பின்விளைவு..முன்விளைவு!

Wednesday, June 10, 2009


சிங்கம் கெட்டா குகை..பத்திரிகையை விட்டா சினிமா!’..இது நம்ம புதுமொழி! ‘பத்திரிகையாளர் டைரக்டராகிறார்ங்கற அடையாளத்தோடகலைச்சேவை ஆற்றலாம்னு காரசேவை தின்னுகிட்டே முடிவு பண்ணேன். விடிவு வந்துச்சு.

ஜல்லிக்கட்டு பத்தி இதுவரை வராத நுட்பமான விஷயங்களை களமாக வெச்சு கதை,திரைக்கதை.வசனம் எழுதிஉப்புமூட்டைங்கற படத்தை நான் டைரக்ட் பண்றதா பத்திரிகைகள்ல நியூஸ்லாம் கொடுத்தோம். நண்பர்கள் தோள்

கொடுக்க..தயாரிப்பாளர் ஹரி கைகொடுக்க..பிரமாண்டமான ஜல்லிக்கட்டுக்கான வேலைகளும் ரெடி. காளைகளும் ரெடி!

இசையமைப்பாளர் உதயா நீதிதேவனின் இசையில் அஞ்சு

பாடல்களுக்கான ட்யூன் கம்போஸிங்கும் முடிஞ்சது. ஆர்ட்டிஸ்ட்டுகளை புக் பண்ற நேரத்துலதான்ஹார்ட் அட்டாக் மாதிரி வந்ததுஜல்லிக்கட்டுக்கு தடைங்கற செய்தி.

பாய்ச்சலுக்கு தயாரா இருந்த காளைகளுக்கு காய்ச்சல் வந்த மாதிரி நாங்க துவண்டு

போனோம்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோட ஜல்லிக்கட்டை

நடத்திக்கலாம்னு மறுதீர்ப்பு வந்து மாடுகளோட சேர்த்து எங்க வயித்துலயும்பாலை

வார்த்துச்சு. ‘ம்மான்னு மறுபடியும் வேலைகளை தொடங்கினோம். ‘சிக்கன் சாப்ஸ்லேர்ந்து தப்பிச்ச கோழியை தந்தூரியில வெச்சு தாளிச்சமாதிரி கோர்ட் தீர்ப்பு சாதகமா

வந்தாலும்..பிராணிகள் நல வாரியம் அருவாளை ஓங்கிகிட்டு நின்னுச்சு.

காளைக்கு வால் இருக்கலாம். ஆனா அது வாலாட்டிச்சுன்னா நீங்கதான் காரணம் சொல்லணும்’’ங்கற ரேஞ்சுக்கு பிராணிகள் நல வாரியம் போட்ட 108 கண்டிஷன்களைப் பாத்தா..‘ஜல்லிக்கட்டை விடுங்க..மாடுகளோட மௌனப்பேரணியைக்கூட படம் பிடிக்கமுடியாது. விட்டா..இனவிருத்தி செய்ற காளையைக்கூடபாலியல்

வன்முறைன்னு புடிச்சு கொட்டடிக்கு கொண்டுபோயிருவாங்க போல!

முதல் போடற தயாரிப்பாளர் ஒருபுறமும், முதல் படம் இயக்கற நான் மறுபுறமும்பலியாடுகள் மாதிரி ஃபீல் பண்ற காட்சியைப்பாத்தா..அந்த

பொலிகாளைகளே கூட கண்ணீர் விட்டுரும். ஆகவே மக்கா..இப்போ வேறொரு பக்கா ஸ்க்ரிப்ட் ரெடியாகிடுச்சு. ஆகவேண்டிய வேலைகளுக்கு ஆயத்தமாகறோம்.

முன்கதைச்சுருக்கம் கொஞ்சம் நீளமாயிருச்சு. சொல்லவந்த

காமெடி வேற! இந்த ஜல்லிக்கட்டுக்காக எக்கச்சக்க பிராணிகளையும், கெக்கெக்கே கேரக்டர்களையும் சந்திச்சேன். அப்போ அறிமுகமானவரு அம்மாசி!

சிங்கம்புணரி ஜல்லிக்கட்டுன்னா சிங்கம்கூட மிரளும்!

அப்பேர்ப்பட்ட ஜல்லிக்கட்டு அன்னிக்கு நடந்துகிட்டிருக்கு. ‘பெத்த பேரு எடுத்த மாடுபுடி வீரர்கள்லாம் கெத்தா களத்துல நிக்க..‘செத்த எலி கணக்கா அம்மாசியும் அங்க நிக்கறாரு. சுத்திநின்னு வேடிக்கை பாக்கற சுத்துப்பட்டு ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம்!

மண்ணெண்ணெய் குடோன்ல வௌக்கெண்ணெய்க்கு என்ன வேலை?’னு தன்ன எகத்தாளமா பாக்கற ஜனங்களை அம்மாசி அசால்ட்டா

பாத்தாலும்..அடிமனசு நடுங்கறது அவருக்கு மட்டும்தான் தெரியும். அம்மாசி லவ்ஸ் விட்ட முறைப்பொண்ணு அடாவடி ஆளு. ‘கட்டுனா ஒரு வீரனைத்தான் கடிக்குவேன். முடிஞ்சா இந்தாட்டி நடக்கற ஜல்லிக்கட்டுல ஒரு காளையை தொட்டுட்டு வா..கட்டிக்கறேன்னு

கறாரா சொல்லிருச்சு.

பாசமா தாலிக்கயிற கட்டலாம்னு பாத்தா..இப்புடி பாசக்கயிற வீசிட்டாளேனு பதறுன அம்மாசிக்குள்ளயும் ஒரு சூரப்புலி துள்ளிகிட்டு

எந்திரிக்க..விளைவு? இதோ ஜல்லிக்கட்டு! தடுப்புக்கயித்துக்கு பக்கத்துல காதலி ஆவலா

பாக்க..வாடிவாசல்கிட்ட நின்னுகிட்டு வீரன்மாதிரி பாவ்லா காட்டறாரு அம்மாசி.

ஆனாலும் பாஞ்சு வர்ற காளையோட வாலைக்கூட

தொடமுடியல. ‘சரி..கொஞ்சம் தள்ளிப்போயி சமாளிச்சிரலாம்னு அம்மாசி நகர..அந்தநேரம் பாத்து காளை ஒண்ணு பாஞ்சுவர..‘ஐயையோனு அம்மாசி காதலி அரண்டு பாக்க..‘ஏதோ ஒரு வெறியில தாவி பலங்கொண்ட மட்டும் காளையோட திமிலை இறுக்கிப்

பிடிச்சுகிட்டாரு அம்மாசி!

கொஞ்சதூரம் பாய்ச்சல் நடக்குது. அது ரொம்ப ரோஷக்கார மாடுபோல! உடம்பை ஒரு உலுக்கு உலுக்க..ஒட்டடை மதிரி கீழேவிழுந்தாரு அம்மாசி. ஒரு

யு டர்ன் அடிச்சுயூ ராஸ்கல்னு முறைச்ச மாடு தலையைக் குனிய (வெக்கத்துல இல்ல!)..

கொலைநடுங்கின அம்மாசி குப்புறத்திரும்ப..அந்தோ! சிந்தாம சிதறாம அவரோடபின்புறத்துல காளையோட கொம்புசதக்னு பாய்ஞ்சது!

அம்மானு அலறுனா அம்மாடு மறுபடியும் குத்துமோனு

பயந்து..அடித்தொண்டையிலேயே அழுதாரு அம்மாசி. அப்போஆசனவாயில வழிஞ்ச ரத்தத்தை வெச்சு யோசன பண்ணி சூப்பரா ஒரு வழியை கண்டுபிடிச்சாரு. உடனே..

போட்டிருந்த பனியனை கழட்டி தேவையான சைஸுக்கு கிழிச்சுசேதாரமாகி ரத்தம் சிந்தற ஆதாரத்துல வெச்சு அடைச்சுகிட்டாரு.

அதுவரைக்கும் வழிஞ்ச ரத்தத்தை வழிச்சு அடிவயித்துல தடவிகிட்டாரு. தட்டுத்தடுமாறி காதலிகிட்ட வந்துஎப்பூடிங்கற மாதிரி லுக் விடறாரு. ஊத்துன வேர்வைல வழிஞ்ச ரத்தம் இடுப்புக்கு பரவி அம்மாசிக்கே தெரியாம..அவரோடதொப்புளுக்கு கீழேழேழேயும் வழியுது. இதைமட்டுமே பாத்த காதலிமாமோய்..ஒடனே ஆஸ்பத்திரிக்கு போயிரு கூவ..அதீத குஷியாலும், அதிக கசிவாலும் அம்மாசி அங்கனயே மயங்கிவிழுந்துட்டாரு.

அப்புறம்? அசலூரு ஆஸ்பத்திரிக்கு வந்துபின்விளைவு தெரியாம சிகிச்சை எடுத்தும்கூட..அந்த காதலி அம்மாசி கையில சிக்கலை. ஏஏஏன்? அங்கதான் இந்த விதிரிவர்ஸ்ல விளையாடிச்சு! ‘ஆசனப்பகுதி ரத்தத்தை எடுத்து அடிவயித்துல பூசிகிட்டு

காதலியை பாத்தார்ல! அப்போ சுத்திநின்ன சொந்தபந்தம் அவரோடஅலங்கோலத்தை

பாத்துட்டு ‘‘ஐயையோ..மாடு முட்டுனதுல அம்மாசியோடடங்குவாரு

அந்துபோச்சுங்கோ!’’னு 18பட்டிக்கும் வாயாலேயேக்ரூப் மெசேஜ் அனுப்பிருச்சு!

வம்ச விருத்தியை நினைச்சு வருத்தப்பட்ட அந்த காதலி..

அம்மாசிக்கு ஆயின்மென்ட் குடுத்துட்டு அம்சமா வேறொரு மாப்பிள்ளையை கல்யாணம் கட்டிக்கிச்சு! ‘‘‘பின்னால வந்த ரத்தத்தாலமுன்னால புண்ணானபொய்க்கதையை

வெளிய சொன்னா வெக்கக்கேடு!’’னு சொல்லி.. தன்னோட அஞ்சுவயசு மகனுக்கு பஞ்சுமுட்டாய் வாங்கிக்குடுத்துகிட்டே சிரிச்சாரு அம்மாசி!

20 comments:

சென்ஷி said...

//இனவிருத்தி செய்ற காளையைக்கூட ‘பாலியல் வன்முறை‘ன்னு புடிச்சு கொட்டடிக்கு கொண்டுபோயிருவாங்க போல!//

:-))

சிரிப்பும் கும்மாளமுமாக எழுதியிருக்கீங்க. ஆனா உண்மை ரொம்ப வலிக்குது. அடுத்த ப்ரோஜெக்ட் ரெடி ஆயாச்சா!

என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...
This comment has been removed by the author.
உடன்பிறப்பு said...

உங்கள் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

தமிழ்ல சும்மா பூத்து விளையாடறீங்க உ.சூ

ஒரு நல்ல படமா கொடுங்க பாஸ் :)

அமர பாரதி said...

செம காமெடி. ஆனா "டங்குவாரு" அப்படின்னா முதுகெலும்பு தானே?

butterfly Surya said...

ஆஹா. வாழ்த்துகள்.

ராமருக்கு உதவின அணில் பிள்ளை மாதிரி ஏதாவது செய்ய அடியேனும் இருக்கேன்னு மறந்து விடாதீர்கள் தல..

இந்த பதிவை படிக்கவே முடியலை.. சிரிச்சு சிரிச்சு நம்ம டங்கு வார் அறுந்திடும் போல...

சூப்பர்..

செந்தில்குமார் said...

தல,

உங்களோட அடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

// அம்மா’னு அலறுனா அம்மாடு மறுபடியும் குத்துமோனு பயந்து..அடித்தொண்டையிலேயே அழுதாரு அம்மாசி. //

டைமிங்-ல உங்கள அடிச்சுக்க ஆளே இல்லேங்க.. சூப்பர்... சிரிச்சுக்கிட்டே படிச்சேன்.. படிச்சுகிட்டே சிரிச்சேன் !!

Anonymous said...

All the best Udaya Surian.

Unknown said...

சரக்கும் இருக்கு கலக்கல் நடையும் இருக்கு
இனி நீங்கதான் பதிவுலக 'நவரச நாயகன்'.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

1. கலைச்சேவை ஆற்றலாம்னு காரசேவை தின்னுகிட்டே முடிவு பண்ணேன்.
2. ‘ம்மா’ன்னு மறுபடியும் வேலைகளை தொடங்கினோம்
3. மாடுகளோட மௌனப்பேரணியைக்கூட படம் பிடிக்கமுடியாது
4. யு‘ டர்ன் அடிச்சு ‘யூ ராஸ்கல்’னு

நிறைய ரசித்தேன் சிரித்தேன். நன்றி.

Agni said...

//18பட்டிக்கும் வாயாலேயே ‘க்ரூப் மெசேஜ்’ அனுப்பிருச்சு!

sirichu sirichu vayiru valichu pOchu Anne!

All d best for ur nxt project

TAMIZHAN said...

BEAUTIFUL STORY HANDLED IN A PERFCT WAY.

முரளிகண்ணன் said...

அடையப்போகும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

பானு said...

ரசிச்சு படித்தோம்....தமிழ் உங்கள் கைகளில் செல்லமாய் தவழுகிறது.

sowri said...

உதய சூரியன் அல்லவா. தமிழ் தவழ்கிறது. சினிமா என்கிர ஜல்லிகாளை அடக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்

Sridhar said...

கலக்கரீங்க சார். சினிமாவிலும் வெற்றி பெற வாழ்துக்கள்

Joe said...

//
அம்மாசிக்கு ஆயின்மென்ட் குடுத்துட்டு அம்சமா வேறொரு மாப்பிள்ளையை கல்யாணம் கட்டிக்கிச்சு! ‘‘‘பின்னால‘ வந்த ரத்தத்தால ‘முன்னால’ புண்ணான ‘பொய்க்கதையை‘
//

What an anti-climax!

நீங்கள் சீக்கிரம் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வாழ்த்துக்கள்.

நல்ல நகைச்சுவைப் படமா கொடுங்க, ஓரளவுக்கு முன்னுக்கு போயட்டுருக்க தமிழ் சினிமாவை நீங்களும் மேலும் முன்னேத்துங்க.

Anonymous said...

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோட ஜல்லிக்கட்டை

நடத்திக்கலாம்’னு மறுதீர்ப்பு வந்து மாடுகளோட சேர்த்து எங்க வயித்துலயும் ‘பாலை‘

வார்த்துச்சு.
ungaluku venna paal varthurukalam. but mattuku eppadi?( athu padara kashtam ungaluku theriuma?) maadellam sernthu manushan kottaya pudikara game nadathuna therium.

உண்மைத்தமிழன் said...

ஆஹா..

என்ன ஒரு வார்த்தை விளையாட்டு..

பி்ன்னுறீங்கண்ணே..!

ஈ ரா said...

//‘பொலிகாளைகளே கூட’ கண்ணீர் விட்டுரும். ஆகவே மக்கா..இப்போ வேறொரு பக்கா ஸ்க்ரிப்ட் ரெடியாகிடுச்சு. ஆகவேண்டிய வேலைகளுக்கு ஆயத்தமாகறோம்//

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

வண்ணத்திரையில் உங்கள் முத்திரையை...

அன்புடன்

ஈ ரா

 
சுடச்சுட - by Templates para novo blogger