பிரபுதேவா ‘செல்லு லொள்ளு’!

Saturday, June 6, 2009


'பிரபுதேவா..நயன்தாரா கல்யாணமாம்! டி.வி. ஃபிளாஷ் நியூஸ் ஓடுது’’னு செல் அலறிச்சு. நானும், அந்தணனும், அமலனும்சுடச்சுட ருசிச்ச சுண்டல்வடையோட இதையும் சேத்து கொறிச்சோம்.

வடைய தின்னு முடிக்கறதுக்குள்ள..இது யாரோபுரளிதரன்களும், ‘ரூமர்பிள்ளைகளும் கௌப்பிவிட்ட குழப்படின்னு தெரிஞ்சு நடைய கட்டினோம். இதுல என்ன விஷேசம்னா..ஏற்கனவே நான் அடிச்சுவெச்சுருந்தது பிரபுதேவா மேட்டர்தான். ஓப்பனிங்கை மட்டும் கரண்ட்டா மாத்திட்டேன்.

அப்பன..மகன..ஏன்..தாத்தாவையும் சேத்துமூணு தலைக்கட்ட முனியாண்டி விலாஸ்இலைக் கட்டா கட்டிவெச்சுருக்கறசொப்பன சுந்தரி நயன்தாரா, பிரபுதேவாவோடகட்டிப்பிடியில இருக்கறதா கிசுகிசு றெக்கை கட்டி சக்கைபோடு

போடுது!

ஆனா பிரபுதேவா இதுவரைக்கும் படுநெருக்கமா கட்டிப்புடிச்சு உருண்டு புரண்டது யார்கூட தெரியுமா? இஷ்டத்துக்கு எந்த நடிகை பேரையாவது எட்டிப்புடிச்சு இழுக்காதீங்க! சத்தியமா அது நடிகை அல்ல..சாட்சாத் நம்ம வடிவேலுதான்! இந்தவரலாற்று இம்சையை நான் சொல்லல..பிரபுதேவாவே நொந்து சொன்னார்!

காதலன் படத்துல நாட்டையே அல்லுசில்லாக்குனபேட்டை

ராப் பாட்டுல பிரபுதேவாவும், வடிவேலுவும் கொலவெறியோட கட்டிப்புடிச்சு தலகால் புரியாம உருண்டு புரள்வாங்களே..அந்தஉருட்டு புரட்டை இதுவரைக்கும் எந்த

லவ்ஜோடியும் (சினிமாவுல!) பீட் அடிக்கலை.

இதைப்பத்தி கேட்டா..வாயாரச் சிரிச்சுகிட்டே ஹாயா பிரபுதேவா ‘‘பஞ்சுமூட்டைய கட்டிப்புடிச்சா மெத்துமெத்துனு இருக்கும். பலாப்பழ லோடை கட்டிப்புடிச்சா சொரசொரன்னு இருக்கும். ஆனா..ஒடைஞ்சுபோன ஓட்டை சைக்கிளை ஒரு மூட்டையா கட்டி அதுக்கு டிரஸ் பண்ணிவிட்டா எப்புடி இருப்பமோ.. அப்புடி இருக்கற ஆளுக நானும், வடிவேலுவும்! எங்க தொட்டாலும் எலும்பா குத்தற நாங்க ரெண்டுபேரும் கட்டி உருண்டு பண்ண அலும்புக்கு புத்தூர் கட்டுதான் போட்டுருக்கணும். நல்லவேளை..தப்பிச்சோம்!’’னாரு.

புடிச்சுப் போச்சுன்னா..‘விளையாட்டுப்பிள்ளையா ஜாலியா

பேசுவாரு பிரபுதேவா. புடிக்கலையா? புடிச்சுவெச்ச புள்ளையார் மாதிரி கேட்டதுக்கு

மட்டுமே பதில் சொல்வாரு! இந்த ரெண்டு வகைல பிரபுதேவாவுக்கு நான் முதல் கை! பர்சனலா பல விஷயங்களை பேசுவாரு. ஆனா கிசுகிசு மேட்டரை கேட்டாலே..‘கோட்டா சீனிவாசராவ் மாதிரி ஹாட்டா முறைப்பாரு.

பலவருஷங்களுக்கு முன்ன..இப்படித்தான் இவரோட கல்யாண மேட்டர் பகிரங்க கிசுகிசுவா பரபரத்துச்சு. அப்போ பிரபுதேவாகிட்ட பேட்டிக்காக

போனேன். சகல கேள்விகளுக்கும்சகலை ரேஞ்சுக்கு ரகளையா பதில் சொல்லிகிட்டிருந்தவரு..கல்யாண கேள்வியை கேட்டதுமே கப்சிப்னு ஆயிட்டாரு.

விடாம கேட்டேன். ‘‘விட்ருங்க பாஸு! பர்சனல்னா

பர்சனல்தானே? அதை எதுக்கு பகிரங்கமா பேசணும்னேன்?’’னு எரிச்சலா சிரிச்சாரு. ‘‘இல்ல..உங்கமாதிரி பிரபலங்களோட ஃபேமிலி பத்தி தெரிஞ்சுக்கணும்னு வாசகர்கள் ஆசைப்படறது தப்பா?’’னு கிடுக்கிப்பிடி போட்டேன். ‘கடுக்கு முட்டாய் மெல்றமாதிரி கடுகடுன்னு பாத்துகிட்டே ‘‘அதான் எதுக்குங்கறேன்? இந்த பிரபுதேவாவைப் பத்தி மட்டும் தெரிஞ்சாலே போதும்ங்கறேன்!’’னாரு அழுத்தமா.

நம்ம பதிவு போடற நேரம் பாத்துபிரபுதேவா..நயன்தாரா பதிவுத்திருமணம்னு சேதி வருதே! ‘சரி..பிரபுதேவாகிட்டயே கேட்ரலாம்னு அவரோட செல்லுக்கு அடிச்சேன். ‘‘நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்’’னு செல்லு சொல்லுச்சு. ஆனா.. ‘‘நயன்தாராவின் தொடர்பு எல்லைக்கு வெளியிலா?’’ன்னு அந்த செல்லுக்கு சொல்லத்தெரியலையே செல்லம்!

17 comments:

டக்ளஸ்....... said...

:)

சென்ஷி said...

//‘‘நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்’’னு செல்லு சொல்லுச்சு. ஆனா.. ‘‘நயன்தாராவின் தொடர்பு எல்லைக்கு வெளியிலா?’’ன்னு அந்த செல்லுக்கு சொல்லத்தெரியலையே செல்லம்!//

செம்ம லொள்ளு :))

அப்பாவி தமிழன் said...

ஹ்ம்ம் பாவம் அந்த மனுஷன் அவர் மேல ஏன் தான் இப்டி கெளப்பி விட்றான்களோ?

வண்ணத்துபூச்சியார் said...

சூப்பர்.

புரளின்னா சப்புன்னு ஆயிடுச்சா..??

ருசிகரம் தான்.

Joe said...

என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்தவங்களை எல்லாம், "எனக்கும் உண்மை தெரியாது"-ன்னு சொல்லி வெறுப்பை கெளப்புறீங்க!

எப்படியோ சினிமா உலகில சில பேரு சந்தோஷமா இருக்காங்க.
பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுறான், முடியாதவன் பதிவு எழுதுறான். :-D

வணங்காமுடி...! said...

\\அடுத்து என் முகக்குறிப்பை உணர்ந்து கலைஞர் சொன்னது..வெடிச்சிரிப்பை கிளப்பியது! அடுத்த பதிவில் அது...!\\

என்ன தலைவா, வெடிச் சிரிப்பு மேட்டரை எதிர் பார்த்தா, அதிர் வேட்டு மேட்டரை போட்டுட்டீங்க.

அந்த மேட்டரை எதிர் பார்க்கிறோம்.

சுந்தர்
ருவாண்டா
கிழ்க்கு ஆப்பிரிக்கா

Sridhar said...

//‘‘நயன்தாராவின் தொடர்பு எல்லைக்கு வெளியிலா?’’ன்னு அந்த செல்லுக்கு சொல்லத்தெரியலையே செல்லம்!//


ஓவர் குசும்பு ஆமாம் சொல்லிட்டேன்

வண்ணத்துபூச்சியார் said...

Count Down:

3 2 1 0 ... -1 -2 - 3 -4 ..

?????????????

புது புத்தகம் ... பழைய புத்தகமாயிடுமா..??

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நீங்கதான் பக்கத்துல இருந்து சாட்சி கையெழுத்துப் போட்டதா பட்சி ஒண்ணு சொல்லுச்சே..?!!!

அப்ப எது உண்மை..? எது பொய்..?

எம்.பி.உதயசூரியன் said...

//அப்பாவி தமிழன் said.. ஹ்ம்ம் பாவம் அந்த மனுஷன் அவர் மேல ஏன் தான் இப்டி கெளப்பி விட்றான்களோ?//

நண்பா..ரொம்ப நாளா காணலையே! ‘அப்பா’டா ஆஜராகிட்டீங்க!

எம்.பி.உதயசூரியன் said...

// வணங்காமுடி said.. \\அடுத்து என் முகக்குறிப்பை உணர்ந்து கலைஞர் சொன்னது..வெடிச்சிரிப்பை கிளப்பியது! அடுத்த பதிவில் அது...!\\ என்ன தலைவா, வெடிச் சிரிப்பு மேட்டரை எதிர் பார்த்தா, அதிர் வேட்டு மேட்டரை போட்டுட்டீங்க. அந்த மேட்டரை எதிர் பார்க்கிறோம்.//


வணங்காமுடி! என்ன ஒரு கம்பீரமான பெயர் சார்! ‘வெள்ளைக்கொடி’ காட்டினாக்கூட எந்த கட்சியானு கேக்கற காலத்துல..அந்த வெடிச்சிரிப்பு மேட்டருக்கு வேட்டு வெச்சதுக்கு காரணம் இருக்கு தலைவா. உலகத் திருவிழாவுல உங்களமாதிரி பெரும்புள்ளிகளுக்கு முன்னால..‘காமெடி’ கரகம் ஆடி, பாராட்டு வாங்கி சந்தோசப்படற ஆட்டக்காரங்க நாம! நமக்கெதுக்குங்க அரசியல்,சாதி மத கெரகமெல்லாம்?

மு.க.ஸ்டாலின், கலைஞர் பதிவுகளைத் தொடர்ந்து ஜெ.,வைகோ, டாக்டர் ராமதாஸ், கேப்டன் இவர்களுடனான அனுபவங்களை பதிவு செய்யலாம்னு நினைச்சேன். ஆனா எந்த சார்பும் இல்லாத நமக்கு இனி அது வேணாம் சார். நம்ம ‘சுடச்சுட’ 24 x 365 ‘கெக்கெக்கெக்கே‘ மட்டும்தான்!

எம்.பி.உதயசூரியன் said...

// வண்ணத்துபூச்சியார் said.. புது புத்தகம் ... பழைய புத்தகமாயிடுமா..??//

சகோதரா..புத்தகம் அச்சில் இருக்கு! ஃப்ர்ஸ்ட் காப்பி உங்களுக்குத்தானே.

எம்.பி.உதயசூரியன் said...

// உண்மைத்தமிழன் said.. நீங்கதான் பக்கத்துல இருந்து சாட்சி கையெழுத்துப் போட்டதா பட்சி ஒண்ணு சொல்லுச்சே..?!!!//

இதை எப்பட்சி சொல்லிச்சோ அப்பட்சிக்கு மறுபெயர் ‘உண்மைத்தமிழனா’ அப்பச்சி!?

biskothupayal said...

உடைஞ்ச எலும்பையே ஓட்டவசிடும் உங்க சிரிப்பு மருந்து

அமர பாரதி said...

//அப்பன..மகன..ஏன்..தாத்தாவையும் சேத்து ‘மூணு தலைக்கட்ட‘ முனியாண்டி விலாஸ் ‘இலைக் கட்டா’ கட்டிவெச்சுருக்கற ‘சொப்பன சுந்தரி’ நயன்தாரா// கொஞ்சம் என்ன மாதிரி அறியாமையில் இருப்பவர்களுக்கும் புரியற மாதிரி விளக்கமாக சொல்லுங்களேன்.

அமர பாரதி said...

அதாவது எந்த அப்பா, எந்த மகன் எந்த தாத்தன்னு ....... ......

R.Gopi said...

//Joe said...
என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்தவங்களை எல்லாம், "எனக்கும் உண்மை தெரியாது"-ன்னு சொல்லி வெறுப்பை கெளப்புறீங்க!

எப்படியோ சினிமா உலகில சில பேரு சந்தோஷமா இருக்காங்க.
பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுறான், முடியாதவன் பதிவு எழுதுறான். :-D//

*********

Joe, yaara solraaru?

 
சுடச்சுட - by Templates para novo blogger