தருமி 32

Monday, June 8, 2009


எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்னு தருமி மாதிரி சொல்லி தப்பிச்சுக்கலாம்னு பாத்தேன். ஆனா மணிப்பால்லேர்ந்து நம்ம சகோதரர் வெங்கிராஜா நான் பதில் சொல்லியே ஆகணும்னுஎனக்கு அன்புக்கட்டளை போட்டுட்டாரு. ஆகவே இந்த தொடர் பதிவு. துணிஞ்சு படிங்க. எதுக்கும் ஆடுகால் சதை துடுக் துடுக்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது!

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எம்.பி.உதயசூரியன்என்ற இந்தப் பெயர்..என் அப்பா விரும்பிக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர்! எனக்கான அடையாளத்தை ஈஸியாக தந்த பெயர் என்பதால்..ரொம்பவே பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழனின் வீரத்தை தரணிக்கு உணர்த்திய மாவீரன்’..சாவேந்தி விட்டான் என்ற சதிச்செய்தி கேட்டபோது!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஆனாலும் சட்டி அழகா இருக்கறதைவிட..சமையல்தான் ருசியா இருக்கணும்!

4.பிடித்த மதிய உணவு என்ன?

தலைவாழை இலை போட்டு.. கொழஞ்ச சாதத்துல மணக்கமணக்க கோழிக்கொழம்ப ஊத்தி பிசைஞ்சு சாப்புட்டா..ஸ்ஸ்! என்னது? கடிச்சுக்க வஞ்சிரம் ஃப்ரையா? ஆஹா..

இலையின் சிரிப்பில் இரைவனைக் கண்டேன்!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கெடுப்பார் எவருமில்லை. ஆகவே நாம.. எடுப்பார் கைப்பிள்ளை!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே பிடிக்கும். என்ன..கடலில் அலை பயம். அருவியில் தலை பயம்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அது பார்க்கும் ஆளைப்பொறுத்து!

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

நேர்ல சொல்றேனே சார்!

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரி பாதி..தப்பு பாதி‘! நல்லா கேக்கறீங்கப்பா கேள்வி!

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

.அம்மா, அப்பா, தங்கச்சிகள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சீச்சீ..கூச்சமா இருக்கு!

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

..................

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வர்ணமேகூடாதுங்க! வண்ணம்னு கேட்டா..கறுப்பு!

14.பிடித்த மணம்?

சொக்க வைக்கிற சொக்கன் ஊர்மல்லி!

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நம்ம அந்தணன். காரணம் வேறென்ன..ஹாஹாஹா!

உண்மைத்தமிழன். இயல்பான நடையில் உணர்வுபூர்வமாக எழுதுபவர்.

.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

வெங்கிராஜா எழுதிய ட்விட்டரோசை’. இதை சுஜாதா படித்திருந்தால் மூணுவரி பாராட்டு நிச்சயம்.

17. பிடித்த விளையாட்டு?

மைதானத்தைப் பொறுத்து!

18.கண்ணாடி அணிபவரா?

மைனஸ் பவரா இருப்பவங்க.. கண்ணாடி அணிபவராஇருப்பாங்க. நாம இன்னும் அந்த பவருக்கு வரலை.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

கட்!

20.கடைசியாகப் பார்த்த படம்?

கேக்கறது எமதர்மனா?

21.பிடித்த பருவ காலம் எது?

கெக்கெக்கே...அந்தணன் பதில் சொல்ல அருமையான கேள்வி!

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

வண்ணதாசனின் நடுகைசிறுகதைத்தொகுப்பு.

.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

...................

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஒவ்வொரு சத்தத்துக்கும் அர்த்தம் உண்டுதானே? முன்பு சில பிடிக்காமல் இருந்தது.

இப்போது உணர்ந்துகொண்டேன்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

....................

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கூட்டுத் திறமையே இருக்குங்க!

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவா கேக்கறத ஏத்துக்கமுடியாது!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வேதம் படிச்சுகிட்டிருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதீங்க!

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

ஹேர் பின் வளைவுகளில் கிளுகிளுப்பாக அனுமதித்து..உச்சத்தில் உச்சிகுளிர வைக்கிற மலைகளின் இளவரசி‘!

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

.....................

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

..............

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில சொல்லணும்னா..வாழ்வே ஒரு வரிதான்’!

_____________________________________

42 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

‘வர்ணமே’ கூடாதுங்க! வண்ணம்னு கேட்டா..கறுப்பு!//

தல நாணும் ஏறக்குறைய இதே பதில்தான் சொல்லி இருக்கேன்.
வர்ணங்கள் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை. தனக்குப் பிடித்த வர்ணமாக மாற நமது வர்ணாசிரமம் அணுமதிக்காது தல. அது பேனாவுக்கும் பொருந்தும். பெருமாளுக்கும் பொருந்தும்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழ்மணத்திற்கு ஓட்டு போடலாம்னு பார்த்தேன். நீங்க இன்னும் அனுப்பவே இல்லை. அனுப்பியதும் போட்டுவிடுகிறேன். தமிழீஷில் போட்டுவிட்டேன்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//.என் அப்பா விரும்பிக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர்! எனக்கான அடையாளத்தை ஈஸியாக//

நெரயாபேர்த்துக்கு இது புதிய செய்தியாக இருக்கும்

sowri said...

நேரான நேர்மையான பதில்கள். சீர சிந்திச்சு சிறப்ப எழுதிட்ங்க.

வெங்கிராஜா said...

//சட்டி அழகா இருக்கறதைவிட..சமையல்தான் ருசியா இருக்கணும்!//
உதயசூரியன் டச்!

வெங்கிராஜா said...

//ஆஹா.. ‘இலையின் சிரிப்பில் இரை‘வனைக் கண்டேன்!//
என்னா எழுத்து! தலீவா... கலக்கல்!

வெங்கிராஜா said...

//‘வாழ்வே ஒரு வரிதான்'//
ரசித்தேன்! பதில்கள் ஒவ்வொன்றுமே சூப்பரு!

வெங்கிராஜா said...

//வெங்கிராஜா எழுதிய ‘ட்விட்டரோசை’. இதை சுஜாதா படித்திருந்தால் மூணுவரி பாராட்டு நிச்சயம்.//
அடடே! புல்லரிக்க வைக்குறீங்களேண்ணே... ரொம்ப நன்றி!
அழைப்பை ஏற்றுக்கொண்டு பதிலளித்ததற்கு நன்றிகள்!

டக்ளஸ்....... said...

அங்க மீனாட்சி ஆட்சி நடக்கும்போது, அது என்ன சொக்கனோட ஊரு...?
ஆக்சுவலா, அது யாரு ஊரு தெரியுமா...?
ஆட்டோ வரும் பாத்துக்கோங்கோ.!

Selva Kumar said...

Sir,

Maduraila eppavume meenakshi aatchi than. Ithellam 5 varusam, 10 varusamnu temporary. Athu permanent.

வணங்காமுடி...! said...

இந்தக் கேள்விகள் தொடர் பதிவை யாரு ஆரம்பிச்சாங்கன்னு தெரியலை. எரிச்சல் படுத்தும் கேள்விகளை அழகாகத் தவிர்த்து, மற்றவற்றிற்கு அருமையாய் பதில் சொன்ன விதத்தில், உங்கள் அனுபவத்தை உணர்த்திவிட்டீர்கள்.

மொத்தத்தில்.... சூப்பரப்பு....

vinoth gowtham said...

தல கலக்கல் பதில்கள்..

பெரிய தல வச்ச பெயரா..பொறக்கும்போதே VIPனு சொல்லுங்க..

வண்ணத்துபூச்சியார் said...

நிறைய கேள்விகளை சாய்ஸல விட்டு விட்டீர்களா..??

நன்றி.

ஈ ரா said...

//.கடைசியாகப் பார்த்த படம்?

கேக்கறது எமதர்மனா?

21.பிடித்த பருவ காலம் எது?

கெக்கெக்கே...அந்தணன் பதில் சொல்ல அருமையான கேள்வி!//

// வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில சொல்லணும்னா..‘வாழ்வே ஒரு வரிதான்’!//

பதில்கள் பின்னியிருக்கிறீர்கள்.....சூப்பர்

பூக்காதலன் said...

கலாட்டாவாக பதில் சொன்னாலும்,(பிடித்த விளையாட்டு? மைதானத்தைப் பொறுத்து,முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்? அது பார்க்கும் ஆளைப்பொறுத்து!) உறவுகளுக்கு மதிப்பு கொடுப்பவர் (யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ? .அம்மா, அப்பா, தங்கச்சிகள்.) என்று உணர்த்தி விட்டீர்கள்?

biskothupayal said...

‘இலையின் சிரிப்பில் இரை‘வனைக் கண்டேன்!

வழக்கம் போல கல கல ! குளு குளு !

பானு said...

வெளிப்படையான பதில்கள்.//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
.அம்மா, அப்பா, தங்கச்சிகள்.//....Good on u Sir.

மின்னுது மின்னல் said...

மண்டபத்தில யாரும் எழுதி கொடுக்கலையே.. :)

சென்ஷி said...

//மின்னுது மின்னல் said...

மண்டபத்தில யாரும் எழுதி கொடுக்கலையே.. :)//

:))))

சென்ஷி said...

//மின்னுது மின்னல் said...

மண்டபத்தில யாரும் எழுதி கொடுக்கலையே.. :)//

:))))

தீப்பெட்டி said...

நல்ல சுவையான பதில்கள்..
:)

ttpian said...

எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,
அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....
தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
This comment has been removed by the author.
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அச்சச்சோ..

மாட்டிக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன்..

இந்த 32 கேள்வி மேட்டரை மட்டும் கைல எடுத்தன்னா, அடுத்த தடவை நேர்ல பார்க்கும்போது ரெண்டு கையும் இருக்காதுன்னு அபியப்பா வேற பயமுறுத்துறாரு..

அதுனால மீ த எஸ்கேப்பு..

அப்புறம் அந்த 'தலைவாழை இலை போட்டு' மேட்டர் சூப்பரப்பு..

உவமைத் தமிழ்ல அடிச்சுக்க ஆள் இல்ல.. கலக்குங்க சாமி..!

மாலன் said...

ஜூவி, குங்குமம் ஆகியவற்றில் பணியாற்றிய பத்திரிகையாளர் உதயசூரியனா நீங்கள்?

எம்.பி.உதயசூரியன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து)said... தனக்குப் பிடித்த வர்ணமாக மாற நமது வர்ணாசிரமம் அணுமதிக்காது தல. அது பேனாவுக்கும் பொருந்தும். பெருமாளுக்கும் பொருந்தும்//

தலைவா..ஆழமான கருத்தை அழகா சொல்லிட்டீங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//மாலன் said.. ஜூவி, குங்குமம் ஆகியவற்றில் பணியாற்றிய பத்திரிகையாளர் உதயசூரியனா நீங்கள்?//

மதிப்பிற்குரிய மாலன் சார் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் அன்புக்குரிய ‘பத்திரிகையாளர்
எம்.பி.உதயசூரியன்‘தான் நான். நீண்டநாட்களுக்குப் பிறகு தங்களை பதிவு மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு. தங்கள் வருகை..எனக்கு பெருமை!

எம்.பி.உதயசூரியன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து)said... //.என் அப்பா விரும்பிக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர்! எனக்கான அடையாளத்தை ஈஸியாக// நெரயாபேர்த்துக்கு இது புதிய செய்தியாக இருக்கும்//

சந்தோஷம் தல. நாம ‘வாத்தியார்‘ பிள்ளையானது நம்ம ‘லக்கு’.

எம்.பி.உதயசூரியன் said...

//SOWRI said ... நேரான நேர்மையான பதில்கள். சீர சிந்திச்சு சிறப்ப எழுதிட்ங்க.//

SOWRI சார்..பாராட்ட நீங்க இருக்கற தைரியத்துலதான் ‘பலிஞ்சடுகுடு’ ஆடறேன்!

எம்.பி.உதயசூரியன் said...

// வெங்கிராஜா ... அடடே! புல்லரிக்க வைக்குறீங்களேண்ணே... ரொம்ப நன்றி! அழைப்பை ஏற்றுக்கொண்டு பதிலளித்ததற்கு நன்றிகள்!//

அசலூரு ஆட்டக்காரங்கள உள்ளூரு ஆட்டக்காரங்க மதிக்கறதுதான முறை! வாய்ப்பு வழங்கிய வெங்கிராஜா அவர்களுக்கு 123வது வட்டத்தின் சார்பாக...

எம்.பி.உதயசூரியன் said...

டக்ளஸ் said.. அங்க மீனாட்சி ஆட்சி நடக்கும்போது, அது என்ன சொக்கனோட ஊரு...? ஆக்சுவலா, அது யாரு ஊரு தெரியுமா...? ஆட்டோ வரும் பாத்துக்கோங்கோ.!//

டக்ளஸ்ணே..இப்பத்திக்கு அப்டியெல்லாம் அனுப்பமாட்டாய்ங்ணே! ரொம்ப நல்லவய்ங்னு
அவிய்ங்களே சொன்னாய்ங்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

// vinoth gowtham said.. தல கலக்கல் பதில்கள்.. பெரிய தல வச்ச பெயரா..பொறக்கும்போதே VIPனு சொல்லுங்க..//

பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்களே வினோத்ஜி. ஏதோ நாம ‘தல‘ காட்றதுக்கு பெரிய தல ஆசியும் ஒரு காரணம்!

எம்.பி.உதயசூரியன் said...

// ஈ ரா said... பதில்கள் பின்னியிருக்கிறீர்கள்..சூப்பர்//

ஈ ரா கண்ணா..தலைவர் ஸ்டைல்லயே பாராட்டறீங்களே!

எம்.பி.உதயசூரியன் said...

// பூக்காதலன் said.. கலாட்டாவாக பதில் சொன்னாலும் உறவுகளுக்கு மதிப்பு கொடுப்பவர் என்று உணர்த்தி விட்டீர்கள்//

உணர்வுபூர்வமான பூக்காதலனுக்கு ஒரு பூங்கொத்து!

எம்.பி.உதயசூரியன் said...

//biskothupayal said.. ‘இலையின் சிரிப்பில் இரை‘வனைக் கண்டேன்! வழக்கம் போல கல கல ! குளு குளு !

பிஸ்கோத்துபயல் கமெண்ட் மொறுமொறுன்னு இருக்கு!

எம்.பி.உதயசூரியன் said...

// பானு said...வெளிப்படையான பதில்கள்.//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ? .அம்மா, அப்பா, தங்கச்சிகள்.//....Good on u Sir//

சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வர அம்மா, அப்பாவுக்கு இஷ்டமில்லை. தங்கச்சிகள் விரும்பினாலும் சூழ்நிலை அமையவில்லை. இவங்க கூட இருந்தா..சந்தோஷத்தை இரட்டிப்பாக்கலாம்..சங்கடத்தை விரட்டிப் போக்கலாம்! உறவுகள் கைக்கெட்டும் தூரத்துல இருக்கற எனக்கே இப்படின்னா..கடல்கடந்து இருக்கற உங்களுக்கு? அடிச்சாலும் புடிச்சாலும் அது ஒரு அற்புதம் மேடம்!

எம்.பி.உதயசூரியன் said...

//மின்னுது மின்னல் said.. மண்டபத்தில யாரும் எழுதி கொடுக்கலையே.. :)//

வாம்மா மின்னல்! கேள்வி கரெக்ட்டு! 32 கேள்விகளை யார் எழுதிக்கொடுத்தாங்கன்னு
எனக்கு எப்படிமா தெரியும்? நகல்: சென்ஷி.

எம்.பி.உதயசூரியன் said...

// உண்மைத்தமிழன் said(15270788164745573644) ... அச்சச்சோ.. மாட்டிக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன்.. அதுனால மீ த எஸ்கேப்பு..//

பிளாக் உலக சீனியர் சொன்னா..அதுல ஏதோ ஒரு ‘பிளாக்’ இருக்கும்போல! நாம வெங்கிராஜாவுக்காக ஆஜரானோம். அம்புட்டுதான்.

Sridhar said...

வழக்கம் போல் கலக்கல் பதிவு

வண்ணத்துபூச்சியார் said...

உதய் சார், இதையும் பாருங்கோ

http://mynandavanam.blogspot.com/search/label/FAQ

வண்ணத்துபூச்சியார் said...

Sridhar Sir.. உங்களுடன் சந்திப்பு எப்போது..???

R.Gopi said...

//29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

‘ஹேர் பின் வளைவுகளில்’ கிளுகிளுப்பாக அனுமதித்து..உச்சத்தில் உச்சிகுளிர வைக்கிற ‘மலைகளின் இளவரசி‘!//

*********

Thala

idhu thaan unga TOUCH......

 
சுடச்சுட - by Templates para novo blogger