ஆமை மேல படுத்தமாதிரி ஊமை வலி!

Tuesday, April 21, 2009


அம்பானி முதல் அப்பிராணி வரைக்கும் அத்தனை பேரும் சொல்ற டயலாக்1 ''எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்காகத்தானே!''. ஆனா எல்லாருக்குமே ஒரு சாண் வயிறுதான் இருக்கா என்ன? அப்படியரு காமெடி பண்ணி இந்த நடிகர் வயிறு எரிஞ்ச காமெடி இது!

ரைட். டைட்டில் ரெடி. அந்த வார 'குங்குமத்தை' இருபக்க ஸ்பெஷலா தயாரிச்சேன். சப் எடிட்டர் கம் நிருபர் நெல்லை பாரதியிடம் '' அண்ணே..'எல்லாம் ஒரு சாண் வயித்துக்காக'னு ஒரு மேட்டர் பண்ணுங்க. காமெடி நடிகர் சிவநாராயண மூர்த்திய பிடிச்சு அவரோட 'வயித்துப்பாடு' பத்தி செம காமெடியா ஒரு மேட்டர் குடுங்க''ன்னேன். ''ஏதோ நம்ம வயித்துப்பொளப்புக்கு இத செஞ்சுதானே ஆகணும்'னு நக்கலடிச்சுட்டு பேட்டிக்கு கௌம்பிட்டாரு.

நடிகர் சிவநாராயண மூர்த்தியை உங்களுக்கு நல்லாவே தெரியும். 'ஏராள தாராளமான' தொப்பை மன்னன். இவரை வெச்சு விவேக்,வடிவேலு பண்ண காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வெச்சிருக்கு.

நெல்லை பாரதி பாக்கறதுக்கு ஒல்லி. ஆனா நக்கல்ல செம கில்லி. சிவநாராயண மூர்த்தியை சந்திச்ச நெல்லை பாரதி, அலுங்காம குலுங்காம மேட்டரை சொல்ல.. சி.நா.மூர்த்தியும் 'வயிறார' பேச ஆரம்பிச்சாரு...''நம்மால வாயைக்கட்டி வயித்தைக்கட்டியெல்லாம் வாழமுடியாதுங்க. எதையுமே ஒரு கை பாத்துடுவேன். நான்வெஜ் ஐட்டங்களை நான் தின்னு நீங்க பாககணுமே! கொஞ்சம் அசந்தா உங்களையே எலும்பா நெனச்சு மென்னு துப்பிடுவேன்''னு கடோத்கஜன் மாதிரி பேச.. கடுப்பாயிட்டாரு நெல்லை பாரதி..

''இவ்ளோ வீறாப்பா பேசறீங்களே..உங்கள மாதிரி தொப்பை போட்ட ஆளுங்கள்லாம் அவுங்களோட 'லுலுலுவா'வ..அவங்களாலயே பாத்துகக முடியாதுன்னு சொல்றாங்களே! நெசமா?''னு சி.நா.மூர்த்தியோட அடிவயித்துல வெடி வெச்ச மாதிரி கேட்டுட்டாரு.

ஒருநிமிஷம்..'நாடா போட்ட டவுசர் நடுவீதியில அவுந்தமாதிரி' தன்னோட 'அண்டர்கிரவுண்டு' கவலையை இந்த ஆளு இப்படி 'ஆட்டிப்பாத்துட்டானே'னு அரண்ட சி.நா.மூர்த்தி, அப்படியே சுதாரிச்சுகிட்டே,''அதெல்லாம் கப்ஸா தம்பி..நான்லாம் தெனமும் 'அதை' நல்லாத்தான் பாத்துகிட்டிருககேன்''னு பந்தாவா சொல்லிட்டாரு. சட்டுன்னு கிராஸ் பண்ண நெல்லை,''தெனமும் 'அதை' எதுககு நீங்க பாககறீங்க'னு கேக்க..சி.நா.மூர்த்தி 'ஹிஹிஹி'னு சிரிச்சு சமாளிச்சிட்டாரு.

அப்புறமா..''சாதாரணமா பஸ்,ரயில்ல உஸ்ஸ§னு உககார முடியாது. மாடிப்படி ஏறினா..மூககுலேர்ந்து புயல்காத்து வீசறமாதிரி மூச்சு வெளியேறுது. அதுவும்..குப்புறப்படுத்து தூங்கறதுககு நான் படற பாடு இருககே..யய்யா..ஏதோ ஆமை மேல ஏறிப்படுத்த மாதிரி எசகுபிசகான இடங்கள்ல ஊமை வலி. ஒண்ணும் முடியலீங்க''னு சி.நா.மூர்த்தி 'வயிரு திறந்து' பேச..வாய்மூடி சிரிச்சிருககாரு நம்மாளு. பேட்டி முடியறப்போ..சி.நா.மூர்த்தியோட வயித்த நெல்லை தன் கையால அளந்தப்போ..ரெண்டு சாண் இருந்துச்சாம். இந்த மேட்டரை வாங்கின நான்..சும்மா இருககமாட்டாம ஒரு சேட்டைய பண்ணிட்டேன். சி.நா.மூர்த்தியோட 'பிரமாண்ட வயித்து' படத்தை போட்டு..மேல 'யார்ரா அது..டெலிவரி எப்போனு கிண்டலடிககறது?'னு கிண்டலா ஒரு கமெண்ட்டை வெச்சு அச்சு'கு அனுப்பிட்டேன். இதழும் விற்பனை'கு போயாச்சு. `ரெண்டுநாள் கழிச்சு எதேச்சையா நெல்லைகிட்ட''அண்ணே..தொப்பை மன்னன் மேட்டர் பாத்தாரா?''னு கேட்டேன். அடுத்த நொடி குதிச்சு குதிச்சு சிரிச்சாரு நெல்லை பாரதி..''நல்லா பாத்த்தாரு..ஃபோன்ல பேசுனாரு..'ஏங்க! சும்மா ஜாலியா பேசுனதையெல்லாம் எழுதி என் மானத்ஹை வாங்கிட்டீங்களே. ஏதோ ஒரு சாண் வயித்துககாக இந்த வயித்தை காட்டி நான் வாழறமாதிரி எழுதிட்டீங்களே. சொந்த ஊர்ல தலை காட்ட முடியலீங்க''னு புலம்பிட்டராம். ''அடப்பாவமே..ஏனாம்''னு நான் கேட்டேன். அதுககும் குதிச்சுகிட்டே சிரிச்ச நெல்லை பாரதி,''ஏங்க..அவரு பட்டுககோட்டைல பெரிய பண்ணையாருங்க! பரம்பரை பணககாரரைப் போயி..பஞ்சத்துககு வயித்த காட்ற மாதிரி எழுதினா..எப்பிடி அவர் தலைய காட்றதாம்?''னு அவர் சொல்ல..அப்புறம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

7 comments:

jchat said...

hahaha

கிரி said...

//அவரு பட்டுககோட்டைல பெரிய பண்ணையாருங்க! பரம்பரை பணககாரரைப் போயி..//

உண்மை தாங்க அவர் பெரிய பணக்கார் தான்.

என் நண்பரின் ஊர்க்காரர் தான்.. சினிமா மீது உள்ளா ஆசையால் நடித்துக்கொண்டு இருக்கிறாராம்

Guru said...

anne sooriyan anne,

avar yarunnu konjam gyabakathukku varuthu.. ana sariya theriyala.. avar photo potta nall irukkum.

nalla eluthureeenga nanga vayiru valikka sirikka madhiri panreenga...

vazthukkal. unga kitta neraiya ethirpaarkirom..

வண்ணத்துபூச்சியார் said...

அப்புறம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...

இது தான் உதய் பன்ச்....

சூப்பர்.

Sridhar said...

நல்லா இருக்கு சூரியன் சார்.தலைப்பு பிரமாதம்

SUKUMARAN said...

congrats uday,
rgds,
Sukumaran

Bala said...

நல்லா இருக்கு சூரியன் சார்.

 
சுடச்சுட - by Templates para novo blogger