விஜய் சேர்த்த சொத்து!

Monday, June 22, 2009



அருவி மாதிரி பேசற ஆளல்ல நம்ம ‘குருவி’! துருவித்துருவி கேள்வி கேட்டாலும் உருவிப்போட்ட கருவேப்பிலை மாதிரி கொஞ்சூண்டுதான் பதில் கிடைக்கும். ரெண்டுமணி நேரம் விஜய்கூட பேசினதை ஒரு துண்டுச்சீட்டுல
எழுதிரலாங்ணா!

அது ஒரு தீபாவளி! வாணவேடிக்கைகளை வானத்துல வேடிக்கை பார்த்தே ஏங்கற ஏழை மாணவர்களை ‘சிவகாசி‘க்கு கூட்டிட்டுப்போலாம்னு ஆசைப்பட்டேன். பட்டாசு தயாரிக்கற சிவகாசிக்கு அல்ல..பட்டைய கௌப்பற ‘சிவகாசி‘ விஜய்கிட்ட! அப்பவும் நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர்.

தீபாவளிக்கு மூணுநாள் முன்னாடி..‘கில்லி‘யோட நீலாங்கரை வீட்டுக்கு பள்ளிக்கூடப் பசங்களை கூட்டிட்டுப்போனோம். வாசல்ல நின்னு வரவேற்ற விஜய்யை பார்த்ததுமே பிச்சுகிட்டு ஓடுன பசங்க ‘‘இளைய தளபதி‘ன்னு அவரை
மொச்சுகிட்டாங்க! பசங்களுக்கு பட்டாசு பாக்கெட், ஸ்வீட் பாக்ஸ்னு விஜய் அன்போட தர..பதிலுக்கு பசங்களும் கண்ணுமண்ணு தெரியாம பாசத்தைப் பொழிய..கண்ணு கலங்கிட்டாரு விஜய்!

இதை ‘பள்ளி மாணவர்களுடன் கில்லி தீபாவளி’ன்னு நேரடி
ரிப்போர்ட்டா எழுதியிருந்தேன். ‘குங்குமம்’ இதழ் கடைக்கு வந்த அதிகாலையிலேயே என் செல் முழிச்சது. எடுத்துப்பேசினால்..விஜய் குரல் ஒலிச்சது! ‘‘மேட்டர் படிச்சேங்ணா. மனசு நெகிழ்ந்து போயிட்டேங்ணா. நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாங்ணா!’’னார்.
‘‘சரிங்ணா’’னேன் சந்தோஷமா!

மறுநாள் மாலை. அதே நீலாங்கரை. சலசலக்கற
கடற்கரையோரமா பளபளக்கற விஜய் பங்களா. ‘இளைய தளபதி‘யோட பர்சனல்
அறைக்குள் போறேன். ‘பனிக்கட்டியை பரப்பி ஏ.சி.யால நிரப்பி விட்ட மாதிரி‘ ஜிலீர்னு இருக்கு அந்த ரூம். எதிரே சேர்ல விஜய். உதிராத புன்னகையோட புதிராக என்னையே
பாக்கறாரு.

ஜாலி பேட்டிக்காக போன நானே ஒரு கேள்விக்குறி
மாதிரி ஆயிட்டேன். ‘சரி..இதிலிருந்தே பேட்டியை ஆரம்பிக்கலாம்’னு ‘‘எப்படி வந்துச்சு உங்களுக்கு இப்படியொரு அமைதி?’’ன்னு கேட்டேன். ‘‘சொல்லத்தெரியலீங்க. எப்பவுமே இப்படியேதான் இருக்கேன். இதுவே நிம்மதியா இருக்கு!’’ன்னு சைலன்ட்டாகிட்டார்.

‘என்னடாது..அதிரடிப்பேட்டி ஆன்மீகப் பேட்டியா மாறிடும்
போல’ன்னு சப்ஜெக்ட்டை மாத்தினேன். விஜய்யோட டேபிள்ல ஆடியோ சிஸ்டத்தை பாத்தேன். ‘‘அதிராமல் பேசற நீங்க..அதிர அதிர மியூஸிக் கேப்பீங்க போல?’’ன்னேன். உதடு பிரியாமல் சிரிச்ச விஜய் ‘‘ஆமாங்ணா! மியூஸிக்னா எனக்கு உயிர். பழசு புதுசு எந்தப்
பாட்டா இருந்தாலும் கேட்டு ரசிப்பேன்’’னு ‘நல்லபிள்ளையா‘ பதில் சொல்லி பேட்டிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டாரு.

கச்சிதமா ட்ரிம் பண்ணியிருந்த மீசையை விஜய் வருட..அப்போ அவரோட வலது கை விரல்ல ஒரு பிளாட்டினம் மோதிரம் ஜொலிச்சது. ‘‘ஸ்பெஷல்
மோதிரமா?’’ன்னு கொக்கியை போட்டேன். ‘‘அட..எல்லாத்தையும் நல்லா வாட்ச்
பண்றீங்களே’’னு சிரிச்சவர் ‘‘இது அப்பா போட்ட மோதிரம். ‘இத போட்டுகிட்டா நல்லது நடக்கும்‘னாரு. சந்தோஷமா போட்டுகிட்டேன்’‘னாரு.

இப்படி ஒருவழியா என்னென்னவோ செப்படி வித்தையெல்லாம் காட்டி ஒரு ‘ஸ்பெஷல் பேட்டி‘ எடுத்துட்டு வந்தேன். கவர்ஸ்டோரிக்கு அனுப்பற நேரம். அன்னிக்கு பாத்து ‘விஜய் உட்பட பல முன்னணி நடிகர்கள் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு’ நடந்துருச்சு. ‘கட்டுக்கட்டா கறுப்புல எடுத்தாங்க‘னு பல கட்டுக்கதைகளும் பரவிருச்சு.

இதுபோதாதா? விஜய்யோட கவர்ஸ்டோரிக்கு ‘‘கஷ்டப்பட்டு
சம்பாதிச்சது கையை விட்டுப்போகாது!’’னு ‘டைமிங்கா‘ டைட்டில் வெச்சு அனுப்பிச்சேன். உள்ளே என்ன மேட்டர்னா ‘‘விஜய் படமா? குடும்பத்தோட போய் ஜாலியா பாக்கலாம்னு மக்கள் என்மேல நம்பிக்கை வெச்சுருக்காங்கள்ல! இந்த நம்பிக்கைதான் நான் கஷ்டப்பட்டு
சம்பாதிச்ச சொத்து. இது கையை விட்டுப் போகாது!’’னு விஜய் சொல்லியிருப்பார்.

இதழ் விற்பனைக்கு வந்தது. ‘சன் டி.வி.‘யிலயும் விளம்பரம் சக்கைபோடு போட்டது. அன்னிக்கு மதியம்..என் செல்லில் மீண்டும் விஜய்! ‘‘ண்ணா..
இன்கம்டாக்ஸ் ரெய்டு பத்தி எவ்வளவோ பொய்யா எழுதி என்னை கஷ்டப்படுத்திட்டாங்க. ஆனா அதையெல்லாம் அடிச்சுத்தூக்கி என் மனசுக்கு பெரிய நிம்மதியை தந்துருச்சு உங்க எழுத்து! ரொம்ப தேங்க்ஸ்ணா. இனிமேல் என்னைப்பத்தி நீங்க என்ன எழுதினாலும் அதுக்கு முதல் ரசிகன் நாந்தாங்ணா!’’னு விஜய் உருக்கமாகப் பாராட்ட..இன்னும் நெருக்கமானது அவருடனான நட்பு!

50 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நெகிழ்ந்தேன்

நன்றிகள்

பிரியமுடன் வசந்த்

எம்.பி.உதயசூரியன் said...

//பிரியமுடன்.........வசந்த் said...
நெகிழ்ந்தேன் நன்றிகள்//

மகிழ்ந்தேன்..வாழ்த்துக்கள்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

unga ezhuthukkal miga arummai...
naal muzhukka ukandhu padichittu irukken..

RRSLM said...

//‘‘கஷ்டப்பட்டு சம்பாதிச்சது கையை விட்டுப்போகாது!’’னு //
நீங்க தலைப்பு வெச்ச அது சரியாய் தான் தல இருக்கும்....... விஜய்யுடன் உங்கள் நட்பு மேலும் நெருக்கமாக வாழ்த்துகள்.....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மாயவரத்தான் said...

நண்பா, உடனடியாக உங்கள் பதிவில் comment modertaion செயல்படுத்துங்கள்.

மாயவரத்தான் said...

comment moderation

Anonymous said...

Thaliva, Mayavarathan is right, please enable comment moderation ASAP. I too don't like Vijy's movies but I like the way you Andhanan writing incidents, keep it up.

kr_kumar@yahoo.com

Sridhar said...

அருமை சார். comment modertaion செயல்படுத்தவும்

butterfly Surya said...

வில்லையே "வில்லா" வளைச்சு நெகிழ வச்சுடீங்களே..?? கலக்கல்.

ஸ்ரீதர் சார் நலமா..?

சென்ஷி said...

வழக்கம் போல தமிழின் அதிரடி வீச்சுக்கள் மெல்லியது முதல் பலத்த புன்னகையை கொண்டு வந்து விட்டது.

(அடங்கொய்யாலுங்களா! இங்கயுமாடா வந்து உங்க வேலைய காட்டுறீங்க :(

நீங்க பின்ன என்னத்தாண்டா ரசிப்பீங்க!)

தீப்பெட்டி said...

இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

பதிவிற்கு நன்றிகள்..

வினோத் கெளதம் said...

தளபதி வாயுல இருந்து வார்த்தையை கொக்கி போட்டு தான் இழுக்கணும் போல..
மனுஷன் அந்த அளவுக்கு அமைதி..
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Sridhar said...

//ஸ்ரீதர் சார் நலமா..? //

தங்கள் ஆசியுடன் நலம். எப்போது சந்திக்கலாம்?

Ganesan said...

அருமை அண்ணன், இன்னுமொரு மதுரை மண்ணின் சகோதரர் பதிவுலகில், வாழ்த்துக்கள் உதயசூரியன்

Anonymous said...

நிசமாலுமே உங்களை மாதிரி உள்ள பெரிய மனிசன்களிடம் மாத்திரமே விஜய் நன்றாக பழகுவார்.அவரின் இல்லத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் விஜய் வீட்டை விட்டு வெளியே போகும் பொது வரும் போதும் தொழிலாளிகள் விஜய்யை பார்க்காத படி கட்டளை கொடுக்கபட்டது.அதனால் அவரின் இல்லத்தில் வேலை பார்த்த தொழிலாளிகள் அனைவரும் ஒரே நாளில் வேளையில் இருந்து நின்று விட்டார்கள் எனவும் செய்திகள் வந்துள்ளது.உண்மையிலே "விஜய் சேர்த்த சொத்து"சரசாரி மனிதன் அல்ல என்பது மாத்திரம் நிச்சயம்.

என்ன கொடும சார் said...

சைலன்ஸ் விஜய் யா?

எம்.பி.உதயசூரியன் said...

// Arun KK said.. unga ezhuthukkal miga arummai... naal muzhukka ukandhu padichittu irukken..//

நன்றி அருண். ‘நாள்முழுக்க படிக்கணும்னா’ நான் இன்னும் நிறைய எழுதணுமே!

எம்.பி.உதயசூரியன் said...

// RR said... நீங்க தலைப்பு வெச்ச அது சரியாய் தான் தல இருக்கும்..//

ஆர்.ஆர். சொன்னா அது ‘ஆராரோ’சுகம்தான்!

எம்.பி.உதயசூரியன் said...

//மாயவரத்தான் said... நண்பா, உடனடியாக உங்கள் பதிவில் comment modertaion செயல்படுத்துங்கள்//

ரொம்ப நன்றி நண்பா! உங்களோட அன்புக்கட்டளைக்கும், ஸ்ரீதர் சார், நண்பர் kr_kumar அட்வைஸுக்கும் கட்டுப்பட்டு உடனே அமல்படுத்திட்டேன்.

Sridhar said...

கிரீடத்திற்க்கு வாழ்த்துக்கள்

எம்.பி.உதயசூரியன் said...

//வண்ணத்துபூச்சியார் said... வில்லையே "வில்லா" வளைச்சு நெகிழ வச்சுடீங்களே..?//

கேரளா போயி தொடைக்கறி சாப்பிட்டீங்களானு கேட்ட ‘வில்லாதி வில்லா’..நேர்ல பாப்போம்ல!

எம்.பி.உதயசூரியன் said...

// சென்ஷி said... வழக்கம் போல தமிழின் அதிரடி வீச்சுக்கள் மெல்லியது முதல் பலத்த புன்னகையை கொண்டு வந்து விட்டது//

சென்ஷி..ஏதோ நம்மால முடிஞ்சதை ‘சென்ஷி’கிட்டிருக்கோம்!

எம்.பி.உதயசூரியன் said...

// தீப்பெட்டி said... இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்//

தீப்பெட்டிக்கு குடுங்க சாக்லெட்டு!

எம்.பி.உதயசூரியன் said...

//வினோத்கெளதம் said... தளபதி வாய்ல இருந்து வார்த்தையை கொக்கி போட்டு தான் இழுக்கணும் போல//

ஆமா வினோத்..மூச்சை அடக்கி முத்துக்குளிச்ச கதைதான்!

எம்.பி.உதயசூரியன் said...

//KaveriGanesh said... அருமை அண்ணன், இன்னுமொரு மதுரை மண்ணின் சகோதரர் பதிவுலகில்,//

காவேரி கணேஷ்ணே..உங்க ப்ளாக்குல நம்மூரு ஸ்லாங்கு சும்மா வைகையா பாயுதே!

எம்.பி.உதயசூரியன் said...

//உண்மை கசப்பானது. said... நிசமாலுமே உங்களை மாதிரி உள்ள பெரிய மனிசன்களிடம் மாத்திரமே //

உண்மை கசப்பானதுன்னு பேரை வெச்சுகிட்டு..’பெரிய மனசோட’ நீங்க சொல்ற இந்த வார்த்தை எம்புட்டு இனிப்பா இருக்கு தெரியுமா? ஹி..ஹி!

எம்.பி.உதயசூரியன் said...

//என்ன கொடும சார் said... சைலன்ஸ் விஜய் யா?//

தலைவா..விமர்சனத்தையே பேரா வெச்சுகிட்டீங்கன்னா அப்புறம் எப்படி நாங்க விமர்சனம் பண்றது?

எம்.பி.உதயசூரியன் said...

//Sridhar said... கிரீடத்திற்க்கு வாழ்த்துக்கள்//

வணங்குகிறேன் சார்..’விஜய்’ மேட்டர் எழுதின இன்னிக்கு பாத்து ‘தமிழ் 10’ தளம் நமக்கு ‘கிரீடம்’ தந்திருக்கு! என்ன ஒற்றுமை!

ஜானி வாக்கர் said...

அட அட, நான் தான் இன்னிக்கு கடைசியா? பரவா இல்லை உதயசூரியன் அவர்களுக்கு தமிழ் 10 கிரீடம் மற்றும் விஜய் கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

kanojan said...

விஜயைக்கு எவ்வாறு நாம் நன்றி கூறுவது எனு தெரியவில்லை அதையும் விட அவருக்கு கிடைத்த உங்கள் மாதிரி ரசிகர்க கொட்த்துவைத்தவர்கள்
நன்றி

செந்தில்குமார் said...

தளபதிய பத்தி இந்த வலையுலக தல சொல்லி கேக்கற சுகமே தனி !!

எவ்வளவோ சொல்லிட்டீங்க ... இதையும் சோக்கா சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தேன்.. சொல்லிட்டீங்க... அருமை அருமை !

செந்தில்குமார் said...

தல,

கிரீடத்திற்கு வாழ்த்துக்கள்... மேலும் பல விருதுகள் நீங்க வாங்கறதுக்காக காத்திக்கிட்டிருக்காம்.. சோ சீக்கிரமா அதெல்லாத்தையும் வாங்குங்க... :-)

பானு said...

எப்படி Sir பதிவும் சூப்பர் ஆக,போட்டு ,அனைத்து commentsக்கும்,பதிலும் கலக்கலாக எழுதறீங்க....

எம்.பி.உதயசூரியன் said...

// ஜானி வாக்கர் said... அட அட, நான் தான் இன்னிக்கு கடைசியா?//

எப்’போதை’க்குமே நீங்கதானே தலைவா ‘ஆரம்பம்’!

எம்.பி.உதயசூரியன் said...

//kanojan said... விஜய்க்கு எவ்வாறு நாம் நன்றி கூறுவது எனு தெரியவில்லை //

உங்க ப்ளாக்கை பாத்தா.. ‘இளைய தளபதியின்’ ‘இணைய தளபதியே’ நீங்கதான்போல!

எம்.பி.உதயசூரியன் said...

//செந்தில்குமார் said... தளபதிய பத்தி இந்த வலையுலக தல சொல்லி கேக்கற சுகமே தனி !!//

செந்தில்குமார் மாதிரி ‘தளபதி’களாலதான் இந்த ‘சிப்பாய்’ ‘தல’நிமிர்ந்து நிக்கறான்!

எம்.பி.உதயசூரியன் said...

//பானு said... எப்படி Sir பதிவும் சூப்பர் ஆக,போட்டு ,அனைத்து commentsக்கும்,பதிலும் கலக்கலாக எழுதறீங்க//

நொடிகளை மதிக்கற அயல்நாட்டில மணிக்கணக்கா வேலைகள் இருந்தும்..
நமக்காக நிமிடங்களை ஒதுக்கி படிச்சு,
’சுடச்சுட’ கமெண்ட்டும் எழுதற
உங்களைப் போன்றவர்களின் அன்புக்கு
என் ‘பதில்’ காணிக்கை இதுதான் மேடம்!

ஜானி வாக்கர் said...

நொடிகளை மதிக்கற அயல்நாட்டில மணிக்கணக்கா வேலைகள் இருந்தும்..
நமக்காக நிமிடங்களை ஒதுக்கி படிச்சு,
’சுடச்சுட’ கமெண்ட்டும் எழுதற
உங்களைப் போன்றவர்களின் அன்புக்கு
என் ‘பதில்’ காணிக்கை இதுதான் மேடம்! //

சார், உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் கூடிய பதில் பின்னூடடம் உங்களை தொடர்பவர்களுக்கு நிச்சயம் உங்கள் மேல் நல்ல மதிப்பை உண்டாக்கும். இதை பெருமைக்கு சொல்ல வில்லை, உள் மனத்திலிருந்து சொல்கிறேன்.

மேன்மேலும் எழுதி சிறப்புற மனமார வாழ்த்துகிறேன்.

எம்.பி.உதயசூரியன் said...

//ஜானி வாக்கர் said... உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் கூடிய பதில் பின்னூடடம் உங்களை தொடர்பவர்களுக்கு நிச்சயம் உங்கள் மேல் நல்ல மதிப்பை உண்டாக்கும். இதை பெருமைக்கு சொல்லவில்லை, உள் மனத்திலிருந்து சொல்கிறேன்.//

நெகிழ்கிறேன் ஜானி வாக்கர் சார்! உங்கள் வார்த்தைகளுக்கு தகுதியுள்ளவனாக இன்னும் என்னை உயர்த்திக்கொள்ள உழைக்கிறேன். நன்றி சார்!

sowri said...

rhyming and timingla ungala adichika aale illinganna

Unknown said...

வாழ்த்துக்கள்! :)

அப்புறம்ம்ம்ம்ம்..... “சொல்லத்தெரியலீங்க. எப்பவுமே இப்படியேதான் இருக்கேன். இதுவே நிம்மதியா இருக்கு!’’ன்னு சைலன்ட்டாகிட்டார்.”

சைலண்டாகிட்டாரா ??? நான் கூட ”ஏய்... பேசிக்கிட்டு...”
சாமி எஅன்க்கு எதுக்கு வம்பு! ;)

Mudichavukki said...

engalayum blog ezhudha thoondinadhe unga ezhuthu dhaan thalaivaaa.......

எம்.பி.உதயசூரியன் said...

//sowri said... rhyming and timingla ungala adichika aale illinganna//

ரைமிங்..டைமிங்னு கமெண்ட்லயே நச்சுனு பிச்சு உதறிட்டீங்களேண்ணா!

எம்.பி.உதயசூரியன் said...

// Vijay said... வாழ்த்துக்கள்! :) சைலண்டாகிட்டாரா ??? நான் கூட ”ஏய்... பேசிக்கிட்டு...” சாமி என்க்கு எதுக்கு வம்பு! ;)//

விஜய் கமெண்ட்ல கடைசி வரி..ரிப்பீட்டு!

எம்.பி.உதயசூரியன் said...

//Mudichavukki said... engalayum blog ezhudha thoondinadhe unga ezhuthu dhaan thalaivaaa.......//

நண்பா..இப்படியொரு பேரை வெச்சுகிட்டீங்களே! உங்கள எப்படி பாராட்டினாலும் ‘செல்லமா’ திட்டற மாதிரியே இருக்கே!

ஜோ/Joe said...

வழக்கம் போல கலக்கல்.

அண்ணே ,நம்ம நடிகர் திலகத்தோட சந்திக்க வாய்ப்பு கிடைச்சதா? இருந்தா ,அதைப் பத்தி கொஞ்சம் எழுதுங்களேன்.

அன்பரசு said...

ரொம்ப நல்லா எழுதுறீங்கண்ணே! உங்க எழுத்துல ஏதோ மந்திரம் இருக்கிற மாதிரி உங்க வலைப்பூவப்பார்த்த உடனேயே எல்லாப்பதிவுகளையும் படிச்சுட்டேங்க (அந்தணன் அவர்கள் எழுத்தும் கட்டிபோடுகிறது). கடந்த சில நாட்களாக உங்க ரெண்டு பேரு பதிவுகளை மட்டுந்தான் மாறி மாறி படிச்சுக்கிட்டு இருக்கேண்.

டாக்டர் தம்பியப் பத்தின விசயத்துல நான் உங்களிடமிருந்து கருத்து வேறுபட்டாலும் உங்கள் எழுத்துக்காக அதைப் பலமுறை படித்தேண். இருந்தாலும் நீங்கள் (டேய்....சைலன்ஸ்.......)ஐ இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்ணா.

டாக்டர் தம்பிக்கு இப்போ கோட்டைய பிடிக்கிற ஆசை வந்திருச்சி போல. ஏதோ உங்கள மாதிரி ஆளுங்க கொஞ்சம் டாக்டர் தம்பிகிட்ட எடுத்து சொல்லி தமிழ்நாட்டக் காப்பாத்தக் கூடாதா?

R.Gopi said...

Thala

Vazhakkam pola kalakkal.....

neram irundhaa nammalayum vandhu paarunga.

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

 
சுடச்சுட - by Templates para novo blogger