அஜித்தை அழவைத்த எம்.ஜி.ஆர்.!

Saturday, April 25, 2009

'நாயகன்' வேலுநாயக்கரை வேணும்னா 'நீங்க நல்லவரா..கெட்டவரா'னு கேக்கலாம். ஆனா 'அசல்' நாயகன் அஜித்தை 'நீங்க நல்லவரா..ரொம்ப நல்லவரா'னுதான் கேட்டாகணும். அப்படிப்பட்டவர் நம்ம 'தல'!

'அல்டிமேட் ஸ்டார்' அஜித்துக்கும் எனக்குமான சந்திப்புகள் 'ஸ்வீட் பாக்ஸ்' மாதிரி. எந்த சந்திப்பை அசைபோட்டாலும் அது தித்திப்பாவே இருக்கும். அப்படியரு சந்திப்பு இது.

2004. அஜித் பைக் ரேஸில் பரபரப்பாக இருந்த நேரம். அவரது நம்பிக்கையான நண்பராக இருந்த ஒரு தயாரிப்பாளர்..'தல' தந்த பிளாங்க் செக்கை வெச்சு அவரையே 'கோடிகளில்' ஏமாத்திட்டார்னு தெருக்கோடிவரை பேச்சு. அப்போது நான் 'தமிழ்.சிஃபி.காம்' இணைய இதழின் எடிட்டர். அஜித்தின் பி.ஆர்.. சுந்தரிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். அடுத்தநாளே ஃபிக்ஸ் பண்ணித்தந்தார்.

'அட்டகாசம்' ¨ட்டிங்கில் 'தல' அட்டகாசம் பண்ணிக்கிட்டிருந்தாரு. ஷாட் பிரேக்ல அஜித்தை சந்திச்சேன். ''வாங்க ஜி''னு உபசரிச்சவர் முகத்தில வழக்கமான மலர்ச்சி இல்லை. காரணம்..நண்பனின்(!?) நம்பிக்கை துரோகமா இருக்கலாம். 'சரி..தலயை கொஞ்சம் ஜாலி மூடுக்கு கொண்டுவரலாமே'னு எடுத்த எடுப்பிலயே ''சார்..எம்.ஜி.ஆர். பத்தி என்ன நினைக்கறீங்க?''னு வலையை வீசினேன்.

லேசா ரிலாக்ஸான அஜித் ''ஜி..அவர் எவ்ளோ பெரிய வரலாறு. அவர்மாதிரி ஒரு பங்காவது நம்மால வாழமுடிஞ்சா அதுவே பெரிய சாதனைதான்''னு ஃபீலிங்கோட சொன்னாரு. 'ஆஹா..தல கூலிங் ஆயிட்டார்ரா'னு நான் ''அப்பேர்ப்பட்ட புரட்சித்தலைவர் அப்பவே உங்களுக்காக ஒரு பாட்டு பாடிவெச்சுட்டு போயிருக்காரு தெரியுமா?''னு அடுத்த கொக்கியை போட்டேன்.

திடீர் சந்தோஷத்துல சிக்கி திக்கித்திணறுன அஜித் ''என்ன சொல்றீங்க? என்ன பாட்டு அது?''னு ஆர்வமா கேக்க..''தர்மம் 'தல' காக்கும்..தக்க சமயத்தில் உயிர் காக்கும்! கூட இருந்தே குழிபறித்தாலும்..கொடுத்தது காத்து நிற்கும்!'ங்கற பாட்டுதான் அது!''னு நான் டைமிங்கா அடிக்க..நெகிழ்ந்துபோன அஜித் கண்கலங்கி என் கையை பிடிச்சிகிட்டாரு. அதுக்குப்பிறகு நட்பு,தப்பு,பாசம்,வேஷம்னு தன்னை பாதிச்ச அத்தனை மேட்டரையும் மனசு திறந்து பேசுனாரு.

சின்னவயசுல காணாம போன 'அண்ணந்தம்பிகளை' கண்டுபிடிக்கணுமா.. 'மாமா மச்சான்னு' பாசக்கார பயலுகலோட பாண்டி ஆடணுமா..'சில்லறை மாத்திட்டு வர்றேன்'னு 500 ரூவாய வாங்கிட்டு 'ஞாபகமா' மறந்துட்டு போன 'மிச்சான்களை' புடிக்கணுமா..அத்தனை பேரும் ஒண்ணா கூடி கும்மியடிக்கற இடம்..அஜித் பிரஸ்மீட்தான். அப்படியரு சந்திப்புல நாங்க காட்டின பாசத்த பாத்து தலைசுத்தி போயிட்டாரு 'தல'.

ஃபாரின்ல நடக்கற பைக் ரேஸ்ல போட்டிபோட கிளம்பறாரு அஜித். அதுக்கு முன்னால எங்களுக்கெல்லாம் கிராண்டா ஒரு பார்ட்டி தர்ராரு. 'காலையிலேர்ந்தே குடலை அலசி காயப்போட்ட மாதிரி' லார்ஜ்க ரிப்பீட் ஆகிட்டிருந்தது. நம்ம டீம் ஆசாமிகளும் (நான்,அந்தணன்,அமலன்,மாப்ள,மச்சான்) எங்களோட 'பரிசுத்த ஆவியை' எழுப்பி 'பாச இட்லியை' வேகவெச்சு கொட்ட ஆரம்பிச்சுட்டோம். அந்த 'ராவு' காலத்துல யாராவது இந்த டீம் கிட்ட சிக்கினா..ஜாலி'சட்னி'தான்.

நல்லவேளை. அந்த சமயம் பாத்து அஜித் எங்க சைடு வந்தாரு. பர்சனலா விசாரிச்சுட்டு ''நல்லா என்ஜாய் பண்ணுங்க!''னு சொன்னதுமே, எங்களுக்குள்ள ஊறிக்கிடந்த 'தல' பாசம் 'தல கால்' தெரியாம வெளியாச்சு பாருங்க..''சார்! எங்க தல ரேஸ§க்கு போறதுல ரொம்ப பெருமைதான்! அதேசமயம்..ஊர் பேரு தெரியாத நாடு. எப்படி இருக்கும்னு தெரியாத ரோடு. பாத்த்து கவனமா.. கொஞ்சம் மெள்ள்ள்ளமா பைக்கை ஓட்டுங்க''னு நாங்க கோரஸா சொன்னதுமே..அஜித் எங்களை 'அட..படவா ராஸ்கோலுகளா'ங்கற மாதிரி பாத்துட்டு..சிரிச்சாரு பாருங்க சிரிப்பு! ஆஹா..'கோல்கேட் பற்பசை விளம்பரத்துக்கு அதுமாதிரி ஒரு டாலடிக்கிற வெள்ளைச்சிரிப்பு' எங்கயுமே இல்லை.

'பகைவன்'கூட நெகிழ்ந்து 'தல' போல வருமானு சொல்ற அளவுக்கு ஒரு 'அமர்க்களமான' மேட்டர் இருக்கு! அதை அஜித் பிறந்தநாளான மே 1ம்தேதி சொல்லலாம்னு 'ஆசை'. அதுவரை வெய்ட் பண்ணுங்க 'வாலி'பர்களே!

25 comments:

கண்ணா.. said...

மீ த பர்ஸ்டு...

தல பத்தி அட்டகாசமான பதிவை போட்ட தல... வாழ்க....

butterfly Surya said...

இப்படி காக்க வச்சிடிங்களே தல..

கண்ணா.. said...

ண்ணா...ஓரு சின்ன டவுட்கண்ணா..
நீங்க MP உதயசூரியன்னு போட்ருங்கீங்களே..

எந்த தொகுதிக்குண்ணா....

Sridhar said...

ண்ணா...ஓரு சின்ன டவுட்கண்ணா..
நீங்க MP உதயசூரியன்னு போட்ருங்கீங்களே..

எந்த தொகுதிக்குண்ணா....

நம் இதய தொகுதி. புரிந்ததா கண்ணா

அன்புச்செல்வன் said...

ண்ணா... நீங்க நம்ம தலய விட smartaஆ இருக்கீங்க...

ரொம்ப நல்லவன் said...

>'பரிசுத்த ஆவியை' எழுப்பி 'பாச இட்லியை' வேகவெச்சு கொட்ட ஆரம்பிச்சுட்

எப்படிங்க இப்படியெல்லாம்..
என்னமோ போடா(ஜனகராஜ் ஸ்டைலில் படிக்கவும்)

லோகு said...

தல போல வருமா..

அட்டகாசமான பதிவுங்க..

முரளிகண்ணன் said...

அசத்தல்

வினோத் கெளதம் said...

May 1 வரை காத்து இருக்குனுமா..

//ண்ணா... நீங்க நம்ம தலய விட smartaஆ இருக்கீங்க...//

எனக்கு போட்டோல ரெண்டு அஜித் நிக்குற மாதிரி தெரியுது..:)

Subankan said...

சூப்பர்ங்க. வெயிட்டிங் பார் மே பஸ்டு...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அண்ணா நீங்க தொ(ல்)லை காட்சி நிருபரா...?

ஷாஜி said...

தல பத்தி அட்டகாசமான பதிவை போட்ட தல... வாழ்க....

Unknown said...

Ajith Vazhaga

Bala said...

தலையை சிரிக்கவைத்த , தலைக்கு நன்றி

BALAMURUGANMANIVANNAN said...

ADVANCE WISH YOU HAPPY BIRTHDAY THALA.

BALAMURUGANMANIVANNAN said...

THALA IS BEST ACTRESS AND GOOD SERVICE MAN.

Selvakumar said...

Mate, thanks for sharing this wonderful information..

- Die hard thala rasigan

Eagerly waiting for your May 1 post !

Sarathguru Vijayananda said...

One of those informative article with humour pasted throughout.

I enjoyed reading. I wanted to post the comment in tamil. Since I am at office I am forced to do in english.

Suriyan please enable "Name and URL" option on comment posting page. For all your articles I wanted to post my comment but this restricted me.

Sridhar can help you.

Continue your social service.

sundar said...

உதய் !!

தற்செயலாக நேற்று அந்தணனின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்து, முழுவதும் தீர்ந்த பிறகு, உங்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்து அதுவும் முடிந்து விட்டலாச்சார்யா பட பூதம் போல மேலும் பதிவுகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.....

கண்களில் கண்ணீர் வருகிற மாதிரி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது...

உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல...

Raju said...

ஹே..அண்ணனுக்கு ஒரு கூல்டிரிங்ஸ் சொல்லு..!
நம்ம தலயப் பத்தி எழுதியிருக்காபல்..!
அடுத்து வேற "பிறந்த நாள் சிறப்புப் பதிவு" போடப் போறாப்ல..!

ரமேஷ் வைத்யா said...

ஹாய் மச்சான்,
பல வருஷம் கழிச்சு மீட் பண்றோம். எப்டிருக்கீங்க?

எம்.பி.உதயசூரியன் said...

//ண்ணா... நீங்க நம்ம தலய விட smartaஆ இருக்கீங்க...//

ண்ணா..தல போல வருமா..?

எம்.பி.உதயசூரியன் said...

தமிழ்..நம்ம மற்ற பதிவுகளை படிக்கவும்!

எம்.பி.உதயசூரியன் said...

//எனக்கு போட்டோல ரெண்டு அஜித் நிக்குற மாதிரி தெரியுது..:)//

ண்ணா..இப்படியெல்லாமா பாச இட்லியை வேகவைக்கிறது? கண்ணீர் வருதுண்ணா!

எம்.பி.உதயசூரியன் said...

//ஹாய் மச்சான்,
பல வருஷம் கழிச்சு மீட் பண்றோம். எப்டிருக்கீங்க?//

மாப்ளே..வாங்க..வாங்க!

 
சுடச்சுட - by Templates para novo blogger