ஜெமினியின் காமத்துப்பால்

Friday, April 17, 2009


ஆதாம் ஏவாள் காலம் முதல் இன்றுவரை பாதாம் அல்வாவாக தித்திப்பது..காதல்தானே! பிப்ரவரி 14. காதலர் தினம்.அன்னிக்கு உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வர்றது..காதலிகள். எனக்கோ..ஜெமினி கணேசன் ! ஃபிளாஷ்பேக் போலாமா? அதுவும் ஒரு காதலர் தினம்தான்.

’குங்குமம்’ காதல் ஸ்பெஷலுக்காக ’காதல் மன்னன்’’ ஜெமினியுடன் ஒரு பர்சனல் பேட்டி.சாயந்திரம் 4 மணி. நானும்,நண்பர் கிறிஸ்டோஃபரும் ஜெமினியின் வீட்டில். நடையில் தளர்ச்சியும், முகத்தில் மலர்ச்சியுமாக வாசனையாக வந்தார் ’காதல் மன்னன்’. அந்த காலத்தில் பெண்கள் பட்டாளத்தையே தன் பேரு’கு பட்டா போட்டுகிட்ட கில்லாடி மனுசனாச்சே! பககமா வந்து ’வெல்கம் பாய்ஸ்’னு தோள்ள தட்டிட்டு உககாந்தாரு.’எப்படி சார் இருககீங்க?’னு அககறையா கேட்டேன்.’இப்பககூட ஆகசன் படங்கள்ல நடிககற மாதிரி ஸ்டெடியா இருககேன்’னு புஜத்தை தட்டினாரு. ’காதல் மன்னனுககு லேசா தொப்பை போட்ருச்சே..ஏன்’னேன். ’முன்னமாதிரி ஒண்ணும் எ’கஸர்சைஸ் செய்றதில்லையே’னு கண்ணடிச்சு ’டபுள் மீனிங்’ல சொல்ல..’ஆஹா’னு நான் சொகக..சூடு பிடிச்சது பேட்டி.

காதல்மன்னனின் பார்வையில காதல் பத்தின உண்மையான கருத்து என்ன?’ன்னேன். ’ம்கர்ம்’னு லேசா இருமி,தொண்டைய செருமிய ஜெமினி, ’ஏம்ப்பா..லவ் பண்«ற்ல்ல?’னு என்னை கேட்டார். நான் கூச்சப்பட்டு ’கம்’முனு பம்ம..’உன் முகத்தை பாத்தாலே தெரியுதே! பாம்பின் கால் பாம்பறியும்ப்பா’னார்.அதேஜோர்ல..கிறிஸ்டோஃபரை ஏறிட்டு பாத்தாரு. உடனே நான்,’சார்..அவர் குடும்பஸ்தர்’னேன். ’என்னது’னு சுஜாதாவோட மெகஸிகோ சலவைககாரி ஜோககை கேட்டமாதிரி ’ஹஹ்ஹஹ்’னு சிரிச்ச ஜெமினி,’’குடும்பத்துககும்,காதலுககும் என்னப்பா சம்பந்தம்? அதுவும் அதை என்கிட்ட சொல்றியே’’னாரு.‘’சரி..அப்பட்டமா சொல்றேன். அப்படியே எழுதணும். காதலை பொறுத்தவரை முதல்ல ஒரு பொம்மனாட்டிய பாத்தா காமம்தான் உண்டாகும். ’ஆள் சிகப்பா இருககாளே..உடம்பு சும்மா கிண்ணுன்னு இருககே’னுதான் தோணும்.பிறகு தொட்டு தடவி இன்னும் நெருககமாவோம். அப்புறம்தான் அவளோட கேர’கடர் பாத்து மெள்ளமா லவ் வரும்’’னு ’டபுள் ஸ்ட்ராங்கா’ சொன்னாரு ஜெமினி.

அடுத்த கேள்வி..’இந்த சுந்தரபுருசனின் அந்தரங்க லீலைகளை’ பத்திதான். அதுககு முன்னோட்டமா ஒரு ’பிரா’’ககெட்டை போட்டேன்..’’சார், அவ்வை சண்முகியில நடிச்ச ஹீரா பத்தி’’னு கேட்டு முடிககறதுககுள்ள..போட்டுத்தாககினாரு ஜெமினி..’’அவளா..குட்டி செம ஜோரா இருககால்ல! அதுவும் அவளோட அம்சமான அனாடமியும்..கூரான மூககும் ரொம்ப செகஸியா இருககு!’’னு சொககிட்டாரு.

அடுத்த வலையை வீசினேன்..’’சார்..சினிமா,பர்சனல்னு உங்க லைஃப்ல எககச்சகக பெண்கள் உங்கமேல பைத்தியமா இருந்தது ஊரறிஞ்ச ரகசியம். அந்த அனுபவங்கள் பத்தி?’’னு புல்லரிப்போட கேட்டேன். ’அ..ஆ’னு தலைய ஆட்டி ப¬ழ்ய ஆட்டங்களை பத்தி ஜாலியா பேச ஆரம்பிச்சாரு... ’’எதைப்பத்தி கேககறப்பா? நான் சவாரி பண்ணினதையா? நூத்துககணககான குதிரைகளை.. ஆயிரககணககுல சவாரி பண்ணியிருககேன். ஒவ்வொரு குதிரையும் ஒவ்வொரு ரகம். வெவ்வேறு சுகம். ஒருத்தன் ஒண்ணுமே தெரியாத கம்மனாட்டியா இருககலாம். ஆனா ஒரு பொம்மனாட்டிகூட இல்லாம இருகககூடாது’’னு சொன்னவர்..அப்படியே கண்மூடி ’அந்தரங்க ராட்டினம்’ ஆடிவிட்டு தொடர்ந்தார்..

’’ஒண்ணு தெரியுமா? நான் ’மூவ்’ பண்ண பொண்ணுங்கள்ளாம் ராஜபரம்பரைல..ஜமீன்தார் வீட்ல.. பெரிய ஸ்டார்ஸ்..இப்படிப்பட்டவங்களைத்தான் மூவ் பண்ணியிரு’கேன். ’ஜெமினி’ன்னா அப்படியொரு மயககம் அவங்களுககு.எனககும் மகா சுகம்!’’னு அச்சில் வரககூடாத வர்ணணையோடு ஜெமினி ஜொள்ள..ஏககத்தோடு எச்சில் முழுங்கினோம் நானும்,கிறிஸ்டோஃபரும்.’’உங்க காதல் அனுபவங்கள் கடல் மாதிரி.அதையெல்லாம் மறைககாம உங்களோட வாழ்ககை வரலாறுல எழுதுவீங்களா சார்?’’னேன். ’’என்னோட பொம்பளைங்க அனுபவத்தை அம்பலப்படுத்துனு சொல்ற. ஆனா..அம்பது வருசமா நான் டைரி எழுதறம்ப்பா. ஒவ்வொரு நாளும் எங்கே போறேன்.. என்னென்ன பண்றேனு எல்லா சங்கதியையும் எழுதி வெச்சுடறேன். ஆனா என் வரலாறுல எல்லா மேட்டரையும் அப்பட்டமா எழுத முடியாதுல்ல’’னு ஜெமினி சொல்ல..’’அப்புறம் எப்படி சார்?’’னு உசுப்பிவிட்டேன்....

’’எப்படிப்பா எழுதறது? கிசுகிசு மாதிரி எழுதினாலும் ’இந்த லேடியை சொல்றான்..அந்த நடிகையோட இருந்த சம்பவம்யா’னு கண்டுபிடிச்சுருவாங்க. ஆனா இவங்களோட உண்டான அனுபவங்களை சொல்லலேன்னா..அதுல ருசியும் இருககாது. கிளுகிளுப்பும் இருககாது’’னு கலகலப்பா சிரிச்சாரு.இதையெல்லாம்விட உச்சம்..தன்னுடன் நடித்த சில நடிகைகளின் ’உச்சி முதல் உள்ளங்கால் வரை’ ஜெமினி ’இடம் சுட்டி பொருள்’ விளககியபோது..எனககும்,கிறிஸ்டோஃபருககும் வெளியான உஷ்ணமூச்சுல மீசையே பஸ்பமாயிரும்போலிருந்துச்சு. அப்புறமா..ஜெமினி தன் கையால் கொண்டுவந்து, ’’இந்தாங்க காமத்துப்பால்’’னு தந்த ஜில் மோரை சிரிச்சுகிட்டே ருசிச்சோம். கிளம்பறப்போ.பஞ்சுப்பந்தாக ஒரு அல்சேஷன் நாய் ஓடிவந்து தாவ..பயந்து பம்மினோம்.

உடனே ஜெமினி, ’’பயப்படாதீங்கப்பா! இது ஜெமினியோட நாய். கடிககாது...காதல்தான் பண்ணும்!’’னு குசும்பா சொன்னாரு. தன் எஜமானை போலவே ’’சவாரிககு வர்றியா’’ங்கற மாதிரி எங்களை அந்த நாய் பாகக..நைஸா நழுவினோம்

6 comments:

Sridhar said...

ரொம்ப அருமை உதய்.ஹிராவை ஜீரா போல் விவரித்த உங்களையும் காதல் மன்னன் இருவரையும் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை.

அறிவே தெய்வம் said...

\\ஆள் சிகப்பா இருககாளே..உடம்பு சும்மா கிண்ணுன்னு இருககே’னுதான் தோணும்.பிறகு தொட்டு தடவி இன்னும் நெருககமாவோம். அப்புறம்தான் அவளோட கேர’கடர் பாத்து மெள்ளமா லவ் வரும்’’\\\

உண்மைய சரியாச் ’ஜொள்ளி’யிருக்கிறார்

வாழ்த்துக்கள்...

வண்ணத்துபூச்சியார் said...

காதல் மா மன்னன் போல இருக்கே..


ஜெமினி தன் கையால் கொண்டுவந்து, ’’இந்தாங்க காமத்துப்பால்’’னு தந்த ஜில் மோரை சிரிச்சுகிட்டே ருசிச்சோம்....
////// haha haha... Super...

anthanan said...

ஒரு ஜெமினி கணேசனை பற்றி இன்னொரு ஜெமினி கணேசன் எழுதறது எவ்வளவு பெரிய விஷயம்? உங்களுக்கு டைரி எழுதற பழக்கம் இருக்காண்ணே...?

அந்தணன்

அன்புச்செல்வன் said...

\\ anthanan said...
ஒரு ஜெமினி கணேசனை பற்றி இன்னொரு ஜெமினி கணேசன் எழுதறது\\

ஆஹா! என்னங்கண்ணா சொல்லவே இல்ல? நான் அந்தணன் அண்ணா கிட்ட அப்புறமா கேட்டு தெரிஞ்சுகிறேன்...

Bala said...

சார் உங்களை நேரில் சந்திக்கும் போது ஜெமினி சார் என்னென்ன ரகசியம் சொன்னரோ தயவுசெய்து சொல்லாவும்...., அடியேன் வேண்டுகொள் - பாலா

 
சுடச்சுட - by Templates para novo blogger