சிரிப்பு ரிப்பீட்டேய்!

Saturday, August 1, 2009

வெரைட்டியாக பல வெற்றிப்படங்கள் தந்து மிரட்டிய டைரக்டர் அவர்! ஊரும் வேண்டாம்..பேரும் வேண்டாம். மேட்டர் மட்டும் போதுங்ணா!

‘கல்லிலே கலைவண்ணம் கண்ட‘ மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் ‘ஃபுல்லிலே கதைவண்ணம் கண்ட‘ நம்ம டைரக்டர் தங்கியிருக்கற ஒரு ரிசார்ட். சிலுசிலுன்னு காத்தும்..குளுகுளுன்னு ஏ.சி.யும் கலந்து கலக்கற கடற்கரையோர ரூம். அடுத்த படத்துக்கான பட்டறையை போட்டு..கதையை பட்டை தீட்டிக்கிட்டிருக்காரு டைரக்டர்.

பொழுது சாஞ்சாலே பல ‘இறக்குமதி சரக்குகளை‘ உள்ளே ‘இறக்கிகிட்டு‘ பொழுதுபோக்கறது நம்ம டைரக்டரோட வழக்கம். அன்னிக்கும் வழக்கம்போல ஜாலியா பல ‘லார்ஜ்‘களை காலி பண்ணினதோட விளைவு..அடுத்தநாள் காலையில டைரக்டரோட வயிறு செம ‘லார்ஜாகி‘ அப்செட் ஆயிருச்சு.

‘சரக்குக்கு முறுக்கு‘ முதல்..‘வீட்டுக்கு பலசரக்கு‘வரை வாங்கிவந்து சேர்க்கிற டிரைவர்தான்..அன்னிக்கும் கூடவே இருந்தாரு. விடிஞ்சதிலேர்ந்தே அஜீரணக் கோளாறால ‘வயித்துக்குள்ள வன்முறை‘ நடக்கிறதை தாங்கமுடியாத டைரக்டர்..தன்னோட டிரைவரைக் கூப்பிட்டு ‘‘கடைக்குப் போயி ‘ஜெல்யூஸில்‘ வாங்கிட்டு வாப்பா‘‘ன்னாரு!

‘மிட்டாய் வாங்கப் போற சிறுவன் மாதிரி‘ சிட்டாய் பறந்தார் டிரைவர். ரெண்டு மணி நேரமாகியும் போன டிரைவர் வரவே இல்லை. டைரக்டரோ.. வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சலோட சேர்ந்து ஏகப்பட்ட எரிச்சலோட காத்துக்கிடக்காரு! கரெக்ட்டா அப்போ பாத்து டைரக்டரோட செல் அடிக்குது.

எடுத்தால்..மறுமுனையில் டிரைவர் ‘‘சார்..நாலைஞ்சு கடைல கேட்டுப் பாத்துட்டேன்! அந்த ஜெல்யூஸில் இல்லேங்கறாங்க!’’ன்னார் பதட்டமாக! உடனே டைரக்டர் ‘‘பரவால்ல..டைஜின் இருக்கும். அதை வாங்கிட்டு வாப்பா’’ன்னாரு. ‘‘சரிங்க சார்‘‘னு சந்தோஷமா ஃபோனை வெச்சாரு டிரைவர்.

மறுபடியும் அரைமணி நேரமாச்சு! டிரைவர்கிட்டேர்ந்து தகவலே இல்லை. அடிமனசு எரிய..ஆவேசமாகிட்டாரு டைரக்டர். நல்லவேளையா அதே நொடி டிரைவர்கிட்டேர்ந்து ஃபோன். ‘‘என்னப்பா பண்ணித்தொலையற?’’னு எரிஞ்சு விழுந்தாரு டைரக்டர். பதிலுக்கு டிரைவர் ‘‘சார்..டைஜினும் இல்லேங்கிறாங்க சார்’’னார் கூலா!

டைரக்டருக்கோ ‘‘என்னடாது..கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கற அத்தனைபேரையும் இன்னிக்கு ‘அஜீரண சுனாமி‘ அட்டாக் பண்ணிருச்சா?’’னு செம ஷாக்! அதே அதிர்ச்சியோட ‘‘ஏப்பா..எல்லா கடையிலயுமா ஜெல்யூஸிலும், டைஜினும் இல்லேங்கிறாங்க?’’னு கேட்டிருக்காரு.

‘‘ஆமா சார்..ஏழெட்டு கடை ஏறி இறங்கிட்டேன். எங்கியுமே இல்லேன்னுதான் சொல்றாய்ங்க’’ன்னாரு அந்த அப்பாவி டிரைவர். ‘சட்‘டுன்னு டைரக்டருக்கு ஒரு ‘ஸ்பார்க்‘ அடிச்சது! ‘‘ஆஹா..அவனல்லவா நீ?‘‘ன்னு உஷாரானவர்..‘‘ஏப்பா! ஏழெட்டு கடைன்னு சொல்றியே..எந்த கடைப்பா?‘‘ன்னு கிடுக்கிப்பிடி போட்டாரு.

உடனே அந்த டிரைவர் ‘‘என்ன சார்..என்னைப்போயி இப்படி நம்பாம கேக்கறீங்களே? ஈ.சி.ஆர்.ரோட்டுல இருக்கற அத்தனை ஒயின்ஷாப்பிலயும் கேட்டுட்டேன் சார். அப்பிடி ஒரு சரக்கே இல்லேய்ங்கிறாங்க!’’ன்னார் வெள்ளந்தியா! இதைக்கேட்டதுமே ‘அடப்பாவி‘ன்னு மனசு நொந்து,,குடல் வெந்து கிடந்த டைரக்டர் வாய்விட்டுச் சிரிச்ச சிரிப்புல..சிறுகுடல், பெருங்குடலே செரிச்சுப் போயிருச்சாம்!
இதனால் அறியப்படும் நீதி: ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!

13 comments:

வெங்கிராஜா said...

அய்யா சாமீ.. முடியல..
ஜாமீன் கேட்டு போன வக்கீல் வண்டுமுருகன் அசிஸ்டெண்ட் லாயர்களின் கதை மாதிரியே இருந்தாலும்... ROTFL
குறிப்பாக "கடல்லயே இல்லயாம்!"

RR said...

//ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்! //

அப்படி போடுங்க......

சென்ஷி said...

//ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!//

நீதி பிரமாதம்! :)

துபாய் ராஜா said...

சென்ஷி said...
//ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!//

நீதி பிரமாதம்! :)//

"சிரிப்பு ரிப்பீட்டேய்!" :))

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

வண்ணத்துபூச்சியார் said...

தோழரே.. நலமா..?

ஓ. அந்த டைரக்டர்...அவரா.. ரைட்டு...

வழக்கபடி கலக்கல் தான். வேறு என்ன சொல்ல முடியும். பட்டைய கிளப்புங்க..


பி.கு: சுதந்திர தினம் வரை எதாவது சபதமாண்ணே...??

கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க..

ஈரோடு சுரேஷ் said...

நீதி சொல்ல வந்த நீதிமான் நீர்..........
அது சரி வர வர உங்க POST குறஞ்சிகிட்டே போகிறதே...... ஜூன் மாதம் 12, போன மாதம் 4, இந்த மாதம் இது மட்டும் தான!!!?

Sridhar said...

சரியான கலக்கல்.எப்படி இருக்கிங்க?

ஜெகநாதன் said...

அருமை! ஓட்டுநர் காலையிலயே குடிக்கடைக்கு போயி சரக்கு ​கேக்கிறாருன்னா, எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும்??? பாவம் இப்படியெல்லாம் குடிச்சு, வயிறு புண்ணாகி, கஷ்டப்பட்டு நமக்காக படம் எடுக்கிறாங்களே ​நெனச்சா... அழுவாச்சி அழுவாச்சியா வருதுங்!!

sowri said...

welcome Back.இப்போதான் ஒரு கட்டிங் அடிச்சா கிக்கு வருது.

நா.இரமேஷ் குமார் said...

கலக்கல் பதிவு

சூரியன் said...

ROTFL..
ஏண்ணே ரொம்ப வேலையா ? ஆளையே காணோம்

ganesh said...

Your blogs a very good. We included yourblog's rss in our tamil page.

வால்பையன் said...

ஹாஹாஹா!

என்னோட சேர்ந்த ஆளுபோல!

டாக்டர் ஒரு மருந்து சொல்ல, அது ஒயின்ஷாப்புல கிடைக்குமான்னு கேட்டுடேன்!

 
சுடச்சுட - by Templates para novo blogger