அப்பா
சொல்ல..நம்ம ஆட்டோ மணியோட அக்கறையை பாத்து கண்கலங்கிட்டாங்க செக்யூரிட்டிகள்!
இந்த தகவல் நம்ம காதுக்கு வர..ஆட்டோ மணியை பிடிச்சு
‘அன்புள்ள் ரஜினிகாந்த்!‘னு ஒரு ஃபோட்டோ ஸ்டோரி ‘குங்குமம்‘ இதழில் எழுதினேன். அந்த கட்டுரைல ஃபைனல் டச்சா ‘இந்த சென்னைக்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ என்று ஆசையோடு ஓடிவந்த அப்பாவி சிறுமிகளை பத்திரமாகப் பாதுகாத்த ‘பாட்ஷா‘ மணிகண்டனுக்கும், அவர்களை பொறுப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த ‘ஊர்க்காவலன்‘ செக்யூரிட்டிகளுக்கும் கோடி கங்க்ராட்ஸ்!’’னு எழுதியிருந்தேன்.
கட்டுரை சூப்பர் ஸ்டாரின் பார்வைக்கு போனது. ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’
48 comments:
என்க்கென்னவோ படப்பெயர்கள வச்சு எதாவது எழுதுவோம்னு எழுதுனது மாதிரி தெரியுதே..
‘தார் பூசின தங்கக்கட்டி‘ இது வஞ்சபுகழ்ச்சி மாதிரி தெரியுதே...
//ஆறறிவு எந்திரன்கள்......மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை//
பின்னி பெடல் எடுக்கறிங்களே தல.....உங்களால் மட்டுமே இதெல்லாம் முடியும்..............
ஏதோ மணிகண்டன் போலே சில பேர் இருப்பதால் தான் நாமெல்லாம் கொஞ்சம் நஞ்சம் நிம்மதியோட இருக்கோம்.....
அதே நேரத்தில super star யையும் இந்த இடத்துல சொல்லியாகனும், அவருக்கு உண்மையிலே பெரிய மனசு இருப்பதால தான், மணிகண்டனை கூப்பிட்டு பாராட்டி இருக்கார்.
இன்னும் மனிதநேயம் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறது 'க.கவிஞரே'.
நல்ல உள்ளங்கள் நன்கு வாழட்டும். வாழ்த்துக்கள்.
மனிதாபிமானம்னா கிலோ எவ்வளவு என்று கேட்க்கும் காலத்தில், ஆட்டோ மணி போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.
இந்த நல்ல குணத்தை உலக மக்களுக்கு அறிவித்த நம்ம எம்.பி.உதயசூரியனுக்கு ஒரு பெரிய 'ஓ' போடலாம்.
me the fisrt.
Dear mr .Suriyan, i have been reading your blogs from the starting.
you should post Mr. Mani photo for all viewers to know him.
who knows may be we also can meet him and say thanks.
/ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’/
எழுத்துக்கள்ல அபினை விட மோசமா ஏதோ ஒரு போதையை கலந்து எழுதறீங்க.. :))
அருமை.
எழுத்துலகு சிவாஜி சிகப்பு சூரியன் படையப்பவாக பட்டய கிளப்ப அந்த அண்ணாமலை அருள் புரியட்டும்.
அருமை.
வார்த்தைக் கோர்ப்புகள் அடுத்த பதிவு எப்போன்னு ஏங்க வைக்குது.
கண்ணு கலங்கிருச்சு!
//சூரியன் said... என்க்கென்னவோ படப்பெயர்கள வச்சு எதாவது எழுதுவோம்னு எழுதுனது மாதிரி தெரியுதே.. //
இது பத்திரிகைல நான் எழுதின உண்மைச்சம்பவம் கண்ணா!
//RR said...ஏதோ மணிகண்டன் போலே சில பேர் இருப்பதால் தான் நாமெல்லாம் கொஞ்சம் நஞ்சம் நிம்மதியோட இருக்கோம்.....//
ஆமா தலைவா! 'MONEY' மட்டுமே ’கண்ட’..காண்பவர்களுக்கு நடுவே நம்ம மணிகண்டன் ‘மனசையும் கண்டவர்’!
// தமிழ்நாட்டுத்தமிழன். said... இன்னும் மனிதநேயம் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறது//
அது ‘ஆட்டோமேட்டிக்கா’ வெளிப்படணும்ங்கிறதுதான் நம்ம ஆசை பாஸ்!
//சின்ன அம்மிணி said... நல்ல உள்ளங்கள் நன்கு வாழட்டும். வாழ்த்துக்கள்.//
செல்லமான பேரு..பாசமான வாழ்த்து! வாழ்க மேடம்!
மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதை எழுதிய சூரியன் சாருக்கு நன்றி
//பூக்காதலன் said... மனிதாபிமானம்னா கிலோ எவ்வளவு என்று கேட்கும் காலத்தில், ஆட்டோ மணி போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.//
பூக்காதலன்..அப்போ இதுக்குப் பேரு ‘மணி’தாபிமானம்!
// Pandian ' Thailand said... you should post Mr. Mani photo for all viewers to know him. who knows may be we also can meet him and say thanks.//
வேண்டி விரும்பிக் கேக்கற பாண்டியன் சாருக்காக சீக்கிரமே மணி ஃபோட்டோ ‘சுடச்சுட’ வலையேறும்!
// சென்ஷி said... எழுத்துக்கள்ல அபினை விட மோசமா ஏதோ ஒரு போதையை கலந்து எழுதறீங்க.. :))//
உண்மைதான் சென்ஷி! தமிழ் ‘அபி(ன்)மானம்’ கலந்துதானே இருக்கு!
//அஹோரி said... அருமை.//
நண்பா..இவ்வளவு ஸ்டைலா இருந்துகிட்டு ‘புனைபெயர்ல’ மிரட்டறீங்களே!
//sowri said... எழுத்துலகு சிவாஜி சிகப்பு சூரியன் படையப்பவாக பட்டய கிளப்ப அந்த அண்ணாமலை அருள் புரியட்டும்.//
‘மன்னன்’ 'SOWRI'யார் வழங்கும் பாராட்டு ‘முத்து’மாலை..இந்த ‘தளபதி’யை எழுத்துக் களத்தில் ‘பாயும் புலி’யாக்கும்!
//முரளிகண்ணன் said... வார்த்தைக் கோர்ப்புகள் அடுத்த பதிவு எப்போன்னு ஏங்க வைக்குது.//
முரளி..உங்க ‘நீரோடை’யில் காமெடி ‘காட்டாறு’மாதிரி பாயுதே!
//ஜோ/Joe said... கண்ணு கலங்கிருச்சு!//
உண்மை ஜோ/Joe..உங்க வார்த்தைகள் உணர்வுபூர்வமானது!
// Sridhar said... மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதை எழுதிய சூரியன் சாருக்கு நன்றி//
அந்த எளிய மனிதனுக்குள்ளிருந்த ஞாயமும்..நேயமும் நெகிழ வெச்சிருச்சு சார்!
கண்ணா நான் ஒண்ணு சொல்றேன் நல்லா தெரிஞ்சுக்க..!
ஆறின கஞ்சியை ஆத்திக் கொடுக்குறவன் ரிப்போர்ட்டர் இல்ல..
சுடச்சுட கொடுக்குறவன்தான் ரிப்போர்ட்டர்.
அதையும் சுண்டக் கஞ்சியாவே கொடுக்குறவன் இருக்கானே..
அவன் பேருதான் உதயசூரியன்..!
நேர்மையாக இருந்த மணிக்கும், இதை கேள்வி பட்டு வீட்டிற்கு அழைத்து பாராட்டிய தலைவருக்கும் இதை அவர் கவனத்திற்கு கொண்டு சென்ற உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்
Ada... Thala sitela thalaivara.... Mhh.. Uday yeppo thalaivara pathi yelutha aarambicheenga.. Excellent Narration and writing style.. Happy I got introduced to this blog.. Thanks to Andhanan.
//உண்மைத் தமிழன் (15270788164745573644) said...
கண்ணா நான் ஒண்ணு சொல்றேன் நல்லா தெரிஞ்சுக்க..!ஆறின கஞ்சியை சுடச்சுட கொடுக்குறவன்தான் ரிப்போர்ட்டர்.
அதையும் சுண்டக் கஞ்சியாவே கொடுக்குறவன் இருக்கானே..
அவன் பேருதான் உதயசூரியன்..!//
சுண்டக் காய்ச்சி சுருக்கமா பாராட்டாம..காய்ச்சுன ‘பட்டச் சாராயமா’ ’சுர்ர்ர்’னு பாராட்டி பட்டயக் கெளப்புன உண்மைத்தமிழா! உனக்கு என் வணக்கம்!
// கிரி said... நேர்மையாக இருந்த மணிக்கும், அழைத்து பாராட்டிய தலைவருக்கும், அவர் கவனத்திற்கு கொண்டு சென்ற உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்//
கிரியின் பாராட்டுலகூட ‘மூன்று முகம்’ தெரியுதே!
//Maani said... Happy I got introduced to this blog.. Thanks to Andhanan.//
‘அடிக்கடி’ பெருஞ்சுவரில் நமக்கு ‘சுடச்சுட’ போஸ்டர் ஒட்ட இடம் கொடுத்து..Maani சார் போன்ற ‘புதிய கண்மணிகளை’ ‘வலை’வீசிப் பிடிக்க உதவிய அண்ணன் அந்தணன் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!
மொத்தம் எத்தனை படப்பேரு இருக்கு கண்டு பிடிங்கன்னு போட்டில்லாம் வைக்க மாட்டீங்களே :)
அருமையா இருக்குங்க படைப்பு
அருமை
//Thenie said... மொத்தம் எத்தனை படப்பேரு இருக்கு கண்டு பிடிங்கன்னு போட்டில்லாம் வைக்க மாட்டீங்களே :)//
’தேனீ’ கொட்டினாலும் ‘இனிப்பா’ இருக்குங்கும்ங்கறது உண்மைதானோ?
//வண்ணத்துபூச்சியார் said.. அருமை//
நட்புக்காக..வண்ணத்துபூச்சியார்! சரிதானே நண்பா!
// சென்ஷி said... எழுத்துக்கள்ல அபினை விட மோசமா ஏதோ ஒரு போதையை கலந்து எழுதறீங்க.. :))//
--- உண்மைதான் சென்ஷி! தமிழ் ‘அபி(ன்)மானம்’ கலந்துதானே இருக்கு!-----
எப்டிங்க பின்னூட்டத்துலயும் இந்த விளையாட்டை விளையாடுறீங்க ...
நல்ல வேளை , சிறுமிகள் மணி கண்ணில் பட தப்பினார்கள்.
மனிதாபிமானம் உள்ள மணி.
நல்ல செய்தி "தல".
இந்த மாதிரி செய்திகள எல்லாம், உங்கள மாதிரி பத்திரிகைகாரர்கள் சொன்னாலன்றி எங்களை போன்ற பாமரர்களுக்கு எப்படி தெரியும்?
நல்ல செய்திகளை பச்சக்கென்று நெஞ்சில் பதியும் மாதிரி எழுத இந்த "வலைசிங்கம்" உதயசூரியனை விட்டால் ஆளேது? "தல" இதுல உள்குத்து எதுவும் இல்லை என்பதை எங்கள் சங்கத்தின் சார்பில் உறுதி செய்கிறோம்...
மீ தி தம்ப்ரி எஸ்கேப்பு.......
// ஜானிவாக்கர் said..நல்லவேளை, சிறுமிகள் மணி கண்ணில் பட தப்பினார்கள். மனிதாபிமானம் உள்ள மணி.//
‘மணி’யான வரிகள் ஜானி!
//R.Gopi said... இந்த மாதிரி செய்திகள எல்லாம், உங்கள மாதிரி பத்திரிகைகாரர்கள் சொன்னாலன்றி எங்களை போன்ற பாமரர்களுக்கு எப்படி தெரியும்?//
கோபி..உங்க ‘சல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை’ ‘கேப்ஷன்’ அட்டகாசம்! நீங்களா ‘பாமரர்’?
சூப்பர் மனிதர் மணிகண்டன்...சூப்பர் ஸ்டார் ரஜினி!
excellent.. heart touchin incident.. paaraatta vaarthaigale illa.. vaazhga mani n uday annaathe :)
//பானு said... சூப்பர் மனிதர் மணிகண்டன்...சூப்பர் ஸ்டார் ரஜினி!//
மணிகண்டனுக்கு ‘சூப்பர் பட்டம்’ மேடம்!
//Arun said... excellent.. heart touchin incident..//
கருணை கொண்ட அருணை கண்டுகொண்டேன்!
தமிழோடு நட்பு கொண்ட தங்களின் நட்பே அலாதி.. ஆனந்தம்... அதுவே அருமைன்னு சொன்னேன்..
அருமையான பதிவு. இது போன்ற சம்பவங்களாவது மற்றவர்களையும் நல்லவர்களாக்கட்டும். ஆட்டோ மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்!. உங்களுக்கு நன்றிகள் இப்படி ஒரு அருமையான விசயத்தை அருமையாக பதிவேற்றியதற்கு!
//கோபி..உங்க ‘சல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை’ ‘கேப்ஷன்’ அட்டகாசம்! நீங்களா ‘பாமரர்’?//
-**-*-*-*-*
ஆ ஹா.... மடக்கிடீங்களே "தல".....
அப்படியே ஜோக்கிரியையும் (www.jokkiri.blogspot.com) பாத்துட்டு ஏதாவது சொல்லுங்க.....
நெகிழ்ச்சியான சம்பவமும்..
அட்ரஸ் இல்லா தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்... -
இரக்கமுள்ள மனசுக்காரங்க..அவர் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரங்க .....
தேங்க்ஸ் உதயசூரியன் சார்...
எனக்கு ரெண்டாம்தேதி கல்யாணம் முடிந்து இப்போதான் வலைத்தளம் பக்கம் வந்து இருக்கேன்... பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும்.... மலைக்க வைக்கிறீர்கள்..
இன்று காமராசர் பிறந்தநாளுக்கு என்னுடைய பிளாகில் ஒரு கவிதை சமர்ப்பித்து இருக்கிறேன்... வந்து படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்....
http://padikkathavan.blogspot.com/2009/07/blog-post_15.html
அன்புடன்
ஈ ரா
Post a Comment