சிட்டுக்குருவி குஞ்சுகளும் சித்தவைத்திய பருந்துகளும்!

Saturday, April 11, 2009

'சிட்டுக்குருவி லேகியம்' விக்கிற சில சித்தவைத்தியர்கள்.. பேசாம 'சிரிப்பு லேகியம்' வித்தா.. 'இப்பவும் நாடி நரம்பு தளர்ந்த வாலிப, வயோதிக அன்பர்களின்' உறுப்புகளும் கறுத்துப் போகாது.. உப்பலான மணிபர்ஸ§ம் சிறுத்துப் போகாது.. இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போகாது.

தொலைக்காட்சிகளை பொறுத்தவரை.. 'சன்'னுக்கு 'ஆதித்யா'வும், 'கலைஞருக்கு' சிரிப்பொலியும் அதிகார பூர்வ காமெடி சேனல்கள். ஆனா, மத்த டிவி சேனல்களுக்கு? டோன்ட் வொர்ரி.. அதுல வர்ற சித்த வைத்திய, ராசிக்கல், பெயரியல் நிகழ்ச்சிகளே பெருங்காமெடி.

சமீபத்துல ஒருநாள்.. மட்ட மத்தியானத்துல மட்டன் பிரியாணி சாப்டுட்டு.. குட்டித்தூக்கம் போடறதுக்கு முன்னால டிவி பாத்துகிட்டிருந்தேன். ரிமோட்ல ஒவ்வொரு சேனலா மாத்துனப்போ.. '...ஜ் டிவியில சேலம் சித்த வைத்தியர் தெரிஞ்சாரு.

என்னதான் சொல்றாருனு கவனிச்சு பாத்தேன். ''கட்டின பொண்டாட்டிக்கு தாம்பத்ய சுகத்தை தரமுடியாம எத்தனையோ பேர் ஏமாத்திகிட்டிருக்கானுங்க! காரணம்.. சின்ன வயசுல பண்ணுற தப்புகள்'னு அந்த சித்தவைத்தியர் 'பலான சங்கதி'களை பேசினாரு.

எனக்கோ கொட்டாவி வந்தது. அடுத்த சேனலை மாத்தப்போன அதே நொடியில அந்த சித்த வைத்தியர், அரட்டற குரலில்.. ''டேய் டேய் தம்பி. பொறுடா! எதுக்குடா சேனலை மாத்தற? என்னடா நம்ம கோளாறெல்லாம் வைத்தியருக்கு தெரிஞ்சு போச்சேனு பயந்துட்டியா?''னு டிவியிலிருந்து நேருக்கு நேராக நேயர்களை பார்த்து திட்ட.. எனக்கோ சுவாரஸ்யம் சூடு கௌப்பிடுச்சு.

அடுத்து என்ன சொல்றார்னு ஆர்வத்தோட பாத்தேன். அடங்காத சித்த வைத்தியர்.. தொடர்ந்து ''தெரியுண்டா தம்பி! பண்ணக்கூடாத தப்பெல்லாம் பண்ணிட்டு.. இப்போ உன்ன நம்பி வந்த பொண்ணோட உணர்ச்சிகளை சாகடிக்கறியே! ஞாயமாடா இது? இந்த தாத்தன் சொல்றத கேள்ரா! ஒண்ணும் பயப்படாத! நீ நல்லா செய்றதுக்கு நான் வழி சொல்லித் தரேன்! போதுண்டா சாமினு சொல்ற அளவுக்கு அந்தப் பொண்ணை நீ திருப்திப்படுத்தறதுக்கு எங்கிட்ட மருந்து இருக்குடா! என்ன நம்பி சேலத்துக்கு வாடா!'' & இப்படி கொச்சைத்தமிழில் 'பச்சை பச்சையா' அவர் பேசப்பேச.. எனக்கோ சிரிப்பு பொத்துகிச்சு.

இந்த 'ட்ரிபிள் எக்ஸ்' சித்தவைத்தியர்களோட சித்ரவதை கொஞ்ச நஞ்சமல்ல! மாசத்துக்கு 20 நாள் தமிழகத்தின் முன்னணி நகரங்களில், முக்கிய லாட்ஜ்களில் டேரா போட்டு ஜோரா கல்லா கட்டுவாங்க. 'சாமான்'ய மக்களின் 'தளர்ச்சி'க்கும், 'வளர்ச்சி'க்கும் ஸ்பெஷல் செட் மருந்துனு சொல்லி ஏதோ 'சக்கரை போட்ட கேப்பக்களி மாதிரி ஒரு வஸ்துவை தருவாங்களாம். பயபக்தியோடு அதை வாங்கற பலவீனஸ்தர்கள் வெறும் களி தின்னதுதான் மிச்சம்.

சில வருஷத்துக்கு முன்னால.. தமிழ்ல எத்தனை பத்திரிகை உண்டோ அத்தனையிலும் தவறாம அலங்கரிச்சது பிரபல பழனி சித்தவைத்தியர் டாக்டர் எஸ். காளிமுத்துவின் ஒருபக்க விளம்பரம். அந்த பீரியட்ல புதுசா பத்திரிகை ஆரம்பிக்கற யாருமே.. டாக்டர் காளிமுத்துவின் விளம்பரத்தை அவரைக் கேக்காமலே அச்சேத்திட்டு போய் அதுக்கான தொகையை வாங்கிட்டு 'எழுச்சி'யோடு திரும்புவாங்களாம்.

இப்பவும்கூட பழைய பத்திரிகைகளை புரட்டிப் பத்தீங்கன்னா.. சித்த வைத்தியர் காளிமுத்து 'தேடி வந்த மாப்பிள்ளை' எம்.ஜி.ஆர்.மாதிரி சும்மா ஜம்முனு இருப்பார். அப்போ ஆனந்த விகடன் பேட்டிக்காக அவரை சந்திக்க பழநியிலுள்ள வைத்தியசாலைக்கு ஃபோட்டோகிராபர் கலீலுடன் போயிருந்தேன். வழியில ஒரு டீக்கடையில ஆளுக்கொரு டீ சொன்னோம். அப்போ அங்கிருந்த டீ மாஸ்டர்.. ''ஏனுங்க.. பாக்கறதுக்கு பொலிகாளை மாதிரி இருக்கீங்களே! வைத்தியரைப் பாக்க வந்தீங்களா'னு கேட்டார். நானும் ''ஆமாங்க''னேன் வெள்ளந்தியாக.

சித்தநேரம் தன்னையும் ஒரு சித்த வைத்தியர்னு நெனச்சுகிட்டு மாஸ்டர் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி.. ''ஆனா.. 'வெளிக்கி' போறதுக்காக முக்குனா ஒண்ணுக்கோட சேர்த்து இந்திரியமும் கசியுதுங்களா?''னு குமட்டுல குத்தற மாதிரி அவர் கேக்க.. குமட்டிகிட்டு சிரிப்பு வந்திச்சு எங்களுக்கு.

'சிங்கத்துக்கு வந்த அசிங்கம்டா'னு நெனச்சுகிட்டு டாக்டர் காளிமுத்துவ பாக்க போனோம். 'டாக்டர் கூப்பிடறாரு'னு ரூமுக்குள்ள போகச் சொன்னாங்க. உள்ளே போனா.. 'கருகரு சுருள்முடியும், அரும்பி மீசை வாலிபருமா' விளம்ப்ரங்கள்ல ஜொலிக்கற காளிமுத்து.. நேரில் அவர் விளம்பர வாசகம் மாதிரியே 'வழுக்கை தலையோடு 'தேகம் இளைத்து நாடி நரம்பு தளர்ந்து வயோதிக அன்பராக' காட்சியளிக்க.. எனக்கோ செம ஷாக்.

அடக்கொடுமையே.. 'அப்போ தங்கபஸ்பம், காயகல்பம் இதெல்லாமே வெறும் கப்ஸாதானானு அவர்கிட்டயே கேக்க நெனைச்சேன். ப்ச்.. ஆனா அவரைப் பாக்கவே பாவமா இருந்ததால.. விட்டோம் ஜூட்!

11 comments:

Sridhar said...

அவர் கிட்ட பேட்டி மட்டும்தானா? சரி சரி நம்பிட்டேன்.

M.P.UDAYASOORIYAN said...

ada kadavule..appo naama saaptadhu legiyam illa sir..panjaamirdham. nambunga ejamaan.- udayasooriyan.

அன்புச்செல்வன் said...

அண்ணே உங்க முக தேஜஸ பார்த்தாலே வெளெங்குது... இந்த மாதிரி வைத்தியருட்ட எல்லாம் பொயிருக்க மாட்டீங்கன்னு...

அப்படியே word verification-ஐ எடுத்து விடுங்கண்ணே!

-அன்புச்செல்வன்

M.P.UDAYASOORIYAN said...

அப்படியே word verification-ஐ எடுத்து விடுங்கண்ணே!

எடுத்தாச்சு இப்ப திருப்திதானே

Anonymous said...

நான்கூட காமெடியா எழுத ட்ரை பண்ணிட்டுருக்கேன். உங்க காமெடி சூப்பர்.

ஜுர்கேன் க்ருகேர் said...

நல்ல தமாஸ்!
காளிமுத்து பர்ஸ "காலி" பண்ண முத்து வா இருந்திருப்பாரு போலேருக்கு.
இன்னும் எத்தனை "காலி"பயல்கள் இருக்காங்களோ ?

கே.ரவிஷங்கர் said...

அண்ணே நல்லா காமெடியா இருக்கு. சுஜாதா கூட்
ஒரு சித்த வைத்திய கதை எழுதிய்ருந்தார்.
கடைசியில் சித்த வைத்தியருக்கு குழந்தை இல்லை என்று முடிப்பார்.

M.P.UDAYASOORIYAN said...

ravi..nalama? neenga rasichu sirikkaradha nerla paakkanume!

M.P.UDAYASOORIYAN said...

joorkane krugare! thalaiva..unga peyarai ucharikaradhey echarikara maadhiri irukku.

Anonymous said...

//அவர் கிட்ட பேட்டி மட்டும்தானா? சரி சரி நம்பிட்டேன்.

அண்ணே, நீங்க வெள்ளையா இர்ருகேங்க. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்லுவாங்க. நீங்க பொய் சொல்ல மட்டேன்கனு எனக்கு தெரியும்.

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

 
சுடச்சுட - by Templates para novo blogger