சுஜாதாவின் ஜீனி வேலை!

Sunday, May 24, 2009


மேடையில பேசறதுக்காக போறப்போ..சுஜாதா இடுப்புல
‘இருக்கவா நழுவவா’னு குஜாலா ஊசலாடுது வேட்டி. கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா
படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.


சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்!
ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னைத்தானே மெச்சிக்கக்கூட தயங்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!


இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா..
படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின்
வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!

ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா
பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை
‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன்.
எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.
ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

32 comments:

ருத்ரன் said...

அட... இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்டு... இருங்க, படிச்சுட்டு வரேன்...

ருத்ரன் said...

உங்களோட ரொம்ப இயல்பான வார்த்தைஜாலம் பிரமிக்கவைக்கிறது. நம்ம வாத்தியாரைப் பத்தி ரொம்ப சூப்பரா எழுதிட்டீங்க... நன்றி...நன்றி... (வினோத்துக்கு அனுப்பினமாதிரி எனக்கும் ஒரு காப்பி...)

பினாத்தல் சுரேஷ் said...

தலைவரைப் பத்தி படிக்கறதே ஒரு சுகம்தான். அதுலயும் நீங்க முதலாங்கை தகவலோட எழுதறீங்க.. நன்றி.

தமிழ்நெஞ்சம் said...

எங்க வாத்தியாரின் எழுத்துகளை மீண்டும் படிக்க ஆசையா இருக்கு.

Mike said...

sorry udayasooriyan

nakkrean has once again tried to make cheap money / publicity out of this issue.

see
http://img268.imageshack.us/img268/7114/image001w.jpg

for more information

வெட்டிப்பயல் said...

வாத்தியாரைப் பத்தி கலக்கல் பதிவு... அவர் சொன்ன மாதிரி உங்க தமிழ் உங்களுக்கு எப்பவும் சோறு போடும்...

அடுத்து தலைவர் சொன்ன மாதிரி சினி ஃபீல்டுக்கு போகலையா?

சென்ஷி said...

;-)))

மிக்க நன்றி.. வாத்தியாரைப்பற்றிய பகிர்வுகளுக்கு!!

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

வண்ணத்துபூச்சியார் said...

வழக்கம் போல் கலக்கல்..

சூப்பர். அட.. அவர் அப்பவே சொல்லிட்டார்...

yrskbalu said...

uday- balakumaran mattru eppo?

எம்.பி.உதயசூரியன் said...

கமெண்ட்ஸ் எழுதின
அனைவருக்கும் என் நன்றி.
நம்ம ‘சூப்பர்’வாத்தியார்
சுஜாதா நம்மோடுதான் இருக்கார்!

வாழ்க 'சுஜாதா' தமிழ்!

kutty.tamilish.com said...

தொலைநோக்கு பார்வை உடையவர்.அவருடைய எழுத்துகளும் அவருடைய புகழும் சாகவரம் பெற்றவை.
வாத்தியாரைப் பத்தி படிக்கறதே ஒரு சுகம்தான்.
நன்றி...நன்றி......

Sridhar said...

// மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம //

அருமை சூரியன் சார்.

// போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க //

திரையிலும் மின்ன ஞானத்தந்தை’ சுஜாதா! நண்பர்கள் எல்லோருடைய வாழ்த்துக்கள்.

Karthick said...

Sir...Vanakkam...

unga frienddoda stylela irukkungala wish pandrathu. Ungaloda mudhal postla irunthu unga blog padikren...first time i am posting a comment. BCAZ of this legand...very good one sir. All the very best...

தீப்பெட்டி said...

வழக்கம் போல...கலக்கல் பதிவு..

Bhuvanesh said...

நல்ல பிதிவு அண்ணே.. சுஜாதா சார் பத்தி எழுதுனதுக்கு நன்றி!! அவரு சொன்ன மாதிரி திரையுல ட்ரை செஞ்சீங்களா ??

நர்சிம் said...

முதல்முறை வருகிறேன்.தாமதத்திற்கு வருந்துகிறேன். கலக்கல்.

http://www.narsim.in/2009/01/2009.html

என்ற நினைப்பு ஒவ்வொரு நாளும் வந்து போகும். இதோ இன்றைய சாப்பாட்டை காவு வாங்கி விட்டது இந்தப் பதிவு. அவரின் மரணம் சற்று தாமதப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.ப்ச்

பானு said...

Hello, fellow Madurai-sider!

வணக்கம்,வாழ்த்துக்கள்."கிறுக்குச் சித்தர்’ கமல்ஹாசன்!"
மூலமாக,உங்கள் வலைபக்கம் அறிமுகம்.

Orkut ல்,"Universal Hero Kamal Haasan "communityல்
உங்கள் அனுமதி பெறாமல் "சித்தர் கமல்ஹாசன்!" என்ற
தலைப்பில்,உங்கள் வலைப்பதிவின் link கொடுத்தேன்.
ஏனெனில் நானும் ஒரு கமலச்சி.

"கிறுக்குச் சித்தர்",வெறும் சித்தர் ஆக காரணம்,கட்டுரையை படிக்குமுன்,"கிறுக்கு"என்பதை மட்டும் படித்து விட்டு,வீட்டிற்கு Auto அனுப்பி விட அங்கே,கொல்ல
Kamal பக்தர்கள் உள்ளதால்.
உங்கள் அனுமதி பெறாமல் இதனை செய்தமைக்கு,hope u won't send a tatasumo.
எல்லாம் உங்களுக்கு ஒரு விளம்பரம் தானே அப்பு?.

Thala Ajith,as u said, a real gem.Happened to see him in a relative's demise.Wot a down to earth personality!.

"ஹூசைனியின் ‘ஜப்பான் தம்பி’! "...Style king of Madurai in 80's.Reading about him after a long break. எங்கள் கல்லூரியில் சிலபல வருடங்களுக்கு முன் படித்த சீனியர் அவர் .

U have a charismatic writing.

Keep rocking sir,Best wishes!

முரளிகண்ணன் said...

அருமையா இருக்குங்க

Joe said...

சுஜாதா கிட்டவே பாராட்டு வாங்கிட்டீங்க, வாழ்த்துக்கள்.

//
தன்னைத்தானே மெச்சிக்கக்கூட தயங்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில.
//
இந்த வரி தான் இடிக்குது.

இப்போ எழுதுற எழுத்தாளர்கள் எல்லாம், நான் எழுதுறது மட்டும் தான் விலை மதிப்பற்றது, மத்தவன் எழுதுறதெல்லாம் குப்பை-ன்னு தான் சொல்றாங்க.

எம்.பி.உதயசூரியன் said...

//வீட்டிற்கு Auto அனுப்பி விட
Kamal பக்தர்கள் உள்ளதால்.
உங்கள் அனுமதி பெறாமல் இதனை செய்தமைக்கு,hope u won't send a tatasumo.//

பானு mam..ரொம்ப மகிழ்ச்சி!
மதுரைத் தமிழச்சி.. அதுவும் 'கமலச்சி'! அதான் auto,tata sumo அனுப்பறதுக்கு முன்ன 'மலர்க்கொத்து'அனுப்பிச்சிட்டீங்க!

செந்தில்குமார் said...

உதய் அண்ணே..

என்னோட வழக்கமான பின்னூட்டம் தான்.. 'கலக்கல்.. கலக்கல்...' .

எம்.பி.உதயசூரியன் said...

//வாத்தியாரைப் பத்தி படிக்கறதே ஒரு சுகம்தான்.//

வெல்கம் குட்டி! உங்களோட சின்னவயசு PHOTO சூப்பர்!

எம்.பி.உதயசூரியன் said...

//அவரின் மரணம் சற்று தாமதப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.ப்ச்//

ஆம் நர்சிம்! JUNIOR விகடன்ல உங்களோட சமூக அக்கறை பத்தி
கட்டுரை படித்தேன்.வாழ்த்துக்கள்!

எம்.பி.உதயசூரியன் said...

//இப்போ எழுதுற எழுத்தாளர்கள் எல்லாம், நான் எழுதுறது மட்டும் தான் விலை மதிப்பற்றது, மத்தவன் எழுதுறதெல்லாம் குப்பை-ன்னு தான் சொல்றாங்க.//

அந்த 'கிறுக்குகளை'குப்பைல போடுங்க
JOE!

எம்.பி.உதயசூரியன் said...

தீப்பெட்டி! முரளிகண்ணன்! உங்களோட 'ஒல்LI'யான விமர்சனம் எப்ப குண்டாகும்?

எம்.பி.உதயசூரியன் said...

//என்னோட வழக்கமான பின்னூட்டம் தான்.. 'கலக்கல்.//

செந்தில்குமார்.. ஃபர்ஸ்ட் பந்தில இருப்பிங்க! தாமதம் ஏன்? ரொம்ப BUSY!?

எம்.பி.உதயசூரியன் said...

//அடுத்து தலைவர் சொன்ன மாதிரி சினி ஃபீல்டுக்கு போகலையா?//


பாசமா விசாரிச்ச வெட்டிப்பயல்.. மற்றும் BHUVANESH.. வாழ்த்துக்கள் சொன்ன SRIDHAR சார்..நன்றி!
LIGHTS ON! STARTல இருக்கு நம்ம
சினிமா!

செந்தில்குமார் said...

//செந்தில்குமார்.. ஃபர்ஸ்ட் பந்தில இருப்பிங்க! தாமதம் ஏன்? ரொம்ப BUSY!?//

ஆமாம் உதய் அண்ணே... கடந்த சில நாட்களா கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு.. அதான் தாமதம்... :(

LA_Ram said...

அன்புள்ள உதயசூரியன்,

எங்கேயோ எதையோ தேடிக்கொண்டிருந்தவன் உங்கள் ‘ப்ளாக்’கைக் கண்டேன்.

அமரர் சுஜாதாவைப் பற்றி எங்கே படித்தாலும் தொண்டை அடைத்துக் கொள்கிறது.

நல்ல நினைவாஞ்சலி.

அது இருக்கட்டும், எப்படி நாம் இது நாள் வரை சந்திக்காமல் போய் விட்டோம்?!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

எம்.பி.உதயசூரியன் said...

//எப்படி நாம் இது நாள் வரை சந்திக்காமல் போய் விட்டோம்?!//

அன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்..அதுதான்
ஆச்சரியம்! நம்ம ‘சூப்பர்’வாத்தியார்
சுஜாதா ஆசியால்..கண்டுகொண்டோம்!
மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ருத்ரன் ஸாருக்கே நம்ம வாத்தியார்தான் குருவா..?

கேட்கவே ஆச்சரியமா இருக்கு..?

உ.சூ. நிசமாவே நீங்க சூ.தான்..!

 
சுடச்சுட - by Templates para novo blogger