மணிவண்ணனின் ‘அகதி’!

Friday, May 8, 2009


டைரக்டர் மணிவண்ணன்கிட்ட பேசறப்போ..கண்ணுல ரெண்டு தடவை தன்னால தண்ணி வரும். காரணம் என்னான்னு படிக்கிறப்பவே புரியும்.

சிங்கம் இளைச்சாலும் பிடறி இளைக்காதுல்ல! அப்படித்தான் கம்பீரமா இருந்தாரு இந்த கொங்கு நாட்டு தங்கம். படங்கள்ல வேட்டி சட்டையோட பட்டை கௌப்பற மணிவண்ணன். வீட்ல இருக்கறப்போ பர்முடாஸ்
போட்டு ஹாயா இருக்காரு.

‘‘இதான் உங்க காஸ்ட்யூம் ஸ்டைலா’’னு கேட்டேன். ‘‘இதிலென்னங்க ஸ்டைலு? வேட்டி..நம்ம அரசியல்வாதிங்க கொள்கைமாதிரி. எப்ப
வேணும்னாலும் நழுவி விழுந்துரும். ஆனா..இந்த டவுசர் அப்படியில்லீங்களே! எக்கச்சக்க பட்டன் போட்டு நம்மமாதிரி கொள்கைப்பிடிப்பால்ல இருக்கு!’’ன்னு ‘சுருக்’குன்னு குத்த..பொத்துகிச்சு சிரிப்பு.

‘வெரைட்டியா படங்கள் தந்து வெற்றிகரமா மிரட்டின நீங்க..திடீர்னு முழுநேர நடிகரா மாறிட்டீங்களே’’ன்னேன். ‘‘என்னங்க பண்றது?முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்தான?’’ன்னவர்..அதுக்கொரு ஃபிளாஷ்பேக்கை செம ஜோக்கா சொன்னாரு...

மணிவண்ணனும் சத்யராஜும் ஒருத்தரையொருத்தர்
‘தலைவரே’னுதான் கூப்பிட்டுக்குவாங்க. அப்போ மணிவண்ணன் ‘24 மணி நேரம்’ படத்தை டைரக்ட் பண்ணப்போறாரு. ‘வில்லனா யாரை போடலாம்’னு ரெண்டுபேரும் டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க. ‘நம்பியாரை போடலாம்’னு சொல்றாரு
சத்யராஜ்.

உடனே மணிவண்ணன் ‘ஐயோ..அவரெல்லாம் வேணாம் தலைவரே‘னு அரண்டிருக்காரு. ஏன்னு கேட்டா ‘‘அவர் சூப்பர் சீனியரு. அவருக்கு முன்னால என்னால தம்மடிக்க முடியாதே’னு ஃபீல் பண்ணியிருக்காரு. கடைசியில சத்யராஜை பல ஆங்கிள்ல பாத்துட்டு ‘‘ஏந்தலைவரே..பேசாம நீங்களே வில்லனா நடிச்சிடுங்க. நானும் நிம்மதியா தம்மடிப்பேன்‘னு மணிவண்ணன் சொன்னாரு
பாருங்க..அந்த இடத்துல பத்திகிச்சு சத்யராஜோட மார்க்கெட் நெருப்பு.


அப்போ மணிவண்ணன் அப்படி பண்ணதுக்கு ‘அமைதிப்படை’ல பழிதீர்த்துட்டாரு சத்யராஜ். ‘மணி‘ கேரக்டருக்கு யாரை
போடலாம்னு தாடியை வருடிகிட்டிருந்திருக்காரு ‘வண்ணன்’. அப்போ சத்யராஜ் ‘‘ஏந்தலைவரே..ஒரிஜினல் மணியான நீங்களே அதை பண்ணிடுங்க’’ன்னு
சொல்ல..அதுவே முழுநேர நடிகரா மனிவண்ணனை மாத்திடுச்சு.

பொதுவா ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா..அதுக்காக பட்ட
பாடுகளை ‘ஆஹா ஓஹோ’னு ‘டேஷ் டேஷா’ எழுதறது வழக்கம். ஆனா இப்படியெல்லாம் உட்டாலக்கடி இல்லாம ‘சர்ர்’னு ஒரு கோடு போட்டு ‘சரசர’ன்னு ரோடு போட்டு ஜெயிக்கறது மணிவண்ணன் ஸ்டைல்.

ஹவுஸ்ஃபுல்லா ஓடுன ‘நூறாவது நாள்’ படம் கருவாகி
உருவான கதை தெரியுமா? ‘பரபரப்பா ஒரு படம் பண்ணனுமே’னு மணிவண்ணனும் சத்யராஜும் சிண்ட பிச்சுகிட்டு மண்டைய தட்டிகிட்டுருந்த
சமயம். ‘‘சரி..லோக்கல்ல இருந்தா சரிப்பட்டு வராது’னு ஜிவ்வுன்னு கிளம்பி
மகாபலிபுரத்துல ஒரு ரிசார்ட்டுல ஜில்லுன்னு சபைய போட்டிருக்காங்க.

ரொம்பநேரமா அலசி துவைச்சும் ஒரு கதையும் உருப்படியா தேறல. உக்காந்ததுமே ஐடியா ‘தண்ணியா’ பாயுமே! ஏன் வத்திப்போச்சுனு
யோசிச்சிருக்காங்க. அப்பதான் தெரிஞ்சிருக்கு..புரட்சி இயக்குனரும்,புரட்சி தமிழனும் அதுவரைக்கும் வறட்சியில வாடிகிட்டிருந்த மேட்டர்!

உடனே கிளம்பி.. ஒரு ஆஃப் சரக்கை வாங்கிட்டு வந்து அடிச்சாங்க. கதையோட முதல் சீன் கலக்கலா சிக்கிச்சு. தருமி உருமி அடிச்ச
மாதிரி புடிச்ச புடியில அந்த ஆஃப் தீர்றதுக்கும் ‘நூறாவது நாளோட’ ‘பர்ஸ்ட் ஆஃப்’ ரெடியாகறதுக்கும் சரியா இருந்துச்சு.

‘ஆஹா..கதை அப்படிப்போகுதா’னு பட்சி கூவ..அடுத்து ஒரு ‘ஆஃப்’ வாங்கிட்டுவந்து பக்கோடாவோட பிச்சி உதறியிருக்காங்க. ‘அட்றா சக்க! படத்தோட செகண்ட் ஆஃப் பக்காவா ரெடியாகிடுச்சு. இதை ‘மணிமணியா’
சொல்லிமுடிக்க..நம்ம கண்ணுல சிரிப்புமழையின் ஈரச்சாரல்!

‘சிவப்பு சிந்தனை,பெரியாரிஸம்,தமிழ் தேசியம்னு உணர்வுள்ள நீங்க..இலங்கையில நம்ம தொப்புள்கொடி உறவுகள் படற அவலங்களை..’’ கேட்டு முடிக்கறதுக்குள்ளயே குறுக்கிட்டாரு மணிவண்ணன்...‘‘தாங்கமுடியலிங்க! நமக்கெல்லாம் யுத்தம்ங்கிறது ஒரு செய்தி அளவில்தான் இருக்கு. ஆனா இலங்கையில கொத்துகொத்தா நம் இனத்தை கொன்னு தீர்க்கறாங்களே. அதோட.. தாய்பிள்ளையா ஒரே ஊர்ல வாழ்ந்த மக்கள்..உறவுகளை இழந்து உயிரை வெறுத்து எங்கெங்கியோ சிதறிக்கெடக்கறாங்களே’’னு தழுதழுத்தார்.

துவண்டுபோய் உக்கார்ந்திருந்தேன். தொடர்ந்து பேசுன மணிவண்ணன் ‘‘உயிரை உலுக்கற இந்த துயரத்தை ‘அகதி’னு ஒரு படம் எடுத்து பதிவு பண்ணப்போறேன்.. அதுவும் இலங்கையிலேயே இதை எடுக்கணும்.
ஏன்னா..பெத்த தாய் இறந்த தகவலை ஃபோன்ல கேட்டு, ஏதோ ஒரு
நாட்டுல..எங்கியோ ஒரு ஆத்துலயோ,கடல்லயோ தலைமுழுகற எத்தனையோ மகன்களோட சோகம் சொல்லித் தீருமா? மனசுதான் ஆறுமா?’’

..கசிஞ்ச கண்களை மணிவண்ணன் துடைக்க..கண்ணீரோடு மௌனமானேன் நான்.

21 comments:

biskothupayal said...

ஐ முதல்ல நாந்தான்

biskothupayal said...

சிரிப்பா சிரிச்சு சிரியஸ் ஆக்கிட்டிங்கேள :):(

anthanan said...

அண்ணா மணியான மேட்டர். அப்படியே உங்க கவனத்துக்கு.... திரைப்பட தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரச்சாரத்துக்கு போறவங்க லிஸ்ட் பிரஸ்சுக்கு வந்திச்சு. அதில், இயக்குனர் மணிவண்ணன்னு அச்சிடுறதுக்கு பதிலா நடிகர் மணிவண்ணன்னு அச்சிட்டிருந்தாங்க. எவ்வோள் பெரிய வேதனை?

அந்தணன்

எம்.பி.உதயசூரியன் said...

//இயக்குனர் மணிவண்ணன்னு அச்சிடுறதுக்கு பதிலா நடிகர் மணிவண்ணன்னு அச்சிட்டிருந்தாங்க//

அண்ணா! ‘அக்குவேறு சுக்குநூறா' ஆக்கிட்டாங்கல்ல! இயக்குனர் மணிவண்ணன் எவ்வ்வளவு வேதனைப்பட்டிருப்பாரு?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இயக்குநர் மணிவண்ணனைவிட நடிகர் மணிவண்ணன்தான் மக்களிடம் அதிக ரீச்.. அதுனாலதான் போட்டிருக்காங்க..

மனுஷன் பாவம்.. கால்ல அடிபட்டு நடக்க முடியாம நடந்தும் ஊர் ஊரா போய் பேசுறாருப்பா..

நான் கேட்டதுக்கு, "அதுக்கென்ன தம்பி செய்யறது..? நம்ம உறவுகளுக்காக இதுகூட செய்யலைன்னா அப்புறம் நாம தமிழனா பொறந்ததே வேஸ்ட்டாச்சே.." என்றார்.

எம்.பி.உதயசூரியன் said...

//"அதுக்கென்ன தம்பி செய்யறது..? நம்ம உறவுகளுக்காக இதுகூட செய்யலைன்னா அப்புறம் நாம தமிழனா பொறந்ததே வேஸ்ட்டாச்சே.."//

இதுதான் உண்மையான பாசம்...உண்மைத்தமிழன்!

vinoth gowtham said...

ரெண்டு பேருமே எனக்கு பிடிக்கும்
இயக்குனர் மற்றும் நடிகர்..

எம்.பி.உதயசூரியன் said...

//ரெண்டு பேருமே எனக்கு பிடிக்கும்
இயக்குனர் மற்றும் நடிகர்..//

வினோத் கௌதம்.. 'வண்ண' கருத்து!
'மணி'யான மேட்டர்!

எம்.பி.உதயசூரியன் said...

பாசமுள்ள BISKOTHUPAYAL..உண்மைய உணர்த்திட்டிங்க!

செந்தில்குமார் said...

உதய் சார் ... நல்ல பதிவு..

காமெடி-ஆ ஆரம்பிச்சு... நச்சுன்னு ஒரு impact -ஓட முடிச்சிருக்கீங்க..

என்னதான் மணிவண்ணன்-ங்கற நடிகருக்கு ரீச் அதிகம்னாலும்... ஒரு இயக்குனராகவும் அவரு பட்டய கிளப்பினாருங்கறது உண்மை தான்...

ஈழம் பற்றிய அவரது உணர்வுகள் ரொம்ப உண்மையானவை... அவரும் சத்யராஜும் இந்த விஷயத்திலும் ஒத்த கருத்துடையவர்கள் என்று நினைக்கிறேன் ..

எம்.பி.உதயசூரியன் said...

//அவரும் சத்யராஜும் இந்த விஷயத்திலும் ஒத்த கருத்துடையவர்கள் //

கரெக்ட் செந்தில்! தமிழீழ ஆதரவு உணர்வில்.. ரெண்டு பேருமே 'ரெட்டைக்குழல் துப்பாக்கி'!

Sridhar said...

சிரிப்பா சிரிச்சு சிரியஸ் ஆக்கிட்டிங்கேள :):(

வழிமொழிகிரேன்.

Sridhar said...
This comment has been removed by the author.
ராகவன் said...

//நம்ம உறவுகளுக்காக இதுகூட செய்யலைன்னா அப்புறம் நாம தமிழனா பொறந்ததே வேஸ்ட்டாச்சே..//

உறவுகளுக்காக கவலைபடுறது நல்ல விசயந்தான்.

ஈழ தமிழச்சிக்காக கவலைப்படுற இவரு, தன் பையன் ஒரு இந்திய தமிழச்சிய கெடுத்த போது இவரு என்ன செஞ்சாரு? இவருகூட சேர்ந்து சீமானும் அந்த பொண்ணை மிரட்டவில்லையா?

இவர்கள் சேர்ந்து இலங்கை தமிழச்சி மானம் காக்க கிளம்பிவிட்டார்கள்.

ரொம்ப நல்லவன் said...

//சிங்கம் இளைச்சாலும் பிடறி இளைக்காதுல்ல! //
எப்படிண்ணா இப்படியெல்லாம்?

//உயிரை உலுக்கற இந்த துயரத்தை ‘அகதி’னு ஒரு படம் எடுத்து பதிவு பண்ணப்போறேன்.. அதுவும் இலங்கையிலேயே இதை எடுக்கணும்.
//
இடமாப்பா முக்கியம். மக்களோட சோகம் தீரணும். அதுதான் முக்கியம்.

MAHESHWAR said...

Sir, Sirippula aarambichu, sentimentla mudincha inda pathivu moolama, neengalum oru nalla tamil pada director aga mudiyum nu proove pannitteenga. Vazhthukkal.. Yeppo Nadiganaga poreenga sir.. Neengalum Oru Hero thane!!!!. Camp: Mumbai

எம்.பி.உதயசூரியன் said...

MAHESHWAR THEERPPE MAKKAL THEERPPU!?
UNGA AASIRVAADHATHODA.. NAMMA PADATHTHULAYE ORU MUKKIYAMAANA ROLIL NADIKKARENE SIR!

Fernando said...

``suda suda`` sonna
nanga kada kada nnu
sirikkanum.
analum kadaisi sogam
swiss Fernando

Fernando said...

nigeria ragavan,
manivannanai pattria vishayam pepperla parthu than ungalukkum
enakkum theriyum. aanal unmai
yarukkum theriyathe?
avar idaththil neengal irunthal
enna seiveergal?

ராகவன் said...

தோழர் ஃபெர்ணான்டோ,

நான் நைஜிரியா ராகவன் அல்ல. அவரை விட்டுவிடுங்கள்.

சில விஷயங்களை நம்ம எம்.பி.உதயசூரியன் மாதிரியான செயதியாளர் மூலம்தான் அறிந்து நம்ம வேண்டியுள்ளது. நமது ஈழ உறவுகள் படும் கஷ்டங்களை நாம் நேரிலா சென்று பார்த்தோம்?

நான் இவ்விடத்தில் இருந்தால், விடயம் வெளியாகி நாறும் முன் கமுக்கமாக கல்யாணம் செஞ்சு வைச்சிருப்பேன்!!!

சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்ற போதும்,இவர்கள் தமிழர் மானம் பற்றி பேசும் போதுதான் வலிக்குது!!!

வண்ணத்துபூச்சியார் said...

உணர்வுகள் இருப்பவரே ஒரு சிற்ந்த படைப்பாளியாக முடியும் என்பதற்கு இயக்குநர் மணிவண்ணன் ஒரு உண்மை உதாரணம்.

தலை வணங்குகிறேன்.

 
சுடச்சுட - by Templates para novo blogger