சந்தியா படக்கதை!

Friday, June 12, 2009


ஆத்தா ஆடு வளர்க்கலாம். தாத்தா பேத்திய வளர்க்கலாம்.

இந்தியாவை இளைஞர்கள் வளர்க்கலாம். ஆனா..‘அம்மாளுசந்தியாவை

பத்திரிகைக்காரங்களான நம்மாளுங்க எப்படி வளர்த்தாங்க தெரியுமா?

காதல்படத்தை தலைமேல் தூக்கிவெச்சு பாராட்டினோம். அதுல அறிமுகமான சந்தியாவை அவரோட நடிப்புக்காக இடுப்புல தூக்கிவெச்சு சீராட்டினோம். ‘செண்டு பாட்டில்சைஸ்ல இருந்தாலும்..‘ரெண்டு பாட்டில் வந்து டான்ஸ் ஆடிட்டுப்போற ஆவரேஜ் நடிகை அல்லனு சாவித்திரி ரேஞ்சுக்கு கூவித்திரிஞ்சது பத்திரிகைகள்.

ஆனாலும் கோலிவுட்டோடகோலி விளையாட்டுலஉருண்டு புரண்டு சராசரி நடிகையா சந்தியா ஆயிட்டதுவழக்கம் போல் கலக்கல்தான். ‘

பத்திரிகைகளாலதான் தான் இம்புட்டு உசரத்துக்கு வந்தோம்ங்கறதால நிருபர்கள்னாலே

கும்பிட்டு பேசறது சந்தியா பழக்கம். அன்னிக்குகுங்குமம்இஷ்யூவோட டெட்லைன். அது நான் தயாரிக்கற இதழ்.

எதிர்பார்த்த ரெண்டுபக்க மேட்டர் ஒண்ணு கடைசி நிமிஷத்துல கைக்கு வரலை. பொதுவா பத்திரிகைகள்ல இந்தமாதிரி சமயங்கள்லகீப் மேட்டர்னு (அச்சச்சோ..இது அதுவல்ல!) ஒரு ஃபைல் வெச்சுருப்போம். அதுலேர்ந்து ஒரு கட்டுரையை எடுத்துப்போட்டு சமாளிச்சுருவோம். அன்னிக்கு பாத்து நமக்கு அதுவும் வசப்படலை.

எதேச்சையா என் டேபிளை பார்த்தேன். ‘அக்குள்ல கூகுள் வெச்சுகிட்டு..யாஹூல தேடறமாதிரி..மலர்போல சிரிச்சுகிட்டிருக்கற சந்தியாவோட கலர்ஃபுல் ஸ்டில் கிடைச்சது. ஆஹா..‘முக்கால் பக்கம் சந்தியா ஸ்டில்..ஒண்ணேகால்

பக்கம் ஜாலி மேட்டர்னு குஷியா விசிலடிச்சேன். மேட்டருக்கான டைட்டில் ரெடி!

ஆனா ராத்திரி எட்டு மணி. நம்ம நிருபரை அனுப்பி பேட்டி எடுக்கவும் அவகாசம் இல்லை. ஆகவே ஃபோன்லயே ஒரு பேட்டியை போட்டுருவோம்னு சந்தியாவோட செல்லுக்கு கால் பண்ணேன். எடுத்தார் சந்தியா. ‘‘ஒரு அவசர பேட்டி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்..இதுபத்தி பேசலாமா?’’ன்னேன்.

என்னடாது..எல்..வி.. நாயகிகிட்ட எல்.கே.ஜி.ரேஞ்சுல

கேக்கறாரேன்னு நினைச்சுகளுக்னு சிரிச்ச சந்தியா ‘‘ஓகே சார்..கேளுங்க!’’ன்னார். பத்தே நிமிஷத்துலகணக்குமுடிஞ்சது. சந்தியாவுக்கோ த்ரில் தாங்கலை. ‘‘சார்..வித்தியாசமா

எதையோ கேக்கறீங்க. ஓகே. லேட்டஸ்ட்டா ஃபோட்டோசெஷன் பண்ணேன். அதுல எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ஃபோட்டோ இருக்கு. அதை போடமுடியுமா ப்ளீஸ்!’’னுச்சு

பொண்ணு.

படம் நழுவி ஸ்கேனர்ல விழுந்து..அதுவும் நழுவி தாள்ல

அச்சேறின கதையாடபுள் குஷியாச்சு. உடனே நம்ம ஆபீஸ் பையன் சுரேஷை அனுப்பினேன். ‘பாயும்புலியா போன சுரேஷ்..ஃபோட்டோவை வாங்கிட்டு கூண்டுக்கிளியா

திரும்பிவந்தான். செம்பருத்திப்பூவை செருகிவெச்ச வெள்ளைத்தொப்பியும்..வெனிலா ஐஸ்க்ரீமா உருகி வழியற சிரிப்புமா சந்தியாவோட அழகான ஃபோட்டோ அது!

பிறகென்ன? ‘தேவதையின் பினாமி..இளசுகள் மனசை சூறையாடற சுனாமின்னு ஓப்பனிங் வெச்சு..‘சந்தியாவும்..சில கணக்குகளும்ங்கற டைட்டிலோட ரெண்டுபக்க மேட்டரை அனுப்பிச்சாச்சு. இஷ்யூ முடிச்சுட்டு உஷ்ஷுனு உக்காந்தேன்.

கொலைப்பசி. ஒரு பழத்தை சாப்பிட்டுகிட்டிருந்தேன்.

அப்போ பலத்த சந்தேகத்தோட கேபினுக்குள்ள வந்த சுரேஷ்..சந்தியா ஃபோட்டோவையே சந்தேகமா பாத்துகிட்டிருந்தான். ‘‘சார்..என்னால நம்பவே முடியல சார். இந்த சந்தியா

ஃபோட்டோலதான் அழகா இருக்கு. நேர்ல ரொம்ப ஏஜ்டா தெரியுது சார்‘‘னான்.

‘‘சேச்சே..சின்னப்பொண்ணுப்பா அவங்க’’ன்னேன். ‘‘உங்களுக்கு தெரியாதா சார்? எல்லாமே மேக்கப்தானே? அன்னிக்கு த்ரிஷாவ பாத்தேன். படத்துலதான் ஷோக்கா இருக்கு. நேர்ல சுதும்புக்கருவாடு மாதிரில்ல இருக்கு’’ன்னு அவனோட பாணியில போணி பண்ணான். அமைதியா இருந்தேன். அவனோ அப்பிராணியா மூஞ்சியை வெச்சுகிட்டுசந்தேகப்பிராணியாவிடாம கேட்டான்..‘‘சார்! சந்தியாவுக்கு முப்பது வயசு இருக்கும்ல சார்?’’னான்.

இப்போ எனக்கே டவுட் வந்துடுச்சு. உஷாராகி சந்தியாவுக்கே

ஃபோன் அடிச்சு விசாரிச்சேன். நடந்தது இதுதான். சுரேஷ் ஃபோட்டோ வாங்க சந்தியா வீட்டுக்கு போயிருக்கான். ‘காதல்ஹீரோயினை நேர்ல பாக்கற த்ரில்லோட காலிங்பெல்லை அடிச்சுருக்கான். கதவு திறந்தது. ‘‘உள்ளே வாங்க’’ன்னுசந்தியாகூப்பிட்டிருக்காங்க.

அப்போ அவங்க செல்ஃபோன் அடிச்சுருக்கு.

எடுத்துப்பேசினவங்க ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன். என்ன

விஷயம்?’’னு கேட்டுருக்காங்க. பேசிகிட்டே நம்ம பையன் கையில ஃபோட்டோவை

குடுத்து அனுப்பிச்சுட்டாங்க. இந்த இடத்துலேர்ந்துதான் குழப்பம் கூடுவிட்டு கூடு

பாஞ்சுருக்கு. பையன் கண்ணால கண்டது சந்தியாவோட அம்மாவை! ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன்’’னு காதால கேட்டதும் சந்தியா அம்மாவோட குரலைத்தான். இதுல என்ன ப்யூட்டின்னா..ப்யூட்டிஷியனான மம்மி அச்சுஅசல் சந்தியா மாதிரியே இருப்பாங்க!

மம்மி ஏன் சந்தியாவுக்கு டப்பிங் பேசுனாங்கன்னா..உப்புமாவை

சாப்பிட்ட கையோட உப்புமா கம்பெனியில வந்து உக்கார்ர சிலபுருடாயூஸர்கள்..

‘‘சந்தியாவோட கால்ஷீட் வேணும்’’னுடுபாக்கோவை மென்னுகிட்டேடுபாக்கூர்

விடுவாங்க. இந்தமாதிரிகிருமிகள்ஃபேன்ஸி நம்பர்லேர்ந்து ஃபோன் பண்றதால..அவங்கரியலா..ரீலான்னு பாத்து உறுமிவைப்பாங்க சந்தியாவோட மம்மி!

இப்படி சந்தியாமம்மிஅடிச்சஃபோன் கும்மியை பாத்துதான்

நம்ம சுரேஷ்இடமாறு தோற்றப்பிழையாலவிம்மிவெடிச்சுருக்கான்!

20 comments:

பானு said...

Me the first!

Ananth said...

//அக்குள்ல கூகுள் வெச்சுகிட்டு..யாஹூல தேடறமாதிரி’ //
Kalakkal!!

- Ananth

அமர பாரதி said...

//இடமாறு தோற்றப்பிழையால’ // அப்ப உங்க கிட்ட கணக்கு பேட்டி கொடுத்ததும் மம்மி தானா?

சென்ஷி said...

:)))

செம்ம கலாய்ச்சல்.. பாவம் த்ரிஷா.. :))

வண்ணத்துபூச்சியார் said...

இந்த பதிவிற்கு அந்த அம்மா படத்தை போட்டிருக்கலாம்.

கலக்கல்.

செந்தில்குமார் said...

//‘செண்டு பாட்டில்’ சைஸ்ல இருந்தாலும்..‘ரெண்டு பாட்டில் வந்து டான்ஸ் ஆடிட்டுப்போற ஆவரேஜ் நடிகை அல்ல’னு சாவித்திரி ரேஞ்சுக்கு கூவித்திரிஞ்சது பத்திரிகைகள்.//

வணக்கம் தல..

இப்படி எல்லாம் எழுத சொல்லி உங்கள யாருங்க தூண்டி விடறது... ??? தமிழ் உங்க கைல சும்மா விளையாடுது தல... நடத்துங்க....

தமிழ்நாட்டுத்தமிழன். said...

இயல், இசை,நாடகத்தமிழ் போல இது கலாய்த்தமிழ்!
பறக்குது ஐயா உங்கள் வேகம்.
Keep the speed up!

ரொம்ப நல்லவன் said...

நல்ல காமெடி போங்க..

எம்.பி.உதயசூரியன் said...

// பானு said.. Me the first!//

மகிழ்ச்சி மேடம்! (மச்சான் வீட்டுக் கல்யாணம். மதுரைக்கு போயிருந்தேன்.
அதான் ‘ஜல்லிக்கட்டு‘ பதிவு கமெண்ட்ஸ்க்கு பதில் எழுத முடியலை.)

எம்.பி.உதயசூரியன் said...

// Ananth said... //அக்குள்ல கூகுள் வெச்சுகிட்டு..யாஹூல தேடறமாதிரி’ // Kalakkal!!//


ஆனந்த் சார்..நம்ம ''pen''drive ஓகேவா?

எம்.பி.உதயசூரியன் said...

// அமர பாரதி said... //இடமாறு தோற்றப்பிழையால’ // அப்ப உங்க கிட்ட கணக்கு பேட்டி கொடுத்ததும் மம்மி தானா?//

பாரதிக்கு கிண்டல் ஜாஸ்தி. ‘இடமாறு ‘‘தோற்றத்துலதான்‘‘ பிழை! குரல்ல இல்ல!

எம்.பி.உதயசூரியன் said...

// சென்ஷி said... :))) செம்ம கலாய்ச்சல்.. பாவம் த்ரிஷா.. :))//

இது த்ரிஷா மம்மிக்கு தெரிஞ்சது..நம்மள கும்மிருவாங்க!

எம்.பி.உதயசூரியன் said...

// வண்ணத்துபூச்சியார் said... இந்த பதிவிற்கு அந்த அம்மா படத்தை போட்டிருக்கலாம்.//

அப்புறம் நம்ம பையன்மாதிரி குழம்பிட்டாங்கன்னா?

எம்.பி.உதயசூரியன் said...

// செந்தில்குமார் said... இப்படி எல்லாம் எழுத சொல்லி உங்கள யாருங்க தூண்டி விடறது..//

தூண்டில் போட்டு நம்மள தூண்டிவிட்டுட்டு..யாருன்னு வேற கேக்கறீங்களா செந்தில்?

எம்.பி.உதயசூரியன் said...

// தமிழ்நாட்டுத்தமிழன் said... இயல், இசை,நாடகத்தமிழ் போல இது கலாய்த்தமிழ்! பறக்குது ஐயா உங்கள் வேகம்.// !


‘கலாய்த்தமிழ்’! ஆஹா..புது வார்த்தையா இருக்கே ‘தமிழ்நாட்டுத்தமிழன்’ சார்! யாரங்கே..இதை குறிச்சுவைங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//ரொம்ப நல்லவன் said... நல்ல காமெடி போங்க..//

'ரொம்ப நல்லா' சொல்ற தலைவா..
உங்கள ரொம்பநாளா காணலை?

biskothupayal said...

‘என்னடாது..எல்.ஓ.வி.இ. நாயகிகிட்ட எல்.கே.ஜி.ரேஞ்சுல

mudala en desktop mandaikku puriyela apprum rendudhadava padichapiraguthan
purinju sirechen!

"varthai sithar volcano!" mp.udhai vazhga vazhga

எம்.பி.உதயசூரியன் said...

// biskothupayal said.. என்னடாது..எல்.ஓ.வி.இ. நாயகிகிட்ட எல்.கே.ஜி.ரேஞ்சுல mudala en desktop mandaikku puriyela //

‘பிஸ்கோத்துக்கே புரியலைன்னா..என்னைப்போல பிசாத்துல்லாம் என்ன பண்றது? ‘வார்த்தைச்சித்தர் வல்கோனா‘வா? தலைவா.. பாத்துக்கோங்க!

sowri said...

//ஆத்தா ஆடு வளர்க்கலாம். தாத்தா பேத்திய வளர்க்கலாம். இந்தியாவை இளைஞர்கள் வளர்க்கலாம். ஆனா..‘அம்மாளு’ சந்தியாவை பத்திரிகைக்காரங்களான நம்மாளுங்க எப்படி வளர்த்தாங்க தெரியுமா?//

Opening லைன்னுக்கு ரூம் போட்டு யோசிசிங்களா சொல்லுங்க. உதயசூரியன் தமிழ வளர்க்கலாம்னும் சேர்த்துக்கலாம் ஆனா தகராறு வளர்க்கலாமா?

Anonymous said...

Ungha yeluthy style yeppavum alukkadhu,,,Aanalum cinimala nethi vandha Sandhiya pathiyellam oru padhivu avasiyama...Krish

 
சுடச்சுட - by Templates para novo blogger