‘ரகசிய தமிழச்சி‘ நமீதா!

Saturday, May 2, 2009


நமீதாவுக்கும் சூரத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்காங்க நம்ம தமிழர்கள்! அதேமாதிரி ‘நானும் தமிழச்சிதான்’னு நமீதா சொல்லி அடுத்த தேர்தல்லயும் நிக்கலாம். அதுக்கு அட்டகாசமான காரணமும் இருக்கு!
அதுக்கு முன்னாடி..கிளுகிளு அணுகுண்டா மிரட்டற நமீதாவை ஒரு தீவாளிக்காக பட்டாசு வெடிக்க கூட்டிட்டுப் போனப்போ..அந்த ஸ்பாட்ல நடந்த டப்பாசு தமாஷை சொல்றேன் மச்சான்! (நமீதா பாஷை!)

குடியரசு தினம் அன்னிக்கு சிறப்பு திரைப்படமா குசேலன் போடறதுக்கு என்ன சம்பந்தமோ..அதே பந்தத்தோட தீபாவளி பட்டாசு வெடிக்க நமீதாவை கூட்டிட்டு போயிருந்தோம். வையாபுரி வெடிச்சாலும்,வடிவுக்கரசி வெடிச்சாலும்..காதுக்கு வெடிச்சத்தம் ‘டமால் டமால்’தான். ஆனா கண்ணுக்கு ஜில்லுன்னு ஃபிகர் வேணும்ல. அதுக்குத்தான் நமீதா!

‘குங்குமம்’ தீபாவளி ஸ்பெஷலுக்காக இப்படியொரு அஸைன்மென்ட். நிருபர்கள் த.பழனிக்குமாரும்,குன்றில்குமாரும் நமீதாவை அள்ளிப்போட்டுகிட்டு (!?) ஒரு அபார்ட்மென்ட்டுக்கு வந்துட்டாங்க, சும்மா நானும் வேடிக்கை பாக்க போயிருந்தேன்.
‘பாதி ஏவாள்’ ரேஞ்சுக்கு நமீதாவை எதிர்பார்த்த அங்கிருந்த ஆதிமனிதர்களுக்கு..டைட்டா ஜீன்ஸும்,பூப்போட்ட முழுக்கை சட்டையுமா நமீதா இறங்குனதை பாத்ததுமே மூஞ்சி எலிப்புழுக்கை மாதிரி சிறுத்து கறுத்து போச்சு.

எச்சிலோடு சேர்த்து ஏக்கத்தையும் முழுங்கிகிட்ட ஆண்களையும், ‘ரகசிய மேல்மூச்சு’ விட்ட பெண்களையும் ஒருசேர பாத்துகிட்டே ‘‘ஹாய் குட்டீஸ்’’னு தன்னோட முட்டி கிட்ட நின்ன குட்டீஸ்களை செல்லமா கட்டிகிட்டாங்க நமீதா.
நம்ம நிருபர்கள் அப்போ.. கிட்டத்தட்ட ஒரு பட்டாசு கடையையே அங்கன பரப்பிவைக்க..‘‘ஹைய்யோ..இவ்ளோ பட்டாஸ்ஸா? வெரி ஹாப்பி. என்க்கு வெடிக்கறது புடிக்கும்’’னு
விதவிதமா பட்டாசுகளை குட்டீஸ்களோட சேர்ந்து கொளுத்தி ரசிச்ச நமீ..ஃபைனலா எடுத்தது டென்தவுசண்ட் வாலா. செக்கச்செவேர் அனகோன்டாவா சுருண்டு கெடந்த வாலாவை நமீ பத்தவைக்க..கூட்டமே சிதறி தெறிச்சது. வெடிச்சு ஓய்ஞ்ச பிறகு எல்லாரும் ஒண்ணா கூடி தேடிப்பாத்தாங்க. ம்ஹூம். அந்த கேப்புல நமீதா காரில் ஏறி பத்திரமா எஸ்கேப் ஆயிட்டாங்க. ‘‘அடப்பாவிகளா..புகை போட்டு மறைச்சிட்டீங்களே’’னு கும்பல் நொந்தேபோயிடுச்சு.

அபார்ட்மென்ட் வாசலை கிராஸ் பண்ணப்போ..‘‘ச்சே..என் லைஃப்ல இவ்ளோ அழகா ஒரு நடிகைய நான் பாத்ததே இல்லடா’’னு புல்லரிப்பா ஒரு குரல் கேட்டுச்சு. ‘‘யார்ராது’’னு பாத்தா..நமீதா ‘குட்டீஸ்‘னு கூப்பிட்டு கொஞ்சிகிட்டிருந்த ஒரு பன்னண்டு வயசு ‘குட்டிச்சாத்தான்’.
நமீதாவுக்கும் சூரத்துக்கும் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டிருக்காங்கன்னு சொன்னேனே.. ஏன் தெரியுமா? வருஷத்துக்கொரு முறை சூரத்துலேர்ந்து தமிழ்நாட்டுக்கு வர்ற துணி வியாபாரிகள் ‘‘எங்களுக்கு ஏற்றுமதியில நஷ்டம்’’னு ஏதேதோ கப்ஸா அடிச்சு ‘ஆடைகள் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி’ தந்து செம லாபத்தை அள்ளுவாங்க.

அதே ‘சூரத் தந்த சூஸ்பரி’ (சூஸ்பரி தெரியும்ல..வட்டமா இனிப்பா இருக்கும்ணே!) நமீதாவோ...வருஷம் முழுக்க ‘80 சதவீதம் ஆடையை தள்ளுபடி’ செஞ்சு நடிச்சே லம்ப்பா லாபத்தை சம்பாதிக்கறாங்க! பாருங்க பச்சைத்தமிழர்களே..பிறந்த ஊரோட பெருமையை காப்பாத்தறதுல சிறந்து ‘வௌங்கற’ (ம்க்கும்!) நம்ம நமீதா மட்டும்தான்!

ஒருவேளை இந்த தகுதியை மட்டுமே வெச்சு அடுத்த தேர்தல்ல ஏதாவதொரு தொகுதியில நமீதா நின்னாலும் நிக்கலாம். அப்போ ‘நானும் வெள்ளைத் தமிழச்சிதான்’னு மார்தட்டி சொல்ல இன்னொரு சூப்பர் ஹிஸ்டரி கைவசம் இருக்கு ‘மச்சான்ஸ்’!
‘அதெப்டி மாப்ள..அக்குருமம்’னு கோச்சுக்காம மேக்கொண்டு படிங்க! ‘சிட்டுக்குருவி’ங்கற படத்துல ‘உன்ன நம்பி நெத்தியிலே..பொட்டு வெச்சேன் மத்தியிலே’’னு ஒரு சோகப்பாட்டை கேட்டிருப்பீங்க. அதுல வர்ற சரணத்துல ‘‘வீரத்துல கட்டபொம்மன்..ரோஷத்துல ஊமத்துரை..‘‘சூரத்’’துல நீயும் ஒரு தேசிங்குராசா’’னு வரும்ல! இப்ப மேட்டருக்கு வாங்க. ‘‘அந்த காலத்துல தேசிங்குராஜா சூரத்துக்கு வந்து சூரத்தை காமிச்சுட்டு போயிருக்காரு. அப்பேர்ப்பட்ட மாவீரன் இருந்த ஊர்ல பிறந்த நானும் வீரத்தமிழச்சிதானே!’’னு மைக்க புடிச்சு முழங்குனாங்கன்னு வைங்க..ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களோட பொன்னான ஓட்டை..

நக்கலா சிரிக்கறீங்கபோல! ‘நாளை நமதே’வை லேசா மாத்தி சொல்லிப்பாருங்க..நாளை நமீதா!
ரகசிய தமிழச்சி‘ நமீதா!

7 comments:

Sridhar said...

வெ.ஆ.மூர்த்தியின் வாசம் அடிக்கிறதே? அருமை உதய் சார். கலக்கல்

Prabhagar said...
This comment has been removed by the author.
Prabhagar said...

//என்னதான் குட்டிச்சாக்குல போட்டு எளநியை கட்டிவெச்சாலும்..உள்ள இருக்கற சரக்கு திமிறிகிட்டும் குமுறிகிட்டும் தெரியாமலா இருக்கும்? //

Sir, Konjam Over-A theriyala?

Prabhagar...

கிரி said...

உதய் இதை போல A ரகமாக எழுதாமல் வழக்கம் போல எழுதுங்க

பலரும் உங்கள் பதிவை விரும்பி படிக்க காரணம் எழுத்தில் உள்ள வர்ணிப்பும் மற்றும் நகைச்சுவை..அது வரம்பு மீறி போகும் போது கஷ்டமாக உள்ளது.

அனைத்து பதிவுகளையும் வெறுமனே பாராட்டி மட்டும் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.. மனதில் படும் இதை போல விசயங்களையும் கூற வேண்டும் என்பது என் கருத்து.. அதன் பிறகு உங்கள் விருப்பம்.

M.P.UDAYASOORIYAN said...

//மனதில் படும் இதை போல விசயங்களையும் கூற வேண்டும் என்பது என் கருத்து//
கிரி..உங்கள் கருத்தை மதிக்கிறேன். மனதில் கொள்கிறேன்.

இப்போது A ரகம் எடிட் பண்ணியாச்சு. மீண்டும் படிங்க!

வண்ணத்துபூச்சியார் said...

படிக்கறதுகுள்ள எடிட் பண்ணியாச்சா..??

லேட்டா வந்தா இப்படிதான்.

இதுவும் கலக்கல்தான் சார்.

eeramsudum.blogspot.com said...

antha matchikku karanamey naan thaane thalaivare kaaranam... enka em pera kanam?

 
சுடச்சுட - by Templates para novo blogger