ராஜா..யுவன்..கிச்சுகிச்சு!

Saturday, May 9, 2009




இசைஞானி இளையராஜாவும் யுவன்ஷங்கர் ராஜாவும் பேசிக்கறதை பாத்தா..பழைய ‘தெய்வமகன்’ படத்துல அப்பா சிவாஜியும்,மகன் சிவாஜியும் பேசிக்கறமாதிரியே படுஜாலியா இருக்கும்!

இளசுகள் பட்டாளத்தோட காதுகளை ஒட்டுமொத்தமா
தன்னோட பேருக்கு பட்டா போட்டுகிட்ட இசையமைப்பாளர்.. யுவன்ஷங்கர்
ராஜா! டீக்கடை..பூக்கடை..எஃப்.எம்..குப்பம்னு யம்மாடியோ..எட்டு
திசைகள்லயும் கும்மாங்குத்தா தாக்குது யுவனோட ஆடியோ!

பாட்டுல ஹைபிட்ச் சவுண்டுல பிச்சு பொளக்கற
யுவன்..நிஜத்துல ‘சைலன்ட் ஐலன்ட்’! ‘பத்து வார்த்தைகள் தொடர்ந்து பேசுங்க..பத்துலட்ச ரூபாய் ரெடி‘னு பணக்கட்டை நீட்டினாலும்..அதிகபட்சம் ரெண்டு வார்த்தைகள்லயே பதில் சொல்ற யுவனை வெச்சு மூணுபக்க மேட்டர் எப்படி பண்றது’னு முணுமுணுக்குது மனசு. இப்பேர்ப்பட்ட யுவனை பேட்டி எடுக்கப் போனேன்.

‘பண்ணைப்புரத்து சின்னத்தாயி பெத்த பாமரமேதை’
இசைஞானியின் இல்லம். காத்து வீசுனாக்கூட கறைபட்டுருமோங்கற அளவுக்கு வீடு முழுசும் பரிசுத்த வெள்ளை. சூயிங்கம்மை மென்னுகிட்டே வாசல்ல நின்னுகிட்டு என்னை கூச்சத்தோட வரவேற்றாரு யுவன்.

இளையராஜாவின் ‘இளைய ராஜா’வோட ரூமுக்கு போனேன். பேசினாலே சங்கீதமா எதிரொலிக்குமோங்கிற அமைதியான சூழல். ‘சரோஜா
சாமான் நிக்கல்லோ’னு நக்கலா பேட்டியை ஆரம்பிக்க நெனைச்சேன். ஆனா..
வாய்க்கு தாப்பா போட்டுகிட்டு, பால்பாப்பா மாதிரி முகத்தை வெச்சுகிட்டு, நகத்தை கடிச்சுகிட்டே யுவன் என்னையே பாத்துகிட்டிருந்தாரு.

எடுத்து வீசினேன் ‘பிரம்மாத அஸ்திரத்தை’!
‘‘யுவன்..இங்கிலீஷ்ல பாட்டெல்லாம் எழுதறீங்களாமே’’. முதல் கேள்விக்கே ‘உடைத்த தேங்காயின் உள்புற’ வெள்ளைல சிரிச்சாரு. அப்படி தொடங்கின பேட்டியில..சில செப்படி விஷயங்களை சொல்ல..குஷியான யுவன் ‘சிதறு
தேங்காயா’ பதில்களை வீசினாரு. ஹாஹா..ரெண்டுபக்க மேட்டர் ரெடி.

இந்த பேட்டியில உள்காமெடி என்னன்னா..‘‘உங்க ஹாபி என்ன’ன்னு யுவன்கிட்ட கேட்டேன். ‘‘கார் கலெக்ஷன் ரொம்ப புடிக்கும்’’னாரு. உடனே நான் அப்பாவியா ‘‘எந்தமாதிரி கார்டு கலெக்ஷன்? கிரீட்டிங் கார்டு..இல்ல’’னு கேட்டு முடிக்கறதுக்குள்ளயே ‘‘ஹல்லோ பாஸ்..கார்டு கலெக்ஷன் இல்ல..கார் கலெக்ஷன் பிடிக்கும்னேன். மார்க்கெட்டுக்கு புதுசா எந்த மாடல் கார்
வந்தாலும்..எனக்கு பிடிச்சா, அடுத்த சில நாள்ல அது ஐயாவோட போர்டிகோல நிக்கும்’’னாரு. பணக்‘கார்’ர பையன்!

‘இப்படிக்கு இளமை’னு நான் ‘குங்குமத்துல’ பண்ண அந்த தொடர்ல ஹைலைட்டா ‘அப்பா கமெண்ட்ஸ்’னு ஒரு பாக்ஸ் மேட்டர் வரும். அதுல தன் மகன் யுவன் பற்றி ராஜா கருத்து சொல்லணும். இதுக்காக யுவன்கிட்ட சொல்லி ‘‘அப்பாகிட்ட அஞ்சுநிமிஷம் பேசணும்’’னேன். ‘‘ஆங்..டாடிகிட்டயா? சரி வாங்க’’னு ஹாலுக்கு என்னை கூட்டிட்டு போனாரு.

என்னை சோபாவுல உக்காரச்சொல்லிட்டு, உள் ரூமை பாத்து ‘‘டாட்..டாட்’’னு செல்லமா கூப்பிட்டாரு. ‘‘என்னப்பா’’னு முதல்ல குரல் வந்துச்சு. அப்புறமா ‘அஞ்சே கால் அடி உயர பருத்தியா’ ராஜா வர..பரவசத்துல நெஞ்சே பதறுது. ‘மேதைகளோட பேசறதையே வேஸ்ட்ரானு நெனைக்கற
மேஸ்ட்ரோகிட்ட’ என்னை அறிமுகப்படுத்தினாரு யுவன்.

வணங்கினேன். ‘சொல்லுங்க’ன்னாரு. ராஜா சோபாவுல உக்காந்தாரு. யுவன் முகத்தை அவர் பாக்க..பக்கத்துல போன யுவன் நகத்தை
கடிச்சிகிட்டே ‘‘டாட்..டாட்..வந்து..’’னு ஏதோ ஒரு ராகத்துல இழுத்தாரு. ‘‘என்ன விஷயம்? சொல்லுப்பா’’ன்னாரு. ‘‘டாட்..வந்து..என்னோட இன்டர்வியூ வருது.
ஸோ தட்..உங்க கமெண்ட் வேணும் டாட்!’’னு வார்த்தைகளையும் நகத்தையும் சேர்த்து கடிச்சுகிட்டே சொல்ல..ராஜா மெள்ளமா தலையில அடிச்சுகிட்டே சிரிச்சாரு.

எனக்கோ ‘‘என்னடாது..‘தெய்வமகன்’ல அப்பா சிவாஜிகிட்ட ‘ஹோட்டேல்’ நடத்தற மகன் சிவாஜி, நகம் கடிச்சுகிட்டே செலவுக்கு பணம் கேக்கற சீன் மாதிரியே இருக்கே’’னு பல்லை கடிச்சுகிட்டு சிரிச்சேன்.

‘‘தம்பி..நீங்களே சொல்லுங்க’’ன்னாரு ராஜா. சொன்னேன்.
‘‘யுவனை பத்தி என்ன சொல்றது?’’ன்னவர் யுவனை பாத்து ‘‘பாராட்டியா..
திட்டியா?’’ன்னு கேட்டாரு. ஏதோ டான்ஸ் ஸ்டெப் வெக்கிறமாதிரியே ஒரு மூவ்மென்ட்ல ஆடிகிட்டிருந்த யுவன் ‘‘நோ ப்ராப்ளம் டாட்..எது வேணும்னாலும் சொல்லுங்க’’ன்னு வெகுளியா சொல்ல..கோரஸா சிரிச்சோம்.

யுவன் கன்னத்தை செல்லமா தட்டின ராஜா ’’எந்த தொழிலா இருந்தாலும் பக்தியோட செய்யணும். பக்தி..வெற்றியை தரும். ஆணவமில்லாத வெற்றி ஆயுளுக்கும் நிம்மதியை தரும். அப்படியான பக்தியும் நிம்மதியும்
யுவனுக்கு வாய்க்கணும்னு இறைவனை வேண்டிக்கறேன்’’னு சொல்லி ‘வாழை இலையை கிழிச்சமாதிரி’ புன்னகைச்சாரு ராஜா.

உடனே யுவன் அவசரமாக ‘‘டாட்..இதுபோதும்! இதுக்குமேல பேசினீங்கன்னா என் இன்டர்வியூ சாமி புக்லதான் வரும்’’னு சொல்ல..ராஜா ரசிச்சு பாக்க..சிரிச்சுகிட்டே கிளம்பினேன்.

35 comments:

Sridhar said...

அஞ்சே கால் அடி உயர பருத்தியா’ ராஜா வர..பரவசத்துல நெஞ்சே பதறுது. ‘மேதைகளோட பேசறதையே வேஸ்ட்ரானு நெனைக்கற
மேஸ்ட்ரோகிட்ட’ என்னை அறிமுகப்படுத்தினாரு யுவன்.

அருமை. வார்த்தை விளையாட்டு

தமிழ்நெஞ்சம் said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

Sukumar Swaminathan said...

உங்கள் விவரிப்பு நடை அருமை....
கலக்குங்க பாஸ்...

எம்.பி.உதயசூரியன் said...

//உங்கள் விவரிப்பு நடை அருமை....
கலக்குங்க பாஸ்...//

ப்ரிய சுகுமார்! உங்க 'வாசக' ரசனைக்கு என் அன்பு!

அமர பாரதி said...

இளைய ராஜாவின் மேஸ்ட்ரோ பட்டம் கேள்விக்குரியது.

அமர பாரதி said...

//ஆணவமில்லாத வெற்றி ஆயுளுக்கும் நிம்மதியை தரும்// அவர் சொன்ன இந்த வசனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வண்ணத்துபூச்சியார் said...

நண்பரே வணக்கம்.. அம்மா உடல் நலம் தேறி விட்டது.. Nothing to worry...

அவசர டிரிப் கோவை / பழநி சென்று இன்று தான் திரும்பினேன்.

Back To Chennai....

அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

vigneshwaran shanmugam said...

அமர பாரதி,

"maestro" என்பது "ஆசிரியர்" என்னும் பொருள் தரக் கூடிய ஒரு வார்த்தை.அது இசையில் "இசை கலைஞர்களை வழி நடத்தி "conduct" செய்யும் நபருக்கு கொடுக்கப்படும் ஒரு அடை மொழி.


இளைய ராஜாவை விட அந்த பட்டதிற்க்கு தகுதி உடையவர் இங்கே யார் இருக்கிறார்கள்.

எம்.பி.உதயசூரியன் said...

அன்பு அமரபாரதி..vigneshvaran பதில் அருமை. கருத்து திருப்தியா?
ஸ்ரீதர் சார்..அமரபாரதி கேள்வி பற்றி?

எம்.பி.உதயசூரியன் said...

//அவசர டிரிப் கோவை / பழநி சென்று இன்று தான் திரும்பினேன்.//

நிம்மதி பாஸ்!
மலரட்டும் நந்தவனம்!

எம்.பி.உதயசூரியன் said...

//தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009//

தாயாக வாழ்த்திய
தமிழ்நெஞ்சே..வணக்கம்!

Sridhar said...

இளைய ராஜாவின் மேஸ்ட்ரோ பட்டம் கேள்விக்குரியது

அண்பர் அமர பாரதி எந்த கோணத்தில் இருந்து பார்க்கிரார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது அடுத்த பின்னூட்த்தில் இருந்து ராஜாவின் ஆணவத்தை பற்றி பேசுவதினால் அவர் ராஜா என்ற இசையமைப்பாளர் பற்றி பேசவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

மேஸ்ட்ரோ பட்டம் அவரது இசை ஆளுமைதனத்திற்கு கொடுக்கப்பட்டது.
தனக்குதானே சூப்பர்ஸ்டார் என பட்ட்ம் போல் அல்ல (சொம்பு).

அவரின் இசை கோர்ப்பு என பல விஷயங்கல் பார்த்து விற்பன்னர்கலால் ஏற்று கொண்ட பட்டம் அது.அதில் தனிமணிதனின் நடவடிக்கை அது விவாதற்கு உரியது என்றாலும் அதையும் பட்டத்தையும் இணைத்து முடிச்சு போட கூடாது.

அவரின் இசையை பற்றி ஆரோக்கியமான விவாதம் என்றால் நாம் பேசலாம்.மேஸ்ட்ரோ பட்டம் அவரின் இசைக்காக மட்டுமே.

விஷ்ணு. said...

//அஞ்சே கால் அடி உயர பருத்தியா’ ராஜா வர..பரவசத்துல நெஞ்சே பதறுது. ‘மேதைகளோட பேசறதையே வேஸ்ட்ரானு நெனைக்கற
மேஸ்ட்ரோகிட்ட’ என்னை அறிமுகப்படுத்தினாரு யுவன்.//

நல்ல வார்த்தை விளையாட்டு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வார்த்தைகளில் சிலம்பம் விளையாடுகிறது தோழரே..

தொடரட்டு்ம் உமது இலக்கியப் பணி..!

எம்.பி.உதயசூரியன் said...

//வார்த்தைகளில் சிலம்பம் விளையாடுகிறது தோழரே//

உண்மைத் தமிழன்...
உங்கள் வார்த்தைகள் எனக்கு உரம்!
என்றும் வேண்டும் இந்த வரம்!

எம்.பி.உதயசூரியன் said...

//நல்ல வார்த்தை விளையாட்டு..//

விஷ்ணு.. 'ராஜா' உங்களையும் அறிமுகப்படுத்திட்டாரே!

தமிழ்ப்பறவை said...

நல்லா சுவாரஸ்யமா இருந்தது பதிவு...

வண்ணத்துபூச்சியார் said...

பக் பக் பண்ண முடியாத பதிவு...

உதய் சாருக்கு ஒரு ஒ...

அமர பாரதி said...
This comment has been removed by the author.
அமர பாரதி said...

விக்னேஸ்வரன்,

//"maestro" என்பது "ஆசிரியர்" என்னும் பொருள் தரக் கூடிய ஒரு வார்த்தை.அது இசையில் "இசை கலைஞர்களை வழி நடத்தி "conduct" செய்யும் நபருக்கு கொடுக்கப்படும் ஒரு அடை மொழி.//

இசை உலகில் மேஸ்ட்ரோ என்பது "சிம்போனி" என்ற இசைக் கலவையை கன்டக்ட் செவதற்காக கொடுக்கப்படுவது. இவர் செய்த திருவாசகம் சிம்போனி என்பதே கேள்விக்கிறியது. உலக அளவில் மேஸ்ட்ரோ பட்டம் வாங்கியவர்கள் மிகச் சிலரே. அவரை விட அந்த பட்டத்துக்கு தகுதியானவர்கள் "தமிழ் நாட்டில்" இல்லாமல் இருக்கலாம். அவருடைய இசை தமிழ் நாட்டில் போற்றுதலுக்குரியது என்பது சந்தேகம் இல்லை

vigneshwaran shanmugam said...

//இசை உலகில் மேஸ்ட்ரோ என்பது "சிம்போனி" என்ற இசைக் கலவையை கன்டக்ட் செவதற்காக கொடுக்கப்படுவது.//
அமர பாரதி ,

அப்பிடின்னு எவன் சொன்னது..நீங்களா ஒன்னு நெனச்சுக்குரீங...நீங்களா ஒன்னு பேசிக்கிரீங்க...

vigneshwaran shanmugam said...

அன்பர் அமர பாரதிக்கு,

http://en.wikipedia.org/wiki/Maestro

Vijayasarathyr said...

Dear Suriyan,

Good that you have added Name and URL option to post comment....

Start counting the comments from me hereafter...

அமர பாரதி said...

//அப்பிடின்னு எவன் சொன்னது..நீங்களா ஒன்னு நெனச்சுக்குரீங...நீங்களா ஒன்னு பேசிக்கிரீங்க...//

உண்மைதான் விக்னேஸ்வரன். நீங்கள் சொல்வது சரிதான். நான் சொல்ல வந்ததை சரியாக வெளிப்படுத்தவில்லை. பிறிதொரு சமயம் சரியாக சொல்கிறேன்.

Anonymous said...

கலக்குறீங்க பாஸ்

vigneshwaran shanmugam said...

its ok amara barathi,

lots of people misunderstand this "maestro" title like urself. :)

cheers

அமர பாரதி said...

Vinkeswaran,

It is not OK. I did not misunderstand Maestro. Ilayaraja Maestro title is questionable and I did not express what I tried to convey about Maestro and Ilayaraja. Thats what I meant.

Devinth said...

pannai pura raasavey kattina mettidhu rosaavey....

raja raja thaan "MAESTRO" ivarukku kodukkalana vera yarukku....

vigneshwaran shanmugam said...

amara baarathi,

ushhhhhhhhhhhhhhhhh...I have given u the explanation of "what maestro" means ...

irundhum adam pidikireenga...freeya vidunga...

அமர பாரதி said...

விக்னேஸ்வரன்,

மேஸ்ட்ரோ பட்டத்துக்கு இளையாராஜா உரியவரல்ல என்ற என்னுடைய கருத்து சரியாக வெளிப்படவில்லை என்ற எண்ணத்திலேயே மறுபடியும் பிண்ணுட்டமிட்டேன். அதில் உஷ் வேறா? நீங்கள் சொன்ன விளக்கத்தின் படி ஒவ்வொரு லோக்கல் ஆர்க்கெஸ்ட்ராவில் பாட்டை அமைக்கும் ஒவ்வொரு நபரும் மேஸ்ட்ரோ தான். அதுதான் நீங்கள் சொல்ல வந்ததா? தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் மேஸ்ட்ரோக்கள் இருப்பார்கள்.

நீங்களும் ப்ரீயா விடுங்க.

அமர பாரதி said...

நீங்க சொன்ன விளக்கத்தின்படி இளைய ராஜா ஒரு மேஸ்ட்ரோ தான். ஒத்துக்கொள்கிறேன்.

vigneshwaran shanmugam said...

அமர பாரதி

என்ன சார் காமெடி பண்றீங்க .லோக்கல் வாத்தியங்குளுக்கு சொந்தமா நோட்ஸ் குடுகுராங்களா? சொல்லவே இல்ல
ஒன்னு நீங்களாவது மேஸ்ட்ரோ ந என்னான்னு சொல்லணும்...இல்லாட்டி சொல்றயவது ஒத்துக்கணும்
"நான் சரியாய் சொல்லல"...அப்டின்னு சொன்னா என்ன அர்த்தம்...
என்னதான் சொல்ல வரீங்க நீங்க கடைசீல ...

Anand said...

//"நிஜத்துல ‘சைலன்ட் ஐலன்ட்’",// //"இளையராஜாவின் ‘இளைய ராஜா’வோட ரூமுக்கு போனேன்"//"ஏதோ ஒரு ராகத்துல இழுத்தாரு"//


உங்க எழுத்து நடை "நடனம்" ஆடுது நண்பரே..! கலக்குங்க.!!

Muthukumar said...

>> இவர் செய்த திருவாசகம் சிம்போனி என்பதே கேள்விக்கிறியது <<

திருவாசக இசைக்கோர்வையை சிம்பொனி என்று இளையராஜா எங்குமே சொல்லவில்லை. சொல்லப்போனால் "அது சிம்பொனி அல்ல ஆரட்டோரியோ என்ற வகையில்தான் சேரும்" என்றுதான் சுஜாதாவிற்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியிருக்கிறார். (ஆரட்டோரியோ என்பது வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப்பட்ட புனிதமான கருத்துள்ள இசைப்படைப்பு - musical work for orchestra and voices on a sacred theme - சுஜாதா)

Anonymous said...

பட்டம் அவரது இசைக்குத்தான் என்று தெளிவாக சொன்னப்பிறகும் அடம் பிடிப்பதை பார்த்தால். இவர் அவரது இசையை விட வேறு எதையோ தான் இரசிப்பதாக தெரிகிறது. அவரது இரசிப்பை சொன்னால் அது சம்பந்தமாகவே விவாதிக்கலாம். அதை விடுத்து அதோ போரானா அவன் கெட்டவன், எனக்கு தெரிந்த ஒருவன் சொன்னன் என்று சொல்வது போல் சொல்லாமல் நிறுத்தலாம்.

பனிமலர்.

 
சுடச்சுட - by Templates para novo blogger