ரஜினிக்கு அம்மா ‘மீனா’!

Thursday, May 14, 2009


டைட்டிலை படிச்சதும் ‘ப்ச்..அடுத்த அலப்பறைய
கௌப்பறியே’னு வாய்க்கு ரெண்டுபக்கமும் பிராக்கெட் போட்டுருப்பீங்களே!

நமக்கு தெரிஞ்ச முறைப்பொண்ணுங்க,
முறைக்காத பொண்ணுங்க அமுக்கமா சிரிச்சுகிட்டே கமுக்கமா வளர்ந்து ‘பெரிய மனுஷி’யாகி அப்புறம் ‘ப்ரிய மனுஷியா’வும் மாறுவாங்க! ஆனா..ரெண்டு கண்ணுல பாத்துகிட்டிருந்தப்பவே ‘ஹாய் ரஜினி அங்கிள்’னு பாடுன ‘குண்டு‘ மீனா..ஒரு ‘சிங்கிள் டீ கேப்புல’ ‘ராஜ்கிரண் மாமோய்’னு சொல்லி..அவருக்கு ‘நள்ளி
எலும்பான அலும்பு‘தான் நாடறியுமே!


அண்டை அயலார்லேர்ந்து..செண்டை வாசிக்கிற மலையாள பூமி, சண்டை போடற கன்னட மண்ணு, தொண்டை கிழிய டயலாக் பேசற தெலுங்கு தேசம்னு அத்தனை ‘திராவிட’ ரசிகர்களையும் தன்னோட கெண்டைவிழியால் சுண்டி இழுத்தவர் மீனா!

மீனான்னாலே என்னால ரெண்டு மேட்டர் மறக்கமுடியாது! ஒண்ணு..‘ஆனந்த விகடன்’ விமர்சனத்துல ஒருதடவை மீனாவைப் பத்தி ‘‘அந்த கண்கள்..அம்மாடியோ! அந்த பற்கள்..ஐயையோ!’’னு வந்த வரிகள்! அடுத்தது..
‘அகோர பசியோட இருந்தவனுக்கு புகாரி பிரியாணி தந்த மாதிரி’ மீனாவை நான் தன்னந்தனியா(பார்றா!) சந்திச்சது!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! அல்ட்ரா மாடர்ன் சொகுசு ஃப்ளாட். ஒரு வி.வி.ஐ.பி.யோட பேட்டிக்காக போயிருந்தேன். இந்த பிரபலம் அரசியல்,சினிமா ரெண்டு துறைகளையும் கடந்தவர். அம்புட்டுதான் சொல்ல
முடியும்.

நைட் டைம். டைட் செக்யூரிட்டி. ஹால்ல சிங்கம்
(நம்மதான்!) சிங்கிளா உக்காந்திருக்கு. பிடறி இல்லாததால..பொடனியை
சொறிஞ்சுகிட்டிருந்தேன். அப்போ பாத்து வர்றாங்க.. பூத்து குலுங்குன மாதிரி
மீனாவும்,அவங்க மம்மியும்! உள் ரூம்லேர்ந்து வந்த ‘பிரபலத்தின்‘ பி.ஏ. அவங்களை பாத்துகிட்டே..என்கிட்டே ‘‘கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. ஐயாகிட்ட ஃப்ரீயா பேசலாம்’’னு பவ்யமா சொன்னாரு.

இதைப்பாத்ததுமே மீனாவும்,மம்மியும் என்னை பாத்து
ஸ்னேகமா ஒரு ஸ்மைல் விட..நானும் ஹிஹி! உடனே பிரபலத்தின் பி.ஏ.
மீனா மம்மியை பாத்து ‘‘நீங்க வந்தது ஐயாவுக்கு தெரியாது. உள்ளவந்து தலையை(!?) காட்டுங்க’’னு சொன்னாரு. மம்மி மீனாவை பாத்து ‘பத்திரம்’ங்கற மாதிரி தலையாட்டிட்டு..என்கிட்டயும் ‘பாத்துக்கோங்க’ங்கற மாதிரி சைகை தர..நானும் மெய்க்காப்பாளர் ரேஞ்சுக்கு விறைப்பா உக்காந்தேன்.

எதிரெதிர் சோபாவில் மீனாவும் நானும். ‘‘படவா
ராஸ்கோல்! பாட்டி செத்தத கூட சிரிச்சுகிட்டே சொல்றியே..பொய்யா சொல்ற’’னு லாரன்ஸ் வாத்தியார் நம்பாம அடிச்சார் பாருங்க..அப்படி ஒரு சிரிச்ச மூஞ்சி நமக்கு. மீனாவோட முகமோ ‘புன்னகை தேசம்’.

அப்போ டீ வந்துச்சு. ஒரே ஒரு டீ. செம கமகம. என்கிட்ட குடுத்துட்டு போனாரு சிப்பந்தி. மீனாவை விட்டுட்டு எப்ப‘டீ’? ‘கடையேழு வள்ளல்களையும் கடைஞ்செடுத்த கடைக்குட்டி’னு காமிக்கணுமே? ‘‘மேம்..நீங்க எடுத்துக்கங்க’’ன்னு நீட்டினேன். ‘‘ஹைய்யோ..நான் ஒன்லி ஜூஸ்தான். டீ
காபியெல்லாம் தொடறதே இல்ல’’னு சிம்பொனியா கூவுது குயில்.

‘‘பிரபலத்தை பாக்க வந்திருக்கீங்களே..என்ன
விஷயம்?’’னேன். மீனா அநியாயத்துக்கு வெகுளி..‘‘மம்மி பாக்கணும்னு என்னை கூட்டிட்டு வந்தாங்க’’னு ‘கறந்த பால்போல கலப்படமில்லாம’ சொன்னப்போ..
இன்னும் ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ மீனாதான்னு தோணிச்சு.

அப்போ பாத்து பிரபலத்தின் பி.ஏ.வும் மம்மியும்
ஒண்ணா வந்தாங்க. என்கிட்ட வந்த பி.ஏ. ‘‘ஐயா வரச்சொன்னாங்க. பேட்டி
ஜோரா வரும்னு பேசிகிட்டிருக்காங்க’’னு சொன்ன அடுத்த நொடி..மீனா,மம்மி ரெண்டு பேர் முகத்திலயும் பெரிய இடி! ‘‘இவர் ப்ரஸ்ஸா?’’னு மம்மி கேக்க..பி.ஏ.வும் என் மினி பயோ டேட்டாவை நீட்ட..‘பால்கோவாவுல
பாகற்காயை வெச்சு தின்ன மாதிரி’ ‘தாயும் சேயும்’ முழிச்சாங்க!

நிற்க! டைட்டில் மேட்டருக்கு வரலாம்ல! ‘‘எஜமான்’’ பட வெற்றிவிழாவுல ரஜினி சொன்னாரு..‘‘ மீனா என்னோட குழந்தையா நடிச்சிருச்சு. இப்போ ஜோடியாவும் நடிச்சுருச்சு. அடுத்து என்னோட அம்மா ரோல்லதான் நடிக்கணும்’’னாரு. ‘‘ஆசை தோசை’’னு அங்க அழகு காட்டுன மீனாவுக்கு..இப்போ கல்யாணமாகப் போகுது!

நம்ம தமிழ்சினிமா சட்டப்படி..ஒரு நடிகை
கல்யாணமாயிட்டு திரும்பிவந்தாலே அடுத்து அண்ணி,அம்மா வேஷம்தானே ஆஸ்தான ரோல்! அப்புறமென்ன..‘ரஜினிக்கு அம்மா மீனா!’. சுபம்!

33 comments:

அன்புச்செல்வன் said...

தல, என்னா ஜொள்ளு.........!!!!!!!

முரளிகண்ணன் said...

மன்னா உங்கள் வர்ணனைகளுக்கு நான் அடிமை

vinoth gowtham said...

Antha siritha mugam matter super..
Nethu unga dosthu kooda meena akka pathi thaan eluthu irunthaaru..neengaluma..orey meena special padivaa iruku..

biskothupayal said...

டைட்டிலை படிச்சதும் ‘ப்ச்..அடுத்த அலப்பறைய
கௌப்பறியே’னு வாய்க்கு ரெண்டுபக்கமும் பிராக்கெட் போட்டுருப்பீங்களே!
ஆமாண்ணே! ஆமா!

M Bharat Kumar said...

anna,

Meena ponnu meena ponnu....anthanan mogam ungalukkum thothiyacha....

Sridhar said...

நேற்று உங்க ரெண்டுபேர் வீட்லயும் மீனா (பிஷ்). பதிவிலயும் மீனா (குஷ்).

// மம்மி மீனாவை பாத்து ‘பத்திரம்’ங்கற மாதிரி தலையாட்டிட்டு..என்கிட்டயும் ‘பாத்துக்கோங்க’ங்கற மாதிரி சைகை தர..நானும் மெய்க்காப்பாளர் ரேஞ்சுக்கு விறைப்பா உக்காந்தேன் //

பாலுக்கு பூனை காவலா

//..‘பால்கோவாவுல
பாகற்காயை வெச்சு தின்ன மாதிரி’ //

ஏன்? :)

மஞ்சள் ஜட்டி said...

என்ன உதயா!!

அந்தணன் மீனா வை பற்றி ஒரு இடுகை போட்டுட்டார் ன்ன உடனே...நீங்களும்..?? ஆமாம்., மீனா அம்மா எதுக்கு அந்த வி.ஐ.பி வீட்டுக்கு போனாங்க? பலான பலான சமாசாரமா?? ராஜலஷ்மி தான அவிங்க பேரு??

வண்ணத்துபூச்சியார் said...

பக்.. பக்... சூப்பர்...


அந்தணன் சார் கிட்ட அடுத்த பதிவு "புது புத்தக பிரியர்"" பார்த்திபன் என்று ஒரு Humble request போட்டிருக்கேன்.

இங்கேயும் போடுதேன்..

"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" ன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.

ஏதாவது நல்ல சேதி சொல்லுங்க..

கிரி said...

அப்பப்ப வேற எதோ சொல்ற மாதிரி தலைவரை வாரிட்டு இருக்கீங்க.... இருக்கட்டும்! இருக்கட்டும்!!

anthanan said...

அண்ணா,

இப்படி தனியா ஒரு பிரஸ் ஆளும், மீனாவும் இருந்தப்போ என்ன நடந்திச்சுன்னு ஒங்களுக்கு சொல்ல மறந்திட்டேன். இன்னிக்கு சொல்றேன். அடடா மிஸ் பண்ணிட்டமேன்னு நினைக்கப் போறீங்க....

அன்புச்செல்வன், நம்ம ஏரியாவுக்கு வராம அண்ணாச்சிக்கு பின்னு£ட்டமா? ரொம்ப கோவமா இருக்கேன்!

அந்தணன்

அமர பாரதி said...

என்ன இன்று மீனா ஸ்பெஷலா? அந்தனனும் மீனா பத்தியே எழுதியிருக்காரு. இந்த ஸ்டில்ஸ் பாத்ததே இல்லையே? தயவு செஞ்சு மீனாவ அம்மாவாக்கிடாதீங்க :-)

ஜுர்கேன் க்ருகேர்..... said...

பார்த்திட்டே இருங்க அடுத்தது பாட்டி தான் ........

நெல்லைத்தமிழ் said...

பால்கோவாவுல
பாகற்காயை வெச்சு தின்ன மாதிரி’ ‘தாயும் சேயும்’ முழிச்சாங்க!


அண்ணாச்சி... நீங்க எழுதுற விஷயங்கள் எல்லாம் வாழப்பழத்தில மருந்து வச்சு சாப்பிடுற மாதிரி இருக்கு. கசப்பான பல உண்மைகளை பதிவர்கள் முகம் சுழிக்காத நடையில் எழுதுறீங்கோ...

இன்னும் யார் யார் வண்டவாளங்கள் வெளிச்சத்துக்கு வரப்போகுதோ... அட முருகா... நடிகைங்களை காப்பாத்துப்பா..

விஷ்ணு. said...

ஜூப்பரு அப்பு

Anonymous said...

ஹா ஹா ஹா

மணல்கயிறு said...

என்னாலையும் ஸ்ரீதரலாயும் வாய ப்ராகெட்டெல்லாம் போட முடியாதுங்கண்ணா..வேணும்னா எக்ஸ்ட்ரா ரெண்டு பாக்கெட் பாக்கு போடலாம்.

நீங்க கப்ப நீட்டினப்ப “தேனுக்கே தேனீரா”ன்னு நினைச்சுருக்குமோ?

தன்னந்தனியா...இங்கதான் கெளம்பிச்சு உங்க அலப்பறை.

தமிழ் தாண்டவமாடுது, எங்க சூரியன் சொன்ன சொல்லுக்கு செம்மொழி வழிமொழியுது.

வெங்கிராஜா said...

குதூகலமான நடை உங்கள் வசமிருக்கிறது! அடுக்குமொழியில் இடிக்க சிரிக்கவும் வைக்கிறீர்கள். குறுகிய காலத்தில் ஃபாலோயர்களில் ஹாஃப் செஞ்சுரி அடிக்கப் போறீங்க! வாழ்த்துக்கள்!

எம்.பி.உதயசூரியன் said...

//தல, என்னா ஜொள்ளு //

அன்பு..அந்தணன் அண்ணா கோவிச்சிக்கிட்டார்னு சொல்றதல்லாம் சும்மா! ரெண்டு பக்கமும் பிராக்கெட் போட்டு தாக்குங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//மன்னா உங்கள் வர்ணனைகளுக்கு நான் அடிமை//

கண்ணா..ரசனைல நீங்க என் மன்னர்!

எம்.பி.உதயசூரியன் said...

VINOH..BISKOTHU..BHARATH !அடுத்த அலப்பறை உங்களுக்காகத்தான்!

எம்.பி.உதயசூரியன் said...

//பாலுக்கு பூனை காவலா//

சார்..மியா மியா! எக்ஸ்ட்ரா ரெண்டு பாக்கெட் பால் கிடைக்குமா?

எம்.பி.உதயசூரியன் said...

//மீனா அம்மா எதுக்கு அந்த வி.ஐ.பி வீட்டுக்கு போனாங்க?//

மஞ்சள் ஜட்டி! அனுபவிங்க..
ஆராய்ச்சி பண்ணாதிங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//அடுத்த பதிவு "புது புத்தக பிரியர்"" பார்த்திபன் //

வண்ணத்துபூச்சியார்..
பார்த்தி பதிவு on the way!

எம்.பி.உதயசூரியன் said...

//தலைவரை வாரிட்டு இருக்கீங்க.... இருக்கட்டும்!//

கிரி..தலை வாருவேன்.. தலைவரை வாருவேனா?

எம்.பி.உதயசூரியன் said...

//தயவு செஞ்சு மீனாவ அம்மாவாக்கிடாதீங்க :-)//

அமர பாரதி.. இத மீனா கணவர்கிட்ட சொல்ற போறீங்க!?

எம்.பி.உதயசூரியன் said...

ஜுர்கேன் க்ருகேர்..விஷ்ணு.. shirdi.saidasan...சுடச்சுட வாங்க வாங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//அண்ணாச்சி... நீங்க எழுதுற விஷயங்கள் எல்லாம் வாழப்பழத்தில மருந்து வச்சு சாப்பிடுற மாதிரி இருக்கு.//

நெல்லைத்தமிழ் அண்ணாச்சி..வாழப்பழத்தில மருந்து வச்சு.. தலவாழ விருந்தும் வச்சமாதிரி
இருக்கு!

எம்.பி.உதயசூரியன் said...

//சூரியன் சொன்ன சொல்லுக்கு செம்மொழி வழிமொழியுது.//


மணல்கயிறு.. தல! உங்ககிட்டதான் தமிழ் தாண்டவமாடுது!எம்.பி.உதயசூரியன் said...

//அடடா மிஸ் பண்ணிட்டமேன்னு நினைக்கப் போறீங்க//

அண்ணா..என்ன செய்வான் இந்த 'அப்ப்பாவி இளைஞ்ஜன்?'

எம்.பி.உதயசூரியன் said...

//குறுகிய காலத்தில் ஃபாலோயர்களில் ஹாஃப் செஞ்சுரி அடிக்கப் போறீங்க!//

வெங்கிராஜா..உங்கள் வாழ்த்துக்கள் படிச்சதும் செஞ்சுரி அடிச்ச மகிழ்ச்சி!

வால்பையன் said...

பிரபலத்தின் பேர மறைத்த நீங்கள் மீனாவின் பெயரை நேரடியாக சொன்னது தப்பு!

Bhuvanesh said...

தல தலைவர வெச்சு இப்படி போங்கு ஆட்டம் ஆடினதுக்காக தலைவரை பத்தி ஒரு சூப்பர் மேட்டர் போடுங்க..

Monks said...

//தயவு செஞ்சு மீனாவ அம்மாவாக்கிடாதீங்க :-)//

அமர பாரதி.. இத மீனா கணவர்கிட்ட சொல்ற போறீங்க!?

//மீனா அம்மா எதுக்கு அந்த வி.ஐ.பி வீட்டுக்கு போனாங்க?//

மஞ்சள் ஜட்டி! அனுபவிங்க..
ஆராய்ச்சி பண்ணாதிங்க!

//தலைவரை வாரிட்டு இருக்கீங்க.... இருக்கட்டும்!//

கிரி..தலை வாருவேன்.. தலைவரை வாருவேனா?


பதில்கள் அத்தனையும் 'நச்'

//பிரபலத்தின் பேர மறைத்த நீங்கள் மீனாவின் பெயரை நேரடியாக சொன்னது தப்பு!//

இதுக்கு என்ன சொல்லப் போறீங்க :)

 
சுடச்சுட - by Templates para novo blogger