Saturday, August 29, 2009

உலக மொழிகள் லட்சக்கணக்குல இருக்கு. வம்பு கிம்புன்னு வந்துட்டா...காதுகள்ல ‘பன்றி’ புகுந்த மாதிரி நம்மாளுங்க ’காச்சற’ ‘கலக மொழிகளும்’ எக்கச்சக்கமா இருக்கு. ஆனா பத்திரிகைகளுக்குன்னே நம்மள மாதிரி ஆளுங்க ‘மாங்கு மாங்கு’ன்னு ஒரு லாங்குவேஜ் எழுதறாங்களே! அந்த மொழி பத்தி தெரியுமா?
தெரியும்...ஆனா தெரியாதுன்னு நஃழுவாதீங்க. காலை, மாலை பேப்பர் எதுவானாலும் காலை ஆட்டிகிட்டே காபியை குடிச்சுகிட்டு பேப்பரை படிச்சுகிட்டிருக்கற ஆளுங்கதானே நாம! இப்போ நான் சொல்லப்போற இந்த நியூஸை எல்லா பேப்பர்லயும் நீங்க தினந்தோறும் படிச்சிருப்பீங்க...படிக்கிறீங்க...படிப்பீங்க!
‘அழகிகள் கைது’ன்னு தலைப்பு இருக்கும். அப்படியே படிச்சிட்டு போனீங்கன்னா...மூணாவது பாராவுல ‘’சூளைமேடு பஸ் ஸ்டாண்டு ஓரமாக நின்றிருந்த இந்த அழகிகள் மூவரும் அந்த வழியே சென்ற ஆண்களை மறித்து ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ என்று சிரித்து அழைத்திருக்கிறார்கள். அதிர்ந்துபோன அந்தப் பகுதி ஆண்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர...அந்த மூன்று விபசார அழகிகளும் கைது செய்யப்பட்டனர்’னு நியூஸ் ஓடும்.
இதைப் படிச்சதுமே எனக்கு ’கொல்’லுன்னு சிரிப்பு பொத்துக்கும். ‘என்னா லொள்ளு’ன்னு திட்டாதீங்க. ’கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்த தொழில்களில்’ விபசாரமும் ஒண்ணு. இது தெரியலேன்னா நாமெல்லாம் மண்ணு. அந்த ‘தகாத செயலில்’ ஈடுபடும் பெண்கள்மீது நடவடிக்கை எடுக்கறதெல்லாம் சரிதான்.
இப்படியொரு ‘இருட்டுத் தொழிலில்’ இருக்கும் மாது, கடந்து போகிற சாதுவான ஆண்களை வழிமறிக்கக்கூட போதுமான சான்ஸ் இரு க்கலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட ஆம்பளைகளிடம் ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ன்னு சல்லாபத் தமிழில் கூப்பிட்டால்...அழைக்கப்பட்டவன் அந்த இடத்திலேயே ‘பொல்லாத பெண்ணடி நீ’ன்னு ‘கும்மியடிச்சு சிரிச்சே..விம்மி வெடிச்சு செத்துப் போயிர மாட்டானா’?
இதைவிட வங்கொடுமை..’அழகி’ன்னு பட்டம் சூட்டி பேப்பர்ல வந்த தங்களோட ஃபோட்டோக்களை பாத்து ’தங்கர்பச்சான் அழகி’ மாதிரி அந்த ‘ஒல்லிப்பிச்சான்’ பெண்கள் சிரிச்சுகிட்டே அழுகறதுதான்.
சரி...இந்த ‘அழகி’யாகப்பட்டவங்க இதேமாதிரி ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ன்னு யாரையாச்சும் அழைக்கிறாங்களா? மூச்சு விடாம வாட்ச் பண்ணிப் பாத்து ஒரு கட்டுரையா எழுதிரலாம்னு நானும், நண்பர்களும் கிளம்பினோம். சென்னையின் பிஸியான ஒரு வர்த்தக ஏரியாவில் ‘வாரியா’ன்னு அந்த ‘வித்தகப் பெண்கள்’ நிக்கிறது வழக்கம். விட்டோம் வண்டியை.
மாலை 6 மணி. ‘உஸ்’னு பெருமூச்சு விடற ஆபீஸ் பெருசுகளும், ‘கிஸ்’ அடிக்கிற நெருக்கத்தில் உரசிப் பேசற காலேஜ் இளசுகளுமா நிரம்பியிருந்தது அந்த பஸ் ஸ்டாண்ட். சொல்லிவெச்ச மாதிரி சீரான கேப்ல தள்ளித்தள்ளி ஜோரா நின்னுருந்தாங்க மூணு ‘அழகிகள்’. மிளகா வத்தல் உடம்பு...அழகா இல்லவே இல்ல. பாக்கவே பாவமா இருந்துச்சு.
’இரைக்காக இரையைத் தேடி இரையாகுற பார்வை..இறைவா பாத்துக்க!’ன்னு நினைச்சுகிட்டேஅவங்களுக்குத் தெரியாம கண்காணிக்கிறோம். ‘அடையாளம்’ தேடிவர்ற ‘வண்டுகளை’ மட்டுமே கரெக்ட்டா கண்டுகொண்டாங்க! மத்தபடி சுத்தி நிக்கற, கடந்து போற ஆண்களை சுத்தி வளைச்செல்லாம் இழுக்கலை. ’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ மாதிரி தங்களை ’கண்டுகொண்டவங்களிடம்’ ‘நயன பாஷை’ பேசி ‘பயனடைய’ பாத்தாங்களே தவிர...’உல்லாசமா இருக்கலாம் வா’ன்னு செந்தமிழ் பேசி தொந்தரவு செய்யலை.
அப்புறமென்ன? நாம வந்த வேலை முடிஞ்சது. அவங்கவங்க ‘அவங்கவங்க வேலையை’ பாக்க கிளம்பிட்டாங்க! இனிமேலாச்சும் ‘அழகி’ நியூஸ் படிச்சா...அந்த ‘உல்லாச’ வார்த்தையை படிச்சதுமே கெக்கெக்கேதான!






