சென்னை டைரிக்குறிப்பு!

Thursday, July 16, 2009

அதிகாலையில் ‘சூடான டீ. காஃபிக்களுக்காக’ ‘ஆவின் பால்’கள் ஜில்லென்று வாசலில் பூத்திருக்கின்றன. ‘கௌசல்யா சுப்ரஜா‘ அரைத்தூக்கத்தில் காதினில் சுக ராகம் பாய்ச்சுகிறது.

கடற்கரையில் ‘சக்கரை‘ வி.ஐ.பி.கள், ’தொப்பை ‘தாங்கிகள் காரில் வந்து காஸ்ட்லியாக மூச்சு வாங்குகிறார்கள்.

புதுசான சூரிய ஒளியில் ‘தி ஹிந்து‘க்களும், ‘எக்ஸ்ப்ரஸினரும்‘ சுடச்சுட மொடமொடக்கிறார்கள். ரோட்டோர டீக்கடையில் ‘யுவன்ஷங்கர் ராஜா‘வுடன் அலறும் ‘ஹாரிஸ்‘. அத்தனை வாகனங்களையும் மேற்பார்வையிடும் அண்ணா மேம்பாலக் குதிரைவீரன். மெத்தப்படித்த மேதாவிகளை இரவு பகலாக பிளாட்ஃபார்மில் நிற்கவைத்து ‘சமத்துவம்‘ போதிக்கும் ‘அமெரிக்கத் தூதரகம்‘.

சாய்ந்து ஊர்ந்திடும் அரசு பஸ்களில் மூச்சுத்திணறும் நடுத்தர
வர்க்கம். அதனுள்ளே நெருக்கத்தில் ‘திருட்டு ஸ்பரிசம்‘ தேடும் ‘தகாத விரல்கள்‘.
அக்கறையாக கணவன் வயிற்றில் கையால் கொக்கி போட்டு ‘சக்கரை மொழி‘ பேசி அலுவலகம் பயணிக்கும் ‘அகல முதுகு‘ மனைவி‘மார்கள்‘.

டூ வீலரில் வித்தை காட்டுவது ‘பையனா பொண்ணா‘ என்று ‘பால் நிர்ணயம்‘ செய்வதற்குள் ‘பின் கூந்தல்‘ பறக்க ‘வ்ர்ரூம்மிடும்‘ இளசுகள். குவியல் குவியலாக அவியல் மக்களை தனக்குள் அடைகாத்திருக்கும் ‘ஸ்பென்சர் பிளாசா‘. அண்ணா சாலையில் அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்நாளைய அதே ‘பதினாலு மாடி எல்.ஐ.சி.‘ மாநகரச் சுவர்களில் அரை, முக்கால் நிர்வாணிகளாய் காட்சியளிக்கும் சினிமா ‘ஆதாம் ஏவாள்கள்‘.

இளமைப் பட்டாளத்தை தனது பெயருக்கு ‘பட்டா‘ போட்டுக்
கொண்டு குளுமையாக படம் காட்டுகிற ‘சத்யம் காம்ப்ளெக்ஸ்‘. அசுத்தமான மானிடர்களால் கறைபட்டு துக்கமாய் ஓடும் ‘கறுப்பு கூவம்‘. இஷ்டத்திற்கு சாணி கழித்து மனிதர்களுடன் சமமாக ஊடாடும் திருவல்லிக்கேணி மாடுகள். அழகான..அழுக்கான மேன்ஷன்களில் அடைந்து கிடக்கும் ஜீன்ஸ் பிரம்மச்சாரிகள். ‘குட்டி ஆஃப்கானிஸ்தானோ‘ என ஆச்சரியப்படுத்தும் கூட்டமான பர்தா பெண்கள்.

‘தென்மாவட்ட மனிதச் சங்கிலிகளை’ தினந்தோறும் நடத்துகிற
‘எழும்பூர் ரயில் நிலையம். ‘தேசிய ஒருமைப்பாட்டின் ஓடுதளமான‘ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். எத்தனையோ ‘எத்தன்களை‘ தனக்குள் பிடித்து வைத்திருந்து இன்று இடிபடப்போகும் மத்திய சிறை. ‘ஜொள் விளையாட்டு‘ மட்டுமல்ல..இளைஞர்களின் திறமையான ‘உள்விளையாட்டையும் பாரு’ என்று மகா அரங்கம் வைத்து காத்திருக்கும் ‘நேரு‘.

பல மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் காதலர்கள் தனது
‘முப்பாலில்‘ இருந்து மட்டுமே ‘கொட்டம்‘ அடிக்க ‘கோட்டம்‘ தந்த ‘வள்ளுவர்’. லட்சக்கணக்கானோரின் இச்சை தீர்க்க காமிரா முன் கச்சை காட்டும் கோலிவுட்
ஜிகினாப்பெண்கள். ‘இன்னோவா, ஆக்சென்ட்‘களை வழுக்க விட்டுவிட்டு ‘இன்னாபா‘ என்கிற டி.வி.எஸ். ஒல்லி வண்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்கும் டிராபிக் போலீஸ்.

‘த்தா..கீசிடுவேன்‘னு சக தமிழனையே திணறவைக்கும்
தெனாவட்டான ‘சென்னை செந்தமிழ்‘. மூன்றுமணி சுளீருக்கு பஸ் ஸ்டாப்களில் ‘ஜிலீர்‘ இளைப்பாறுதல் தரும் காலேஜ் குமரிகள். இருபது ரூபாய் தூரத்துக்கு நாப்பது ரூவா பறிக்கும் ‘சம்பல்‘ ஆட்டோக்கள். ரஜினியின் தும்மலைக்கூட எட்டுப் பக்க கவர்ஸ்டோரியாக்கி ‘எக்ஸ்க்ளூசிவ்‘ எனத் தொங்கும் வாரப்பத்திரிகைகள். சேனல் மழைக்காக டி.டி.எச். குடை பிடிக்கும் அபார்ட்மென்ட்கள்.

‘கறுப்புப்பூனைகளை‘ முன்னே ஓடவிட்டு ‘கறுப்புகளை‘
பொறுப்பாகக் காப்பாற்றப் ‘பாடுபடும்‘ அரசியல் தலைவர்கள். கொடிபிடிக்க கை தூக்கி..கோஷம் போட வாய் வளர்த்த அப்பாவி ‘தொண்டர்கள்‘. இந்த ‘கல்லாத‘ பேரையெல்லாம் பார்த்து நொந்து ‘கல்லாகிப்போன‘ ‘சிலைத் தலைவர்கள்’.

அடுத்தடுத்து புதுப்புதுசாக நுரைதள்ளும் மெரீனா அலைகள். ‘அசிங்க சங்கதி‘ நடக்கும் இடத்தை வேடிக்கை பார்ப்பதற்கான தண்டனையாக தலைகளில் எச்சம் சுமந்த சிலைகள். இருட்டிய அறையில் செய்யவேண்டியதை ‘சுண்டல் சிறுவர்களின்‘ வெறிப்புகளுக்கிடையே அரையிருட்டில் ‘கொக்கோகிக்கும்‘ சகல வயது ஆடவர்..மகளிர்.
பின்னிரவு வரை போதை மயக்கம் ஏற்றும் நட்சத்திர ஹோட்டல்கள். ஐநூறு ரூபாயில் வாய் துடைக்கும் கரன்சி சுல்தான்கள். ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லுக்கு அலட்சியமாய் நீட்டும் ‘கிரெடிட் கார்டர்கள்‘.

வங்கக்கடல் அலையின் தாலாட்டில் நனையாமல் ‘அணையா
விளக்கோடு‘ சதுக்கத்தில் தூங்கும் தங்கத் தமிழ்மகன் அறிஞர் அண்ணா. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று இன்றும் தமிழ்மக்கள் மதித்துத் துதித்து..நினைவிடத்தில் ‘எங்கள் தங்கமாய்‘ மங்காமல் ஜொலிக்கிற ‘புரட்சித்தலைவர்‘ எம்.ஜி.ஆர். கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘.

இரவுகளில்..குடிசை, பங்களா, ப்ளாட்ஃபார்ம், கார் என ‘இட
பேதம்‘ பாராது ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த ஒரு காரியம்‘ முடித்து தூங்கிப்போகும் மானுடம்! குட்நைட் சென்னை!

31 comments:

butterfly Surya said...

நிஜமாகவே இன்று ”குட் நைட்” தான்.

படுக்க போகும் முன் இப்படி ஒரு சென்னை ரவுண்ட் அப்..

வாவ்...

சூப்பர்..

Real Hero said...

super

கிரி said...

Arumai :-)

Jacks said...

Superb boss. You literally play with Tamil. A very interesting read.

Jacks said...

Superb boss. You literally play with Tamil. Your tamil is as good as a racquet in Rojer Federrer's hand.

R.Gopi said...

"தல" வாங்க..... ரொம்ப நாளா ஆளையே காணுமே?

சரி ஒகே....

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தீங்க......சென்னை ரவுண்ட்-அப்... ஹ்ம்ம்....தூள்.

வாழ்த்துக்கள்....

ஸ்ரீ.... said...

சென்னையை உங்கள் பாணியில் சுற்றிக்காட்டியதற்கும், சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. நல்ல் இடுகை.

ஸ்ரீ....

biskothupayal said...

"கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘"
kavidha madiri irukku unga ezhuthu

sreeja said...

சிங்கார சென்னை-யை இலவசமாக சுற்றிகாட்டிவிட்டீர்கள், நன்றி.

வரிக்கு வரி பாராட்டலாம் போல் இருக்கிறது.

sreeja said...

இனி அடுத்த மாநகர உலா எது, எப்போது?

Nathanjagk said...

சென்னை​டைரிக்குறிப்பு அசத்தல்! வரிக்கு வரி எப்படித்தான் தடவறீங்களோ இந்த நக்கலை? வாழ்த்துக்கள் உதயா!

குப்பன்.யாஹூ said...

நல்ல மொழி நடை, பாராட்டுக்கள்.

குப்பன்_யாஹூ

சிராப்பள்ளி பாலா said...

சென்னை ந(ர)கத்தின் அனைத்து அவலங்களையும் கோர்வையாக அருமையாக சொல்லி விட்டீர்கள்!

எம்.பி.உதயசூரியன் said...

//வண்ணத்துபூச்சியார் said... படுக்க போகும் முன் இப்படி ஒரு சென்னை ரவுண்ட் அப்.. வாவ்... சூப்பர்..//

வண்ணத்துபூச்சி நள்ளிரவில்கூட துள்ளிகிட்டுதான் திரியுது! மகிழ்ச்சி நண்பா!

எம்.பி.உதயசூரியன் said...

//Real Hero said... super//

சிங்காரச் சென்னை ‘ரியல் ஹீரோ’வை வரவேற்கிறது!

எம்.பி.உதயசூரியன் said...

//கிரி said... Arumai :-)//

அருமைன்னு நம்ம கிரி சொல்றதே பெருமைதான்!

Anonymous said...

miga arumai..T_.Nagar..Javali maaligaigal vidu paatu vittathey...kanavargalin budget kanavuglil pattu vil eithum manaivimaargalin perani

எம்.பி.உதயசூரியன் said...

//Jack said... Superb boss. You literally play with Tamil. A very interesting read.//

ஜாக்பாட் அடிச்ச சந்தோஷம் ஜாக்!

எம்.பி.உதயசூரியன் said...

// R.Gopi said... "தல" வாங்க..... ரொம்ப நாளா ஆளையே காணுமே?//

ஆமா கோபி! கொஞ்சம் அவசர.. அவசிய வேலை இருந்ததால் ’தல’மறைவாயிட்டேன்!

எம்.பி.உதயசூரியன் said...

//ஸ்ரீ.... said... சென்னையை உங்கள் பாணியில் சுற்றிக் காட்டியதற்கும், சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. நல்ல் இடுகை.//

ஸ்ரீ..அழகான விமர்சனத்திற்காக கூப்புகிறேன் இரு கை!

எம்.பி.உதயசூரியன் said...

// biskothupayal said.. "கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘" kavidha madiri irukku unga ezhuthu//

க்ரீம் ’பிஸ்கோத்து’ சாப்ட்ட மாதிரி இருக்கு! (பழைய ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ தமிழ்வாணன் ஸ்டைல்ல இருக்கீங்களே தலைவா!)

எம்.பி.உதயசூரியன் said...

//sreeja said... வரிக்கு வரி பாராட்டலாம் போல் இருக்கிறது. இனி அடுத்த மாநகர உலா எது, எப்போது?//

ஸ்ரீஜாவின் பாராட்டுக்காகவே ‘வரி’ கட்டலாம் போலிருக்கிறது! அடுத்த மாநகர உலா..உங்க ஊர்தான் ஸ்ரீ!

எம்.பி.உதயசூரியன் said...

//ஜெகநாதன் said... சென்னை ​டைரிக்குறிப்பு அசத்தல்! வரிக்கு வரி எப்படித்தான் தடவறீங்களோ இந்த நக்கலை?//

ஜெகன்..கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு ஸ்டைலா லுக் விட்டுகிட்டு நீங்க கேக்கற இந்த கேள்விக்கான பதில்தான் இன்னும் சிக்கலை!

எம்.பி.உதயசூரியன் said...

//குப்பன்_யாஹூ said... நல்ல மொழி நடை, பாராட்டுக்கள்.//

வணக்கம் குப்பன் சார்! மதிப்பிற்குரிய மாலன் சார் அவர்களுக்கு நீங்கள் எழுதும் பின்னூட்டங்களின் வாசகன் நான்! தங்கள் வருகை..எனக்கு பெருமை!

எம்.பி.உதயசூரியன் said...

//சிராப்பள்ளி பாலா said... சென்னை ந(ர)கத்தின் அனைத்து அவலங்களையும் கோர்வையாக அருமையாக சொல்லி விட்டீர்கள்!//

பாலா..அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்தானே?

எம்.பி.உதயசூரியன் said...

//Anonymous said... miga arumai..T_.Nagar..Javali maaligaigal vidu paatu vittathey...kanavargalin budget kanavuglil pattu vil eithum manaivimaargalin perani//

தலைவா..’பட்டும்’ படாமலும் நீங்கள் ‘பட்ட’ இம்சையை ‘பட்’டென சொன்ன விதம் ‘பட்டையை’ கெளப்பிருச்சு!

Nags said...

அண்ணாத்த மெட்ராஸ்ல என்ன முக்கி எத்துட போ ... கால்ல நாஸ்டா துன்ன மாதிரிகீது ....

எம்.பி.உதயசூரியன் said...

// Nags said... அண்ணாத்த மெட்ராஸ்ல என்ன முக்கி எத்துட போ ... கால்ல நாஸ்டா துன்ன மாதிரிகீது//

வா வாத்யாரே..சுண்டக்கஞ்சி சோறும், சுதும்புக் கருவாடும் சேத்துவெச்சு துன்ன மாதிரி கீது!

Anonymous said...

எல்லோருக்கும் தெரிந்த குறிப்புகளை எல்லோரும் ரசிக்கும் படி அற்புதமாக எழுதியதற்கு பாராட்டுக்கள்.
எனக்கு தெரிந்து விடுபட்ட சில அடையாளங்கள்.

- பாரி முனை சந்திப்பு, பூக்கடை பகுதிகள்.
- நடைபாதை புத்தகக் கடைகள்
- சரவணபவன் சாப்பாடும், பொன்னுசாமி பிரியாணியும்
- கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் முதல் இன்றைய ஐ.பி.எல் வரை பல சாதனைகள் நடந்த சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டரங்கம்
- கிழக்கு கடற்கரைச் சாலை - மென் பொருள் நிறுவனங்கள்
-மணி

தினேஷ் said...

அண்ணே மூச்சு விடாமா , பராசக்தி கணேசன் பேசுறது மாதிரி படிச்சா அட்டகசமா இருக்குண்ணே ..

நல்ல கதாசிரியர்ணே நீ..

//‘முப்பாலில்‘ இருந்து மட்டுமே ‘கொட்டம்‘ அடிக்க ‘கோட்டம்‘ தந்த ‘வள்ளுவர்’//
/‘திருட்டு ஸ்பரிசம்‘ தேடும் ‘தகாத விரல்கள்‘.//

பார்த்து காப்பி ரைட்ஸ் போடுண்னே , எவனாது விவேக்குக்கு இத அனுப்பிர போறான் . அப்புறம் விவேக்கு இல்ல எவனாது இத பேசுர காட்சி படத்துல வந்துர போகுது

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

 
சுடச்சுட - by Templates para novo blogger