ஸ்ரீதர் சாரும்.. பதினோரு புருடர்களும்!

Monday, April 13, 2009

‘சந்தோஷப்படறதுல பெரிய சந்தோஷமே.. மத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கறதுதான்!’ இந்த பொன்மொழிக்கு ‘சட்டை, பேன்ட்’ தெச்சுப் போட்டா.. சாட்சாத் அதுதான் நம்ம ஸ்ரீதர் சார்!

அதிகாலை 6 மணி.. அலறுது ‘செல்’. ‘ஆன்’ பண்ணா தேன் குரலில் ‘‘சரி சரி.. எந்திரிச்சு சட்டுபுட்டுனு குளிச்சிட்டு நேரா ஹோட்டல் க்ரீன்பார்க் வந்துருங்க! ஸ்ரீதர் வந்துட்டான்!’’னு கண்ணன் அண்ணா சொல்வாரு.. ஆனா அப்போதான் ஸ்ரீதர் சார் ஃப்ளைட்டே ‘டேக்ஆஃப்’ ஆகியிருக்கும். அன்னிலேர்ந்து பிச்சுக்கற ஜாலி..தொடர்ந்து மூணு நாலு நாளா நம்ம டீமையே உச்சி குளிர வெச்சுரும்.

ஸ்ரீதர் சாருக்கு துபாயில் பணி. கணினி துறை நிபுணர். வாய் நிறைய பாக்கும், ஜோக்கும் இவரது ‘உடன் பிறப்பு! நான் ‘கண்ணன்’ணா, மௌலி, கந்தன்.. சாரோட ‘ரத்தத்தின் ரத்தங்கள்! சபை கூடிச்சுன்னா.. ஜாலியும் கேலியுமா திருவிழா ரகளைதான்.

இப்படித்தான் ஒருநாள்.. கத்திரி வெயிலுக்கு அஞ்சி ‘க்ரீன்‘பார்’க்ல ª‘மது’வா நாங்க அஞ்சுபேரும் மத்தியானம் ஒதுங்கினோம். அருந்திய ரெண்டாவது சுற்றில் எதையோ நெனச்சு வருந்திய கண்ணன்ணா ‘செல்’லை எடுத்து அடுத்தடுத்து ‘‘ஓ.. குணா., லே.. சங்கரு.. ஏ.. குமாரு.. ஆ.. செந்திலு’’னு ஆறேழு பேருக்கு இஷ்டத்துக்கு வெரைட்டியா இனிஷியல் போட்டு ‘‘ஒடனே எல்லாரும் பாருக்கு வந்துருங்க!’’னு மிரட்டி வெச்சிட்டாரு.

அந்த ‘சுத்து’ முடியறதுக்குள்ளயே சத்தமில்லாம அடுத்த ஆறுபேரும் ஆஜராகிட்டாங்க. மொத்தப் பேர்ல ஸ்ரீதர் சார் சுத்த சைவம். மத்த பத்துபேரும் ‘பல்லு குத்தறதுகூட மீன் முள்ளுலதான்’னா பாத்துக்கங்க. மெனு கார்டுல இருந்த அத்தனை அசைவ ஐட்டங்களையும் ஆளுக்கொண்ணா மனு போட்டாங்க. தின்னு முடிச்சு மென்னு துப்பின டேபிளைப் பாத்தா.. ’’கலிங்கத்துப் பரணி போர் நடந்த இடம் மாதிரி’’ செம திகிலா இருந்துச்சு.

எப்பிராணிகளையும் சப்பித்துப்புகிற கிங்கரர்கள் நடுவே.. ‘மூணு ஸ்மாலும், ரெண்டு வாய் சீஸும், கொஞ்சம் அவிச்ச கடலைய மட்டுமே’ சாப்டுட்டு அப்பிராணியா உக்கார்ந்திருந்தார் ஸ்ரீதர் சார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ‘பார்’.. பதினோரு பேர்.. பலப்பல ‘ரிபீட்டு’. ஐயையோ.. பில்லு எவ்ளோ வருமோனு சைகையிலேயே ‘கிலி மொழி’ பேசிகிட்டிருந்தோம்.

அப்போ பாத்து கண்ணன்ணே செல் அடிச்சது. எடுத்துப் பேசினவரு.. ‘‘அடங் கொக்கமக்கா.. எங்கலே இருக்கே? என்னது.. கூட மூணு பேர் இருக்காங்களா? நம்ம ஸ்ரீதர் இருக்கறப்ப என்னலே கவலை? நாலு பேரும் கௌம்பி ஒடனே ஹோட்டலுக்கு வாங்க!’’னு சொல்ல.. எங்களுக்கோ தலை கிறுகிறுத்துப் போச்சு.

பதினஞ்சு பேரா? நிலவரம் கலவரமாயிடுமேனு ஸ்ரீதர் சாரை பாத்தேன். வாயில பாக்க மென்னுகிட்டு அதே சிரிச்ச முகத்தோட ‘‘ம்.. வழட்டும்.. வழட்டும்’னு கவலைப்படாம ‘மழலைமொழி’ பேசுனாரு. மத்தியானம் 12 மணிக்கு ஆரம்பிச்ச கச்சேரி அன்னிக்கு நடுசாமம் 12 மணிக்குத்தான் ‘ஒளு வளியா முழிஞ்சது’!

பாஞ்சு வந்த அத்தனைபேரையும் ஓஞ்சு போற அளவுக்கு கவனிச்சு அனுப்பிச்சுட்டு.. ஸ்ரீதர் சாரோட தோள்ல ‘வளந்த கொளந்த மாதிரி’ சாஞ்சு நின்னாரே.. அதான் கண்ணன்ணா.

ஆயிரக்கணக்குல வந்த ‘பில்’லை அதே ஸ்மைலோட செட்டில் பண்ணிட்டு ‘எங்க வீட்டு பிள்ளை’ எம்.ஜி.ஆரா. சந்தோஷமா நின்னார் பாருங்க... அதான் ஸ்ரீதர் சார்.

நம்ம டீம்ல யாருமே விரும்பின எதையும் நேரடியா ஸ்ரீதர் சார்கிட்ட கேக்கமாட்டோம். ‘‘சார்.. கேரள குமரகத்துல போட் ஹவுஸ்ல போயிருக்கீங்களா?’’ இது நான். அவ்ளோதான். ‘‘சூப்பரா இருக்கும் சூரியன்!’’னு சொல்லிட்டு கண்ணன்ணா சைடு திரும்பி ‘‘டேய் கண்ணா.. வர்ற வெள்ளி, சனி, ஞாயிறு கேரளா கௌம்பறோம்’’பார். உடனே நான் ‘‘என்ன சார்.. திடீர்னு..’’னு இழுப்பேன். ‘‘எங்களோட சூரியன் அதை என்ஜாய் பண்ணனும். தட்ஸ் ஆல்!’’ம்பார் கூலாக.

கண்ணன்’ணா திடீர்னு ‘‘ஸ்ரீதரு.. ஒடம்பெல்லாம் ஒரே வலிடா! குற்றாலம் போயி ஆயில் மசாஜ் பண்ணா நல்லா இருக்கும்னாரு சூரியன்’’னு நைஸா, என்னை கிள்ளி.. சார்கிட்ட மெசேஜை சொல்லுவார். ‘‘என்ன சூரியன்.. நீங்க ஃப்ரீ ஆயிட்டீங்கன்னா.. குற்றாலம் போயிரலாம்’’பார். ஆக.. இந்த ‘நட்பு அலாவுதீன்களின் அற்புத விளக்கு’ ஸ்ரீதர் சார்.

ஒருமுறை காரில் போய்கிட்டிருந்தோம். அண்ணா மேம்பாலத்தில் ஏறுது கார். பின்ஸீட்டில் நான், கண்ணன்ணா, கந்தன். அப்போ கண்ணன்ணா, ‘‘ஸ்ரீதரு.. எனக்கொரு செகண்ட் ஹேன்ட் கார் வேணும்டா!’’னாரு. முன்ஸீட்டுல இருந்த ஸ்ரீதர் சார் ‘‘ம்..ம்’’னாரு. ‘‘நீதான் எனக்கு லோன் ஏற்பாடு பண்ணனும்’’னாரு கண்ணன்ணா. வேகமா ஸ்ரீதர் சார் ‘‘ம்..ம்..’’னாரு. ‘‘இந்த மாசத்துக்குள்ள வாங்கித் தந்துருடா! வெகேஷனுக்கு வசதியா இருக்கும்’’ & இது கண்ணன்ணா. அதுக்கும் ‘ம்..ம்..ம்..’னாரு ஸ்ரீதர் சார்.

எனக்கோ லேசா பட்சி அடிக்குது. இந்த நேரம் பாத்து கந்தன், ‘‘அண்ணே.. எனக்கொரு பைக் வாங்கித்தாங்க!’’ன்னாரு. அப்பவும் கொட்டை எழுத்துல ‘ம்,.ம்’னாரு ஸ்ரீ சார். விடாம கந்தன், ‘‘மாசாமாசம் டியூ நான் கட்டிடறேன்’’னாரு! பதிலுக்கு ஸ்ரீதர் சார் ‘‘ம்..ம்..ம்..’’னாரு. கண்ணன்னே, கந்தன் ரெண்டுபேருக்கும் ‘வண்டி கனவு’ வண்டியிலேயே சாங்ஷன் ஆன சந்தோஷம்.

ஆனா.. எனக்கோ செம டவுட். ‘என்னடாது.. ஸ்ரீதர் சார் ஒருமாதிரியா முனகறாரே’னு நான் எட்டிப்பாக்கவும்.. கார் ஒரு சிக்னல்ல நிக்கவும் சரியா இருந்துச்சு.

சடார்னு ஜன்னலை இறக்கின ஸ்ரீதர் சார் ‘புளிச் புளிச்’னு பாக்கை துப்பிட்டு ‘‘ஏண்டா டேய்.. ஈவு இரக்கம் இருக்கா உங்களுக்கு! வாயில மென்ன பாக்கு எச்சிலை துப்ப முடியாத இம்சையில ‘‘ம்..ம்..’’ங்கறேன். அதுபுரியாம அடுத்தடுத்து ஆப்ளிகேஷன் போட்டு கொல்றீங்களேடா!’’னு சொல்ல.. அப்பதான் பாக்கை மெள்ள ஆரம்பிச்ச ‘கண்ணன்’ணா.. எங்க சைடுல திரும்பி வெடிச்சு சிரிக்க ‘பளிச்’னு இருந்த நானும் கந்தனும் ‘புளிச்’னு ஆனது அன்னிக்குதான்.

சமீபத்துலதான் ஸ்ரீதர் சார் துபாய் வேலையை ரிசைன் பண்ணாரு.

இதுபோதாதா.. இப்போல்லாம் ‘அடிக்கடி’ நம்ம டீம்ல ‘சுடச்சுட’ சிரிப்பொலிதான்!

14 comments:

butterfly Surya said...

super..

வாழ்க ஸ்ரீதர் சார் ...

anthanan said...

குடிச்சா பீரு...
குடியிருந்தா பாரு...
சிரிச்சா சூரியரு...
சில்லரைக்கு ஸ்ரீதர் சாரு...
எல்லாஞ் சேந்து ஒரு கட்சி ஆரம்பிக்கலாமா?

-ஆர்.எஸ்.அந்தணன்

அன்புச்செல்வன் said...

ஆஹா சூப்பரு....ஸ்ரீதர் சாரோட அட்ரஸ் இருந்தா கொஞ்சம் கொடுங்க உ.சூ,

-அ.செ

Bala said...

சிரிப்பையும் , சிந்தனையும் , சில்லரையும் சிதரவைப்பார் ஸ்ரீதர் சார்...

Bala said...

சூரியன் சாருக்கு என் இதயும் கனிந்த நன்றி.

எம்.பி.உதயசூரியன் said...

anthanan anna, naamadhan ADIKKADI..CHUDACHUDA-nu katchi aarambichu pichu udharikitturukkame !

எம்.பி.உதயசூரியன் said...

anbu..namma adutha sabai naalai koodudhu.namma "BAR"i vallaloda neradiyave pesunga!

எம்.பி.உதயசூரியன் said...

vannathupoochiye..rekkai virichu sakkai podu poda thayaardhane?

ers said...

ஒரு முறை வாருங்கள். உங்களுக்கு பிடித்த புக்மார்க் தளம்
நெல்லைத்தமிழ்

எம்.பி.உதயசூரியன் said...

ada..bala sir! thanni karuthuruchu..unga KUVALAI sattham kettiruchu!

எம்.பி.உதயசூரியன் said...

tamilcinema annaachi..paarthen "nellai thamil". agmark bookmark thalamaga irikku. arimugapaduthiyadharau mahizhchi.

josebenedict said...
This comment has been removed by the author.
முரளிகண்ணன் said...

உங்கள் அனுபவங்கள் மிக மிக சுவையாக உள்ளன. பகிர்தலுக்கு நன்றிகள்

butterfly Surya said...

தலைவா என்ன பிஸியா..??

அடுத்த பதிவு எப்போ..??

 
சுடச்சுட - by Templates para novo blogger