Monday, July 20, 2009
தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!
நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.
அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.
அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!
தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.
சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!
ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.
அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!
அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!
சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.
‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?
கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!
கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!
அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.
இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!
வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)
46 comments:
அவள் ஒரு சோக கீதம்.
படிச்சுட்டு ரொம்ப நெகிழ்ந்துட்டேன் பாஸ். இது எந்த படக்கத தல?
நைஸ்.
I'm the First :=)
Master Piece Sir....
காதல் மட்டுமே கண்ணுக்கு தெரியுது
இது புனைவா..? இல்ல உண்மையா சூரியன்..?
அருமை.
சிரிக்க மட்டுமே இங்கு வருபவர்களுக்கு நெகிழ வைக்கும் கதை..
விரைவில் சிந்திக்கவும் ஏதாவது சொல்லுங்கண்ணா..
இது கதையா..??
மதுரை, சென்னை என்று சுற்றிவிட்டு திடீரென காதலில் விழுந்துவிட்டீர்களே.
வழக்கமான காதல் தோல்வி கதை, உங்களுக்கே உரிய ஸ்பெஷல் நடை மற்றும் துள்ளல் தமிழால் மனதைப் பிழியும் ஒரு அற்புதமான சோக காவியம் ஆகி விட்டது. "முத்தம் உப்புக் கரித்தது" - உங்கள் ஸ்டைல்.
கதை அற்புதம் தல.
புடிக்கலை.
சம்பிரதாயமா பத்திரிக்கையில வர்ற மாதிரி ஆயிருச்சு. அது என்ன அது... மீதி விபசாரிகள் எல்லாரும் ஜாப் சேடிஸ்ஃபேக்ஷனுக்கா முந்தி விரிக்கிறார்கள். பசிக்கு தானே? இதில் எதற்கு நியாயம் கற்பிக்க முயலவேண்டும்?
Blog ஆரம்பிக்கும் போது காமெடியா ஆரம்பிச்சு இப்படி டிரஜிடியா கொண்டு போறிங்களே சார். நல்லா இருந்துச்சு.
- ஆனந்த்
நல்லா இருக்கு உதய் சார், டைரக்டர் ஆயாச்சா அல்லது சிறுகதையா?தோழமையுடன்,
KC
yov udhayasooriyan....
yennappa achhu ?
Its very heartening story...
excellent. please post more like this
is it a story or real life incident//
Rajesh.v
ஆவ்வ்வ்வ் .. நல்ல சொல்றீங்க ஒன்லைனு..
சட்டுபுட்டுனு யாராயாச்சும் ஓட்டாண்டியா ஆக்க வேண்டியதுதானே..
//ரொம்ப நல்லவன் said... அவள் ஒரு சோக கீதம்//
‘ரொம்ப நல்லா’ டைட்டில் வெச்சுட்டீங்களே?
//அன்புச்செல்வன் said... படிச்சுட்டு ரொம்ப நெகிழ்ந்துட்டேன் பாஸ். இது எந்த படக்கத தல?//
அன்பு..பாதி நிஜம். மீதி கதை!
//Cable Sankar said... நைஸ்.//
தலைவா..உங்களோட ஒரு வரி பாராட்டு இவ்ளோ நாளைக்குப் பிறகு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்!
// ஈரோடு சுரேஷ் said... Master Piece Sir.... காதல் மட்டுமே கண்ணுக்கு தெரியுது//
என் கண்ணீரோடு கலந்த ஈரோடு சுரேஷ்..உங்கள் உணர்வு உண்மை!
//டக்ளஸ் said..இது புனைவா..? இல்ல உண்மையா சூரியன்? அருமை.//
புனைவும் உண்மையும் கலந்த நினைவு டக்ளஸ்!
//வண்ணத்துபூச்சியார் said... சிரிக்க மட்டுமே இங்கு வருபவர்களுக்கு நெகிழ வைக்கும் கதை..//
ஆமாம் வண்ணத்துபூச்சியாரே! கவிஞர் கண்ணதாசன் சொன்னதுபோல ‘’சிந்தித்தால் சிரிப்பு வரும்..மனம் நொந்தால் அழுகை வரும்!’’
//வினோத்கெளதம் said... இது கதையா..??//
‘’கதையா..இது உண்மையா? மனமே..பதிலில்லையா?’’ ராஜா பாட்டு கேக்குதா வினோத்?
//வணங்காமுடி...! said... . "முத்தம் உப்புக் கரித்தது" - உங்கள் ஸ்டைல். கதை அற்புதம் தல.//
நண்பா..விமர்சனம் அருமை! நான் சுடச்சுட எதிர்பார்ப்பது உங்கள் வருகை!
//வெங்கிராஜா said... புடிக்கலை.
மீதி விபசாரிகள் எல்லாரும் ஜாப் சேடிஸ்ஃபேக்ஷனுக்கா முந்தி விரிக்கிறார்கள். இதில் எதற்கு நியாயம் கற்பிக்க முயலவேண்டும்?//
’உள்ள’படியே வெங்கிராஜாவின் சூடான விமர்சனத்திலும் நியாயம் உள்ளது!
// Ananth said... Blog ஆரம்பிக்கும் போது காமெடியா ஆரம்பிச்சு இப்படி டிரஜிடியா கொண்டு போறிங்களே சார். நல்லா இருந்துச்சு.//
‘ஆனந்த்’தத்தையே ’அழுக’ வெச்சுட்டியேப்பா!
அப்படியே பணம் வரும் போது குணம் மாறும் மாக்கள் பற்றி எழூதவும். சுய சொரிதலாகும்.
//KC said... நல்லா இருக்கு உதய் சார், டைரக்டர் ஆயாச்சா அல்லது சிறுகதையா?தோழமையுடன், KC//
மனசை உறுத்திய ஒரு கதைதான் KC சார்!
//RAJESH. V said... yennappa achhu ?
Its very heartening story... excellent. //
ராஜேஷ்..உங்க மனசை தொட்டாலே அது ஹிட்டாச்சு! சரிதானே?
// சூரியன் said... நல்ல சொல்றீங்க ஒன்லைனு.. சட்டுபுட்டுனு யாராயாச்சும் ஓட்டாண்டியா ஆக்க வேண்டியதுதானே..//
என் ‘நல்லதம்பி’..’கடலளவு வந்தாலும் மயங்க மாட்டேன்! அது..கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்!’’ -கவியரசின் வார்த்தைகள்தான் நம்ம வாழ்க்கை!
//Sridhar said... அப்படியே பணம் வரும் போது குணம் மாறும் மாக்கள் பற்றி எழூதவும். சுய சொரிதலாகும்.//
நடைபாதை எடை மெஷினும்.. நகைக்கடை தராசும் ஒன்றல்ல என்பது உங்களுக்கு தெரியாதா?
ச்சொ.. ச்சொ.. ச்சொ..
Superb...
கதை அருமை அண்ணே..
முடிவு வரிகள் செம டச்சிங்..!! இது உண்மையாய் இருந்தால் தீபா ரொம்ப பாவம்!!
// //Sridhar said... அப்படியே பணம் வரும் போது குணம் மாறும் மாக்கள் பற்றி எழூதவும். சுய சொரிதலாகும்.//
நடைபாதை எடை மெஷினும்.. நகைக்கடை தராசும் ஒன்றல்ல என்பது உங்களுக்கு தெரியாதா? //
எம்.பி.உதயசூரியன், உதயசூரியன். எம்.பி ஆவதற்கு என்னுடய ஒரு வோட் நிச்சயம் உண்டு, இந்த பதிலுக்காகவே.
முதன் முதலா உங்க வலைப்பதிவை படிச்சேன். என்னமோ போங்க .. எதோ மனசை பிசையுது. ஒரு 2-3 நிமிஷம் எதுவும் செய்யத் தோனல .. சோனா / தீபா கேரக்டர் மெகா சீரியல் கதாநாயகி போல பரிதாபமாக இருந்தாலும் கோபம் தான் வருது.உண்மையான பரிதாபம் "நான்" கேரக்டர் மேல தான் வருது.ஏமாற்றம்,இயலாமை எல்லாம் சேர்ந்து தரும் எரிச்சல் சட்டென்று பற்றிக் கொள்ளுது.
//sreeja said...மதுரை, சென்னை என்று சுற்றிவிட்டு திடீரென காதலில் விழுந்துவிட்டீர்களே.//
ஸ்ரீஜா..மதுரை,சென்னை நகரங்களை சுற்றியது மட்டுமே நான்! ‘காதலில் விழுந்தது’ நம்ம நண்பன்!
அண்ணா முழு கதையையும் சொல்லாம விட்டுட்டீங்களே, பார்ட்டி பிளாக்கை படிச்சிருக்குமா?
அந்தணன்
இப்படி எல்லா சோனாக்களுக்குள்ளும் ஒரு தீபம் ஒளி(ர்)ந்து கொண்டிருக்கும் போல. சோனாவை அணைப்பவர்கள் முதலில் தீபாவை அணைத்து விடுகிறார்கள். பளிச் கதை!
சரி, மேட்டருக்கு வருவோம்..
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அண்ணே... பிரமாதம்! டச்சிங்கா இருந்துச்சு!
// Bhuvanesh said...
கதை அருமை அண்ணே..
முடிவு வரிகள் செம டச்சிங்..!! இது உண்மையாய் இருந்தால் தீபா ரொம்ப பாவம்!!//
ஆமா புவனேஷ்..அந்த பொண்ணு பாவம்தான்!
//thiru said... நான்" கேரக்டர் மேல தான் வருது.ஏமாற்றம்,இயலாமை எல்லாம் சேர்ந்து தரும் எரிச்சல் சட்டென்று பற்றிக் கொள்ளுது.//
'திரு’ப்தியான விமர்சனம்!
//anthanan said...
அண்ணா முழு கதையையும் சொல்லாம விட்டுட்டீங்களே, பார்ட்டி பிளாக்கை படிச்சிருக்குமா?//
அண்ணண்ணா..என்னன்ணா சொல்றீங்க?
//நா.இரமேஷ் குமார் said...
அண்ணே... பிரமாதம்! டச்சிங்கா இருந்துச்சு!//
சகோதரா..அப்படியே இது அச்சுல ‘ஆவணமா’ வர ஆவன செய்யுங்க!
கடனை அடைப்பதற்காக இந்த தவறை செய்கிறேன் என்றால் பரவாயில்லை. அப்பா அம்மாவுக்காக இதை செய்கிறேன் இன்றுவரையில் செய்கிறேன் என்பது சரியாக இல்லை. அவள் கதையை கேட்டுவிட்டு வெறும் முத்தம் வாங்கி நிற்கும் சோதா கதாநாயகன். இந்த இடத்தில் கதையை சிறிது அழுத்தம் கொடுத்திதிருக்க வேண்டும். மற்றபடி உங்க எழுத்து நடை மிக அழகு.
காணாமல் போனவர் பற்றி அறிவிப்பு..... ஐயா உதயசூரியன் அவர்களின் அடுத்த பதிவு.... (ஒரு வாரம் காக்க வைக்கணுமா?)
காணாமல் போனவர் பற்றி அறிவிப்பு.....
உடன்பிறப்பு உதயசூரியன் அவர்களை காணவில்லை , தகவலும் இல்லை ..
ஒரு வேளை உடன்பிறப்பு இடைத்தேர்தல் வேலையா போயிட்டாரோ ?
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
www.findindia.net தளத்தில் இருந்து இலவசமாக ப்ளோகில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
Post a Comment