தோத்தா கொடலு...ஜெயிச்சா மெடலு

Monday, April 12, 2010



எம்.பி. உதயசூரியன்


‘'ஏப்பு...சல்லிக்கட்டுங்கிறது லேசுபாசான விஷயமா என்ன? முச்சந்தியில
குத்தவெச்சு வெளையாடற ஆடு புலி ஆட்டமில்லப்பு இது. உசுரையே
துச்சமா நெனச்சு காளையோட காளை மோதற நேரடி யுத்தம். வாடிவாசல்ல
மொரட்டுக்கொம்புகளோட மெரட்டலா நிக்கற மாடுகளைப் பாத்தாலே
கிலி கெளம்பி, எப்பேர்ப்பட்ட கில்லாடிக்கும் அடிவயுத்துல புளி கரைச்சுரும்ல.
பேரு பெத்த மாடுபுடி வீரனுக கெத்தா களத்துல நிப்பாய்ங்க. கூடவே
வேடிக்கை பாக்க வந்த வெத்துப்பசங்களும் செத்த எலி கணக்கா வீறாப்பு
காட்டுவாய்ங்க. அது தனிக்கூத்து.

அலங்காநல்லூரு, பாலமேடு, சிங்கம்புணரி, சிறாவயல்னு சல்லிக்கட்டுக நடக்கிற
இடம் தெரிஞ்சுருக்கும். ஆனா வந்து நிக்கற வகைவகையான மாடுகளோட
வகையறா தெரியுமாப்பு? மூச்சு விடாம சொல்றேன். மூச்சப் புடிச்சு எண்ணிக்கோ.
மச்சக்காள, மயிலக்காள, ஒச்சுக்காள, ஒயிலுக்காள, நெத்திச்சுட்டி, செவலக்காள,
கொடலுகுத்தி,வட்டக்கருப்பன், ஈட்டிக்கொம்பன், புலிக்குத்தி, பாடச்சுழிகாரினு
பட்டியலு ரொம்பப் பெரிசப்பு.

சல்லிக்கட்டு மாடுகளுக்கான வளப்பு மொறையே தனி தினுசானது. மத்த
மாடுக மாதிரி இதுகள வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டாய்ங்க. போட்டிக்கி
ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே மாட்டுக்கு ஊட்டம் கூட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க.
தெனமும் நல்லா குளிப்பாட்டி, சாம்பிராணி புகை காட்டுவாய்ங்க. நயம் பருத்திக்
கொட்டய நைஸா அரைச்சு, அதோட சாறெடுத்து ஊட்டுவாய்ங்க. அதேமானிக்கி
பசேல்னு பசும்புல்லும், மூலிகைச்செடிகள அரைச்செடுத்த உருண்டையும்தான்
மாட்டுக்கான தினப்படி தீவனம்.

அதேமாதிரி சல்லிக்கட்டு மாடுகள வளக்கற வீட்ல இருக்கறவங்க ரொம்ப சுத்தபத்தமா
இருந்தாகணும். ஊட்டமா தின்னு தின்னு சும்மா ‘கிண்'ணுன்னு காட்டேரி மாதிரி
நிக்கற மாடுக, அக்கறையா வளக்கற ஆம்பளகிட்டக் கூட திமிரா சிலுப்பிகிட்டே
நிக்கும். ஆனா அதே வீட்ல இருக்கற பொம்பளையக் கண்டா பொட்டிப்பாம்பா
அடங்கும். ஏன்னா தெனமும் ஒரு தாய்மாதிரி தன்ன பாசமா கவனிச்சுக்கறதால
அது காட்டற அன்பு அப்புடி. சொன்னா அரண்டு போயிருவீகப்பு...பக்கத்துல மாடு
இருக்கறப்போ அந்த பொம்பளய ஏதோ ஒரு கோவத்துல புருஷங்காரனே கைநீட்டிப்
பேசிட்டான்னு வெய்யி, தொலஞ்சான். அப்புடியே அவம்மேல சீறிப் பாஞ்சு குத்தித்
தூக்கிரும். இதுக்குப் பயந்தே நெறயப் பய பொஞ்சாதிகிட்ட பஞ்சாயத்து வெச்சுக்க
மாட்டாம்ப்பு.


எடுத்த எடுப்புலயே சல்லிக்கட்டுல பூந்து மாட்டை அணைஞ்சற(பிடிப்பது) முடியாதப்பு.
அதுக்குன்னே செல அடிப்படை விஷயங்களை அடிபட்டுக் கத்துக்கணும். மொதல்ல
ஒரு புழுதிக்காட்டுல குட்டி ஆட்டோட முட்டி மோதி மல்லுக்கட்டணும். அதுலயே
உருண்டு பொரண்டு ரத்தக்காயம் ஆயிரும். கொஞ்சம் தேறிட்டோம்னா அடுத்து
கன்னுக்குட்டிகிட்ட கைவரிசை காட்டணும். பேச்சுக்கு இது சுளுவா இருக்கும். ஆனா
களத்துல இறங்குனாத்தாண்டி தெரியும், கன்னுக்குட்டியோட வீரியம். கொஞ்சம்
பிசகிச்சுன்னா, அது முட்டற முட்டுல டங்குவாரு அந்துபோகுமப்போய். ஆனா
அதையும் அடக்கி, நாய்க்குட்டி மாதிரி மடக்கிப் போடறதுக்கும் செல நேக்குபோக்கு
இருக்குதுல்ல.

இதுல தேறினதுக்கு அப்புறமாத்தான் மொரட்டு மாட்டுகிட்ட கொஞ்சம் கொஞ்சமா
நம்ம சேட்டையைக் காட்டணும். எமன் மாதிரி பாஞ்சு வர்ற மாட்டை எப்புடி புடிக்கணும்,
குத்திக் கொடலை உருவற மாட்டை என்ன மாதிரி மடக்கணும்ங்கற சூச்சுமத்தையெல்லாம்
மாடு புடிக்கறதுல சூரப்புலிகளா இருக்கறவய்ங்க கத்துத் தந்துருவாய்ங்கப்பு.

அதேமாதிரி இன்னொரு கூத்தும் இருக்கு. சல்லிக்கட்டு நடக்கறப்போ ‘இந்த மாட்ட
எவன் அடக்கறானோ, அவனுக்கு எம்பொண்ண கட்டித்தர்றேன்னு' இந்த சினிமாப்
படங்கள்ல சவடால் விடுவானுங்க. ஆனா நெசத்துல அப்படியெல்லாம் கெடயாதப்பு.
மாட்டை அடக்கிப்புட்டா அது கழுத்துல கட்டி விட்டிருக்கற தங்கச்சங்கிலி, பரிசுப் பணத்தை
அள்ளிக்கலாம். சமயங்கள்ல நமக்கு வேண்டப்பட்ட ஒறவு மொறையில, கல்யாணமாகாத
மாமங்காரன், மச்சாங்காரன் யாராச்சும் இருப்பாய்ங்கள்ல...அவிய்ங்களப் பாத்து ‘'இந்தக்
காளய நீ அடக்குனா, உனக்கு எம்பொண்ணை கட்டித்தர்றேன்னு' சீண்டிவிட்டு வேடிக்கை
பாப்பாய்ங்க.

சல்லிக்கட்டு வீரதீர வெளையாட்டுதான். அதேமாதிரி சுத்திமுத்தி நிக்கற கொமரிப்புள்ளைகளை
பாக்கறப்போ எக்கச்சக்க தெகிரியம் எக்குத்தப்பா எகிறும்ல. பெறகென்ன? உசுர பணயம்
வெச்சு களத்துல எறங்குவாய்ங்க. தோத்துப்புட்டா மாட்டோட கொம்புல அவனோட கொடலு.
ஜெயிக்கற வீரனுக்கு அந்த கொமரிக சிரிப்புதான் மெடலு''.

நன்றி: புதிய தலைமுறை

20 comments:

கண்ணா.. said...

ண்ணா...வெல்கம் பேக்ண்ணா...

திடீர்னு உங்களையும் அந்தணன் அண்ணனையும் ஆள காணல....??!!

வந்தாச்சுல்ல...பட்டைய கிளப்புங்கண்ணோவ்.....

எம்.பி.உதயசூரியன் said...

கண்ணா said.. வந்தாச்சுல்ல...பட்டைய கிளப்புங்கண்ணோவ்.

//வாங்க கண்ணா, சம்மர் ஜாலியை
ப்ளாக்குல கொண்டாடிருவோம்//

சென்ஷி said...

வெல்கம் பேக் :))

வினோத் கெளதம் said...

தல டீடெய்லு அள்ளுது..

Nathanjagk said...

தென்னமரிக்காவில் இருக்கிற மாதிரி காலரி, பாதுகாப்பு என்று நம் நாட்டிலும் இவ்வீர விளையாட்டை நடத்த முயற்சிக்கக் கூடாதா என்றிருக்கிறது.

விவரமான மண்வாசம் கனத்துத் திரியும் எழுத்து.
நல்லாயிருக்குங்க உதயா!!

Raju said...

வாடிவாசலை நேத்து தொறந்து, இன்னிக்கி நின்னு விளையாடுறீங்களேண்ணே..!

அடிச்சு ஆடுங்க.

எம்.பி.உதயசூரியன் said...

சென்ஷி said...
வெல்கம் பேக் :))

//சிரித்த முகத்தோடு வரவேற்கும் சென்ஷி... நல்லா இருக்கீங்களா?//

எம்.பி.உதயசூரியன் said...

வினோத்கெளதம் said...
தல டீடெய்லு அள்ளுது

//'உப்புமூட்டை' படத்துக்காக அத்தனை
ஜல்லிக்கட்டு ஏரியா வாரியா புகுந்து திரிஞ்சு, நுணுக்கமான மேட்டர்களா அள்ளி வெச்சிருக்கேன் வினோத். அதுல கொஞ்சந்தான் இது//

எம்.பி.உதயசூரியன் said...

ஜெகநாதன் said...விவரமான மண்வாசம் கனத்துத் திரியும் எழுத்து.

//எப்படி இருக்கீங்க ஜெகன்? தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. மண்வாசம் கனத்து எழுதலேன்னா மனசெல்லாம் கனத்துப் போயிருதே//

எம்.பி.உதயசூரியன் said...

♠ ராஜு ♠ said...
வாடிவாசலை நேத்து தொறந்து, இன்னிக்கி நின்னு விளையாடுறீங்களேண்ணே..

//அப்படிப் போடு சபாசு! என் மதுர சிங்கமே, அட்டகாசமான இந்த கமெண்ட்டுக்காகவே இன்னும் பாய்ஞ்சு ஆடணும்னு ஆசையா இருக்கு ராஜு!//

Unknown said...

இன்று எம் மேல் விழுந்த சூரிய ஒளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
எம்பிப்பார்த்தும் கிடைக்காத
எம்.பி.உதயசூரியனே
எங்கு போய் உதித்திருந்தாய் ?

- வருக வருகவே :)

எம்.பி.உதயசூரியன் said...

Monks said...இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? எங்கு போய் உதித்திருந்தாய் ?

//உங்கள் அன்புக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி Monks. 'புதிய தலைமுறை' பத்திரிகை வேலை. அதனால்தான் காணவில்லை ஆளை. இனி தினமும் உதிப்போம், பதிவுகளைப் பதிப்போம்//

butterfly Surya said...

மச்சக்காள, மயிலக்காள, ஒச்சுக்காள, ஒயிலுக்காள, நெத்திச்சுட்டி,செவலக்காள,
கொடலுகுத்தி,வட்டக்கருப்பன், ஈட்டிக்கொம்பன், புலிக்குத்தி, பாடச்சுழிகாரினு.....

யப்பா. உங்க டீரீம் பிராக்ஜெட்டுக்காக சேகரித்த தகவல்களா..?

கோடையை தணிக்க வந்த எங்கள் உதய சூரியனே... அப்படின்னு பெனின்சுலா ஹோட்டல் வாசல்ல ஒரு ப்ளெக்ஸ் பேனர் வைக்க போறேன்.

எம்.பி.உதயசூரியன் said...

butterfly Surya said...கோடையை தணிக்க வந்த எங்கள் உதய சூரியனே... அப்படின்னு பெனின்சுலா ஹோட்டல் வாசல்ல ஒரு ப்ளெக்ஸ் பேனர் வைக்க போறேன்

//பெனின்சுலா வாசல்ல இருந்து நாலடி உள்ளே போயி 'ஃப்ளெக்ஸிபிளான' இடம் ‘பார்'த்து உக்காந்தா காலடியில் பனி உருகும், உச்சியில் குளிர் பெருகும். ரெண்டு சூரியன்களும் கோடையை
த(ண்)ணிக்கலாமே சூர்யா!//

பானு said...

நேர்ல போய் பார்த்திருந்தா கூட "மே" னு தான் பார்திருப்பேன்,detail ah ,அதுவும் நம்மூரு பாஷை யில சொல்லி as usual,அசதீடிங்க சார்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பூக்காதலன் said...

போங்கோன்னா, உங்க மேல கோபம்.
புது பதிவு எதுவும் வந்திருக்கான்னு உங்க ப்ளோக்கை தொறந்து பார்த்து ஏமாந்த நாட்கள் எத்தனை?

இப்பயாவது வந்தீரே.

சந்தோசமாமையா. சந்தோசம்.

எம்.பி.உதயசூரியன் said...

பானு said...,detail ah ,அதுவும் நம்மூரு பாஷை யில சொல்லி as usual,அசத்தீட்டிங்க சார்.

//இல்லேன்னா 'நம்மூரு சல்லிக்கட்டப் பத்தி சல்லிக்காசு பெறாத அளவுக்கு எழுதிப்புட்டானே சல்லிப்பய'னு யாரும் வஞ்சிரக்கூடாதுல்ல மேம்//

எம்.பி.உதயசூரியன் said...

பூக்காதலன் said...போங்கோன்னா, உங்க மேல கோபம்.

//காதலி கோவிச்சுகிட்டா பூ குடுக்கற இந்த பூக்காதலனே கோவிச்சுகிட்டா?! ஸாரி பாஸு. பாத்து பூத்த கண்ணுக்கு சுடச்சுட ஜில்லுன்னு ரெகுலரா நியூஸ் ஜூஸ் குடுத்துருவோம்//

Unknown said...

ungaludaya intha katturayai paditha udan enakku enn munnal kalloori muthalvar seitha oru aaraichi than niaivukku varugirathu athil avar pala nooru aandugalukku munnal varintha oru kugai oviyathi patri aaraitchi seithirunthar antha kugai ooviyathil manithargal kaalaiyai virattuvathu pola irukkum athai vaithu muthalvar solluvar pzhanthamizhan kaaliyai virattinane thavira adakkiyathillai atharkku sandru pola engal oor pakkathil kooda nangal manju virattu endu kaalaiyaio virattuvome thavira adakka mattom angu eppadi maranthargalo pazham kalacharatthai marantha avargali ponrorukku ungaludaya katturai kutti kodalai edukkum appadi eduthal ungalukku medalu than

 
சுடச்சுட - by Templates para novo blogger