புஷ்பா தங்கதுரையின் ராக்கெட்!

Friday, August 21, 2009

கிட்டத்துல போய்ப் பழகினா பல பேர் காட்டற நிஜமுகத்தைப் பாத்து..விட்டத்துல தூக்கு போட்டுத் தொங்கலாம் போலத்தோணும். ஆனா புஷ்பா தங்கதுரை அப்படியல்ல. சக்கரை தடவி பொய்யா பேசற வம்பான ஆளுங்களை விட..அக்கறை கலந்து உண்மை பேசற அன்பான மனிதர்.
இவரை ஒருமுறை சந்திக்கற யாருமே..மறுமுறை பாக்கப்போறப்போ சொந்த வீடு வாங்கியிருப்பாங்க!அந்த அளவுக்கு ‘சிங்கிள் டீக்கு’ சிங்கி அடிக்கறவங்களைக் கூட ஒரு சிங்கிள் பெட்ரூம் வாங்கறரேஞ்சுக்கு...கையில பொறுப்பையும், வயித்துல நெருப்பையும் கலந்துகட்டி தந்து அனுப்புவாரு!
புஷ்பா தங்கதுரை. கிளுகிளுப்பான பெயர். எழுத்துல ‘டபுள் ஆக்‌ஷன்’ மன்னன். கிறங்கடிக்கிற மாதிரி ’பெண்’மீகம் எழுதறப்போ..புஷ்பா தங்கதுரை. ரங்கநாதனைப் பத்தி ஆன்மீகம் படைச்சா..ஸ்ரீவேணுகோபாலன்.துப்பறியும் நாவல்களும், தப்பறியும் உண்மைக் கதைகளும் எழுதி வாசகர் வட்டத்தை மயங்க வைத்தவர்.
இந்த பிம்பத்தோடதான் ஒருமுறை புஷ்பா தங்கதுரையை சந்திக்கப் போனோம். வேற யாரு? நானும், அந்தணனும்தான். ‘காணாமப் போன தம்பி புள்ளைகளை மறுபடியும் கண்டுபிடிச்ச பெரியப்பா மாதிரி’பாசமா வரவேற்று உபசரிச்சாரு. வெள்ளை வேட்டி சட்டை. அதே அலைபாயும் சுருள்முடி..ஆர்வமா எட்டிப்பாக்கற கண்கள்னு சிம்பிளா இருந்தாரு.
அவரோட எழுத்துக்களைப் பத்தி விலாவரியா சிலாகிச்சுப் பேசின எங்களுக்கு விழா எடுக்காத குறைதான்.விக்ஸ் முட்டாய் முதல் செக்ஸ் கல்வி வரை அத்தனையும் அலசித் துவைச்சாரு பாருங்க..அசந்துபோயிட்டோம். ‘’எங்கூட வாங்க’’ன்னு உள்ரூமுக்கு கூட்டிட்டுப் போனாரு. கம்ப்யூட்டரை ஆன் பண்ணிஒரு ப்ராஜெக்ட்டை காட்டினாரு. வானவியல் பத்தி ஃவேறு.. ஆணிவேறா எக்கச்சக்க டீடெய்ல்ஸோட பிரிச்சு மேஞ்சிருந்தாரு.
‘’என்ன சார் இது?’’னு வியந்துபோய் கேட்டோம். மெல்லிசா சிரிச்ச புஷ்பா தங்கதுரை ‘’வானவியல் பத்திஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேங்க! விட்டா என் வீட்டு மாடியிலிருந்தே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்விடுவேங்க. அந்த அளவுக்கு ராக்கெட் தயாரிப்புல அப்டேட்டா இருக்கேன் சார்’’னு அதிரடியா சொல்ல..அரண்டு போயிட்டோம். இந்த வயசிலும் மனுஷனுக்கு அப்படியொரு அறிவுத் தேடல்!
அப்புறம் அப்படியே ஜாலியா அரட்டை அடிச்சோம். திடீர்னு புஷ்பா த.துரை எச்சரிக்கையான குரல்ல‘’சார்..இந்த வயசில நிறையா சம்பாதிங்க! கையில பணம் இல்லேன்னா..ரொம்ப கட்டம் (கஷ்டம்ங்கிறதை இப்படித்தான் உச்சரிக்கிறார்) சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா சார்! அதேமாதிரி எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். சொத்துபத்து இல்லேன்னாலும் சின்னதா ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். யாரு கஞ்சி தண்ணி ஊத்தலேன்னாலும்..பச்சத்தண்ணியக் குடிச்சுட்டுகாலாட்டிகிட்டு படுத்து தூங்கலாம் சார். இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்!”னு அவர் சொல்லச்சொல்ல..எங்களுக்கும் இனம்புரியாத பயமும், திடீர் துடிப்பும் வந்துருச்சு.
அப்புறம் சில வருஷ இடைவேளைக்குப் பிறகு புஷ்பா த.துரையை சந்திக்கப் போனோம்.‘மனுஷர் என்ன காயகல்பம் சாப்பிடறாரோ..அப்படியே ஜம்முன்னு இருந்தார்’. எடுத்த எடுப்புலயே‘’சார்..சொந்த வீடு வாங்கிட்டீங்களா? இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்’’னு சொன்னதுமே...நாங்க கையோட கொண்டு போயிருந்த ‘ஹவுஸிங் லோன் சாங்ஷன் லெட்டரை’ காட்டினோம்.
நம்பமாட்டீங்க...அவர் முகத்துல அப்படியொரு சந்தோஷம்! ‘’நல்ல பசங்க சார் நீங்க. ரொம்ப நல்லா வருவீங்க’’னு ஆசீர்வதிச்சார். எங்களுக்குள்ளயும் எதையோ சாதிச்சுட்ட குஷி. ஆனா எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு முன்னாலயும் ஒரு பெரும் போராட்டம் நடக்கும்ல..அப்படித்தான் நடந்தது லோன் மேட்டர்லயும்.
லோன் சாங்ஷன் பண்ண அந்த தனியார் வங்கி திடீர்னு லோன் தர மறுத்திடுச்சு. காரணம் கேட்டா...சின்னப்புள்ளத்தனமா ஏதேதோ சொன்னாங்க. பல இடங்கள்ல அலைஞ்சு தேடி, நுழைஞ்சு பாத்தும்ம்ஹூம்..பாச்சா பலிக்கலை. ‘விடு’ன்னு விட்டுட்டோம். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குஇருக்கற ஒரு திருப்தி...அந்த லோன் சாங்ஷன் லெட்டரை வெச்சு புஷ்பா தங்கதுரையையாவதுசந்தோஷப்படுத்தினதுதான்!27 comments:

முரளிகண்ணன் said...

விரைவில் கைகூடும் சார்.

உதயசூரியனுக்கு இல்லாத உதயமா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அண்ணே..!

என்ன இவ்ளோ இடைவெளில பதிவு..?

வாரத்துக்கு ஒண்ணாச்சும் போடுங்கண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சிலர் எழுதுவது ஒன்று.. பேசுவது ஒன்றாக இருக்கும்..

அதில் இதுவும் ஒன்று..

அவர் சொல்வதும் உண்மைத்தாண்ணே.. கடைசிக் காலத்துல கைல துட்டு இல்லேன்னா நாய்கூட சீந்தாதுண்ணே நம்மளை..!

MAHESHWAR said...

Nalama irukkeengala Sir. Antha Veedavathu Vaangineengala? Yeppothu santhikkalam? Neenga, Naan, Sridhar Sir Santhichu pala kaalam avuthu. Aduthu Trip kku naan pogarathukku munnadi kandippaga ungal appointment thevai. Please inform Sridhar Sir also.

இராகவன் நைஜிரியா said...

அருமையான பகர்வு...

நன்றி நண்பரே..

துபாய் ராஜா said...

புஷ்பா தங்கதுரை தங்கமான மனிதர்.

இனியதொரு பகிர்வு.

RR said...

உங்க எழுத்துலையே புஸ்பா தங்கதுரை சாரை ரொம்ப பிடிக்க வெச்சிட்டிங்க...... சரி வீடு வாங்கி விட்டீர்களா இன்னும் இல்லையா தல?
அப்புறம் உங்களையும் சரி, உங்க நண்பர் அந்தணனையும் சரி இப்பெல்லாம் என்ன அவ்வளவா பதிவுலகம் பக்கம் பார்க்க முடிவதில்லை....என்ன ரெண்டு பேரும் விகடன்'ல "இவர் தான் உங்கள் ஹீரோ!" எழுதறதுல ரொம்ப பிஸியாகிட்டிங்கள?

Vijay said...

அண்ணே, வரவர சூரியன் லேட்டா உதிக்கற மாதிரி இருக்கே.
சோலியா இருக்கீக போல. :)

பானு said...

Me the first.....
Best wishes to have ur Dream Home,soon Sir.

Sridhar said...

என்ன சார் ஆளையே காணும். வழக்கமான துள்ளல் நடை missing.
ஏன்?

ஈரோடு சுரேஷ் said...

"ஃவேறு.. ஆணிவேறா".... இப்படி wordings use பண்ண யாருங்க கத்துகொடுதா? :))

rajesh.v said...

hi mr.udhayasooriyan,

Even my thalaivar rajini used to tell this. First you buy house and vehicle. Then, you can enjoy the money.

Do you know one thing even mr.peter lynch, one of the greatest investor used to tell that before investing in share market one should invest in buying house.

I feel happy that you have propagated a good message through your blog. hats off.......

Tamil superstar rajinikanth,
Blog superstar udhayasooriyan.

Rajesh. V

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///என்ன ரெண்டு பேரும் விகடன்'ல "இவர் தான் உங்கள் ஹீரோ!" எழுதறதுல ரொம்ப பிஸியாகிட்டிங்கள?///

இதென்ன புது கதை..?

வாரத்துக்கு ஒருத்தர்ன்னு மாத்தி, மாத்தி எழுதுறீங்களோ..?!!!

sreeja said...

உங்க எடத்துக்கு நாங்க வந்து உங்களத்தான் வாங்க வாங்கன்னு கூப்பிடணும் போலிருக்கே, தினமும் உங்க சைட்டுக்கு வந்து வந்து பார்த்ததில இன்னைக்கு தான் ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க போல. ஆமாமா எங்கள மாதிரி நீங்களும் என்ன வெட்டி ஆபீசருங்களா ?

லோன் விஷயமா போயி உங்களயே சின்னபுள்ள தனமா அலய விட்டாங்கனா எங்கள மாதிரி ஆளுங்கள கேக்கவே வேணாம். இந்தியாவிலயே நம்பர் ஒன் ரேன்க்ல இருக்குற ஒரு பேன்க்ல அக்கௌன்ட் ஓப்பன் பண்ணுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு...

புஷ்பா தங்கதுரை - பெயரில் மட்டுமல்ல அவர் மனதாலும் தங்கம்தான்.

// ஃவேறு.. ஆணிவேறா // - நல்லா இருக்கு.

எம்.பி.உதயசூரியன் said...

//முரளிகண்ணன் said...
விரைவில் கைகூடும் சார்.//

இப்பவே அக்ரிமெண்ட் போட்ட திருப்தி முரளி சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//உண்மைத் தமிழன் said...
அண்ணே..!என்ன இவ்ளோ இடைவெளில பதிவு..?//

பத்திரிகை உலகில் வேறொரு பதியம்
போட்டதால இந்த கேப் தமிழன். இனிமே ரெகுலர் ஆஜர்.

எம்.பி.உதயசூரியன் said...

//MAHESHWAR said...
Nalama irukkeengala Sir. Antha Veedavathu Vaangineengala? Yeppothu santhikkalam?//

தலைவா..இதெல்லாம் ரொம்ப ஓவர். அடுத்த தெருவுல வெய்ட் பண்றேன்..வாங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//இராகவன் நைஜிரியா said...
அருமையான பகர்வு...நன்றி நண்பரே..//

சந்தோஷம் சார். நைஜிரியான்னாலே உங்க பேருதான் ஞாபகத்துக்கு வருது.

எம்.பி.உதயசூரியன் said...

//துபாய் ராஜா said...புஷ்பா தங்ககதுரை தங்கமான மனிதர்.இனியதொரு பகிர்வு.//

ராஜா பேச்சுக்கு மறுபேச்சு ஏது?

எம்.பி.உதயசூரியன் said...

//RR said... உங்களையும் சரி, உங்க நண்பர் அந்தணனையும் சரி இப்பெல்லாம் என்ன அவ்வளவா பதிவுலகம் பக்கம் பார்க்க முடிவதில்லை....என்ன ரெண்டு பேரும் விகடன்'ல "இவர் தான் உங்கள் ஹீரோ!" எழுதறதுல ரொம்ப பிஸியாகிட்டிங்கள?//

ஸாரி தலைவா..’ஜூ.வி.’யில வரும் அந்த தொடரை எழுதுவது சத்தியமா நானோ, அந்தணனோ அல்ல.. அல்லவே அல்ல!

எம்.பி.உதயசூரியன் said...

//Vijay said...அண்ணே, வரவர சூரியன் லேட்டா உதிக்கற மாதிரி இருக்கே.சோலியா இருக்கீக போல.//

ஆமாண்ணே..நம்ம சோலியே சாலியா போனதால இந்த லேட்டு!

எம்.பி.உதயசூரியன் said...

//பானு said...Best wishes to have ur Dream Home,soon Sir.//

குடும்பத்தோட கிரஹப்பிரவேசத்துக்கு
வந்துருங்க மேடம்!

எம்.பி.உதயசூரியன் said...

// Sridhar said... என்ன சார் ஆளையே காணும். வழக்கமான துள்ளல் நடை missing. ஏன்?//

அடுத்த பதிவில் இருந்து டபுள் சூடு கெளப்பிருவோம் சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//ஈரோடு சுரேஷ் said...
"ஃவேறு.. ஆணிவேறா".... இப்படி wordings use பண்ண யாருங்க கத்துகொடுதா? :))//

சீரோடு நம்மள வாழவைக்கிற ‘கன்னித்தமிழ்த்தாய்’ தான் ஈரோடு சுரேஷ்!

எம்.பி.உதயசூரியன் said...

//rajesh.v said...Even my thalaivar rajini used to tell this. First you buy house and vehicle. Then, you can enjoy the money. //

டியர் ராஜேஷ்..அன்று ‘தங்கமகன்’ சொன்னதை இன்று ‘தங்கதுரை’ சொல்றார். கடைபிடிச்சுருவோம்!

எம்.பி.உதயசூரியன் said...

//உண்மைத் தமிழன் said... இதென்ன புது கதை..?வாரத்துக்கு ஒருத்தர்ன்னு மாத்தி, மாத்தி எழுதுறீங்களோ..?!!!//

அய்யய்யோ உண்மைத்தமிழன்.. அந்த தொடருக்கு நானும், அந்தணனும் கமா அளவுகூட தொடர்பில்லாதவங்க! நம்புங்க.

எம்.பி.உதயசூரியன் said...

//sreeja said... தினமும் உங்க சைட்டுக்கு வந்து வந்து பார்த்ததில இன்னைக்கு தான் ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க போல. ஆமாமா எங்கள மாதிரி நீங்களும் என்ன வெட்டி ஆபீசருங்களா ?//

இனிமே நீங்க எட்டிப் பாக்கறப்போல்லாம் சுடச்சுட ஒரு பதிவு காத்திருக்கும் ஸ்ரீஜா!

 
சுடச்சுட - by Templates para novo blogger