‘மர்மயூகி‘ கமல்!

Monday, June 29, 2009




கலைஞானி கமல் பத்தி கடந்த பதிவுல ‘ஏதோ ஊதுபத்தி‘ அளவுலதான் சொல்லிட்டமோனு மனசுக்குள்ள ஒரு யோசனை வாசனையா புகையுது!

கார்ட்டூன்ல பாக்கற ‘காட்டு யானையை‘ ‘நேர்ல காட்டு‘ன்னா..என்ன செய்வான் இந்த ஏழை இளைஞன்? அதான்..கமல்ஹாசனை காட்டிட்டு போறேன்!

இப்போதைக்கு கமல் ‘நரை, திரை, மூப்பு‘ கடந்த புத்தர்! இன்னும் கொஞ்சம் பழுத்தா இவரே ஒரு சித்தர்! ‘கிண்ணத்தில்‘ தளும்பறதை பாத்ததுமே சிலபேரு தத்துவமா புலம்பறதை கேட்டிருப்போம். ஆனா நாம கேட்ட கேள்விக்கு தன் எண்ணத்தில் பட்டதை பட்டென சொல்லி அசத்தற அசாத்திய திறமைசாலி கமல்!

கேள்விக்குறியை ஆச்சரியக்குறியா மாத்தற கமலிடம் ஒரு கேள்வி கேட்டாங்க..‘காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’. ‘பாசாங்கா ஒரு பதிலைச் சொல்லி ‘பேஷா இருக்கே‘னு கமல் பேர் வாங்கியிருக்கலாம்! ஆனா ‘அதிமேதாவிகளையே வெள்ளாவியில போட்டு வெளுக்கறமாதிரி‘ அப்பட்டமா இப்படி பதில் சொன்னார்
கலைஞானி..‘‘காட்டில் இருந்தால் நரி முகத்தில். கட்டிலில் கிடந்தால் ஸ்திரி முகத்தில்!’’

சிரிச்சுகிட்டு பேசறப்போ கூட கமல் நம்மளை பிரிச்சு
மேஞ்சுருவாரு! ‘விருமாண்டி‘ ப்ரஸ்மீட். நடுநாயகமா ‘மருதநாயகம்‘ உக்காந்திருக்காரு.
இடம், வலமா இருந்த நிருபர்கள் படம் பத்தி கேக்கறோம். அப்போ நான் என் பங்குக்கு ‘‘விருமாண்டிக்காக ரெண்டு காளைகளை பயங்கரமா வளக்கறீங்களாமே?’’ன்னேன். உடனே வாய்விட்டு சிரிச்ச கமல் ‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’னு சொல்ல..தறிகெட்டு சிரிச்சோம்.

‘சிஃபி.காம்‘க்காக எனக்கு கமல் ‘சிறப்புப்பேட்டி‘ தந்தப்போ.. உறைப்பா ஒரு கேள்வி கேட்டேன். ‘‘மகாநதி‘ பட வில்லன் மாதிரி நிஜத்துல யாராவது தன்னோட கையையே வெட்டிக்குவாங்களா?’ன்னேன்.

‘‘இதைவிட கொடூரமால்லாம் சம்பவம் நடந்துருக்குங்க. எங்க ஊர்ல ஒருத்தனோட கையை எதிராளிங்க பாதி வெட்டிட்டாங்க. உடனே அவன் என்ன பண்ணான் தெரியுமா? அதே கையை முழுசா வெட்டி..அதை இன்னொரு கையில எடுத்துகிட்டு ரத்தக்களறியா சண்டை போட்டிருக்கான்!’’னு கமல் சொல்ல..கைகட்டி கேட்டுகிட்டேன்.

எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு! ‘எப்பவுமே பிஸியா இருக்கற கமல் தனிமையா இருக்கும் சமயங்கள்ல என்ன செய்வார்?‘. நாக்குல நின்ன கேள்வியை போறபோக்குல கமல்கிட்டயே கேட்டுட்டேன்.

‘‘என்னை தட்டி எழுப்பற கேள்வி இது. என்ன..புரியலைங்களா? நண்பர்கள்கூட இல்லாத ஒரு தனிமை கிடைச்சுதுன்னா..உடனே நான் கண்மூடி
தியானத்துல ஆழ்ந்துருவேன்! ‘ஆஹா..கமல் தியானம்‘னு கவர்ஸ்டோரி கிடைச்சுருச்சுனு அவசரப்பட்டு முடிவு பண்ணிராதீங்க!’’னு சஸ்பென்ஸா சிரிச்சாரு கமல்.

சில ‘டிக்டிக்டிக்‘குக்கு பிறகு அவரே ‘டக்‘குன்னு சொன்னாரு..
‘‘தியானம்னு சொன்னது வேறெதுவுமில்ல..நல்லா நிம்மதியா தூங்குவேன்! சான்ஸ்
கிடைச்சா கொடைக்கானல் போயிருவேன். அப்படியே மலைக்குள்ள ஒரு இலை மாதிரி கிடந்து சுகமா தூங்கிருவேன்!’’னாரு ‘தமிழ் சினிமாவை விழிக்கவெச்ச இந்த மகா
கலைஞன்‘!

அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க!

33 comments:

பானு said...

Me the first!

RRSLM said...

//அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க! //

ஸ்ரீதர் சார் வழங்குவாரா? நீங்க பரிசு குடுக்கறதா இருந்த சொல்லுங்க எங்கே? எப்போ? ஏதுக்கு? எடுத்ததுன்னு உங்ககிட்ட சொல்றேன்.

யாத்ரீகன் said...

தசாவதார கெட்டப்புகளில் ஒண்ணா வரவேண்டியதா ?!?!?!

அன்புச்செல்வன் said...

//இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார்//

'உப்புமூட்டை' படத்துக்காகவாங்ணா....

அப்படியே ஸ்ரீதர் சாரோட சிரிப்பு பரிசை கூரியர்ல அனுப்பிட்டா செல் போன் ரிங்டோனா வச்சுக்குவேன்.

biskothupayal said...

idhu oru remix photo

correcta

butterfly Surya said...

பரிசு என்னன்னு சொல்லுங்க முதல்ல..??

Ganesan said...

அண்ணே,

அடுத்த பிளாக்கர் மீட்டுல உங்களை எதிர்பார்க்கிரேன்

Unknown said...

photoshop வேலை அப்பட்டமா தெரியுது

வெங்கடேஷ்
திரட்டி.com

Anonymous said...

காதலா காதலா

தினேஷ் said...

‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’

ஹி ஹி ஹி ...

சென்ஷி said...

:)

R.Gopi said...

"தலை"யின் தலையை விட, "காது" சூப்பர்........ அதுவும் அந்த கம்மல்..... ஹ்ம்ம்... பின்னுது.........

Anonymous said...

Aalavandan

- Mohan

Ananth said...

போடோஷோப்பில் உங்கள்ளுக்கு பயிற்சி போதவில்லை.
- ஆனந்த்

randramble said...

இது தசாவதாரம் பட getup-களை கற்பனை பண்ணி Behindwoods.com-க்கு வாசகர்கள் அனுப்பிய photoக்களில் ஒன்று.

தகவல்களுக்கு நன்றி.

எம்.பி.உதயசூரியன் said...

// பானு said... Me the first!//

‘மர்மயூகி’ மேட்டருக்கு நீங்கதான் ஃபர்ஸ்ட்டா இருப்பீங்கன்னு நானும் ‘யூகிச்சேன்’ மேடம்!

எம்.பி.உதயசூரியன் said...

//RR said...நீங்க பரிசு குடுக்கறதா இருந்த சொல்லுங்க//

தலைவா..உங்க கமெண்ட்டே எனக்கு பெரிசு! இதைவிட வேறென்ன வேணும் பரிசு?

எம்.பி.உதயசூரியன் said...

//யாத்ரீகன் said... தசாவதார கெட்டப்புகளில் ஒண்ணா வரவேண்டியதா ?!?!?!//

வந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ல தலைவா!

எம்.பி.உதயசூரியன் said...

//அன்புச்செல்வன் said...அப்படியே ஸ்ரீதர் சாரோட சிரிப்பு பரிசை கூரியர்ல அனுப்பிட்டா செல் போன் ரிங்டோனா வச்சுக்குவேன்.//

அன்பு..எவ்ளோ நாளாச்சு உங்க கமெண்ட் பாத்து! ‘பரிசை’ படுகரெக்ட்டா ‘கேட்ச்’ பண்ணிட்டீங்களே!

எம்.பி.உதயசூரியன் said...

//biskothupayal said... idhu oru remix photo correcta//

பதிலையே கேள்வியா கேட்டுட்டீங்களே நண்பா!

எம்.பி.உதயசூரியன் said...

//வண்ணத்துபூச்சியார் said... பரிசு என்னன்னு சொல்லுங்க முதல்ல..??//

‘ஆழ்வார்பேட்டை ஆண்டவனோட’ அஞ்சு நிமிஷ தரிசனம்!

butterfly Surya said...

‘ஆழ்வார்பேட்டை ஆண்டவனோட’ அஞ்சு நிமிஷ தரிசனம்!////

அண்ணே.. அது மட்டும் நடந்தா ஆயுசு உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன்...

எம்.பி.உதயசூரியன் said...

//KaveriGanesh said... அண்ணே,
அடுத்த பிளாக்கர் மீட்டுல உங்களை எதிர்பார்க்கிரேன்//

நன்றி கணேஷ்! ‘காவேரியும் வைகையும் கைகுலுக்கட்டும் அன்று!’.

எம்.பி.உதயசூரியன் said...

//venkat said... photoshop வேலை அப்பட்டமா தெரியுது// //Ananth said... போடோஷோப்பில் உங்கள்ளுக்கு பயிற்சி போதவில்லை.//

’பம்மல் கே.சம்பந்தம்’ சொல்வாரே..
‘பழமொழியை அனுபவிக்கணும்! ஆராய்ச்சி பண்ணக்கூடாது!’ நம்மது ‘பட’மொழி!

எம்.பி.உதயசூரியன் said...

//சூரியன் said... புண்ணாக்கு, தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’ஹி ஹி ஹி //

இதைத்தான் நம்மூர்ல ‘அட..புண்ணாக்கு’னு சொல்றாய்ங்க!

எம்.பி.உதயசூரியன் said...

// சென்ஷி said... :)//

:)?? :)))))!?

எம்.பி.உதயசூரியன் said...

//R.Gopi said... "தலை"யின் தலையை விட, "காது" சூப்பர்........ அதுவும் அந்த கம்மல்..... ஹ்ம்ம்... பின்னுது....//

கோபி..’கமல், கம்மல்’ ரெண்டுமே பின்னும்ல!

எம்.பி.உதயசூரியன் said...

// randramble said... இது தசாவதாரம் பட getup-களை கற்பனை பண்ணி Behindwoods.com-க்கு வாசகர்கள் அனுப்பிய photoக்களில் ஒன்று. தகவல்களுக்கு நன்றி.//

நன்றி நண்பரே! ‘அப்படியா ஸ்ரீதர் சார்?’

racmike said...

neyar viruppam.

can you please write about:

1. ilayaraja vairamuthu split - why did they split? what caused the misunderstanding?

2. kamal's aboorva sagodarargal getup. he mentioned that he would reveal the secret on 100th day function - but never did so.

Sridhar said...

இது தசாவதாரம் பட getup-களை கற்பனை பண்ணி Behindwoods.com-க்கு வாசகர்கள் அனுப்பிய photoக்களில் ஒன்று.

இதுதான் சரியான பதில்.

ஹி ஹி ஹி ஹி

சிரிப்பு பரிசு

அன்பரசு said...

கமல் கமல் தான்! உங்கள் எழுத்துக்களும் வழக்கம் போல் சூப்பர்! (சிரிப்பு போலீஸ் பாத்து இருக்கோம் அது என்ன சிரிப்பு பரிசு தலைவா?)

Nathanjagk said...

இடுகை சுவாரஸியம். அதைவிட பின்னூட்டங்களுக்கு நீங்க ​போட்டிருக்கிற பதில்களில் அசந்து ​போனேன். முக்கியமா பட​மொழியும், சென்ஷிக்கு ​சொல்லியிருக்கிற சிரிப்பு ​மொழியும்.

vigneshwaran shanmugam said...

vetaiyadu vilaiyadu

yarume sollalaya?

 
சுடச்சுட - by Templates para novo blogger