சத்யராஜ் லொள்ளுக்கு கட்டிப்பிடி பரிசு!

Sunday, April 12, 2009


இதய பலவீனம் உள்ளவங்க சத்யராஜ்கூட சகவாசம் வெச்சுக்கக்கூடாது. அடுத்தடுத்து அதிரஅதிர சிரிக்கவெச்சு ‘போய்வாடி அன்னக்கிளி’னு ஜாலியாவே ஆளை காலி பண்னிடுவாரு.
‘குங்குமம்’ இதழில் வெளியான ‘துள்ளுவதோ லொள்ளு’ தொடருக்காக சத்யராஜூம், நானும் அடிக்கடி சந்திச்சோம். மாத்தி மாத்தி ரெண்டுபேரும் பேசி.. ரவுசு கௌப்பிகிட்டிருந்தோம். ‘இது நம்மாளு’ரானு குஷியான சத்யராஜ்.. மனசு தெறந்து எக்கச்சக்க மேட்டரை கொட்டினாரு.
அதுல ‘அட்றாசக்க’ சங்கதிகளை மட்டும் அச்சேத்திட்டு மிச்சத்த மிச்சர் பொட்டலம் மாதிரி வெச்சிருக்கேன்.‘‘உதய் சார்.. அஞ்சாங்கிளாஸ் படிக்கிறப்பவே நான் அஞ்சா நெஞ்சனுங்க. ஒருநாள்.. ஹிஸ்டரி வாத்தியார் என்கிட்ட ‘‘அக்பர் வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சி என்ன’னு கேட்டாரு.
வாய் தெறக்காம பேய்முழி முழிச்சேன். வாத்தியாரும் பிரம்பை எடுத்துட்டாரு. நமக்கு அறிவுதான் கம்மி. லொள்ளு ஜாஸ்தியாச்சே. உடனே ஹை&பிட்ச்சுல சொன்னேன்.. ‘‘அக்பர் வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சி.. அவர் செத்துப் போனதுதான் சார்’’னு. வகுப்பே ‘குபீர்’னு சிரிச்சுது. வரம்பு மீறி பேசறானேனு பிரம்ப எடுத்தவர்.. நரம்பு சுளுக்க வெளுத்துட்டாரு!’’பல்லு சுளுக்க ‘‘அப்படி அஞ்சில் வளையாதது.. இப்போ அம்பதில் வளையுமா?னு நான் சிரிச்சேன்.
தொடர்ந்த சத்யராஜ் ‘‘டைமிங்கா நான் அடிச்ச லொள்ளுக்கு ஒரு ‘கட்டிப்பிடி’ பரிசா கெடச்சது. அந்த கலகலப்பு கிளுகிளுப்பை சொல்லவா’’னாரு. நான் காதெல்லாம் பல்லானேன்....‘‘விக்ரம் பட ஷூட்டிங்கு. எதையுமே அட்வான்ஸா யோசிக்கிறவர் கமல் சார். அதனாலதான் ஜாக்கெட்டுகளை கடத்தற சினிமாக்களுக்கு நடுவால.. அப்பவே ராக்கெட்டை கடத்தற ‘விக்ரம்’ தயாரிச்சாரு.
இதுல ஒரு சீன்.. என்னோட அடியாளுக ஹீரோயின் டிம்பிள் கபாடியாவ தூக்கிட்டு வந்து பூப்போல எறக்கி விடுவாங்க.எசகுபிசகான வளைவுகளோட என் முன்னால ஜிங்குனு நின்ன டிம்பிள்.. செம கோபத்தோட எம் மூஞ்சிமேல ‘தூ’ன்னு துப்புவாங்க. உடனே நான் ‘‘இந்த ஒரு காரணம் போதும்டா.. இவளை கற்பழிச்சிரலாம்’’னு சொந்தமா ஒரு டயலாக்கை சட்டுனு விட்டேன். கமல் சார் உட்பட யூனிட்டே கெக்கெக்கேனு சிரிச்சுட்டாங்க.
மொழி புரியாம கொழந்தை முழி முழிச்ச டிம்பிள் ‘‘வொய் லாஃபிங்’’னு கேக்கறாங்க. ‘போச்சுரா.. டிம்பிள இன்சல்ட் பண்ணி வம்பில சிக்கிட்டமே’னு எனக்கோ லேசா டென்ஷன்.பதறி நிக்கற டிம்பிள்கிட்டே கமல் சார் நான் சொன்ன டயலாக்கை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ணி சொல்றாரு.
அம்புட்டுதான்.. ‘அடேய் ராஸ்கோலு’னு ஒரு லுக் விட்டபடி.. டிம்பிள் எம் பக்கத்துல வர்றாங்க. ‘பக்பக்’னு எகிறுது லப்டப்.கிட்டத்துல வந்த டிம்பிள் ‘‘வெரி நைஸ் டயலாக். கங்க்ராட்ஸ்’’னு கை குடுத்து என்னைக் கட்டிப்பிடிச்சு பாராட்ட.. இந்த திடீர் அணைப்புல உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் எனக்கு கபடி ஆடுது.
அப்படியே என் கன்னத்துல ‘பச்சக்’னு ஒரு கிஸ் தரலாம்னு நெனச்சவங்க.. ‘சட்’னு வெலகிப் போயிட்டாங்க. காரணம்.. என்னோட சின்ன கண்ணுல தெரிஞ்ச ‘பெரிய திருட்டுத்தனத்தை’ கண்டுபிடிச்சிட்டாங்க போலிருக்கு!’’சத்யராஜ் இப்பவும் அதே ஏக்கத்தோட சொல்ல... வாயாரச் சிரிச்சேன்!
இந்த ‘லொள்ளுகளை’ என்னோட ‘ஜில்ஜில் ஜிகர்தண்டா’ ஸ்டைல்ல எழுதி பிரிண்ட்டுக்கு அனுப்பியாச்சு. அந்த சமயம் பாத்து ரஜினியின் ‘சிவாஜி’ பட அறிவிப்பு வேறு வந்து பட உலகமே அமர்க்களப்படுது. ஒருபுறம் ரகளையா சத்யராஜின் ரவுசு தொடர். மறுபுறம்.. ரஜினியின் ‘சிவாஜி’ பட மெகா நியூஸ்.
அந்த வார கலர் ஸ்டோரி.. ரஜினியா? சத்யராஜா? எடிட்டோரியலில் தீவிர அலசல். என்றாலும் ‘லொள்ளு’ ஜெயிச்சது. சத்யராஜ் சலாம் போட்டபடி கவர்ஸ்டோரி ஆனார்.அந்த இதழ் ‘குங்குமம்’ வெளியான அதிகாலை.. என் ‘செல்’ அடிச்சது. எடுத்தால்.. ‘‘உதய் சார்.. வணக்கம். நான் சொன்னதவிட.. உங்க எழுத்துல லொள்ளு பிரமாதமா இருக்கு. அதுவும் ரஜினி சார் மேட்டரே பின்னட்டைக்கு போயி.. நம்ம ‘லொள்ளு’ முன்னட்டைக்கு வந்திருக்குனா.. அது உங்க எழுத்துக்கு கெடச்ச வெற்றி. இப்ப எம்மேலயே எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்திருச்சு சார்’’னு மனம் திறந்து பாராட்ட.. ‘‘காரணம் உங்க லொள்ளுதான் சார்’’னு நானும் நெகிழ்ந்தேன்.
அப்பறம் சத்யராஜோட அடுத்த லொள்ளு சிட்டிங். ‘‘சார்.. நீங்களும் கவுண்டமணியும் சேர்ந்து பண்ண நெஜமான நக்கல்களை சொல்லுங்க.. நாலு வாரத்துக்கு அது தாங்கும்’’னேன். ஆரம்பிச்சாரு பாருங்க.. ‘‘நடிக்கிற படமாகட்டும்.. இருக்குற இடமாகட்டும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே.. ரகளை ராஜ்ஜியம்தான்.
நானும், கவுண்டமணி அண்ணனும், ‘விக்’ வெக்கறதுக்குன்னே பொறந்தவங்க. ஒரு தடவை இந்த எரிச்சல்ல கவுண்டமணி அண்ணன் சொன்னாரு.. ‘‘ஏனுங்க சத்யராஜ்.. இந்த விக்கை கண்டுபிடிச்ச அந்த மகராசனத்தான் நாம குலதெய்வமா நெனச்சு கோயில் கட்டி கெடா வெட்டி பொங்கல் வெக்கோணும். மொட்டை அடிச்சுக்க முடியாது.. ஏன்னா ஏற்கனவே நம்ம தலை அந்த கதிதான். இந்த விக்கு இல்லேன்னா ஷூட்டிங் ஸ்பாட்டுல லைட்டுக்கு பதிலா நம்ம சொட்டத்தலைய அந்த ஸ்டாண்டுல போட்டு தொங்க விட்டிருப்பானுங்களே’னாரு. அப்போ நாங்க சிரிச்ச சிரிப்புல ஷூட்டிங் ஸ்பாட்டே கதிகலங்கி போச்சு.’’ சத்யராஜ் சொல்லி முடிக்க.. எனக்கும் அதே கதி கலங்கிப் போச்சு.
நீங்களும் சிரிச்சு முடிங்க. இப்போதைக்கு இது போதும்.

8 comments:

Sridhar said...

அருமை. சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாகி போச்சு. அந்த சென்சார் செய்த விஷயத்தையும் பதிக்கலாமே!!!!!

அன்புச்செல்வன் said...

உ.சூ... வழக்கம்போல காமெடி கண்ணிவெடிங்க....கலக்கல்...

-அன்புச்செல்வன்

anthanan said...

அண்ணா,

போட்டோவிலே விக் வச்ச சத்யராஜ் மாதிரியே இருக்கீங்களேண்ணா? அஹ்ஹ்ஹ்....

அந்தணன்

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கல்.

நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகள்

Joe said...

//
நானும், கவுண்டமணி அண்ணனும், ‘விக்’ வெக்கறதுக்குன்னே பொறந்தவங்க. ஒரு தடவை இந்த எரிச்சல்ல கவுண்டமணி அண்ணன் சொன்னாரு.. ‘‘ஏனுங்க சத்யராஜ்.. இந்த விக்கை கண்டுபிடிச்ச அந்த மகராசனத்தான் நாம குலதெய்வமா நெனச்சு கோயில் கட்டி கெடா வெட்டி பொங்கல் வெக்கோணும். மொட்டை அடிச்சுக்க முடியாது.. ஏன்னா ஏற்கனவே நம்ம தலை அந்த கதிதான். இந்த விக்கு இல்லேன்னா ஷூட்டிங் ஸ்பாட்டுல லைட்டுக்கு பதிலா நம்ம சொட்டத்தலைய அந்த ஸ்டாண்டுல போட்டு தொங்க விட்டிருப்பானுங்களே’னாரு. அப்போ நாங்க சிரிச்ச சிரிப்புல ஷூட்டிங் ஸ்பாட்டே கதிகலங்கி போச்சு.’’ சத்யராஜ் சொல்லி முடிக்க.. எனக்கும் அதே கதி கலங்கிப் போச்சு.
//

விழுந்து விழுந்து சிரிச்சேன்.
உங்க பதிவுகளை அலுவலகத்தில படிச்சா நம்மள பல பேரு பைத்தியக்காரன்-ன்னு முடிவு கட்டிருவாங்க.

இனிமே வீட்டுக்கு போய்த்தான் படிக்கணும் உங்க பதிவுகளை.

பிரதிபலிப்பான் said...

உணமையா நல்ல பதிவு.

குங்குமத்தில் வருவதை இங்கு நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் வலைப்பதிவுகளை படிப்பவர்களுக்கு.

வாழ்த்துக்கள்.

Sridhar said...

அண்ணா,

போட்டோவிலே விக் வச்ச சத்யராஜ் மாதிரியே இருக்கீங்களேண்ணா? அஹ்ஹ்ஹ்....

அந்தணன்

அப்படியா இது எனக்கு இவ்வளவு நாளா தெரியலயே.
நான் original நினைச்சுகிட்டு இருந்தேன்

M.P.UDAYASOORIYAN said...

dear joe..veetukku poy siricha mattum appadi illanu solliruvaangalaakkum?

 
சுடச்சுட - by Templates para novo blogger