‘சிக்ஸ்டி பேக்’ அமீர்!

Tuesday, June 16, 2009







சினேகமாகிட்டா உசுரையே தரக்கூடிய அமீர்..அநேகமா போன பிறவியில கர்ணனா பிறந்திருப்பார்போல! தப்புன்னா தொடைதட்டி மல்லுக்கு நிப்பார். நட்புன்னா படைதிரட்டி முன்னுக்கு நிப்பார்.

ரசிகர்களை மயக்குன ‘மௌனம் பேசியதே’..அமீர் இயக்குன முதல்படம். பத்திரிகைகள்ல விமர்சனம் எப்படி வரப்போகுதுன்னு பத்தி எரியற
ஆர்வத்தோட அமீர் காத்திருந்த காலம் அது. அல்லாவின் கருணையால் எல்லா பத்திரிகைகள்லயும் படத்தைப் பத்தின விமர்சனம் நல்லா வந்திருந்தது. மாநிறமா இருந்த அமீர்..இதை படிச்சு படிச்சு ரசிச்சு தேனிறமா மாறிட்டாரு!

வந்த விமர்சனங்கள்ல அமீரால மறக்கமுடியாததுல
நம்மோடதும் ஒண்ணு. ‘மௌனம் பேசியதே’ படம் பத்தி அக்குவேறு சுக்குநூறா அலசிட்டு..ஃபைனல் டச்சா ‘‘ஓடுகிற நதியில் ஒருகூடைப்பூக்கள் மிதந்துபோகிற அழகு!’’ன்னு எழுதியிருந்தேன். தனக்கு பாயாசமா இனிச்ச இந்த வரிகளை வாயாரப்பாராட்டின அமீர்..பத்திரிகை விளம்பரத்துல எடுத்துப்போட்டு மரியாதை பண்ணியிருந்தார்.

அப்போ தொடங்கின நட்பு..இப்போவரைக்கும் உப்புபோல எளிமையாவும், எஃகு போல வலிமையாவும் தொடர்வதுதான் நம்மோட லக்கு! உணர்ச்சிவசப்பட்டுட்டா கத்தரிவெயில் மாதிரி அனல்கக்கற அமீருக்கு..
பத்திரிகைகாரங்ககிட்ட கத்தரிபோட்டு பேசத்தெரியாது. இதனால இவரை ‘மகா கோபக்காரர்‘மாதிரி சித்தரிச்சிட்டாங்க!

நிஜத்துல அமீரோட பேச்சுல ஞாயம் இருக்குமே தவிர சாயம் இருக்காது. சமயங்கள்ல சிலபேர்கிட்ட அடிமனசுல பட்டதை ‘பட்‘டெனப்பேசி சர்ச்சைகள்ல அடிபட்டதுக்குப்பிறகு..நல்லது கெட்டது எதுன்னு அமீருக்கு இப்போ நல்லா புடிபட்டுப்
போச்சு.

‘பருத்திவீரன்’ படத்துல ஒரு ‘கறுப்புத்தோல் தமிழச்சியைத்தான்
கதாநாயகியா அறிமுகப்படுத்துவேன்‘னு வீறாப்பா சொல்லிட்டாரு. ‘நைட்டியைப்
போட்டும்கூட மேல மாராப்பா ஒரு துண்டைப் போட்டுக்கற‘ நம்மூரு பெண்டுக..
பிறவிச்சொத்தான வெக்கத்தை துறவி ரேஞ்சுக்கு துறந்து நடிப்பாங்களா என்ன?

தமிழ்நாட்டோட சந்துபொந்து இண்டுஇடுக்கெல்லாம் பூந்து தேடியும் நண்டு வளைக்குள்ள ஒளிஞ்சிகிட்டமாதிரி ‘கருப்புத்தோல் தமிழச்சிகள்லாம் பம்மி பதுங்கிட்டாங்க. ‘‘அப்புறம் என்ன செய்ய? பெங்களூரு தமிழச்சி ப்ரியாமணியை புடிச்சுட்டு வந்தேன். தங்கக்கட்டிக்கு தார்பூசி கறுக்கவச்சோம்’’னு சொல்லிச்சிரிச்சாரு அமீர்.

‘என்னுயிர்த்தோழா’ன்னு பாலாவோட சுத்தித்திரிஞ்ச அப்’போதை’ய காலகட்டத்துல இருந்த அமீர் இல்லை. இப்போது.. இறைநெறிகளுக்குட்பட்டு தனது மறைவிதிகளை மதிச்சு துதிக்கற நிறைவான மனிதன் அமீர்.

அமீரின் மூன்று படங்கள்லயும் கலகலப்பு இருக்கும். கிளுகிளுப்பு இருக்காது. ‘கவிச்சி‘ கடிப்பாங்க. கவர்ச்சி கிடையாது. ‘ஏன் இப்படி முரண்டு புடிக்கறீங்க?’னு கேட்டேன். கரண்டு அடிக்கறமாதிரி பதில் சொன்னாரு அமீர்...

‘‘ஏங்க..நம்ம மெரினா பீச்சுல ஒருலட்சம் பேர் வெறும்
உள்ளாடைகளோட படுத்து ‘சன் பாத்‘ எடுக்கமுடியுமா? முடியவே முடியாது. ஏன்னா நமக்குன்னு ஒரு கலாச்சார அடையாளம் இருக்குல்ல. ரெண்டு பொம்பளைப்
பிள்ளைகளைப் பெத்தவன் நான். ஒரு அக்கறையான தகப்பனா..என்னோட படங்களை என் குடும்பம் முதல்ல பாக்கனும்னு நினைக்கறேன். கோட்டை கட்டவேண்டிய
தமிழ்சினிமாவுல..திருட்டுத்தனமா ஓட்டைல மறைஞ்சுபாக்கற விஷயங்களைச்சொல்லி
நாட்டை கெடுக்காதீங்க‘‘ன்னு பேசிட்டு பாத்தவரோட கண்ணுல ஆசிட் கோபம்!

அமீரோட கவலையெல்லாம் ‘சவலைப்புள்ளையா‘ போன பல நடிகர்களைப்பத்தித்தான்..‘‘ஆளில்லாத தீவுல ‘ஊ..லலல்லா‘ பாட நம்ம ஹீரோக்கள்
ரெடியா இருக்காங்களே தவிர..அப்பா கேரக்டர்ல நடிக்க இங்க ஆளில்லை. கமல்
சாரைத்தவிர அப்பா, தாத்தா ரோல்ல நடிக்க யாரும் தயாரா இல்லை. அப்படியொரு
அப்பா கேரக்டர்ல நடிக்கத்தான் நான்லாம் நடிகனானேன். மத்த நடிகர்கள் ஹீரோயினுக்கு முத்தம் குடுக்கட்டும். நாம நிஜம்போலவே பிள்ளைகளை கொஞ்சுவோம்!’‘னார்.

சமீபத்துல ஒரு விழாவுல அமீரை சந்திச்சேன். தீட்டிவெச்ச ஈட்டி
மாதிரி ஷார்ப்பா இருந்தார். ‘‘என்ன சார்..‘சிக்ஸ் பேக்‘ ஹீரோ மாதிரி இருக்கீங்களே?‘‘ன்னேன். ‘‘நீங்கவேற! நான் போட்டிருக்கற சட்டையை கழட்டிப்பாத்தீங்கன்னா..‘சிக்ஸ் பேக்‘ என்ன..‘சிக்ஸ்டி பேக்‘கே தெரியும். அம்புட்டு எலும்புகளும் அப்பட்டமா தெரியறமாதிரி ஒல்லியாயிட்டேன்!’’னு சொல்லிச்சிரிச்சார் ‘யோகி‘ அமீர்!

31 comments:

Raju said...

"மௌனம் பேசியதே" பார்த்தபோது அமீர் மேல ஒரு பூரிப்பு.
"ராம்"ல பிரம்மிப்பா பார்த்தேன்.
"பருத்தி வீரன்"ல சான்ஸே இல்ல.
இப்ப. வெயிட்ட்ங் ஃபார் யோகி அன்ட் கண்ணபிரான்.

உண்மைத்தமிழன் said...

இப்படி வாரத்துக்கு ஒரு பிட்டு ஓட்டுனா எப்படி பிரதர்..?

வன்மையாகக் கண்டிக்கிறேன்..

டெய்லி நாலு ஷோ ஓட்டுனாத்தான் பிட்டும் பேர் எடுக்கும்.. உங்களுக்கும் அடுத்த பிட்டுக்கு ஆசை வரும்..

சொல்லி்ட்டேன்..

sowri said...

Good one with usual touch of class!

butterfly Surya said...

தலை எங்க போயிட்டிங்க ஒரு வாராமா. 'உப்புமூட்டை' யில பிஸியா..??

விரைவில் line ல வரேன்.

பாலா said...

//நமக்குன்னு ஒரு கலாச்சார அடையாளம் இருக்குல்ல. ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளைப் பெத்தவன் நான். ஒரு அக்கறையான தகப்பனா..என்னோட படங்களை என் குடும்பம் முதல்ல பாக்கனும்னு நினைக்கறேன்.//

கிழிஞ்சது போங்க!! இதை உங்க நண்பர் ‘அமீர்’ சொன்னாரா..? அவர் கிட்ட ஒரு கேள்வி.

எஸ்.ஏ. சந்திரசேகரை விட வக்கிரமாக, ‘கற்பழிப்பு’ சீனை, பருத்திவீரனில் காட்டிய ’அமீரா’ இதை சொல்லுறது?

நிஜமாதான் கேக்கறேன். அவரு.. அவரோட ரெண்டு குழந்தைகளையும் வச்சிகிட்டு, அந்த காட்சிகளை பார்த்தாரா?

அந்த காட்சியை விட நீ(ல)ளமான கற்பழிப்பு காட்சி, வேறு எந்த படத்திலாவது வந்திருக்கா?

இல்லை... ‘கற்பழிப்பு’ங்கறது, நம் மண்ணோட, ‘பாரம்பரியமா’?

------

அமெரிக்காவில் ஆறு வருடம் இருந்த பின்னும், என் அம்மோவோடு சேர்ந்து இந்த படத்தை பார்க்கும் போது.. அருவருப்பு தாங்காம, ஃபாஸ்ட் ஃபார்வேட் பண்ணியும்... இழுத்துகிட்டே போன கடுப்பில் அமீரை பார்த்து கேட்கனும்னு நினைச்ச கேள்வி. உங்களை பார்த்து கேட்க வேண்டியதாய்டுச்சி.

மன்னிக்கனும்!!!

வினோத் கெளதம் said...

தல

மௌனம் பேசியதே படத்தை மறக்க முடியுமா திகட்ட திகட்ட சூரியாவையும் அமீரையும் திரிஷாவையும் புதுவையில் ஷூட்டிங் நடந்த பொழுது ஒரு மாததிற்கு மேல் ரசித்தோம்..
படமும் அருமையான படம்..அதே மாதிரி ஒரு படம் அமீரிடம் மீண்டும் எதிர்ப்பர்கிறோம்..

ராம்..எத்தனை தடவை பார்த்தாலும் பிரமிப்பு ஏற்ப்படுத்தும் படம்..

பருத்தி வீரன் சொல்லவே தேவை இல்லை..

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
வினோத் கெளதம் said...

@ நம்ம தல..

//எஸ்.ஏ. சந்திரசேகரை விட வக்கிரமாக, ‘கற்பழிப்பு’ சீனை, பருத்திவீரனில் காட்டிய ’அமீரா’ இதை சொல்லுறது?//

தல

எஸ்.ஏ. சந்திரசேகர் படங்களில் வரும் கற்பழிப்பு காட்சிகள் வக்கிரம் இல்லை எல்லாமே வக்கிரத்தை உணர்த்துவது போல் ஆபாசமாக இருக்கும்..

ஆனால் பருத்திவீரனில் வரும் அந்த கற்பழிப்பு காட்சி அதன் பிறகு வரும் கிளைமாக்ஸ் காட்சியின் வீரியத்தை உணர்த்துவதற்காக மட்டுமே அவ்வளவு நீளமான காட்சியை வைத்து இருப்பார்..டயலாக் (நீ செஞ்ச பாவம் எல்லாம் மொத்தமா என் மேல இறக்கி வச்சிட்டாங்க)..

இந்த காட்சி வருவதற்கு முன்பே தியேட்டரில் படம் பார்க்கும் பாதி கூட்டம் எழுந்து வெளியில் போய் விடும்..இது அந்த காட்சி ஆபாசமாக அருவெறுப்பாக வக்கிரமாக இருந்ததால் இல்லை..அந்த காட்சியை பெரும்பாலானவர்கள் பார்க்க விரும்பவில்லை..இது தான் அந்த காட்சி ஏற்படுத்திய Impact..

பாலா said...

Saw /Hostel படங்களை பார்க்கும் போது, சில பேர் தாங்க முடியாம வெளியே போய்டுவாங்க. அதெல்லாம் அந்த காட்சியின் ‘Impact'-ன்னு சொல்ல முடியுமா வினோத்?

கொலையையே காட்டாமல், படமுழுக்க ‘கொலை’ நடக்கும், Se7en (லோக்கல் உதாரணம்: ரமணா) மாதிரி படங்கள் ஏற்படுத்தும் தாக்கம், அதை காட்டும் படங்கள இருக்கா?

அப்புறம்... வக்கிரம் - ஆபாசம்... இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு கட்டத்தில்... ரெண்டுமே ஒன்னுதான். பருத்தி வீரனில்.. காட்டப்பட்ட அந்த காட்சி.. உச்ச கட்ட ‘ஆபாசத்தின்’ வெளிப்பாடு.

சுப்பிரமணியபுரத்தின் கழுத்தறுக்கும் அந்த காட்சி... வக்கிரத்தின் உச்சம்.

என்னை பொருத்த வரை, இந்த ரெண்டு படங்களின் க்ளைமேக்ஸும்... இந்த வார்த்தைகளுக்கு சரியான உதாரணம்.

நான்.. வியாழக்கிழமை வந்து, மறுபடி.. படிக்கிறேன். :) :)

Unknown said...

///இல்லை... ‘கற்பழிப்பு’ங்கறது, நம் மண்ணோட, ‘பாரம்பரியமா’?///

கேட்டார் பாருங்க ஹாலிவூட் பாலா பொட்டில அறைஞ்சா மாதிரி ஒரு கேள்வி. சார் கற்பழிப்பு நம்ம பாரம்பரியம் இல்லைதான். ஆனா நம்ம சமூகத்தில அது நடப்பதே இல்லை என்று சொல்லாதீங்க சார். சமூகத்தில் நடக்கிற விடயங்களைக் காட்டுவது தப்பில்லை. இருந்தாலும் அந்தக் காட்சி கொஞ்சம் நீளம்தான். வன்முறையைக் காட்டிய படங்களில் எனக்குப் பிடித்தது அபர்ணா சென்னின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர். ஒரு துளி ரத்தத்தையே காட்டாமல் வன்முறையின் வீரியத்தை படம் முழுதும் விதைத்திருப்பார்கள். மற்றது அமீர் எடுத்த காட்சி பல மற்ற சினிமா கற்பழிப்பு காட்சிகளை விட அப்படி ஒன்றும் மோசமில்லை. எத்தனையோ படங்களில் வில்லன் கற்பழிக்க முயலும் போது கதாநாயகன் அவரை உயிர்போகும் மட்டும் அடித்துத் துன்புறுத்துவார். அப்போ என்று பார்த்து வில்லனின் அடியாள் ஒருவர் வில்லன் சார்பில் கதாநாயகனிடம் அடிவாங்க வருவார். நம்ம வில்லன் சாகக் கிடக்கிற நிலையிலும் மீண்டும் கதாநாயகி மீது பாய்வார். இது தமிழ்சினிமாவில் கமர்ஷியல் படங்கள் வரத்தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தொடரும் ஒரு காட்சி... இப்படிப்பட்ட காட்சிகளோடு ஒப்பிட்டால் அமீர் எடுத்த காட்சி எவ்வளவோ நேர்மையானது. பாலா உங்களுக்கு ஏற்பட்டது அருவருப்பு அல்ல... வலி

செந்தில்குமார் said...

தல,

மாற்றுக்கருத்துக்கள் (ஹாலிவுட் பாலா சொல்லி இருப்பது போல) பல வந்தாலும், அமீரின் மூன்று படங்களுமே (மௌனம் பேசியதே, ராம் & பருத்தி வீரன்) அருமை தான்..

பருத்தி வீரனுக்கு இவருக்கு "Filmfare" நிறுவனம் அளித்த "Best Director Award" என்னை பொறுத்த வரை நிச்சயம் அவருக்கே தகுதியான ஒன்று..

தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தருவார் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது..

பானு said...

As usual,super sir!

Ranjitha said...

Really Interesting writing sir..

Punnakku Moottai said...

அமீர், சீமான் போன்றவர்கள் மீது எனக்கு என்றுமே ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு ('நீ என்ன பெரிய ஆளான்னு' கேட்கறது புரியுது). இப்பதிவு என் மனதில் இன்னும் எண்ண உயர்வு கொள்ளச் செய்யும்.

பதிவிற்கு நன்றி,

பாலா,
புவனகிரி.

ஈ ரா said...

Nice post on a Nice Man

EE RAA

Karthick.D said...

Ennathan mudivukku varanga nu paapoom nu wait pandreengala sir...

Aaana Arumayana edhugai monai...vilayadureenga varthaila...

oru 200 varusathukku munthi piranthiruntha por kili vangiye kili kili nu kileeechu irukkalaam (Manada mayilada Kala tone padinga please)...Arumai sir...Ennathan ezhuthiyum varthaigal verumaya irukira pathiuvugala..unaga penaa mai aruvadai seyra varthaigal ..ARUMAI...

Unknown said...

"தப்புன்னா தொடைதட்டி மல்லுக்கு நிப்பார். நட்புன்னா படைதிரட்டி முன்னுக்கு நிப்பார்."
"மாநிறமா இருந்த அமீர்..இதை படிச்சு படிச்சு ரசிச்சு தேனிறமா மாறிட்டாரு!"

என்னங்க இது,இப்படி கலக்கோ கலக்குனு கலக்குறீங்க!!!!:))

நா.இரமேஷ் குமார் said...

அங்கே சினேகா... இங்கே 'சினேக"மான அமீர். உங்களுக்குள்ள என்ன உள்குத்துன்னு வெளங்கவே மாட்டேங்குது!

D.Karthick (Andanan sir) said...

Unga Blog regulara padichathunala vantha effect....

A loving father on her daughter...

Azhaipesi thiraiyil un mugam pathithu
azhikkum oliyil un siripethi
rasithu oynthu edukkamarantha naatkal ethanayo....

...(paarda ennamo irunthirukku intha paiyanukkulaa)Appadiyaa SIR!!!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

என்ன காலாய்த்தமிழ் கவிஞரே, கற்பழிப்பு காட்சி பற்றி கண்டுகாம உள்ளீர். அந்த காட்சியை கால்களும்,கைகளும் பின்னுவது போலவோ, பல்லி சுவற்றில் ஓடுவது போலவோ, மெழுகுவர்த்தி உருகுவது போலவுமா எடுக்க முடியும்? இன்னும் Bandit Queen படத்தை போல எடுத்திருந்தால் என்ன சொல்லுவார்கள்? பருத்தி வீரனுக்கு அந்த காட்சி சரியாக இருந்தது. வேண்டுமென்றால் பிள்ளைகளை கூட்டிவரவேண்டம் என்று கூறி இருக்கலாம்.

Unknown said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

எம்.பி.உதயசூரியன் said...

அத்தனை நட்புக்கும்
மொத்தமாக வணக்கம்!

மஞ்சள் வெயிலடிக்கும்
மலையாள தேசத்தில்..
கொஞ்சம் இளைப்பாற
ஸ்ரீதர் சாருடன் போய்வந்தேன்.
அதான் லேட்டு!

மேடையை போட்டு
மைக் செட்டை வெச்சுட்டு
’சாயா’வை குடிச்சுட்டு
வர்றதுக்குள்ள..
‘மைக் டைசன்’களா மாறி
சரமாரியா ’கருத்துக் குத்து’
நடத்தி முடிச்சுட்டீங்க!

சரி..அடுத்த ஸ்டேஜ் ரெடி!
அங்கே வாங்க
ஒத்தைக்கு ஒத்தை!

பாலா said...

ஹி.. ஹி... மி.. ரெடி..!

ஸ்டார்ட் மியூஸிக்!! :) :) :) :)

butterfly Surya said...

மஞ்சள் வெயிலடிக்கும்
மலையாள தேசத்தில்..
கொஞ்சம் இளைப்பாற
ஸ்ரீதர் சாருடன் போய்வந்தேன்.
அதான் லேட்டு!///

என்ன தலை, நம்மளையும் கூப்பிட கூடாதா..??


ஸ்ரீதர் சாரும் இப்படி பண்ணிட்டாரே..??


லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாங்க...

எம்.பி.உதயசூரியன் said...

//ஹாலிவுட் பாலா said... ஹி.. ஹி... மி.. ரெடி..! ஸ்டார்ட் மியூஸிக்!! :) :) :) :)//

ஹாலிவுட் பாலா.. செம ஜாலிவுட் பாலாவா இருக்கீங்க! ஸ்டார்ட் மியூஸிக்லாம் ஓகேதான். அப்போ க்ளைமாக்ஸ் பூக்குழியா?

எம்.பி.உதயசூரியன் said...

//வண்ணத்துபூச்சியார் said... என்ன தலை, நம்மளையும் கூப்பிட கூடாதா..??//

’’வண்ணத்துப்பூச்சிகளோட பூமியில்
வண்ணத்துபூச்சியாரால்
‘மகரந்த சேர்க்கை’ நடந்துருமோனு
பயமா இருக்கு’’ன்னு ஸ்ரீதர் சார்தான்
பயப்பட்டாரு!

iniyavan said...

உங்களை போலவே எனக்கும் அமீரை ரொம்ப பிடிக்கும் நண்பா

பாலா said...

ஊருக்கு வரும்போது.... நாம எல்லாருமா சேர்ந்து.. ஒரு ‘கேரளா’ ட்ரிப் அடிச்சிடுவோம்.. பூச்சி..!!

அழாதீங்க..!! வேணும்னா.. உதயசூரியனை.. உட்டுட்டு போய்டலாம்!!

butterfly Surya said...

ஸ்ரீதர் சாரா அப்படி சொன்னார்..??

நம்ப முடியவில்லை.. இல்லை... நெவர்...

துபாயில நாலு வருஷம் இருந்த எனக்கு Deira Fish Roundabout மூணாவது தெருவே தெரியாது...

butterfly Surya said...

பாலா, உனக்கு வேற அசைன்மெண்ட் இருக்குமா...

 
சுடச்சுட - by Templates para novo blogger