அஜித் ஒரு தேவகுமாரன்!

Thursday, April 30, 2009


இலங்கையை ஆண்ட ராவணனுக்கு இருந்திருக்கலாம் பவர்ஃபுல்லான பத்து தலை! ஆனா..தமிழ் இதயங்களை தன்னைச்சுத்தி சுத்தவைக்கிற ‘சூப்பர் பவர்‘ கொண்டவர்தான் நம்ம ‘ஒத்த ‘தல‘!

வானத்துல வந்து எந்த வால்நட்சத்திரமும் வழிகாட்டலை..ஆனாலும் ஒரு தேவகுமாரனா உதிச்சாரு! தலைக்கு பின்னால எந்த ஒளிவட்டமும் கிடையாது..என்றாலும் தனியா நின்னு முத்திரை பதிச்சாரு! அவர்தான்..அஜித்.மே 1ம் தேதி. உழைப்பாளர் தினம். இந்த நாள்ல பிறந்த அஜித்துக்கு உழைக்கிற வர்க்கத்தின்மேல ‘பிறவிப்பாசம்‘ இயல்பிலேயே இருக்கும்தானே.அந்த பாசத்தை அஜித் சத்தமா சொன்னப்போ..பெரிய யுத்தமே நடந்துச்சு.

அது 1997. தமிழ்சினிமா துறைல திரைப்பட தொழிலாளிகளுக்கும் (ஃபெப்ஸி), படைப்பாளிகளுக்கும் பங்காளி தகராறு நடந்த சமயம். கமலும், அஜித்தும் மட்டுமே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் குடுத்தாங்க.அதனால படைப்பாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து அஜித்துக்கு ‘ரெட் கார்டு‘ (படங்களில் நடிக்க தடை) போடுற ரேஞ்ச்சுக்கு பாய்ஞ்சு மிரட்டினாங்க.அந்த பரபரப்பான சிச்சுவேஷன்லதான் அஜித்தை நான் முதல்முறையா நேரடியா சந்திச்சேன். அப்போ நான் ‘குங்குமம்‘ பத்திரிகைல சப்எடிட்டர். தி.நகர் சில்வர்பார்க் அபார்ட்மென்ட்ல இருந்த ஆபீஸுக்கு வரச்சொன்னாரு.

அஜித்தின் குரல்வளையை நெரிக்கற அந்த நேரத்துல..அவருக்கு ஆதரவா உழைப்பாளிகளோட குரல் தவிர, அப்போதைய சினிமா புள்ளிகள் ஒரு விரல்கூட நீட்டலை. இதனால கொஞ்சம் டென்ஷனா இருந்தாரு அஜித்.‘‘மனசு திறந்து பேசுங்க சார்! உங்க தரப்பு உண்மைகளை ‘குங்குமம்‘ மூலமா உலகத்துக்கு சொல்லுங்க’’ன்னேன். முதல் சந்திப்பு. ஆனா முழுநம்பிக்கையோட என்கிட்ட கலப்படமில்லாம பேசுனாரு.

அந்த பிரச்னை பத்தி ‘அக்குவேறு சுக்குநூறா‘ பத்திபத்தியா எழுதி..அப்போதைய ‘குங்குமம்‘ தலைமை நிர்வாகியான எங்கள் மதிப்புக்குரிய தயாநிதி மாறன் அவர்களின் (எடிட்டோரியல்ல செல்லமா ‘சின்ன எம்.டி.‘னு சொல்லுவோம்!) பார்வைக்கு வெச்சேன். புயல்வேகத்துல படிச்ச ‘சின்ன எம்.டி.‘ அவர்கள் ‘‘உதய்..அஜித் சொல்ற அத்தனையும் எக்ஸ்க்ளுசிவ்தானே?’’ன்னார். ‘‘சத்தியம் சார்’’னேன். ‘‘அப்படியே கவர்ஸ்டோரிக்கு அனுப்பிடு!’’ன்னார் அதிரடியா.

ஆனா அஜித்தோட பேட்டியை ஆஃப் பண்ணனும்னு சம்பந்தப்பட்ட டாப் படைப்பாளிகள் ‘ஆஃப் தி ரெக்கார்டா’ ஆபீஸுக்கு வந்தெல்லாம் ட்ரை பண்ணாங்க. ஆனா நம்ம ‘சின்ன எம்.டி.‘ அவர்களிடம் இந்த ‘பாச்சா‘ல்லாம் பலிக்கலை. இதுக்கிடையில அஜித்கிட்டயும் சில அல்லக்கைக ‘‘குங்குமத்துல உங்க பேட்டி உங்களுக்கு எதிராவே கான்ட்ரவர்ஸியா வரப்போகுது. உடனே பேட்டிய வாபஸ் வாங்கிடுங்க‘‘னு பத்தவெச்சிருக்காங்க. அஜித்கிட்டேர்ந்து என் பேஜருக்கு மெசேஜ் வந்தது. விஷயத்தை சொல்லி சிரிச்சவர்‘‘நான் உங்களை முழுசா நம்பறேன் சார்!‘‘னு மட்டுமே சொன்னார்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு‘ அல்லவா? ஃபெப்ஸி,படைப்பாளி யுத்தத்துல ஒத்தை ஆளா நின்ன அஜித்துக்கு.. சினிமா உலகில் அவர் ஒரு நல்ல ‘சிட்டிசன்‘ங்கிற ‘முகவரி‘க்கு ‘அசல்‘ ‘வரலாறு‘ அந்த பேட்டி!கவர்ஸ்டோரியை படிச்சுட்டு அஜித் என்கிட்ட சொன்னாரு..‘‘இந்த மாதிரி துணிச்சலா தோள் குடுக்க நாலு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் சார்..நான் நெனச்சத சாதிச்சிருவேன்’’னார். ‘‘இந்த நம்பிக்கைக்கு நன்றி சார்‘‘னேன்.

‘சரி..‘அஜித்தை அழவைத்த எம்.ஜி.ஆர்.‘ பதிவில மிச்சம் வெச்ச ‘தல போல வருமா‘ சம்பவத்தை சொல்லவா? அதுவும் ‘தல‘யோட பர்த்டே கொண்டாட்டம்தான். ‘அ‘ முதல் ‘அக்கு‘ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு‘ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு‘..அப்புறம் ‘ஏறிகிட்டு‘ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ‘அப்போ பேச்சும் சிரிப்புமா ‘பேட்ச் பேட்ச்சா‘ நின்னுருந்த நம்மாளுங்களை தேடிவந்து ‘வாய்ழ்த்துய்க்கய்ளை‘ (குளறாம படிங்க) சந்தோசமா வாங்கிட்டிருந்தாரு அல்டிமேட் ஸ்டார். கூடவே திருமதி.ஷாலினியும் வர்றாங்க.

‘‘அச்சச்சோ..சிஸ்டர் வேற வர்றாங்களே‘‘னு எல்லாரோட உள்மனசும் எச்சரிக்க..‘கரீக்ட்டா பேஸ்னுமே‘னு வார்த்தைகளை உச்சரிக்க ட்ரை பண்ணி ட்ரையல் பாத்திட்டிருந்தப்போ..அட! நம்ம பக்கத்துலயே வந்துட்டாங்க அல்டிமேட் தம்பதி. ‘‘தேவகுமாரனும்,தேவதையும் எங்களை தேடிவந்து வாழ்த்தற மாதிரி இருக்கு! எங்க தல இன்னும் உச்சத்துக்கு வர வாழ்த்துக்கள்!’’னு தலய உச்சிகுளிர வாழ்த்தினோம்.அப்போ நம்ம ‘மாப்ள‘ பழைய பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு ‘‘நீடூழி வாழ்க‘‘னு ஆசீர்வதிக்கறதுக்காக ரெண்டு கையையும் ஒருசேர தூக்க..அவர் வலது கையிலேர்ந்த ‘திரவ குவளை‘ சட்னு வழுக்கி தரையில் ‘ச்சலீர்‘னு உடைஞ்சு சிதற..அத்தனை பேரும் பதறிட்டோம். கீழே விழுந்து தெறிச்ச ஒரு சின்ன கண்ணாடிச் சில்லு ஷாலினியின் கைமீது பட்டுவிட..உடனே அஜித் ‘‘நத்திங்..இட்ஸ் ஓகே‘‘னு சொல்லிகிட்டே அந்த சில்லை கவனமா எடுத்துட்டு..ஒரு பேரரை கூப்பிட்டார்.‘‘உடனே இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க‘‘னு சொல்லிட்டு..மாப்ளய பாத்து ‘‘பரவால்ல..கிளாஸ் உங்க கால்ல படாம பத்திரமா வாங்க‘‘னு சொல்லிட்டு அதே ஸ்மைலோட அடுத்த க்ரூப்பை பாக்கப்போனார்.நெஜம்மாவே நெகிழ்ந்து போயிட்டோம் நாங்க.

பாத்தா..மாப்ளைக்கு ‘ஏறினது‘ இறங்கிடிச்சு..எங்களுக்கோ கோபம் ஏறிடுச்சு. உடனே ஒரு ‘உள்நாட்டு போர்‘ மூண்டு..அப்புறம் ‘அயல்நாட்டு நீர்‘‘ தெளிச்சு அடங்குனது தனிக்கதை!

சிம்ரன் அய்யர் ஸ்பீக்கிங்!

Wednesday, April 29, 2009


ஒட்டுமொத்த ரசிகர்கூட்டமே விசிலடிச்சு ரசிப்பாங்கன்னு கனா கண்ட ஒரு ‘திடீர்‘ நடிகர்...ஒத்த ரசிகரா குத்தவெச்சு உக்காந்து விசும்பி அழுகற சோகக்கதைய சிரிக்காம கேளுங்கண்ணே!போன வாரத்துக்கு மொத வாரம்..மதுரைக்கு போயிருந்தேன்ணே. நம்மூர்ணே. நண்டுசிண்டுகள பாத்துட்டு..அல்லுசில்லு வேலைகளயும் முடிச்சிட்டு..பசங்களோட மீனாட்சியம்மன் கோயிலுக்கு போனோம். மனசா தரிசனம் பண்ணோம்ணே.

அப்புறமா..பக்கத்துலேர்க்கற ஆரியபவனுக்கு போயி ஆறாத காபிய சுருக்குன்னு குடிச்சம்ணே. அப்ப..எதுத்த பெஞ்ச்ல உக்காந்து மெதுவடைய துண்டுதுண்டா விண்டு..மெண்டு திண்டுகிட்டிருந்த ‘பெஞ்சக்குச்சி‘ சைஸ் அய்யர்..என்னை பாத்து அஞ்சு இஞ்ச்சுக்கு சிரிச்சார்ணே.(எப்டிண்ணே நம்ம மதுரை பாஷை?)

இவரை எங்கியோ பாத்தது மாதிரி இருக்கேனு பாத்தா...‘அய்..‘பிதாமகன்‘ புகழ் சிம்ரன் அய்யர்! நான் அவரை கண்டுபிடிச்சதை..அவர் கண்டுபிடிச்சப்போ ‘அமெரிக்காவ கண்டுபிடிச்ச கொலம்பஸ் ஹேப்பி‘ அய்யர் முகத்தில தெரிஞ்சதுண்ணே.கொரில்லாவையே மறந்துபோறவய்ங்க மத்தியில இந்த கொசுவை ஞாபகமில்லாதவங்களுக்காக இந்த கொசுவத்தி சுருள்ணே.. (அதான் பழைய ஃப்ளாஷ்பேக்ணே!) ‘பிதாமகன்‘ படத்துல சிம்ரன்,விக்ரம்,சூர்யா,கருணாஸ் ஆடிக்கலக்கற ‘முத்தைத்தரு பத்தித்திருநகை‘ ரீமிக்ஸ் பாட்டுல..தொத்தலான சிம்ரனை இப்படி பாடிகிட்டே வத்தலா சுத்துவார்ல..அவர்தான்ணே இந்த சீனிவாசன் அய்யர்! படம் வந்தபிறகு சீனிவாச அய்யரை ‘சிம்ரன் அய்யர்‘னு பட்டப்பேரு வெச்சு மதுரை ஜனங்க கூப்பிட..‘அந்த சொக்கநாதரே வந்து ஆயிரம் பொன் தந்த மாதிரி‘ சொக்கிப்போயிட்டாரு நம்ம அய்யர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல அர்ச்சகரா இருக்கார்ணே.‘‘இப்போ நீங்க சிம்ரன் அய்யரா..இல்ல..சீனிவாசன் அய்யரா?’’னு லபக்தாஸ் மேனிக்கு கேட்டேன். ‘வட்டக்கப்புல‘ வந்த காபியையும், தன்னோட ஆத்தாமையையும் சேர்த்து ‘சர்ர்ர்‘னு ஒரே ஆத்தாஆத்துனாரு பாருங்க..‘‘சார்..நோக்கு தெரியுமோ? எல்லாம் விதிப்படிதான் நடக்கும்ங்கறேன். பல வருஷத்துக்கு முன்னால நம்ம(!) சிம்ரன் மதுரைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருந்தா. அவாள பக்கத்துல பாத்துடணும்னு அடிச்சுப்புடிச்சு ட்ரை பண்ணேன். ம்ஹீம். சித்திரை திருவிழாவுல சிக்குன சித்தெறும்பு மாதிரி திணறிட்டேன். மனசு கேக்கல.‘தாயே மீனாட்சி..லோகநாயகியான உன்னை தினமும் கிட்டத்திலேர்ந்து தரிசிக்கற கண்ணால..ஒரு சாதாரண நடிகைய பாக்க நெனச்சது தப்பா?‘னு புலம்பினேன். அம்மனுக்கு தாங்குமா? ‘‘போடா படவா..நீ அந்த சிம்ரனோடவே நடிச்சு பேர் வாங்கிக்கோ‘‘னு அருள்பாலிச்சிட்டா. அதை நீங்களே பாத்தீங்களோன்னோ?‘‘

இப்படி கேட்டுட்டு டம்ளர்லேர்ந்து கொதிக்கற காபியை அவரோட உள்தொண்டைக்குள்ள ஊத்துனாரு பாருங்க..ஆத்தே..என் வாயில புகை வந்ததுங்ணே. அதே சூட்டோட ஆரம்பிச்சாரு..‘‘நன்னா செதுக்கி வெச்ச சிற்பம் மாதிரின்னா சிம்ரன்! அந்த சிம்ரன் அனுபவத்தை (சாமி சாமி) நீங்க கேக்கவேல்லியே’’ன்னவர்கிட்ட..தேனியில அந்த பாட்டு ஷூட்டிங் நடந்தப்போ நான் உள்பட நம்ம பத்திரிகையாளர் படையே அங்கே இருந்துச்சுன்னு சொன்னேன்.

இன்னும் குஷியான அய்யர்,‘‘அப்ப என்ன நடந்துச்சு தெரியுமோல்லியோ? அப்படியே சிம்ரனை சுத்திகிட்டே நான் பாடணும். நானென்ன சிவாஜியா? ஒரே டேக்ல ஓகே பண்ண? ஆறேழு டேக் வாங்கிட்டேன். ஆனா பாருங்கோ..துளிகூட கோச்சுக்கலையே சிம்ரன்’’னு சொன்னவர்..வெள்ளந்தியா அடுத்து சொன்னதை வில்லங்கமா நெனச்சு வில்லச்சிரிப்பு சிரிக்காம படிங்கண்ணே..‘‘அந்த ஒல்லிப்பிச்சான் இடுப்பை வெச்சுகிட்டு ஆறேழு டேக்லயும் ஒரேமாதிரி வளைச்சு நெளிச்சு ஆடிகிட்டேர்ந்தா சிம்ரனுக்கு இடுப்பு வலிக்காதா பின்னே! நானும் சளைக்கறதா இல்ல. ஆனாலும் சிம்ரன் அந்த வலியை காட்டிக்காம,‘உங்களால பேஷா செய்யமுடியும்..நல்லா பண்ணுங்க அய்யரே’னு சிம்ரன் ஊக்கப்படுத்தினது இன்னும் என் காதுல ஒலிச்சிகிட்டே இருக்கறது!’’னு அடுத்த மடக்கு காபிய குடிச்சாரு.

அப்போ..பக்கத்து டேபிள்ல உக்காந்த ரெண்டு லேடீஸ் ‘‘யேய்..ஆமாடி! அவரேதான்’’னு பேசிகிட்டே அய்யர் பக்கம் திரும்பி,‘‘நீங்கதானே பிதாமகன்ல சிம்ரனோட நடிச்சவரு?’’னு கேக்க..‘‘ சாட்சாத் நானேதான்’’னு ‘எப்புடி..சாதிச்சிட்டோம்ல‘ங்கிறமாதிரி ஒரு லுக் விட்டு சிரிச்சாரு. அப்படியே என்கிட்ட‘‘பாத்திங்களோன்னோ..இதான் இப்ப எனக்கு பிராப்ளமே. இந்த ஜனங்கள்ளாம் அடுத்து நான் என்ன படத்துல ஆக்ட் பண்ணப்போறேன்னு அக்கறையா விஜாரிக்கறா. ஆனா நம்ம திறமைக்கு (போடுங்கோ) தக்கனாப்ல ரோல் அமையணுமோல்லியோ? அட்லீஸ்ட்..நம்ம நமீதா.. இல்ல.. நயன்தாரா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரோட நடிச்சாலாவது எனக்கான ரீஎன்ட்ரி பேஷா இருக்குமோல்லியோ? அதான் அவா மேனேஜர்ஸ், சில டைரக்டர்ஸ்னு கான்டாக்ட் பண்ணிகிட்டிருக்கேன்’’னார்.

எந்திரிச்சவர் தன்னோட இடுப்பிலிருந்த செல்ஃபோனை உருவி ‘கீக் கீக்‘னு டயல் பண்ணி ‘‘ஹேல்லோ.. சிம்ரன் அய்யர் ஸ்பீக்கிங்’’னு ஜூட்டிக்கா பேசுனாரு. ஆப்போசிட்ல என்ன ஆப்புனு தெரியல..ஆஃப் ஆயிட்டாரு. அப்படியே நடைய கட்டினோம்.

மனசுக்குள்ள உக்காந்து மணியடிக்கிற சினிமா ஆசையும், கோயில்ல நின்னு மணியடிக்கிற மந்திர ஓசையும் பாடாய்ப்படுத்த..அங்கிட்டும் இங்கிட்டுமா தொங்கிட்டு கெடக்கற இந்த ‘மதுரைல மாட்ன சுந்தரபாண்டியனை‘ நெனச்சு சிரிக்கறதா.. அழுகறதா? சொல்லுங்கண்ணே!

வெ.ஆ.மூர்த்தி துண்டும்..

Tuesday, April 28, 2009


'வாய் திறந்தா வயாகரா..கொட்டாவி விட்டா கொக்கோகம்'னு பேச்சுக்கு பேச்சு 'டபுள் மீனிங்'கை பீச்சற 'வெண்ணிற ஆடை' மூர்த்தியை சந்திச்சதை உங்ககிட்ட மட்டும் ரகசியமா சொல்றேன். வெளிய சொல்லிராதீங்க..வெட்கக்கேடு!

அதுக்கு முன்னால..குலதெய்வம் சத்தியமா உங்க தலமேல அடிச்சு சத்தியம் பண்றேன். அடுத்ததா நீங்க படிக்கப்போற 'ச்சீ..ச்சீ' சங்கதிகள்ளாம் வெ.ஆ. பேசி..நான் கெட்டது..ச்சே..கேட்டது. இதனால ஏற்படற 'பின் முன் விளைவுகளுக்கு' கம்பெனி பொறுப்பேத்துக்காது.

ஒரு காமெடி சீரியல் ஷ¨ட்டிங்கில் இருந்தாரு வெ.ஆ.மூர்த்தி. சுத்தி நின்ன ஆளுங்களை 'சூடேத்தி' சிரிக்க வெச்சுகிட்டிருந்தாரு. 'ஷகிலா குளிக்கறத ஓட்டை வழியா எட்டிப்பாக்கற' எஃபெக்ட்ல இருக்கற கண்ணையும், குற்றாலமா குசும்பு கொட்ற வாயையும் வெச்சிக்கிட்டு வெ.ஆ.மூர்த்தி பண்ண ரகளை ராவடி.. சாவடிச்சிருச்சு. என்னை கூட்டிட்டு போன நண்பர், வெ.ஆ.மூர்த்திகிட்ட அறிமுகப்படுத்திவெச்சாரு. ''தம்ப்ரீ..க்க்க்குந்துங்க!''னு அவர் பாணியில சொல்ல..குந்தினேன். அப்போ ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டர் கிராஸ் பண்ண..''பப்பப்..தம்ப்ரீ! இங்க வா!''னு வம்படியா கூப்பிட்ட வெ.ஆ.''என்னது..உங்க இது இவ்ளோ கறுப்பா மொன்னையா இருக்கு!''னு கேக்க..அரண்டுபோன ஸ்க்ரிப்ட் ரைட்டர் ''என்ன சார் சொல்றீங்க?''னு 'மேட்டரை' சரி பண்ணிகிட்டே கேட்டாரு.

உடனே 'ப்ர்ர்'னு தன்னோட வாயை மடக்கி வினோதமா சவுண்டு குடுத்த வெ.ஆ.''அட..உன் பேனாவ சொன்னேம்ப்பா''ன்னவரு..''என்ன..அடிக்கடி லீக் ஆகுதா?''னு கேக்க.. ஸ்க்ரிப்ட்'டர் ஷாக்காகி முழிக்க..அதுக்குமேலயும் என்னால அடக்க முடியல சிரிப்பை.

இப்படி 'பஜார்ல நிஜாரை உருவிட்டாரே'னு உஷாரான ஸ்க்ரிப்ட்'டர் ''சார்..என்னுது பால்(!?) பாயிண்ட்''னு வெகுளியா சொல்ல..''அப்பப்போ புஸ்புஸ்னு பால் பொங்கி வழியுதுன்றே''னு வெண்ணிற ஆடை பின்னி அடிக்க..விட்டா போதும்னு அந்த பையன், விட்டார் ஜூட்.

சிரிப்பை அடக்கிக்கிட்டு நான்,''சார்..உங்களால சிங்கிள் மீனிங்ல பேசவே முடியாதா? எப்பவுமே டபுள்தானா?''னு கேட்டுத் தொலைச்சுட்டேன். ''தம்ப்ரீ..சு..சு..'னுஇழுக்க..''அடக்கண்றாவியே,நம்மளயும்அசிங்கப்படுத்தறாரோ'னு நான் முழிக்க..''சும்ம்ம்மா சுருண்டு கெடக்கற சங்கை ஊ..ஊ..(போச்சுரா) ஊதிக்கெடுக்கறீங்களே! இப்ப நான் சிங்கிள் மீனிங்லயே பேசறேன். சிரிச்சீங்க..கிழிஞ்சது!''னு அடுத்த அட்டகாசத்தை ஆரம்பிச்சாரு.

அப்போ லஞ்ச் ப்ரேக் டைம். வெ.ஆ. டீம்ல இருக்கற அந்த காமெடி நடிகையும், சில பேரும் சில்வர் தட்டுல சாப்பிட்டுகிட்டுருந்தாங்க. என்னைப் பாத்து ''விஷ்க்'னு கண்ணடிச்சு உசுப்பேத்துன வெ.ஆ. அந்த காமெடி நடிகையை பாத்து ''என்னம்மா..உந் தட்டு செம்ம்ம அடி வாங்கி நொங்கி நொங்கெடுத்தமாதிரி இருக்கே''னு கேட்டாரு.

அந்த நடிகைக்கு மூர்த்தியோட 'கீர்த்தி' தெரியதா என்ன? ''ஏதோ நமக்கு வாய்ச்சது அம்புட்டுதான் சார்''னு பொத்தாம்பொதுவா சொல்ல.. பொத்துகிட்டு வந்தது வெ.ஆ.க்கு பொய்க்கோபம்..''ம்ம்ம்மூதேவி மாதிரி பேசாத! தட்டு ஓட்டையோ, ஒடசலோ..அகலமோ, அமுக்கமோ..பளபளன்னு வெச்சிகிட்டாத்தான பாக்கறவங்களுக்கும் சாப்புட ஆசை வரும். நல்லா கழுவ்வ்வி வைம்மா''னு சொல்லி..18பட்டி படங்கள்ல பஞ்சாயத்து சீன்ல வர்ற பழைய ஜமுக்காளத்தை கிழிச்ச மாதிரி 'ப்ர்ர்ர்ர்'னு வெ.ஆ.சிரிக்க..நானும் அதே ர்ர்ர்ருதான்.

''உங்களோட நடிக்கிறப்போ சக நடிகர்களே திகிலா இருப்பாங்க! இதுல ஷகிலா கூட நடிச்சிங்களே..அனுபவம் எப்படி?''னு அடுத்ததா உசுப்பிவிட்டேன். ''கரெக்ட்டா பாயிண்ட்ட புடிச்சு கசக்கிட்டீங்களே''னு ஆரம்பிச்சாரு...

''ஐயையோ..முண்டு முண்டா குண்டு குண்டா வெச்சுகிட்டு பெண்டெடுக்கற பெண்டு அது! உலக உருண்டைகள் உள்ளுக்குள்ள ஊசலாட ஷகிலா படற பாடு கொஞ்சநஞ்சமல்ல. படம் ஃபுல்லா ஷகிலாவுக்கு முண்டு டிரெஸ்தான். ஒரு சீன்ல ஷகிலா மேல போட்டுக்கறதுக்கு துண்டு இல்ல. அப்போ அரக்க பரக்க பாத்துட்டு சரக்குனு என் பட்டுவேட்டிய உருவிட்டாங்க. நல்லவேளை..அன்னிக்கு பாத்து அன்டர்வேர் போட்டிருந்தேன். இல்லேன்னா என்னோட ஸ்ஸ்ஸ்சுயமரியாதை ஸ்ஸ்சுருங்கிப்போயிருக்கும்!''னு சொல்ல..சுருண்டு சிரிச்சேன்.

விடாம பேசுன வெ.ஆ.,''அம்மாம்பெரிய வேட்டிய ஷகிலா மாராப்பா போட்டத பாத்து மாரடைப்பே வந்துருச்சு எனக்கு. மல்லாக்கப் படுத்த நீர்யானைக்கு மார்ல கர்ச்சீப் போட்டமாதிரி..தம்மாத்துண்டா நெஞ்சுக்கு நடுவில கிடந்தது என் வேட்டி. ப்ரேக்ல ஷகிலா கிட்ட சொன்னேன்..''நீ எங்க போய் தங்கினாலும் கிரவுண்ட் ஃப்ளோர்லயே தங்கிடுமா. தவிர்க்கமுடியாம மாடியில கீடியில தங்கினாலும் பால்கனியிலேர்ந்து குனிஞ்சு பாத்துராத. பூசணிக்காய்னு ப்ப்புடுங்கிரப்போறாங்க!''னு அட்வைஸ் பண்ணேன்''னு முடிச்சாரு 'பச்சை' ஆடை மூர்த்தி.

ஒருவழியா கிளம்பினேன்.''அடடே..அதுக்குள்ள 'கௌம்பிருச்சா'''னு அதுலயும் ஒரு 'உள்குத்து' வெச்சு உசுப்பின வெ.ஆ.''இதுக்கு பதில் சொல்லிட்டு கௌம்புங்க. சிலபேரு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்காங்களே..ஏன்?''னு என்னை நிப்பாட்டி கேட்டாரு. தெரியலேனு உதடு பிதுக்கினேன்.

உடனே வெ.ஆ.''இதுக்கே பிதுக்கிட்டா (ஐயோ..ஐயோ) எப்பிடி? தெரிஞ்சிக்கங்க. கிளி..'கொட்டைய' மட்டுந்தான் கொறிக்கும். ஆனா குரங்கு..நல்லா 'பழம்' சாப்புடும்! பப்..பப்''னு சொல்ல.. வழியெல்லாம் சிரிச்சு வயிறெல்லாம் வலி!

அஜித்தை அழவைத்த எம்.ஜி.ஆர்.!

Saturday, April 25, 2009

'நாயகன்' வேலுநாயக்கரை வேணும்னா 'நீங்க நல்லவரா..கெட்டவரா'னு கேக்கலாம். ஆனா 'அசல்' நாயகன் அஜித்தை 'நீங்க நல்லவரா..ரொம்ப நல்லவரா'னுதான் கேட்டாகணும். அப்படிப்பட்டவர் நம்ம 'தல'!

'அல்டிமேட் ஸ்டார்' அஜித்துக்கும் எனக்குமான சந்திப்புகள் 'ஸ்வீட் பாக்ஸ்' மாதிரி. எந்த சந்திப்பை அசைபோட்டாலும் அது தித்திப்பாவே இருக்கும். அப்படியரு சந்திப்பு இது.

2004. அஜித் பைக் ரேஸில் பரபரப்பாக இருந்த நேரம். அவரது நம்பிக்கையான நண்பராக இருந்த ஒரு தயாரிப்பாளர்..'தல' தந்த பிளாங்க் செக்கை வெச்சு அவரையே 'கோடிகளில்' ஏமாத்திட்டார்னு தெருக்கோடிவரை பேச்சு. அப்போது நான் 'தமிழ்.சிஃபி.காம்' இணைய இதழின் எடிட்டர். அஜித்தின் பி.ஆர்.. சுந்தரிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். அடுத்தநாளே ஃபிக்ஸ் பண்ணித்தந்தார்.

'அட்டகாசம்' ¨ட்டிங்கில் 'தல' அட்டகாசம் பண்ணிக்கிட்டிருந்தாரு. ஷாட் பிரேக்ல அஜித்தை சந்திச்சேன். ''வாங்க ஜி''னு உபசரிச்சவர் முகத்தில வழக்கமான மலர்ச்சி இல்லை. காரணம்..நண்பனின்(!?) நம்பிக்கை துரோகமா இருக்கலாம். 'சரி..தலயை கொஞ்சம் ஜாலி மூடுக்கு கொண்டுவரலாமே'னு எடுத்த எடுப்பிலயே ''சார்..எம்.ஜி.ஆர். பத்தி என்ன நினைக்கறீங்க?''னு வலையை வீசினேன்.

லேசா ரிலாக்ஸான அஜித் ''ஜி..அவர் எவ்ளோ பெரிய வரலாறு. அவர்மாதிரி ஒரு பங்காவது நம்மால வாழமுடிஞ்சா அதுவே பெரிய சாதனைதான்''னு ஃபீலிங்கோட சொன்னாரு. 'ஆஹா..தல கூலிங் ஆயிட்டார்ரா'னு நான் ''அப்பேர்ப்பட்ட புரட்சித்தலைவர் அப்பவே உங்களுக்காக ஒரு பாட்டு பாடிவெச்சுட்டு போயிருக்காரு தெரியுமா?''னு அடுத்த கொக்கியை போட்டேன்.

திடீர் சந்தோஷத்துல சிக்கி திக்கித்திணறுன அஜித் ''என்ன சொல்றீங்க? என்ன பாட்டு அது?''னு ஆர்வமா கேக்க..''தர்மம் 'தல' காக்கும்..தக்க சமயத்தில் உயிர் காக்கும்! கூட இருந்தே குழிபறித்தாலும்..கொடுத்தது காத்து நிற்கும்!'ங்கற பாட்டுதான் அது!''னு நான் டைமிங்கா அடிக்க..நெகிழ்ந்துபோன அஜித் கண்கலங்கி என் கையை பிடிச்சிகிட்டாரு. அதுக்குப்பிறகு நட்பு,தப்பு,பாசம்,வேஷம்னு தன்னை பாதிச்ச அத்தனை மேட்டரையும் மனசு திறந்து பேசுனாரு.

சின்னவயசுல காணாம போன 'அண்ணந்தம்பிகளை' கண்டுபிடிக்கணுமா.. 'மாமா மச்சான்னு' பாசக்கார பயலுகலோட பாண்டி ஆடணுமா..'சில்லறை மாத்திட்டு வர்றேன்'னு 500 ரூவாய வாங்கிட்டு 'ஞாபகமா' மறந்துட்டு போன 'மிச்சான்களை' புடிக்கணுமா..அத்தனை பேரும் ஒண்ணா கூடி கும்மியடிக்கற இடம்..அஜித் பிரஸ்மீட்தான். அப்படியரு சந்திப்புல நாங்க காட்டின பாசத்த பாத்து தலைசுத்தி போயிட்டாரு 'தல'.

ஃபாரின்ல நடக்கற பைக் ரேஸ்ல போட்டிபோட கிளம்பறாரு அஜித். அதுக்கு முன்னால எங்களுக்கெல்லாம் கிராண்டா ஒரு பார்ட்டி தர்ராரு. 'காலையிலேர்ந்தே குடலை அலசி காயப்போட்ட மாதிரி' லார்ஜ்க ரிப்பீட் ஆகிட்டிருந்தது. நம்ம டீம் ஆசாமிகளும் (நான்,அந்தணன்,அமலன்,மாப்ள,மச்சான்) எங்களோட 'பரிசுத்த ஆவியை' எழுப்பி 'பாச இட்லியை' வேகவெச்சு கொட்ட ஆரம்பிச்சுட்டோம். அந்த 'ராவு' காலத்துல யாராவது இந்த டீம் கிட்ட சிக்கினா..ஜாலி'சட்னி'தான்.

நல்லவேளை. அந்த சமயம் பாத்து அஜித் எங்க சைடு வந்தாரு. பர்சனலா விசாரிச்சுட்டு ''நல்லா என்ஜாய் பண்ணுங்க!''னு சொன்னதுமே, எங்களுக்குள்ள ஊறிக்கிடந்த 'தல' பாசம் 'தல கால்' தெரியாம வெளியாச்சு பாருங்க..''சார்! எங்க தல ரேஸ§க்கு போறதுல ரொம்ப பெருமைதான்! அதேசமயம்..ஊர் பேரு தெரியாத நாடு. எப்படி இருக்கும்னு தெரியாத ரோடு. பாத்த்து கவனமா.. கொஞ்சம் மெள்ள்ள்ளமா பைக்கை ஓட்டுங்க''னு நாங்க கோரஸா சொன்னதுமே..அஜித் எங்களை 'அட..படவா ராஸ்கோலுகளா'ங்கற மாதிரி பாத்துட்டு..சிரிச்சாரு பாருங்க சிரிப்பு! ஆஹா..'கோல்கேட் பற்பசை விளம்பரத்துக்கு அதுமாதிரி ஒரு டாலடிக்கிற வெள்ளைச்சிரிப்பு' எங்கயுமே இல்லை.

'பகைவன்'கூட நெகிழ்ந்து 'தல' போல வருமானு சொல்ற அளவுக்கு ஒரு 'அமர்க்களமான' மேட்டர் இருக்கு! அதை அஜித் பிறந்தநாளான மே 1ம்தேதி சொல்லலாம்னு 'ஆசை'. அதுவரை வெய்ட் பண்ணுங்க 'வாலி'பர்களே!

பங்காரு அடிகளாரின் மூன்று மடக்கு தண்ணீர்!

Wednesday, April 22, 2009

'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்..


கோயிலின் கருவறைக்குள் எவருமே நுழையக்கூடாது என்ற துருப்பிடித்த மரபுச் சங்கிலியை உடைத்தெறிந்து 'அம்மனுக்கு பெண்கள் உட்பட சகலருமே பூஜை செய்யலாம்' என்று கதவு திறந்த முதல் ஆலயம் இதுதான்!

கோயிலுக்கு உள்ளே 'அம்மா' என வணங்கப்படும் பங்காரு அடிகளாரின் வீடு.. பேட்டிக்காக நான் போனபோது ஏராளமான பக்தர்கள் அடிகளாரின் ஆசிபெற வாசலில் காத்திருந்தனர். 'வாங்க! அம்மா கூப்பிடறாங்க! வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைச்சிருக்கிற அற்புதமான வாய்ப்பு இது!'' என்றபடி என்னை அழைத்து சென்றனர்! உள்ளே...

அலைபாயும் சுருள்முடி.. 'பளீர்' மேக்கப். பளபளக்கும் பட்டாடை. கமகமக்கும் பர்ஃப்யூம். கையில் கமண்டலம்.. இப்படி சாமியாருக்கே உரிய எந்த பந்தாவும் இல்லாமல், 'நம்ம ஊர் பெரியவர்' போல ஒரு நாற்காலியில் சிவப்பு சால்வை போர்த்தி, சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார் அடிகளார்!

''என்ன விசேஷம்? திடீர்னு என்னைப் பார்க்க வந்திருக்க?''

''உங்க பேட்டி வேணும்னு வந்திருக்கேன்!''

''யாருக்குமே நான் பேட்டி தர்றதில்லையே! ஏன்னா பேட்டி தந்தா பிறகு போட்டி வந்துடுமே!'' என்று லேசாகச் சிரித்தார்.

''நிச்சயம் தருவீங்கனு நம்பிக்கையோட வந்திருக்கேன்!''

சில நொடிகள் என்னைக் கூர்மையாகப் பார்த்த அடிகளார் கண்ணை இறுக மூடி.. கை உயர்த்தியபடி பேசத் தொடங்கினார்..

''உலகத்துல உழைக்கணும்! பொழைக்கணும்! கிளி, புறா மாதிரி சந்தோஷமா வாழ்ந்துட்டு போகணும்! குப்பையில இருப்பவன் குபேரனாகணும். அடிமட்டத்துல இருப்பவங்களுககுத்தான் தொண்டு செய்யணும். எத்தனை மாடி கட்டிடம் கட்டினாலும் அஸ்திவாரம் கீழேதானே இருககு. கீழே இருப்பவன் திருடனா மாறிட்டான்னா..அப்புறம் எல்லாமே போச்சே. அதனால அவங்களைத்தான் முன்னேத்தணும்!''

என்று சமூக நடப்புகளை அலசி தீர்வுகளையும் சொன்னார்.

அப்போது சுவரிலிருக்கும் கடிகாரம் சங்கீதமாக ஒலிக்கிறது! அடிகளார் அதைச் சுட்டிக்காட்டியபடியே..

''பார்த்தியா.. உள்ளே செல் இருக்கிறதாலதான் அந்த கடிகாரம் கரெக்டா பேசுது! அதுமாதிரி.. மனுஷனுக்கு உள்ளே இருக்கற ஆன்மாதான் பேசணும்! நான் கைகாட்டி மாதிரி! எது நல்லவழியோ அதைக் காட்டறேன்!'' என்று முடித்தவர்.. சில நொடிகள் தனது கண்களை மூடி.. வலதுகையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு, ''இந்தா'' என்றார்! நானும் பவ்யமாக கை நீட்ட.. அடிகளாரின் கையிலிருந்து 'செவேர்' நிறத்தில் குங்குமம் கொட்டியது! மறுபடியும் ''இந்தா! இதையும் வெச்சுக்கோ'' என்று இன்னொரு முறை தனது வலது கை மூலம் குங்குமம் வரவழைத்துத் தந்தார்!

அருகிலிருந்த தனது உதவியாளரை அழைத்து கோயில், ஆஸ்பத்திரி, காலேஜ் எல்லாத்தையும் சுத்திக்காட்ட சொன்னார்.

திரும்பி வந்தபோது உள்ளே.. அதே நாற்காலியில், அதே சிரிப்போடு அப்படியே உட்கார்ந்திருந்த அடிகளார், ''என்ன நல்லா பார்த்துட்டியா? எப்படி இருக்கு? என்ன நினைக்கிறே?'' என்று என் கருத்தைக் கேட்க, ''ஒரே பிரமிப்பா இருக்கு! இவ்வளவையும் 'அம்மாவே' சாதிச்சிருக்கீங்கன்னா.. நிச்சயமா இது மனிதச் செயல் அல்ல!'' என்றோம். சிரித்தபடி என்னைப் பார்த்த அடிகளார்.. தொடர்ந்து..

''நார்த்தை (வட இந்தியா) பார்த்து திட்டிகிட்டே இருக்கோம்! ஆனா நார்த்துல 'நாத்து' நடறான்! சவுத்ல (தென்னிந்தியா) 'சவுக்கு' நடறான்! என்ன.. புரியுதா? வடக்கே விவசாயம் செழிப்பா இருக்கு! இங்கேயோ வறட்சியாதானே இருக்கு!'' என்றார்.

அப்போது அடிகளாரை ஃபோட்டோ எடுக்க ரெடியானபோது, ''நானென்ன நடிகனா? மேக்&அப் ஏதும் போடலியே'னு சிரித்தபடி சம்மதித்தார்!

மூலைக்கு மூலை பெருகிவரும் போலிச்சாமியார்கள் பற்றி கேட்டபோது..

''ஊர்ல இருக்கிற நாயை கல்லால் அடிச்சா வீணாக கடிக்க வரும். நான் அருள்வாக்கு சொன்னா இந்தியாவையே வாங்கிருவேன்.என்னைப் பொறுத்தவரை நான் ஒரு வேலைககாரன். ஆன்மாவை சுத்தம் பண்றதுதான் என்னோட வேலை. சாதாரணமா ஒரு பானையை கூட ஓட்டை இருக்கானு தட்டிப் பார்த்துதானே வாங்கறே. உண்மை எது.. பொய் எதுனு நீயே புரிஞ்சுக்கோ. ஒரு உதாரணம் சொல்றேன். நாட்டு நாயைப் பாரு, எப்பவும் வீட்டுககு வெளியவே பாத்துட்டிருககும். ஆனா இந்த ஃபாரின் நாய் இருககே, அது எப்படா பிஸ்கட் போடுவான்..விஸ்கி ஊத்துவான்னு நம்மளையே பாத்துட்டிருககும். என்ன புரியுதா?''னு வலதுகையை தூக்கி ஆசிர்வதித்தார்.

''பேட்டி எடுககறப்போ, மத்தவங்ககிட்ட கேள்வி கேட்கற மாதிரியெல்லாம் அடிகளார்கிட்ட கேட்காதீங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதைமட்டும் கேட்டு'கோங்க!'' என்று பேட்டிககு முன்னரே அடிகளாரின் உதவியாளர் சொல்லிவிட்டதால் அவர் பற்றிய பர்சனல் கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட வேண்டியதாகிவிட்டது.

அப்போது மாலை 4 மணி. மீண்டும் கடிகாரம் சிணுங்க.. ''அடடா.. ரொம்ப தாகமா இருக்குல''னு அக்கறையா விசாரிச்ச அடிகளார், ''கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!'' என்றார். உடனே உதவியாளர் ஒரு டம்ளரில் கொண்டு வந்த தண்ணீரை இடது கையால் வாங்கி, நமது கையில் கொஞ்சமாய் ஊற்றினார்! குடித்துப் பார்த்தேன்! லேசான உப்பு ருசி!

அதே டம்ளரிலிருந்து தண்ணீரை தனது வலது கையில் ஊற்றி தீர்த்தம் போல எனக்குத் தர, இப்போது குடித்தால்.. அட.. மினரல் வாட்டர் டேஸ்ட்!

''எப்படியிருக்கு,'' & அடிகளார்!

''ரெண்டு தண்ணீருக்கும் ருசி வித்தியாசம் இருக்குங்க!'' & நான்!

புன்னகைத்தவர், அதே தண்ணீரை மூன்றாவது முறையாக எனது கையில் ஊற்ற, இப்போதோ 'இளநீர்' போல தித்தித்தது!

''என்ன, மூணுக்குமே வித்தியாசம் தெரிஞ்சுதா?'' என்றார்! ''நல்லாவே தெரிஞ்சுதுங்க!'' என்றேன் வியப்புடன்!

''வேறென்ன?'' என்பதுபோல பார்த்தவரிடம், ''மக்களுக்கு ஏதாவது அருள்வாக்கு சொல்லுங்க!'' என்றேன்!

ஆரம்பித்தார் அடிகளார்.. ''சேர்த்து வைச்சா சேறாயிடும்! சேர்த்து வைக்காம சோறாக்கு! எல்லோருக்கும் பயனாக்கு! பிறரை உண்மையாக நேசி! ஆனா, மத்தவங்க மதிக்கணும்னு போலியாக நேசிக்காதே! நான் உனக்கு வழிகாட்டினால், நீ நாலு பேருக்கு வழிகாட்டு! இந்த சங்கிலித்தொடர் மூலம் உலகம் நல்லா இருக்கும்!''

& தனக்கே உரிய பிரத்யேக போஸில் அடிகளார் தனது மார்புக்குக் கீழாக இரு கைகளை நீட்டி விரித்து, ''காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! இனிமேல் உனக்கு நல்லகாலம்தான்! இது அம்மாவோட வாக்கு!'' என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்!

அசின் வைரஸ்.. ஏவ்வ்வ்!

Tuesday, April 21, 2009


சினிமாவில் அசின் அறிமுகமாகற சீன்கள்லாம் கலர்ஃபுல்லாத்தானே இருக்கும். ஆனா.. 'அசினை பாப்பம்'னு ஆவலா கேரவான்ல உக்காந்திருந்த எனக்கு 'ஏ..வ்வ்வ்'ங்கிற ஒரு ஏப்பத்தோட அறிமுகமானார் அசின்!

அசின் ஃபீவர் ஓவரா இருந்த சீஸன் அது. எடிட்டோரியல்ல ஆளாளுக்கு 'அசைன்மெண்ட் போறேன்'னு சொல்றதைக்கூட 'அசின்மென்ட்'னுதான் 'ஜொள்ளு'வாங்க.

இப்படி பள்ளிக்கூட பாப்பா முதல் பல்லுப் போன தாத்தாவரை அத்தினிபேர் மனசிலும் பிசின் மாதிரி ஒட்டிக்கிட்டாங்க இந்த 'சித்தினி' வம்ச அசின்! கவர் ஸ்டோரிக்காக சந்திக்கப் போனேன். வாகினி ஸ்டுடியோவுல 'சிவகாசி' ஷ¨ட்டிங். ஸ்பாட்டுக்குப் போனா.. பஞ்சு மிட்டாய் கலர்ல பாவாடை தாவணி போட்டு அசின் விஜய்யை கொஞ்சிகிட்டிருந்தாரு.

அசினோட அசிஸ்டண்ட் வந்து 'கேரவான்ல வெய்ட் பண்ணுங்க. மேடம் வந்துடுவாங்க!'னு சொல்ல உள்ள போயி ஜில்லுனு உக்காந்தேன். டோர் திறந்தது. 'அசின் வர்றாப்ல'னு ஆவலா எட்டி பாத்த எனக்கு.. 'தூர்வாராத கெணத்துல விழுந்து துருப்பிடிச்ச ஸ்பீக்கர்' சவுண்டுல ''ஏ..வ்வ்வ்''னு ஒரு ஏப்பம் மட்டுமே முதல்ல வர.. அதே செகண்ட்ல அசின் உள்ளே வந்தாங்க.

''சத்தியமா அசின் குரல் இப்படி 'ட்ரிபிள் கரகரப்பா' இருக்காதே'னு யோசிச்சப்பதான் அடுத்த 'ஏ..வ்வ்வ்'வை அதே எஃபெக்ட்ல ஏவி விட்டபடி உள்ள வந்தாரு அசினோட அப்பா ஜோசப் தோட்டம்கல்.

மின்னலா என்னைப் பாத்து சிரிச்ச அசின்.. அப்படியே சன்னமா மலையாளத்துல அப்பாவைத் திட்ட ('ஏவ்'க்கு ஆப்பு!) ''ஓகே மோளே!''னு அவர் சிரிச்சு சமாளிச்சாரு. அப்பதான் ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். அசினுக்கு மீசை, தாடி வெச்சா.. அப்படியே அவங்க அப்பா! அவர் மழிச்சா அச்சுஅசலா அசின்!

அசிஸ்டண்ட் ஆரஞ்சு ஜூஸ் தர வாங்கி கையில வெச்சுகிட்டு, ''உங்களப் பத்தி கேள்விப்படற நியூஸ் எல்லாமே ரொம்ப ஆச்சர்யப்படுத்தற மாதிரி இருக்கே?''ன்னேன். 'ஆ'னு அழகா ஆச்சர்யப்பட்ட அசின் ''அப்படியென்ன கேள்விப்பட்டீங்க! சொல்லுங்க ப்ளீஸ்''னாங்க.

''அசினுக்கு எக்கச்சக்க பிஸினஸ் இருக்கு. உங்க பேர்ல ஒரு அணைக்கட்டே இருக்குன்னு நியூஸ் வருதே! உண்மையா?''னு கேட்டேன். 'பளிச்'னு சிரிச்ச அசின் ''நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். இதுக்கான பதிலை நான் சொல்றதைவிட என் டாடி சொன்னா கரெக்டா இருக்கும்''னு சொல்லிட்டு 'டாடியை' பார்க்க.. தாடியை வருடிகிட்டே மீதியை அவர் சொன்னார்..

''ஞான் வந்து.. தோட்டம்கல் பேர்ல எஸ்டேட், ஜூவல்லரி, சிட்ஸ் அன்டு இன்வெஸ்ட்மெண்ட், ரெடிமேட்ஸ், டிராவல்ஸ், ஹெச்.பி, ஐ.ஓ.சி, டீலர்ஷிப், டூரிஸ்ட் ஹோம், கேரளா ரோடு லைன்ஸ், வாட்ச் ஹவுஸ், நர்சரி, ஷாப்பிங் மால். (இத பார்ரா.. ஒரு பிசினஸ்கூட தமிழ்ல இல்ல!) இப்படி டஜன் கணக்கில் பிஸினஸ் பண்றோம்.'' மூச்சுவிடாமல் ஜோசப் சொல்ல.. மூச்சு வாங்கிச்சு எனக்கு.

''பொதுவா எந்த நடிகருக்கு கம்பெனி குடுக்கலாம்னு யோசிக்கிற சில நடிகைகள் மத்தியில.. இத்தனை கம்பெனிகளை வெச்சிருக்கற ஒரே நடிகை நீங்கதான் போல!''னு நான் சொன்னதும் அசின், அப்பா ரெண்டுபேர் முகத்திலும் 'கதகளி' களிப்பு.

ஆரஞ்சு ஜூஸை ஒரு 'சிப்' சிப்பலாம்னு எடுத்த நொடியில.. அசின் குறுக்கிட்டு ''இத்தனை கம்பெனிகளுக்கும் யார் எம்.டி. தெரியுமா? நான்தான்''னு குஷியா சொல்ல.. ''என்ட மோளே..!''னு மகளை உச்சிமோந்து ஜோசப் மலையாளத்தில் பறைய அசின் உருக.. ஃபீலிங்கில் கூலிங் போன ஜூஸை உறியாமலே வெச்சிட்டேன்.

''சரி.. நிஜம்மாவே உங்க பேர்ல அணைக்கட்டு இருக்கா?''னு கொக்கியை போட்டேன். ''ஹைய்யோ''னு 'சிக்கிமுக்கி கல்லா' சிரிச்ச அசின் ''நீங்க நெனைக்கற மாதிரி பிரம்மாண்டமான டேம் கிடையாது அது. எங்க வீட்டுக்கிட்டே எங்க தேவைக்காக கட்டியிருக்கற சின்ன டேம் அது!''னு தன்னோட கையால அவர் காட்டின சைஸைப் பாத்தா.. நம்ம வீட்டு தண்ணித் தொட்டி மாதிரி இருந்துச்சு.

இப்படியாக அசினுக்கும், அப்பாவுக்கும் என்னை ரொம்பவே பிடிச்சுப் போச்சு. 'இனி எங்க ஃபேமிலில நீங்களும் ஒருத்தர்'னு ரேஷன் கார்டுல பேர் சேர்க்காத குறையா பாசம் காட்டினாங்க.

பேட்டி அச்சேறி.. 'குங்குமம்' கடைக்கு வந்திருச்சு. அட்டையை அலங்கரிச்சது அசின் படம்தான். ஆனா, கவர் ஸ்டோரியா வந்தது.. ''வைரஸ் நோய்களைப் பரப்பும் வாட்டர் பாக்கெட்''னு நான் எழுதின வேற ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

புக்கை பார்த்துட்டு அசின் அப்பா அலறியடிச்சு என் 'செல்'லுக்கு வந்தாரு.

''எந்தா சாரே.. அட்டைல என் டாட்டர் ஃபோட்டோ போட்டுட்டு.. கீழே ''வைரஸ் நோய் பரப்பும்'னு ஏதோ வாட்டர் மேட்டர் போட்டிருக்கீங்க! டிவியில விளம்பரம், ஊரெல்லாம் போஸ்டர்! இப்படி பண்ணியாச்சே நீங்கள்? என் டாட்டர் ஃப்யூச்சர் என்னாகறது?''னு ரத்தக்கண்ணீர் வடிச்சாரு.

''சார்.. வைரஸ் நோய்கள பரப்புறது வாட்டர் பாக்கெட்தான்! அசின் இல்ல சார்!''னு அவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.. தோட்டம்கல் 'வாட்டம்கல்'லாவே வருத்தப்பட்டாரு.

அசின் வீட்டு ரேஷன்கார்டுல சேர்க்கப்படவேண்டிய என் பேரு இப்படி மோசம் போனதை நெனச்சு நீங்க சிரிச்சுராதீங்க ப்ளீஸ்!

ஏ..வ்வ்வ்!

ஆமை மேல படுத்தமாதிரி ஊமை வலி!


அம்பானி முதல் அப்பிராணி வரைக்கும் அத்தனை பேரும் சொல்ற டயலாக்1 ''எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்காகத்தானே!''. ஆனா எல்லாருக்குமே ஒரு சாண் வயிறுதான் இருக்கா என்ன? அப்படியரு காமெடி பண்ணி இந்த நடிகர் வயிறு எரிஞ்ச காமெடி இது!

ரைட். டைட்டில் ரெடி. அந்த வார 'குங்குமத்தை' இருபக்க ஸ்பெஷலா தயாரிச்சேன். சப் எடிட்டர் கம் நிருபர் நெல்லை பாரதியிடம் '' அண்ணே..'எல்லாம் ஒரு சாண் வயித்துக்காக'னு ஒரு மேட்டர் பண்ணுங்க. காமெடி நடிகர் சிவநாராயண மூர்த்திய பிடிச்சு அவரோட 'வயித்துப்பாடு' பத்தி செம காமெடியா ஒரு மேட்டர் குடுங்க''ன்னேன். ''ஏதோ நம்ம வயித்துப்பொளப்புக்கு இத செஞ்சுதானே ஆகணும்'னு நக்கலடிச்சுட்டு பேட்டிக்கு கௌம்பிட்டாரு.

நடிகர் சிவநாராயண மூர்த்தியை உங்களுக்கு நல்லாவே தெரியும். 'ஏராள தாராளமான' தொப்பை மன்னன். இவரை வெச்சு விவேக்,வடிவேலு பண்ண காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வெச்சிருக்கு.

நெல்லை பாரதி பாக்கறதுக்கு ஒல்லி. ஆனா நக்கல்ல செம கில்லி. சிவநாராயண மூர்த்தியை சந்திச்ச நெல்லை பாரதி, அலுங்காம குலுங்காம மேட்டரை சொல்ல.. சி.நா.மூர்த்தியும் 'வயிறார' பேச ஆரம்பிச்சாரு...''நம்மால வாயைக்கட்டி வயித்தைக்கட்டியெல்லாம் வாழமுடியாதுங்க. எதையுமே ஒரு கை பாத்துடுவேன். நான்வெஜ் ஐட்டங்களை நான் தின்னு நீங்க பாககணுமே! கொஞ்சம் அசந்தா உங்களையே எலும்பா நெனச்சு மென்னு துப்பிடுவேன்''னு கடோத்கஜன் மாதிரி பேச.. கடுப்பாயிட்டாரு நெல்லை பாரதி..

''இவ்ளோ வீறாப்பா பேசறீங்களே..உங்கள மாதிரி தொப்பை போட்ட ஆளுங்கள்லாம் அவுங்களோட 'லுலுலுவா'வ..அவங்களாலயே பாத்துகக முடியாதுன்னு சொல்றாங்களே! நெசமா?''னு சி.நா.மூர்த்தியோட அடிவயித்துல வெடி வெச்ச மாதிரி கேட்டுட்டாரு.

ஒருநிமிஷம்..'நாடா போட்ட டவுசர் நடுவீதியில அவுந்தமாதிரி' தன்னோட 'அண்டர்கிரவுண்டு' கவலையை இந்த ஆளு இப்படி 'ஆட்டிப்பாத்துட்டானே'னு அரண்ட சி.நா.மூர்த்தி, அப்படியே சுதாரிச்சுகிட்டே,''அதெல்லாம் கப்ஸா தம்பி..நான்லாம் தெனமும் 'அதை' நல்லாத்தான் பாத்துகிட்டிருககேன்''னு பந்தாவா சொல்லிட்டாரு. சட்டுன்னு கிராஸ் பண்ண நெல்லை,''தெனமும் 'அதை' எதுககு நீங்க பாககறீங்க'னு கேக்க..சி.நா.மூர்த்தி 'ஹிஹிஹி'னு சிரிச்சு சமாளிச்சிட்டாரு.

அப்புறமா..''சாதாரணமா பஸ்,ரயில்ல உஸ்ஸ§னு உககார முடியாது. மாடிப்படி ஏறினா..மூககுலேர்ந்து புயல்காத்து வீசறமாதிரி மூச்சு வெளியேறுது. அதுவும்..குப்புறப்படுத்து தூங்கறதுககு நான் படற பாடு இருககே..யய்யா..ஏதோ ஆமை மேல ஏறிப்படுத்த மாதிரி எசகுபிசகான இடங்கள்ல ஊமை வலி. ஒண்ணும் முடியலீங்க''னு சி.நா.மூர்த்தி 'வயிரு திறந்து' பேச..வாய்மூடி சிரிச்சிருககாரு நம்மாளு. பேட்டி முடியறப்போ..சி.நா.மூர்த்தியோட வயித்த நெல்லை தன் கையால அளந்தப்போ..ரெண்டு சாண் இருந்துச்சாம். இந்த மேட்டரை வாங்கின நான்..சும்மா இருககமாட்டாம ஒரு சேட்டைய பண்ணிட்டேன். சி.நா.மூர்த்தியோட 'பிரமாண்ட வயித்து' படத்தை போட்டு..மேல 'யார்ரா அது..டெலிவரி எப்போனு கிண்டலடிககறது?'னு கிண்டலா ஒரு கமெண்ட்டை வெச்சு அச்சு'கு அனுப்பிட்டேன். இதழும் விற்பனை'கு போயாச்சு. `ரெண்டுநாள் கழிச்சு எதேச்சையா நெல்லைகிட்ட''அண்ணே..தொப்பை மன்னன் மேட்டர் பாத்தாரா?''னு கேட்டேன். அடுத்த நொடி குதிச்சு குதிச்சு சிரிச்சாரு நெல்லை பாரதி..''நல்லா பாத்த்தாரு..ஃபோன்ல பேசுனாரு..'ஏங்க! சும்மா ஜாலியா பேசுனதையெல்லாம் எழுதி என் மானத்ஹை வாங்கிட்டீங்களே. ஏதோ ஒரு சாண் வயித்துககாக இந்த வயித்தை காட்டி நான் வாழறமாதிரி எழுதிட்டீங்களே. சொந்த ஊர்ல தலை காட்ட முடியலீங்க''னு புலம்பிட்டராம். ''அடப்பாவமே..ஏனாம்''னு நான் கேட்டேன். அதுககும் குதிச்சுகிட்டே சிரிச்ச நெல்லை பாரதி,''ஏங்க..அவரு பட்டுககோட்டைல பெரிய பண்ணையாருங்க! பரம்பரை பணககாரரைப் போயி..பஞ்சத்துககு வயித்த காட்ற மாதிரி எழுதினா..எப்பிடி அவர் தலைய காட்றதாம்?''னு அவர் சொல்ல..அப்புறம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

ஜெமினியின் காமத்துப்பால்

Friday, April 17, 2009


ஆதாம் ஏவாள் காலம் முதல் இன்றுவரை பாதாம் அல்வாவாக தித்திப்பது..காதல்தானே! பிப்ரவரி 14. காதலர் தினம்.அன்னிக்கு உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வர்றது..காதலிகள். எனக்கோ..ஜெமினி கணேசன் ! ஃபிளாஷ்பேக் போலாமா? அதுவும் ஒரு காதலர் தினம்தான்.

’குங்குமம்’ காதல் ஸ்பெஷலுக்காக ’காதல் மன்னன்’’ ஜெமினியுடன் ஒரு பர்சனல் பேட்டி.சாயந்திரம் 4 மணி. நானும்,நண்பர் கிறிஸ்டோஃபரும் ஜெமினியின் வீட்டில். நடையில் தளர்ச்சியும், முகத்தில் மலர்ச்சியுமாக வாசனையாக வந்தார் ’காதல் மன்னன்’. அந்த காலத்தில் பெண்கள் பட்டாளத்தையே தன் பேரு’கு பட்டா போட்டுகிட்ட கில்லாடி மனுசனாச்சே! பககமா வந்து ’வெல்கம் பாய்ஸ்’னு தோள்ள தட்டிட்டு உககாந்தாரு.’எப்படி சார் இருககீங்க?’னு அககறையா கேட்டேன்.’இப்பககூட ஆகசன் படங்கள்ல நடிககற மாதிரி ஸ்டெடியா இருககேன்’னு புஜத்தை தட்டினாரு. ’காதல் மன்னனுககு லேசா தொப்பை போட்ருச்சே..ஏன்’னேன். ’முன்னமாதிரி ஒண்ணும் எ’கஸர்சைஸ் செய்றதில்லையே’னு கண்ணடிச்சு ’டபுள் மீனிங்’ல சொல்ல..’ஆஹா’னு நான் சொகக..சூடு பிடிச்சது பேட்டி.

காதல்மன்னனின் பார்வையில காதல் பத்தின உண்மையான கருத்து என்ன?’ன்னேன். ’ம்கர்ம்’னு லேசா இருமி,தொண்டைய செருமிய ஜெமினி, ’ஏம்ப்பா..லவ் பண்«ற்ல்ல?’னு என்னை கேட்டார். நான் கூச்சப்பட்டு ’கம்’முனு பம்ம..’உன் முகத்தை பாத்தாலே தெரியுதே! பாம்பின் கால் பாம்பறியும்ப்பா’னார்.அதேஜோர்ல..கிறிஸ்டோஃபரை ஏறிட்டு பாத்தாரு. உடனே நான்,’சார்..அவர் குடும்பஸ்தர்’னேன். ’என்னது’னு சுஜாதாவோட மெகஸிகோ சலவைககாரி ஜோககை கேட்டமாதிரி ’ஹஹ்ஹஹ்’னு சிரிச்ச ஜெமினி,’’குடும்பத்துககும்,காதலுககும் என்னப்பா சம்பந்தம்? அதுவும் அதை என்கிட்ட சொல்றியே’’னாரு.‘’சரி..அப்பட்டமா சொல்றேன். அப்படியே எழுதணும். காதலை பொறுத்தவரை முதல்ல ஒரு பொம்மனாட்டிய பாத்தா காமம்தான் உண்டாகும். ’ஆள் சிகப்பா இருககாளே..உடம்பு சும்மா கிண்ணுன்னு இருககே’னுதான் தோணும்.பிறகு தொட்டு தடவி இன்னும் நெருககமாவோம். அப்புறம்தான் அவளோட கேர’கடர் பாத்து மெள்ளமா லவ் வரும்’’னு ’டபுள் ஸ்ட்ராங்கா’ சொன்னாரு ஜெமினி.

அடுத்த கேள்வி..’இந்த சுந்தரபுருசனின் அந்தரங்க லீலைகளை’ பத்திதான். அதுககு முன்னோட்டமா ஒரு ’பிரா’’ககெட்டை போட்டேன்..’’சார், அவ்வை சண்முகியில நடிச்ச ஹீரா பத்தி’’னு கேட்டு முடிககறதுககுள்ள..போட்டுத்தாககினாரு ஜெமினி..’’அவளா..குட்டி செம ஜோரா இருககால்ல! அதுவும் அவளோட அம்சமான அனாடமியும்..கூரான மூககும் ரொம்ப செகஸியா இருககு!’’னு சொககிட்டாரு.

அடுத்த வலையை வீசினேன்..’’சார்..சினிமா,பர்சனல்னு உங்க லைஃப்ல எககச்சகக பெண்கள் உங்கமேல பைத்தியமா இருந்தது ஊரறிஞ்ச ரகசியம். அந்த அனுபவங்கள் பத்தி?’’னு புல்லரிப்போட கேட்டேன். ’அ..ஆ’னு தலைய ஆட்டி ப¬ழ்ய ஆட்டங்களை பத்தி ஜாலியா பேச ஆரம்பிச்சாரு... ’’எதைப்பத்தி கேககறப்பா? நான் சவாரி பண்ணினதையா? நூத்துககணககான குதிரைகளை.. ஆயிரககணககுல சவாரி பண்ணியிருககேன். ஒவ்வொரு குதிரையும் ஒவ்வொரு ரகம். வெவ்வேறு சுகம். ஒருத்தன் ஒண்ணுமே தெரியாத கம்மனாட்டியா இருககலாம். ஆனா ஒரு பொம்மனாட்டிகூட இல்லாம இருகககூடாது’’னு சொன்னவர்..அப்படியே கண்மூடி ’அந்தரங்க ராட்டினம்’ ஆடிவிட்டு தொடர்ந்தார்..

’’ஒண்ணு தெரியுமா? நான் ’மூவ்’ பண்ண பொண்ணுங்கள்ளாம் ராஜபரம்பரைல..ஜமீன்தார் வீட்ல.. பெரிய ஸ்டார்ஸ்..இப்படிப்பட்டவங்களைத்தான் மூவ் பண்ணியிரு’கேன். ’ஜெமினி’ன்னா அப்படியொரு மயககம் அவங்களுககு.எனககும் மகா சுகம்!’’னு அச்சில் வரககூடாத வர்ணணையோடு ஜெமினி ஜொள்ள..ஏககத்தோடு எச்சில் முழுங்கினோம் நானும்,கிறிஸ்டோஃபரும்.’’உங்க காதல் அனுபவங்கள் கடல் மாதிரி.அதையெல்லாம் மறைககாம உங்களோட வாழ்ககை வரலாறுல எழுதுவீங்களா சார்?’’னேன். ’’என்னோட பொம்பளைங்க அனுபவத்தை அம்பலப்படுத்துனு சொல்ற. ஆனா..அம்பது வருசமா நான் டைரி எழுதறம்ப்பா. ஒவ்வொரு நாளும் எங்கே போறேன்.. என்னென்ன பண்றேனு எல்லா சங்கதியையும் எழுதி வெச்சுடறேன். ஆனா என் வரலாறுல எல்லா மேட்டரையும் அப்பட்டமா எழுத முடியாதுல்ல’’னு ஜெமினி சொல்ல..’’அப்புறம் எப்படி சார்?’’னு உசுப்பிவிட்டேன்....

’’எப்படிப்பா எழுதறது? கிசுகிசு மாதிரி எழுதினாலும் ’இந்த லேடியை சொல்றான்..அந்த நடிகையோட இருந்த சம்பவம்யா’னு கண்டுபிடிச்சுருவாங்க. ஆனா இவங்களோட உண்டான அனுபவங்களை சொல்லலேன்னா..அதுல ருசியும் இருககாது. கிளுகிளுப்பும் இருககாது’’னு கலகலப்பா சிரிச்சாரு.இதையெல்லாம்விட உச்சம்..தன்னுடன் நடித்த சில நடிகைகளின் ’உச்சி முதல் உள்ளங்கால் வரை’ ஜெமினி ’இடம் சுட்டி பொருள்’ விளககியபோது..எனககும்,கிறிஸ்டோஃபருககும் வெளியான உஷ்ணமூச்சுல மீசையே பஸ்பமாயிரும்போலிருந்துச்சு. அப்புறமா..ஜெமினி தன் கையால் கொண்டுவந்து, ’’இந்தாங்க காமத்துப்பால்’’னு தந்த ஜில் மோரை சிரிச்சுகிட்டே ருசிச்சோம். கிளம்பறப்போ.பஞ்சுப்பந்தாக ஒரு அல்சேஷன் நாய் ஓடிவந்து தாவ..பயந்து பம்மினோம்.

உடனே ஜெமினி, ’’பயப்படாதீங்கப்பா! இது ஜெமினியோட நாய். கடிககாது...காதல்தான் பண்ணும்!’’னு குசும்பா சொன்னாரு. தன் எஜமானை போலவே ’’சவாரிககு வர்றியா’’ங்கற மாதிரி எங்களை அந்த நாய் பாகக..நைஸா நழுவினோம்

ஸ்ரீதர் சாரும்.. பதினோரு புருடர்களும்!

Monday, April 13, 2009

‘சந்தோஷப்படறதுல பெரிய சந்தோஷமே.. மத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கறதுதான்!’ இந்த பொன்மொழிக்கு ‘சட்டை, பேன்ட்’ தெச்சுப் போட்டா.. சாட்சாத் அதுதான் நம்ம ஸ்ரீதர் சார்!

அதிகாலை 6 மணி.. அலறுது ‘செல்’. ‘ஆன்’ பண்ணா தேன் குரலில் ‘‘சரி சரி.. எந்திரிச்சு சட்டுபுட்டுனு குளிச்சிட்டு நேரா ஹோட்டல் க்ரீன்பார்க் வந்துருங்க! ஸ்ரீதர் வந்துட்டான்!’’னு கண்ணன் அண்ணா சொல்வாரு.. ஆனா அப்போதான் ஸ்ரீதர் சார் ஃப்ளைட்டே ‘டேக்ஆஃப்’ ஆகியிருக்கும். அன்னிலேர்ந்து பிச்சுக்கற ஜாலி..தொடர்ந்து மூணு நாலு நாளா நம்ம டீமையே உச்சி குளிர வெச்சுரும்.

ஸ்ரீதர் சாருக்கு துபாயில் பணி. கணினி துறை நிபுணர். வாய் நிறைய பாக்கும், ஜோக்கும் இவரது ‘உடன் பிறப்பு! நான் ‘கண்ணன்’ணா, மௌலி, கந்தன்.. சாரோட ‘ரத்தத்தின் ரத்தங்கள்! சபை கூடிச்சுன்னா.. ஜாலியும் கேலியுமா திருவிழா ரகளைதான்.

இப்படித்தான் ஒருநாள்.. கத்திரி வெயிலுக்கு அஞ்சி ‘க்ரீன்‘பார்’க்ல ª‘மது’வா நாங்க அஞ்சுபேரும் மத்தியானம் ஒதுங்கினோம். அருந்திய ரெண்டாவது சுற்றில் எதையோ நெனச்சு வருந்திய கண்ணன்ணா ‘செல்’லை எடுத்து அடுத்தடுத்து ‘‘ஓ.. குணா., லே.. சங்கரு.. ஏ.. குமாரு.. ஆ.. செந்திலு’’னு ஆறேழு பேருக்கு இஷ்டத்துக்கு வெரைட்டியா இனிஷியல் போட்டு ‘‘ஒடனே எல்லாரும் பாருக்கு வந்துருங்க!’’னு மிரட்டி வெச்சிட்டாரு.

அந்த ‘சுத்து’ முடியறதுக்குள்ளயே சத்தமில்லாம அடுத்த ஆறுபேரும் ஆஜராகிட்டாங்க. மொத்தப் பேர்ல ஸ்ரீதர் சார் சுத்த சைவம். மத்த பத்துபேரும் ‘பல்லு குத்தறதுகூட மீன் முள்ளுலதான்’னா பாத்துக்கங்க. மெனு கார்டுல இருந்த அத்தனை அசைவ ஐட்டங்களையும் ஆளுக்கொண்ணா மனு போட்டாங்க. தின்னு முடிச்சு மென்னு துப்பின டேபிளைப் பாத்தா.. ’’கலிங்கத்துப் பரணி போர் நடந்த இடம் மாதிரி’’ செம திகிலா இருந்துச்சு.

எப்பிராணிகளையும் சப்பித்துப்புகிற கிங்கரர்கள் நடுவே.. ‘மூணு ஸ்மாலும், ரெண்டு வாய் சீஸும், கொஞ்சம் அவிச்ச கடலைய மட்டுமே’ சாப்டுட்டு அப்பிராணியா உக்கார்ந்திருந்தார் ஸ்ரீதர் சார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ‘பார்’.. பதினோரு பேர்.. பலப்பல ‘ரிபீட்டு’. ஐயையோ.. பில்லு எவ்ளோ வருமோனு சைகையிலேயே ‘கிலி மொழி’ பேசிகிட்டிருந்தோம்.

அப்போ பாத்து கண்ணன்ணே செல் அடிச்சது. எடுத்துப் பேசினவரு.. ‘‘அடங் கொக்கமக்கா.. எங்கலே இருக்கே? என்னது.. கூட மூணு பேர் இருக்காங்களா? நம்ம ஸ்ரீதர் இருக்கறப்ப என்னலே கவலை? நாலு பேரும் கௌம்பி ஒடனே ஹோட்டலுக்கு வாங்க!’’னு சொல்ல.. எங்களுக்கோ தலை கிறுகிறுத்துப் போச்சு.

பதினஞ்சு பேரா? நிலவரம் கலவரமாயிடுமேனு ஸ்ரீதர் சாரை பாத்தேன். வாயில பாக்க மென்னுகிட்டு அதே சிரிச்ச முகத்தோட ‘‘ம்.. வழட்டும்.. வழட்டும்’னு கவலைப்படாம ‘மழலைமொழி’ பேசுனாரு. மத்தியானம் 12 மணிக்கு ஆரம்பிச்ச கச்சேரி அன்னிக்கு நடுசாமம் 12 மணிக்குத்தான் ‘ஒளு வளியா முழிஞ்சது’!

பாஞ்சு வந்த அத்தனைபேரையும் ஓஞ்சு போற அளவுக்கு கவனிச்சு அனுப்பிச்சுட்டு.. ஸ்ரீதர் சாரோட தோள்ல ‘வளந்த கொளந்த மாதிரி’ சாஞ்சு நின்னாரே.. அதான் கண்ணன்ணா.

ஆயிரக்கணக்குல வந்த ‘பில்’லை அதே ஸ்மைலோட செட்டில் பண்ணிட்டு ‘எங்க வீட்டு பிள்ளை’ எம்.ஜி.ஆரா. சந்தோஷமா நின்னார் பாருங்க... அதான் ஸ்ரீதர் சார்.

நம்ம டீம்ல யாருமே விரும்பின எதையும் நேரடியா ஸ்ரீதர் சார்கிட்ட கேக்கமாட்டோம். ‘‘சார்.. கேரள குமரகத்துல போட் ஹவுஸ்ல போயிருக்கீங்களா?’’ இது நான். அவ்ளோதான். ‘‘சூப்பரா இருக்கும் சூரியன்!’’னு சொல்லிட்டு கண்ணன்ணா சைடு திரும்பி ‘‘டேய் கண்ணா.. வர்ற வெள்ளி, சனி, ஞாயிறு கேரளா கௌம்பறோம்’’பார். உடனே நான் ‘‘என்ன சார்.. திடீர்னு..’’னு இழுப்பேன். ‘‘எங்களோட சூரியன் அதை என்ஜாய் பண்ணனும். தட்ஸ் ஆல்!’’ம்பார் கூலாக.

கண்ணன்’ணா திடீர்னு ‘‘ஸ்ரீதரு.. ஒடம்பெல்லாம் ஒரே வலிடா! குற்றாலம் போயி ஆயில் மசாஜ் பண்ணா நல்லா இருக்கும்னாரு சூரியன்’’னு நைஸா, என்னை கிள்ளி.. சார்கிட்ட மெசேஜை சொல்லுவார். ‘‘என்ன சூரியன்.. நீங்க ஃப்ரீ ஆயிட்டீங்கன்னா.. குற்றாலம் போயிரலாம்’’பார். ஆக.. இந்த ‘நட்பு அலாவுதீன்களின் அற்புத விளக்கு’ ஸ்ரீதர் சார்.

ஒருமுறை காரில் போய்கிட்டிருந்தோம். அண்ணா மேம்பாலத்தில் ஏறுது கார். பின்ஸீட்டில் நான், கண்ணன்ணா, கந்தன். அப்போ கண்ணன்ணா, ‘‘ஸ்ரீதரு.. எனக்கொரு செகண்ட் ஹேன்ட் கார் வேணும்டா!’’னாரு. முன்ஸீட்டுல இருந்த ஸ்ரீதர் சார் ‘‘ம்..ம்’’னாரு. ‘‘நீதான் எனக்கு லோன் ஏற்பாடு பண்ணனும்’’னாரு கண்ணன்ணா. வேகமா ஸ்ரீதர் சார் ‘‘ம்..ம்..’’னாரு. ‘‘இந்த மாசத்துக்குள்ள வாங்கித் தந்துருடா! வெகேஷனுக்கு வசதியா இருக்கும்’’ & இது கண்ணன்ணா. அதுக்கும் ‘ம்..ம்..ம்..’னாரு ஸ்ரீதர் சார்.

எனக்கோ லேசா பட்சி அடிக்குது. இந்த நேரம் பாத்து கந்தன், ‘‘அண்ணே.. எனக்கொரு பைக் வாங்கித்தாங்க!’’ன்னாரு. அப்பவும் கொட்டை எழுத்துல ‘ம்,.ம்’னாரு ஸ்ரீ சார். விடாம கந்தன், ‘‘மாசாமாசம் டியூ நான் கட்டிடறேன்’’னாரு! பதிலுக்கு ஸ்ரீதர் சார் ‘‘ம்..ம்..ம்..’’னாரு. கண்ணன்னே, கந்தன் ரெண்டுபேருக்கும் ‘வண்டி கனவு’ வண்டியிலேயே சாங்ஷன் ஆன சந்தோஷம்.

ஆனா.. எனக்கோ செம டவுட். ‘என்னடாது.. ஸ்ரீதர் சார் ஒருமாதிரியா முனகறாரே’னு நான் எட்டிப்பாக்கவும்.. கார் ஒரு சிக்னல்ல நிக்கவும் சரியா இருந்துச்சு.

சடார்னு ஜன்னலை இறக்கின ஸ்ரீதர் சார் ‘புளிச் புளிச்’னு பாக்கை துப்பிட்டு ‘‘ஏண்டா டேய்.. ஈவு இரக்கம் இருக்கா உங்களுக்கு! வாயில மென்ன பாக்கு எச்சிலை துப்ப முடியாத இம்சையில ‘‘ம்..ம்..’’ங்கறேன். அதுபுரியாம அடுத்தடுத்து ஆப்ளிகேஷன் போட்டு கொல்றீங்களேடா!’’னு சொல்ல.. அப்பதான் பாக்கை மெள்ள ஆரம்பிச்ச ‘கண்ணன்’ணா.. எங்க சைடுல திரும்பி வெடிச்சு சிரிக்க ‘பளிச்’னு இருந்த நானும் கந்தனும் ‘புளிச்’னு ஆனது அன்னிக்குதான்.

சமீபத்துலதான் ஸ்ரீதர் சார் துபாய் வேலையை ரிசைன் பண்ணாரு.

இதுபோதாதா.. இப்போல்லாம் ‘அடிக்கடி’ நம்ம டீம்ல ‘சுடச்சுட’ சிரிப்பொலிதான்!

சத்யராஜ் லொள்ளுக்கு கட்டிப்பிடி பரிசு!

Sunday, April 12, 2009


இதய பலவீனம் உள்ளவங்க சத்யராஜ்கூட சகவாசம் வெச்சுக்கக்கூடாது. அடுத்தடுத்து அதிரஅதிர சிரிக்கவெச்சு ‘போய்வாடி அன்னக்கிளி’னு ஜாலியாவே ஆளை காலி பண்னிடுவாரு.
‘குங்குமம்’ இதழில் வெளியான ‘துள்ளுவதோ லொள்ளு’ தொடருக்காக சத்யராஜூம், நானும் அடிக்கடி சந்திச்சோம். மாத்தி மாத்தி ரெண்டுபேரும் பேசி.. ரவுசு கௌப்பிகிட்டிருந்தோம். ‘இது நம்மாளு’ரானு குஷியான சத்யராஜ்.. மனசு தெறந்து எக்கச்சக்க மேட்டரை கொட்டினாரு.
அதுல ‘அட்றாசக்க’ சங்கதிகளை மட்டும் அச்சேத்திட்டு மிச்சத்த மிச்சர் பொட்டலம் மாதிரி வெச்சிருக்கேன்.‘‘உதய் சார்.. அஞ்சாங்கிளாஸ் படிக்கிறப்பவே நான் அஞ்சா நெஞ்சனுங்க. ஒருநாள்.. ஹிஸ்டரி வாத்தியார் என்கிட்ட ‘‘அக்பர் வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சி என்ன’னு கேட்டாரு.
வாய் தெறக்காம பேய்முழி முழிச்சேன். வாத்தியாரும் பிரம்பை எடுத்துட்டாரு. நமக்கு அறிவுதான் கம்மி. லொள்ளு ஜாஸ்தியாச்சே. உடனே ஹை&பிட்ச்சுல சொன்னேன்.. ‘‘அக்பர் வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சி.. அவர் செத்துப் போனதுதான் சார்’’னு. வகுப்பே ‘குபீர்’னு சிரிச்சுது. வரம்பு மீறி பேசறானேனு பிரம்ப எடுத்தவர்.. நரம்பு சுளுக்க வெளுத்துட்டாரு!’’பல்லு சுளுக்க ‘‘அப்படி அஞ்சில் வளையாதது.. இப்போ அம்பதில் வளையுமா?னு நான் சிரிச்சேன்.
தொடர்ந்த சத்யராஜ் ‘‘டைமிங்கா நான் அடிச்ச லொள்ளுக்கு ஒரு ‘கட்டிப்பிடி’ பரிசா கெடச்சது. அந்த கலகலப்பு கிளுகிளுப்பை சொல்லவா’’னாரு. நான் காதெல்லாம் பல்லானேன்....‘‘விக்ரம் பட ஷூட்டிங்கு. எதையுமே அட்வான்ஸா யோசிக்கிறவர் கமல் சார். அதனாலதான் ஜாக்கெட்டுகளை கடத்தற சினிமாக்களுக்கு நடுவால.. அப்பவே ராக்கெட்டை கடத்தற ‘விக்ரம்’ தயாரிச்சாரு.
இதுல ஒரு சீன்.. என்னோட அடியாளுக ஹீரோயின் டிம்பிள் கபாடியாவ தூக்கிட்டு வந்து பூப்போல எறக்கி விடுவாங்க.எசகுபிசகான வளைவுகளோட என் முன்னால ஜிங்குனு நின்ன டிம்பிள்.. செம கோபத்தோட எம் மூஞ்சிமேல ‘தூ’ன்னு துப்புவாங்க. உடனே நான் ‘‘இந்த ஒரு காரணம் போதும்டா.. இவளை கற்பழிச்சிரலாம்’’னு சொந்தமா ஒரு டயலாக்கை சட்டுனு விட்டேன். கமல் சார் உட்பட யூனிட்டே கெக்கெக்கேனு சிரிச்சுட்டாங்க.
மொழி புரியாம கொழந்தை முழி முழிச்ச டிம்பிள் ‘‘வொய் லாஃபிங்’’னு கேக்கறாங்க. ‘போச்சுரா.. டிம்பிள இன்சல்ட் பண்ணி வம்பில சிக்கிட்டமே’னு எனக்கோ லேசா டென்ஷன்.பதறி நிக்கற டிம்பிள்கிட்டே கமல் சார் நான் சொன்ன டயலாக்கை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ணி சொல்றாரு.
அம்புட்டுதான்.. ‘அடேய் ராஸ்கோலு’னு ஒரு லுக் விட்டபடி.. டிம்பிள் எம் பக்கத்துல வர்றாங்க. ‘பக்பக்’னு எகிறுது லப்டப்.கிட்டத்துல வந்த டிம்பிள் ‘‘வெரி நைஸ் டயலாக். கங்க்ராட்ஸ்’’னு கை குடுத்து என்னைக் கட்டிப்பிடிச்சு பாராட்ட.. இந்த திடீர் அணைப்புல உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் எனக்கு கபடி ஆடுது.
அப்படியே என் கன்னத்துல ‘பச்சக்’னு ஒரு கிஸ் தரலாம்னு நெனச்சவங்க.. ‘சட்’னு வெலகிப் போயிட்டாங்க. காரணம்.. என்னோட சின்ன கண்ணுல தெரிஞ்ச ‘பெரிய திருட்டுத்தனத்தை’ கண்டுபிடிச்சிட்டாங்க போலிருக்கு!’’சத்யராஜ் இப்பவும் அதே ஏக்கத்தோட சொல்ல... வாயாரச் சிரிச்சேன்!
இந்த ‘லொள்ளுகளை’ என்னோட ‘ஜில்ஜில் ஜிகர்தண்டா’ ஸ்டைல்ல எழுதி பிரிண்ட்டுக்கு அனுப்பியாச்சு. அந்த சமயம் பாத்து ரஜினியின் ‘சிவாஜி’ பட அறிவிப்பு வேறு வந்து பட உலகமே அமர்க்களப்படுது. ஒருபுறம் ரகளையா சத்யராஜின் ரவுசு தொடர். மறுபுறம்.. ரஜினியின் ‘சிவாஜி’ பட மெகா நியூஸ்.
அந்த வார கலர் ஸ்டோரி.. ரஜினியா? சத்யராஜா? எடிட்டோரியலில் தீவிர அலசல். என்றாலும் ‘லொள்ளு’ ஜெயிச்சது. சத்யராஜ் சலாம் போட்டபடி கவர்ஸ்டோரி ஆனார்.அந்த இதழ் ‘குங்குமம்’ வெளியான அதிகாலை.. என் ‘செல்’ அடிச்சது. எடுத்தால்.. ‘‘உதய் சார்.. வணக்கம். நான் சொன்னதவிட.. உங்க எழுத்துல லொள்ளு பிரமாதமா இருக்கு. அதுவும் ரஜினி சார் மேட்டரே பின்னட்டைக்கு போயி.. நம்ம ‘லொள்ளு’ முன்னட்டைக்கு வந்திருக்குனா.. அது உங்க எழுத்துக்கு கெடச்ச வெற்றி. இப்ப எம்மேலயே எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்திருச்சு சார்’’னு மனம் திறந்து பாராட்ட.. ‘‘காரணம் உங்க லொள்ளுதான் சார்’’னு நானும் நெகிழ்ந்தேன்.
அப்பறம் சத்யராஜோட அடுத்த லொள்ளு சிட்டிங். ‘‘சார்.. நீங்களும் கவுண்டமணியும் சேர்ந்து பண்ண நெஜமான நக்கல்களை சொல்லுங்க.. நாலு வாரத்துக்கு அது தாங்கும்’’னேன். ஆரம்பிச்சாரு பாருங்க.. ‘‘நடிக்கிற படமாகட்டும்.. இருக்குற இடமாகட்டும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே.. ரகளை ராஜ்ஜியம்தான்.
நானும், கவுண்டமணி அண்ணனும், ‘விக்’ வெக்கறதுக்குன்னே பொறந்தவங்க. ஒரு தடவை இந்த எரிச்சல்ல கவுண்டமணி அண்ணன் சொன்னாரு.. ‘‘ஏனுங்க சத்யராஜ்.. இந்த விக்கை கண்டுபிடிச்ச அந்த மகராசனத்தான் நாம குலதெய்வமா நெனச்சு கோயில் கட்டி கெடா வெட்டி பொங்கல் வெக்கோணும். மொட்டை அடிச்சுக்க முடியாது.. ஏன்னா ஏற்கனவே நம்ம தலை அந்த கதிதான். இந்த விக்கு இல்லேன்னா ஷூட்டிங் ஸ்பாட்டுல லைட்டுக்கு பதிலா நம்ம சொட்டத்தலைய அந்த ஸ்டாண்டுல போட்டு தொங்க விட்டிருப்பானுங்களே’னாரு. அப்போ நாங்க சிரிச்ச சிரிப்புல ஷூட்டிங் ஸ்பாட்டே கதிகலங்கி போச்சு.’’ சத்யராஜ் சொல்லி முடிக்க.. எனக்கும் அதே கதி கலங்கிப் போச்சு.
நீங்களும் சிரிச்சு முடிங்க. இப்போதைக்கு இது போதும்.

சிட்டுக்குருவி குஞ்சுகளும் சித்தவைத்திய பருந்துகளும்!

Saturday, April 11, 2009

'சிட்டுக்குருவி லேகியம்' விக்கிற சில சித்தவைத்தியர்கள்.. பேசாம 'சிரிப்பு லேகியம்' வித்தா.. 'இப்பவும் நாடி நரம்பு தளர்ந்த வாலிப, வயோதிக அன்பர்களின்' உறுப்புகளும் கறுத்துப் போகாது.. உப்பலான மணிபர்ஸ§ம் சிறுத்துப் போகாது.. இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போகாது.

தொலைக்காட்சிகளை பொறுத்தவரை.. 'சன்'னுக்கு 'ஆதித்யா'வும், 'கலைஞருக்கு' சிரிப்பொலியும் அதிகார பூர்வ காமெடி சேனல்கள். ஆனா, மத்த டிவி சேனல்களுக்கு? டோன்ட் வொர்ரி.. அதுல வர்ற சித்த வைத்திய, ராசிக்கல், பெயரியல் நிகழ்ச்சிகளே பெருங்காமெடி.

சமீபத்துல ஒருநாள்.. மட்ட மத்தியானத்துல மட்டன் பிரியாணி சாப்டுட்டு.. குட்டித்தூக்கம் போடறதுக்கு முன்னால டிவி பாத்துகிட்டிருந்தேன். ரிமோட்ல ஒவ்வொரு சேனலா மாத்துனப்போ.. '...ஜ் டிவியில சேலம் சித்த வைத்தியர் தெரிஞ்சாரு.

என்னதான் சொல்றாருனு கவனிச்சு பாத்தேன். ''கட்டின பொண்டாட்டிக்கு தாம்பத்ய சுகத்தை தரமுடியாம எத்தனையோ பேர் ஏமாத்திகிட்டிருக்கானுங்க! காரணம்.. சின்ன வயசுல பண்ணுற தப்புகள்'னு அந்த சித்தவைத்தியர் 'பலான சங்கதி'களை பேசினாரு.

எனக்கோ கொட்டாவி வந்தது. அடுத்த சேனலை மாத்தப்போன அதே நொடியில அந்த சித்த வைத்தியர், அரட்டற குரலில்.. ''டேய் டேய் தம்பி. பொறுடா! எதுக்குடா சேனலை மாத்தற? என்னடா நம்ம கோளாறெல்லாம் வைத்தியருக்கு தெரிஞ்சு போச்சேனு பயந்துட்டியா?''னு டிவியிலிருந்து நேருக்கு நேராக நேயர்களை பார்த்து திட்ட.. எனக்கோ சுவாரஸ்யம் சூடு கௌப்பிடுச்சு.

அடுத்து என்ன சொல்றார்னு ஆர்வத்தோட பாத்தேன். அடங்காத சித்த வைத்தியர்.. தொடர்ந்து ''தெரியுண்டா தம்பி! பண்ணக்கூடாத தப்பெல்லாம் பண்ணிட்டு.. இப்போ உன்ன நம்பி வந்த பொண்ணோட உணர்ச்சிகளை சாகடிக்கறியே! ஞாயமாடா இது? இந்த தாத்தன் சொல்றத கேள்ரா! ஒண்ணும் பயப்படாத! நீ நல்லா செய்றதுக்கு நான் வழி சொல்லித் தரேன்! போதுண்டா சாமினு சொல்ற அளவுக்கு அந்தப் பொண்ணை நீ திருப்திப்படுத்தறதுக்கு எங்கிட்ட மருந்து இருக்குடா! என்ன நம்பி சேலத்துக்கு வாடா!'' & இப்படி கொச்சைத்தமிழில் 'பச்சை பச்சையா' அவர் பேசப்பேச.. எனக்கோ சிரிப்பு பொத்துகிச்சு.

இந்த 'ட்ரிபிள் எக்ஸ்' சித்தவைத்தியர்களோட சித்ரவதை கொஞ்ச நஞ்சமல்ல! மாசத்துக்கு 20 நாள் தமிழகத்தின் முன்னணி நகரங்களில், முக்கிய லாட்ஜ்களில் டேரா போட்டு ஜோரா கல்லா கட்டுவாங்க. 'சாமான்'ய மக்களின் 'தளர்ச்சி'க்கும், 'வளர்ச்சி'க்கும் ஸ்பெஷல் செட் மருந்துனு சொல்லி ஏதோ 'சக்கரை போட்ட கேப்பக்களி மாதிரி ஒரு வஸ்துவை தருவாங்களாம். பயபக்தியோடு அதை வாங்கற பலவீனஸ்தர்கள் வெறும் களி தின்னதுதான் மிச்சம்.

சில வருஷத்துக்கு முன்னால.. தமிழ்ல எத்தனை பத்திரிகை உண்டோ அத்தனையிலும் தவறாம அலங்கரிச்சது பிரபல பழனி சித்தவைத்தியர் டாக்டர் எஸ். காளிமுத்துவின் ஒருபக்க விளம்பரம். அந்த பீரியட்ல புதுசா பத்திரிகை ஆரம்பிக்கற யாருமே.. டாக்டர் காளிமுத்துவின் விளம்பரத்தை அவரைக் கேக்காமலே அச்சேத்திட்டு போய் அதுக்கான தொகையை வாங்கிட்டு 'எழுச்சி'யோடு திரும்புவாங்களாம்.

இப்பவும்கூட பழைய பத்திரிகைகளை புரட்டிப் பத்தீங்கன்னா.. சித்த வைத்தியர் காளிமுத்து 'தேடி வந்த மாப்பிள்ளை' எம்.ஜி.ஆர்.மாதிரி சும்மா ஜம்முனு இருப்பார். அப்போ ஆனந்த விகடன் பேட்டிக்காக அவரை சந்திக்க பழநியிலுள்ள வைத்தியசாலைக்கு ஃபோட்டோகிராபர் கலீலுடன் போயிருந்தேன். வழியில ஒரு டீக்கடையில ஆளுக்கொரு டீ சொன்னோம். அப்போ அங்கிருந்த டீ மாஸ்டர்.. ''ஏனுங்க.. பாக்கறதுக்கு பொலிகாளை மாதிரி இருக்கீங்களே! வைத்தியரைப் பாக்க வந்தீங்களா'னு கேட்டார். நானும் ''ஆமாங்க''னேன் வெள்ளந்தியாக.

சித்தநேரம் தன்னையும் ஒரு சித்த வைத்தியர்னு நெனச்சுகிட்டு மாஸ்டர் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி.. ''ஆனா.. 'வெளிக்கி' போறதுக்காக முக்குனா ஒண்ணுக்கோட சேர்த்து இந்திரியமும் கசியுதுங்களா?''னு குமட்டுல குத்தற மாதிரி அவர் கேக்க.. குமட்டிகிட்டு சிரிப்பு வந்திச்சு எங்களுக்கு.

'சிங்கத்துக்கு வந்த அசிங்கம்டா'னு நெனச்சுகிட்டு டாக்டர் காளிமுத்துவ பாக்க போனோம். 'டாக்டர் கூப்பிடறாரு'னு ரூமுக்குள்ள போகச் சொன்னாங்க. உள்ளே போனா.. 'கருகரு சுருள்முடியும், அரும்பி மீசை வாலிபருமா' விளம்ப்ரங்கள்ல ஜொலிக்கற காளிமுத்து.. நேரில் அவர் விளம்பர வாசகம் மாதிரியே 'வழுக்கை தலையோடு 'தேகம் இளைத்து நாடி நரம்பு தளர்ந்து வயோதிக அன்பராக' காட்சியளிக்க.. எனக்கோ செம ஷாக்.

அடக்கொடுமையே.. 'அப்போ தங்கபஸ்பம், காயகல்பம் இதெல்லாமே வெறும் கப்ஸாதானானு அவர்கிட்டயே கேக்க நெனைச்சேன். ப்ச்.. ஆனா அவரைப் பாக்கவே பாவமா இருந்ததால.. விட்டோம் ஜூட்!

மன்சூரலிகான் தந்த குவளை கவலை

Wednesday, April 8, 2009

அரைகிலோ அக்மார்க் புளியை அடிவயித்துல கரைச்சா எப்படியிருக்கும்? மன்சூரலிகானை சந்திச்சா அது புரியும்.

மன்சூர் 'வில்லனா.. கோமாளியா.. வில்லங்கமானவரா'னு பட்டிமன்றமே நடத்தலாம். நெஞ்சுக்கு நேரா சட்டை பட்டனை போடததால மனசுல பட்டதை 'பகீர்' எஃபக்ட்ல பகிரங்கமா பேசிடுவாரு! அதேமாதிரி இங்கிலீஷ் கலக்காம, இவர் பேசற தனித்தமிழ் கேக்கவே செம ஜாலியா இருக்கும்.

படங்களுக்கான பூஜை நடக்கறப்போ பூனைக்குரல்ல பேசினாகூட 'ஏதோ பூனையே கிராஸ் பண்ணிடமாதிரி.. பயங்கர சென்டிமென்ட் பாக்கறது கோலிவுட் வழக்கம். ஆனா, இந்த சென்டிமென்ட்ஸோட செவுள்ல 'பொளேர் பொளேர்'னு அறைஞ்சவரு மன்சூரலிகான். தன்னோட படப்பூஜையையே ராகு காலத்தில் நடத்தி.. குறுக்கும் நெடுக்குமா நூறு பூனைகளை ஓடவிட்டு (இத்தனை 'மியாவ்களை எப்பிடி புடிச்சாரோ?) பூஜைக்கு வந்தவங்களை 'லேபரட்டரி எலி' ரேஞ்சுக்கு மாத்தி கிலி கிளப்பிடுவாரு நம்ம 'புலிகேசி'.

''இந்த சேட்டையெல்லாம் எதுக்கு சார்? படத்துக்கு மலிவான விளம்பரம் தேடவா?''னு ஒரு கொக்கி போட்டா போதும்.. தத்துவமா கக்கி குமிச்சுடுவாரு இந்த 'எதிர்நாயகன்'. (வில்லனுக்கு தமிழ்ல இப்படித்தான் பேருனு சொல்றாரு!)

''ஐயா.. கதையும், நடிப்பும் நல்லாருந்தா எந்தப் படமும் வெற்றிப்படம்தான். அதுல கோட்டை விட்டுட்டு.. இந்த மாதிரி மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் குடுத்தே.. பல தமிழ்ப்ப்படங்கள் முக்கிகிட்டு சாகுது! அந்த மூடப்பழக்கங்களை மூட்டை கட்டறதுக்கான முயற்சிதான் இது!'' கழுத்தை லெப்ட், ரைட், டாப்பு, டௌனு அத்தனை கோணங்களிலும் சாய்ச்சு சாய்ச்சு அவர் பேச.. நம்ம கழுத்துக்கே சுளுக்கு புடிச்சுரும்.

'ஈபிள் டவர்' ரேஞ்சுக்கு பேசிகிட்டே 'இடிஞ்ச சுவர்' மாதிரி இவர் படம் பண்றதுதான் யாருக்குமே புரியாத புதிர்! ''ராஜாதிராஜ.. ராஜகுமார.. ராஜ கம்பீர..''னு கேபிள் வயர் நீளத்துக்கு டைட்டில் வெச்சு இவர் எடுத்த படத்தை கேபிள் டிவியிலகூட பாக்கமுடியலை.

சினிமாவில் வில்லனாக ஒரு ரவுண்டு வந்தது போலவே.. தமிழக அரசியல் கட்சிகளிலும் ஒரு ரவுண்டு சுத்தி வந்து கிறுகிறுத்துப் போனார். பாட்டாளி மக்கள் கட்சியில் மன்சூர் சேர்ந்த புதுசு.. நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்திச்சார். ''நேர்ல பாக்கறதவிட படத்துல 'உயரமா தெரியறீங்களே! எப்படி'னு கேட்டாரு டாக்டர்.

உடனே மன்சூர், ''என்னங்கய்யா பண்றது? தமிழ்ப்பட கதாநாயகிகள் எல்லாரும் மும்பையிலேர்ந்து செம கட்டைகளா இறக்குமதி ஆகறார்க. இவங்களை அடிக்கடி துரத்தி கெடுக்க வேண்டியிருக்கு. அதனால அந்த கட்டைங்க உயரத்துக்கு தோதா.. என் காலணில கட்டைய வெச்சு தெச்சுப் போடறதால நானும் உயரமா தெரியறேன்''னு வெகுளியா சொல்ல.. வாய்விட்டுச் சிரிச்சுட்டாரு டாக்டர்.

மன்சூரலிகானோட இன்னொரு கலவர நிலவரம் & கோபம் கீபம் வந்ததுன்னா.. அம்புட்டுதான். இடம், பொருள், ஏவல், சூனியம் எதுவுமே பாக்க மாட்டாரு!

இப்படித்தான் ஒருமுறை& பிரபல தனியார் டிவியில நேயர்கள் இவரோட உரையாடற நிகழ்ச்சி நேரடியா ஒளிபரப்பானது. அஸ்திரம் மாதிரி பாஞ்சு வந்த கேள்விகளுக்கெல்லாம் அசால்ட்டா பதில் சொல்லிகிட்டிருந்தாரு மன்சூர்.

திடீர்னு ஒரு நேயர்.. நேரடியில பேரிடியா ஒரு கேள்வி கேட்டார்.. ''உங்களுக்கெல்லாம் நிஜமாவே ஒரு நடிகருக்கான முகவெட்டு இருக்கா?''னு.

தலையை இடமும், வலமுமா மடக்கி ஆட்டிகிட்டே மன்சூர், ''ஐயா.. நல்ல கேள்வி கேட்டீங்க! இதோ கொஞ்சம் உன்னிப்பா பாருங்க. என் முகத்துல ஒரு வெட்டுக்காயத்தோட தழும்பு தெரியுதா? எனக்கான முகவெட்டு இதுதான்! அதே சமயம் இந்த கேள்வியை கேட்ட உங்க முகரைக்கட்டை எப்பிடி இருக்குனு பாக்க எனக்கும் ஆசை!''னு நேயரோட மூஞ்சியிலேயே அடிக்க.. அரண்டுபோய் 'ஆஃப்' ஆனது நேயரின் அசரீரி.

அடுத்துவந்த ஒரு நேயர் அழகான தமிழில் ''தூங்கும்போதெல்லாம் என் நினைவில் நமீதா வருகிறாரே.. என்னய்யா செய்வது?''னு எகத்தாளமாக கேள்விகேட்க.. மன்சூருக்கு வந்துச்சு பாருங்க கொலைவெறி கோபம்! அது நேரடி ஒளிபரப்பு என்பதையும் மறந்து ஆவேசமான குரலில் ''நமீதா வர்றது நீ தூங்கும்போதா.. உனக்கு தூக்கும்போதா? ஏய்யா.. எவனாவது சொப்பன ஸ்கலித வைத்தியன்கிட்ட கேக்கவேண்டிய கேள்விய என்கிட்ட கேக்கறியே! உனக்கு சொரணை இருக்கா? நீயெல்லாம் தமிழனா?'' என்று சாமியாடியபடியே சைடில் இருக்கும் கேமரா யூனிட் பக்கம் திரும்ப.. உஷாரான டிவி உடனே 'விளம்பர இடைவேளை'க்கு தாவி தப்பியது தனி காமெடி.

அடிக்கடி சர்ச்சைகள்.. சங்கடங்களில் சிக்கிக் கொள்கிற மன்சூரலிகானுக்குள் மகத்தான மனிதநேயம் இருப்பதை மதிச்சே ஆகணும். ஒரு முறை நானும், அந்தணனும் பேட்டிக்காக மன்சூரை அவரோட ஆபீஸில் சந்திச்சோம். பல பதில்களை அச்சுல ஏத்த முடியாதுன்னதும் பிச்சு உதறினாரு.

கொஞ்சநேரத்துல.. திடீர்னு எந்திரிச்சு உள்ளே போன மன்சூர்.. சில நிமிஷம் கழிச்சு எங்களுக்கு டீ கொண்டு வந்து தந்தாரு. தொண்டை காஞ்சு போயிருந்த நானும், அந்தணனும் சூடா ஒரு 'சிப்' அடிச்ச அடுத்த நொடியே.. 'இதென்ன வித்தியாசமான விபரீதமான டேஸ்ட்டா இருக்கே'னு முழிச்சோம்.

பீதி நிலவர எங்க முகத்தை பாத்த மன்சூர் 'ஹேஹே'னு சிரிச்சுகிட்டே.. ''ஐயாக்கள் மன்னிக்கணும்! தேனீர்ல போடறதுக்கு சக்கரை இல்ல.. அதனால ரெண்டு குவளையிலும் ரெண்டு சாக்லெட்டை போட்டு கரைச்சேன். புது சுவையா இருக்கா?'னு கேட்க.. அடுத்த நொடியே.. ப்ளீஸ்.. கட்டுரையின் முதல் பாராவை மறுபடியும் படிங்களேன்!


அண்டங்களை அதிரவைத்த முண்டங்கள்

Tuesday, April 7, 2009

நறுக்குனுசொன்னா.. நானும், அந்தணனும் 'ஒருதாய் மக்கள்'. நக்கல்.. நையாண்டி.. சிக்கல்.. சிரமம்.. அவசிய நட்பு.. ரகசிய தப்பு.. இப்படி அத்தனையையும் பரஸ்பரம் கிழிச்சுத் துவைக்கிற 'இளிச்சவாயர்கள்'.

'அந்தணன் வந்துட்டாரா? அப்போ உதயசூரியன் எங்கே'னு கேக்கற அளவுக்கு பத்திரிகை வட்டாரத்தில் நெருக்கமான நண்பர்கள் நாங்க. கிட்டத்தட்ட 'ரெட்டைக்குழல் டுப்பாக்கி!' அவர் என்னை 'அண்ணா'னு அழைப்பதும், பதிலுக்கு நான் அவரை 'அண்ணா'னு விளிப்பதும் இருவருக்குமான 'முதல் மரியாதை!' சமயங்களில் எங்க நண்பர்களே 'டேய்.. இதுல யார்ரா உண்மையான அண்ணா?''னு ஏகத்துக்கு கிண்டலடிப்பது எங்களுக்கான 'அவமரியாதை'.

நானும் அந்தணனும் உலகமகா ரசிகர்கள். அதிலும் அடிக்கடி அவர் 'அண்ணா.. நீங்க பெரிய அறிவாளி'னு என்னையும், பதிலுக்கு 'அண்ணா.. நீங்க மகா புத்திசாலி'னு அவரையும் 'அபூர்வசகோதர்கள்' பட 'தெய்வமே.. எங்கியோ போயிட்டீங்க' காமெடி போல அடிக்கடி உச்சிமோந்து மெச்சிக்கறது வழக்கம். அடப்பாவிகளா... இதுக்கே சிரிக்கிறீங்களா? இன்னும் இருக்கு கூத்து.

சிவசங்கர் பாபாங்கிற சாமியாரை நாங்க சந்திச்சதும், அவரோட செல்ல(£)ப்பிள்ளைகளானதும் அந்தணனோட 'அடிக்கடி' பிளாக்குல முந்தி வந்து உலகமே சந்தி சிரிச்சிடுச்சு. ஆனா அதுல சொல்லப்படாத இன்னொரு காமெடி இது.

சிவசங்கர் பாபாவோட மகிமைகள் பத்தி அவரோட வி.ஐ.பி. பக்தர்கள் நெக்குருகி சொல்ற அனுபவங்களை தொகுத்து 'அண்டங்களை தாண்டிய அன்பு'ங்கிற பேர்ல நாங்க ஒரு புத்தகம் போட்டோம். அதுக்காக நூத்துக்கும் மேற்பட்ட பலதுறை வி.ஐ.பிகளோட ஃபோன் நம்பரை பாபாகிட்டேருந்து கலெக்ட் பண்ணிகிட்டோம்.

தினமும் காலையில பத்து டு ஆறு மணி வரை அத்தனை வி.ஐ.பி.க்களுக்கும் ஃபோன் பண்ணி அப்பாயின்ட்மென்ட் வாங்கறது என்னோட வேலை. 'அண்ணா நீங்கதான் அழகா பொறுப்பா(!) பேசுவீங்களே!'னு அந்தணன் தந்திரமா என்னை மந்திரிச்சு விட்டுட்டாரு. நானும் லேசா கிறங்கி வேலையில இறங்கிட்டேன்.

அப்போல்லாம் செல்லுல பேசினா அம்பானியே, 'அம்போ நீ!'னு ஆயிடற காலம். அதனால சுமாரான ஒரு பொண்ணு வேலை பார்க்கற லோக்கல் டெலிபோன் பூத்துக்கு போயிருவோம். லிஸ்ட்ல இருக்குற வி.ஐ.பி.க்களுக்கு போன் பண்ணி 'வணக்கம் சார்.. என் பேரு எம்.பி.உதயசூரியன். 'அண்டங்களை தாண்டிய அன்பு'ங்கிற டைட்டில்ல சிவசங்கர் பாபாவை பத்தி ஒரு புக்கு போடறோம். உங்களோட கருத்தை, அனுபவத்தை பதிவு செய்யனும். அப்பாயின்ட்மென்ட் வேணும் சார்..'னு பள்ளிக்கூட பிள்ளைகளோட 'பாபா பிளாக்ஷீப்' மாதிரி ஒரு மாசமா இதான் என்னோட வாய்ப்பாடு.

சமயங்கள்ல எதிர்முனையில ரிசீவரை வெச்சதுகூட தெரியாம இதே பல்லவியை பாடிட்டிருப்பேன். பக்கத்துல அந்தணன் பல்லை கடிச்சிகிட்டு பவ்யமா நின்னுட்டிருப்பாரு.. கால் கட்டானது தெரிஞ்சு சைலண்டா பூத் பொண்ணு சிரிக்கறதை பார்த்தபடி!

ஒரு ஞாயிற்றுக்கிழமை.. அடுத்தடுத்து அந்தணன் நம்பர் போட்டுத்தர.. காலையிலிருந்தே இதே பாபா 'பஞ்சப்பாட்டை' பாட ஆரம்பிச்சிட்டேன். இந்த வரிசையில ஒரு பிரபல 'நல்லி'தயம் கொண்ட அதிபருக்கு போன் போட்டோம். லைன் சரியா கிடைக்காததுனால, வழக்கம் போல கால் கட்டாயிடுச்சுன்னு நெனச்ச நான் எக்கச்சக்க கடுப்பாகி ''வணக்கம் சார்! 'அண்டங்களை தாண்டிய பிண்டம்'னு ஒரு புக்கு போடறோம்'னு பேசி தொலைச்சிட்டேன். திடீர்னு பார்த்தா.. எதிர்முனையில அந்த வி.ஐ.பி. ''என்னது.. அண்டம்.. பிண்டம்னு? யார் நீ?''னு பதறிப்போய் கேட்க.. சிதறி ஓடிகிட்டே சிரிச்சோம் பாருங்க சிரிப்பு.. பூத் பொண்ணு எங்கள மிரண்டு பார்த்து அரண்டுது கண்ணுலே நிக்குது.

அதுக்கு பிறகு ரெண்டு நாளா எந்த நம்பருக்கு டயல் பண்ணாலும் 'அண்டங்களை தாண்டிய பிண்டம்'னே என் வாயில வந்து தொலைய.. ''அண்ணா.. ஒழப்பாதீங்கன்னா.. இது நம்ம பொழப்புணா''னு கையெடுத்து கும்பிட்டுகிட்டே கதறி(!) சிரிச்சாரு அந்தணன்.

'சரி.. நட்பை காப்பத்தணுமேனு வாய்க்கு ஜிப்பை போட்டுகிட்டு மறுபடியும் குப்பை கொட்ட ஆரம்பிச்சோம்! தொடர்ந்து 'கால்' போட்டதுல ஒரு பிரபல ஜோசியர் 'கைக்கு' எட்டினாரு. 'சிக்கிச்சுரா பட்சி'னு அவரைப் பார்க்க பிச்சிக்கிட்டு ஓடினோம். தி.நகர்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல செகண்ட் ஃப்ளோர்ல அவர் வீடு.

நானும் அந்தணனும் நல்லாத்தான் உள்ள போனோம். பதவிசா உக்கார்ந்தோம். ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஒடிசலா இருந்தாரு ஜோசியரு. எங்களயே ஒரு மாதிரியா உன்னிப்பா பார்த்தாரு. குறிப்பா 'தகாத இடங்கள பார்க்கற பலான ஆசாமி' மாதிரி இருந்தது அவர் பார்வை' உடனே நான் அந்தணன் காதுல கிசிகிசுப்பா.. 'அண்ணே.. இந்த ஆளு 'உஷ்ஷ¨' மாதிரி பாக்கறார்ணே! எந்திரிங்க.. எஸ்கேப் ஆயிரலாம்'னேன். உடனே அந்தணன் வெடிச்ச சிரிப்பை உதட்டிலேயே மென்னு கொன்னுட்டு என் பக்கமே திரும்பாம ஜோசியரையே பார்த்துக்கிட்டிருந்தாரு!

விட்டதா விதி? அடுத்த நிமிஷமே சும்மா சுடிதார் போட்டு வெளையாடிச்சு பாருங்க! அந்த ஜோசியர் எங்கள பாத்து பிஞ்சு குரலில் ''வந்த விஷயத்தை சொல்லுங்க!''னாரு. உடனே அந்தணன் ''சிவசங்கர் பாபா பத்தி உங்க கருத்து'' என்றதுமே கைகளை தலைக்குமேல் தூக்கி கும்பிட்ட ஜோசியர் ''ஓ.. அது ஒரு பரப்பிரம்மம்.. பரம்பொருள்.. மனுஷரூபத்தில் வாழற தெய்வம்!'' என்று புல்லரித்தார். 'இதான் சாக்கு!'னு நானும் ''அதான் சாமி.. பாபா பத்தி 'அண்டங்களை தாண்டிய''னு ஆரம்பிக்க.. எங்கே நான் வழக்கம்போல பிண்டம்னு உளறிடுவேனோன்னு அரண்டு போன அந்தணன் என்னை திகிலா பார்த்தபடி ஏதோ சொல்ல வாய் எடுத்தாரு.

அம்புட்டுதான்.. விதி இப்ப ஜோசியர் வாய்ல 'விக்கெட்டை' போட்டுச்சு.. ''என்ன? அண்டங்களை தாண்டியவா? என்னாது தாண்டுது''னு பீதியோட ஜோசியர் ஏதோ பில்லி சூனிய ரேஞ்சுக்கு கண்ணை விரிச்சு கேக்க.. அதுவரை 'செத்துப் போன எங்க பாட்டிய நெனச்சு வருத்தப்பட்டுக்கிட்டே' நான் அடக்கி வெச்சிருந்த ஆர்,டி,எக்ஸ், சிரிப்பு அதிரடியா வெடிச்சிச்சு பாருங்க! அடுத்த செகண்ட் எடுத்தேன் ஓட்டம். செகண்ட் ப்ளோர்லேர்ந்து வாசல் வரைக்கும் சிரிச்சுக்கிட்டே ஓடிவந்து அந்தணன் பைக்ல குப்புறப்படுத்து குலுங்கி குலுங்கி சிரிச்சு தீர்த்தேன்.

அரை மணி நேரம் கழிஞ்சது. ஆளை இன்னும் காணலை. ஐயையோ.. அந்தணன் கதி? லேசா நோட்டம் விட்டேன். தூரத்துல ரொம்ப டயர்டா கண்ணெல்லாம் கலங்கி முழிபிதுங்கி பரிதாபமா நடந்துவந்தார் அந்தணன். ''அண்ணே.. என்னாச்சு''னு நான் கேட்ட அடுத்த நொடி ''அடிக்கடி என்னை மட்டும் இப்படி மாட்டிவிட்டுட்டு நீங்க ஓடி போயிடறீங்களே'னு பெருங்குரலெடுத்து 'கெக்கெகே'னு சிரிச்ச அந்தணன் அப்பறமா சொன்ன 'பின்குறிப்பை' கேட்டு நான் சிரிக்க.. தெருவே குலுங்கிச்சு.

பின்குறிப்பு:

''எதுக்கு அந்த பையன் அப்பிடி சிரிச்சுகிட்டு ஓடறாரு''னு ஜோசியர் கேட்க.. அந்தணன் பதில் சொல்ல முடியாமல் 'குபுக்கென சிரிக்க..' ''பாபா.. உங்கள மாதிரி உருப்படாததுகளை ஏன் வேலைக்கு வெச்சிருக்காரு''னு கோபப்பட்ட ஜோசியர்.. பாபாவின் ஆசிரமத்துக்கே போன் பண்ணி எங்கள டிஸ்மிஸ் பண்ண சொல்ல 'அடக்கொடுமையே'னு அந்தணனும் அலறியடிச்சு சிரிச்சபடி ஓடிவந்திருக்கிறார்.

ஆக.. ஒருவழியாக இவ்வளவு சிரமத்தில், பாபாவின் ஆசிரமத்தில் 'அண்டங்களை தாண்டிய அன்பு' நூல் வெற்றிகரமாக வெளியானது. அன்றைக்கு நடந்ததும் ஒரு தனிக்காமெடி. அது அப்புறம்.

கவுண்டமணியும்... டெலஸ்கோப்பும்!

Sunday, April 5, 2009

கவுண்டமணியோட மொத்த வெய்ட் குத்துமதிப்பா 60 கிலோன்னு வெச்சுக்கங்க. அதுல நக்கல் 20 கிலோ.. நையாண்டி 20 கிலோ.. லொள்ளு 10 கிலோ.. எகத்தாளம் 10 கிலோன்னு கலந்துகட்டி இருக்கறதாலதான்.. காமெடியில அவர் பொளந்து கட்டிகிட்டிருக்காரு!

பொதுவா.. மத்த நடிகர்களைப் போல கவுண்டமணியை ‘திடுதிப்பு’ன்னு நிருபர்கள் சந்திச்சுர முடியாது. ‘அதுக்கு ஏதுரா வழி’ன்னா.. அவரோட நண்பர்கள் யாரையாச்சும் ‘தூதரா’ வெச்சுகிட்டா.. ஈஸியா கவுண்டரை சந்திச்சுரலாம்.

அப்படித்தான் நான் ஒருமுறை சந்திச்சேன். அந்த ‘மீட்டிங்கி’ இப்போ நெனச்சாலும் ‘குபீர்னு’ சிரிப்பு பொத்துக்கும்.

2005&ல் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியராக நானிருந்த காலம். சத்யராஜின் ரவுசு அனுபவங்களை வெச்சு ‘துள்ளுவதோ லொள்ளு’னு ஒரு தொடர் எழுதினேன்.

ஒரு கட்டத்துல ‘இது சத்யராஜ் தொடரா.. இல்ல.. கவுண்டமணி தொடரா’ங்கிற அளவுக்கு ரெண்டுபேரும் ‘குண்டக்க மண்டக்க’னு அடிச்ச லூட்டியில அந்த தொடர் முழுசும் ‘ரண்டக்க ரண்டக்க’னு செம ரவுசு.

வாரந்தவறாம கவுண்டரும் தொடரை ரசிச்சு படிச்சிருக்காரு. எதேச்சையா நம்ம ஃப்ரெண்ட் ‘சினிமா நிருபர்’ ஆர்.எஸ். கார்த்திக்கிடம் தொடர் பத்தி பாராட்டின கவுண்டர், ‘‘எங்க கூடவே இருந்து பாத்தமாதிரி எழுதியிருக்காரே. யாருப்பா இவரு’னு விசாரிச்சிருக்காரு. உடனே கார்த்திக் என்கிட்டே சொன்னார்.

தடாலடியா ஒருநாள் சாயந்திரம்.. டிரைவ்&இன்&உட்லண்ட்ஸ்ல (இப்போ இந்த ஸ்பாட் இல்ல!) கவுண்டமணியை சந்திச்சேன். வெள்ளை வேட்டி&சட்டையில உள்ளூர் அரசியல்வாதி மாதிரி இருந்தார்.

காருக்குள்ள உக்காந்துகிட்டோம். கொங்கு தமிழில் வெங்கலக்குரலில் கவுண்டரின் கச்சேரி ஆரம்பிச்சது. ‘‘வணக்கம் சார்! நாங்கள்லாம் உங்களோட தீவிர ரசிகர்கள்’’ என்றேன்

உடனே கவுண்டர் தனது முகத்தை ஒரு மாதிரி கோணிக்கிட்டே.. ‘‘ஆமாமா.. இதே பொய்யைத்தான் எல்லாரும் சொல்றாங்க!’’னு சொல்ல.. குபீர்னு சிரிச்சுட்டேன்.
‘‘இவ்வளவு பிஸியிலயும் நீங்க..!’’னு நான் முடிக்கறதுக்குள்ளயே.. குறுக்கிட்ட கவுண்டர் ‘‘ம்க்கும்! பயங்ங்கர பிஸி!’’னு நக்கலடிச்சுட்டு ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிச்சார்.

‘‘இப்பிடித்தான்.. ‘அடிதடி’ படத்துக்கு முன்னால மூணுமாசம், நானும், சத்யராஜூம் பயங்ங்கர பிஸ்ஸி. ரெண்டு பேருக்கும் ஒரு படம்கூட இல்ல. வீட்டுக்குள்ள உக்காந்து மோட்டுவளய பாத்துக்கிட்டிருந்தோம்.

திடீர்னு ஒரு நாள் சத்யராஜ் ஃபோன் பண்ணி ‘அண்ணே.. என்ன பண்ணிகிட்டிருக்கீங்க’னு கேட்டாரு. ‘மொட்ட மாடியில இருக்கேன்’னேன். ‘ஐயையோ.. பட்டப்பகல்ல மொட்ட வெயில்ல மொட்ட மாடியில என்ன பண்றீங்க’னு பதறுனாரு. ‘ஒரு டெலஸ்கோப்ப வெச்சுக்கிட்டு கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தேடிப்பாக்கறேன். ஒரு புரொட்யூசர்கூட தெரிய மாட்டேங்கறாரே.. தப்பித்தவறி தெருமுக்குல நுழைஞ்ச ஒருத்தரும் எஸ்கேப் ஆயிட்டாரே’ன்னேன். ரெண்டுபேரும் பேய்த்தனமா வாய்விட்டு சிரிச்சோம்!’’

கவுண்டர் சொல்லி முடிக்க.. சிரிச்சு புரையேறிடுச்சு எனக்கு.

‘‘இல்ல.. வாரந்தவறாம நம்ம தொடரை படிச்சிருக்கீங்களே.. பெரிய விஷயம் சார்!’’னு நைசா ஐஸ் வெச்சேன்.

‘‘அட நீங்க வேற! வாராவாரம் எதுக்குப் படிச்சேன்னா.. நம்ம சத்யராஜ் லொள்ளு புடிச்ச ஆளு! ஏதாச்சும் எசகுபிசகா நம்மளப் பத்தி சொல்லியிருப்பாரோனு ஒரு பயம்தான்!’’ என்றார் பட்டென.

‘‘அப்பிடி என்ன சார் எசகுபிசகான மேட்டரு!’’ என்றேன் அப்பாவியாக. பல்லை கடிச்சபடி ‘‘ஹை! இந்த ஜாலக்கு வேல நம்மகிட்ட வேண்டாம் தம்பி! சத்யராஜ்தான் எல்லாத்தயும் சொல்லியிருப்பார்ல!’’ என்றார் கிசுகிசுப்பாக.

பேரர் காபி தர ‘‘சக்கரை இல்லாத காபிய இங்க கொண்டாப்பா! தம்பிக்கு சக்கரை போட்டத குடு!’’ என்றார் அக்கறையாக. அதே ஜோரில்., ‘‘ஆமா.. என் உடம்புல சுகர் இருக்குங்கறானுக. அப்போ சக்கரை இல்லாம இந்த கருமாந்தரத்தை (காபியை) குடிக்கறவங்களுக்கு கொஞ்சமாச்சும் இனிக்கணும்ல! என்ன நான் சொல்றது?’’னு கவுண்டர் சீரியஸா கேக்க.. குடிச்ச காபியை முழுங்க முடியாம தொண்டையிலயே சிரிச்சேன்.

இப்படியே தினுசுதினுசா சில ரவுசுகளை அள்ளிவிட்டு சிரிப்பாலேயே அலற வெச்ச கவுண்டரின் செல் சிணுங்கவும்.. ‘‘பெறகு பாக்கலாம் தம்பி! வரட்டா’’னு ‘விருட்’டுனு கௌம்பிட்டாரு!

‘நான்&ஸ்டாப்’பாக சிரிக்கவெச்ச ‘துள்ளுவதோ லொள்ளு’ தொடருக்கு 20 வாரத்தோடு ஃபுல்ஸ்டாப் வெச்சேன். அடுத்த நாள்.. என் செல்லுக்கு ஏதோ ஒரு புது நம்பரிலிருந்து கால். எடுத்துப் பேசினால்.. எதிர்முனையில் கவுண்டமணி!

‘‘சொல்லுங்க சார்!’’னேன் குஷியாக. எடுத்த எடுப்பிலேயே டாப்&கியர் லொள்ளுல எகிறினாரு பாருங்க கவுண்டர்.. ‘‘என்னமோ சத்யராஜ் பெருமையா சொன்னாரு.. ‘நம்ம லொள்ளு தொடர் நுறு வாரம் வரும்’னு. ஆனா.. போதும்டா சாமினு பொசுக்குனு முடிச்சுட்டீங்களாக்கும்!’’

‘கெக்கெக்கே’னு நான் சிரிக்க.. ‘போச்சுரா’னு ஃபோனை வெச்சாரு கவுண்டர்.

 
சுடச்சுட - by Templates para novo blogger