கலைஞரை அழவைத்த வைரமுத்து!

Saturday, May 16, 2009


கிரிக்கெட்டுல வேணும்னா ‘ஆட்ட நாயகன்’ வெவ்வேற வீரர்களா இருக்கலாம். ஆனா..கவிப்பேரரசு கலந்துக்கற எந்த கூட்டமானாலும் ‘கூட்ட நாயகன்’ அவரா மட்டும்தான் இருப்பாரு!

‘கொக்கோ கோலா நிறம்..கொட்ற கவிதைகளோ
உலகத்தரம்..இவர் தமிழுக்கு கிடைச்ச தனி வரம்’னு ‘டமுக்கு டப்பா’ கவிதை
பாடி..டமுக்கு அடிச்சு வைரமுத்துவை அறிமுகம் பண்ணவேண்டிய
அவசியம்லாம் இல்லை.பொத்தாம்பொதுவான விழாவானாலும்..எத்தாம்பெரிய கூட்டம்னாலும் தன்னோட சுட்டுவிரலை சுட்டுப்புடற மாதிரி நீட்டி வைரமுத்து தன் ‘மேக்னட்டு’ குரல்ல பேசற அழகுக்கு ‘நகைநட்டு’ அத்தனையும் அள்ளிக்
குடுக்கலாம்!

‘நல்லது நண்பர்களே..வைரமுத்து பற்றி உங்களுக்கு முக்கியமாக இரண்டு செய்திகள் சொல்ல ஆசைப்படுகிறேன்’னு கவிஞரோட
பாஷையிலேயே ஆரம்பிக்கறேன்.

அண்ணா அறிவாலயம் உள்ளே..கலைஞர் அரங்கத்துல ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர்கள்னு பெரும்படையே மேடையிலிருக்கு. ஆளாளுக்கு பேசி கைதட்டலை அள்ள..அத்தனை ‘தட்டலையும்‘ சேர்த்து மொத்தமா ‘தட்டிகிட்டு’
போக.. வைரமுத்து மைக் பிடிச்சாரு...

‘ஒரு வேந்தன் மாதிரி பாத்துகிட்டு காந்தக் குரல்’ல ‘‘நண்பர்களே! நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.. தலைவர் கலைஞருக்கு
நான்கு மகன்கள் என்று! ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா..முத்தமிழறிஞர் கலைஞருக்கு மொத்தம் ஐந்து மகன்கள்!’’ என்று சொல்லி நிறுத்த..கூட்டமே திடுக்கிட்டு பாக்க..கலைஞரும் திகைச்சு பாக்க..அரங்கமே கிறங்கி நிக்குது!

‘பிடிபட்டதடா பாஞ்சாலங்குறிச்சி’ங்கற பூரிப்போட
தொடர்ந்து பாஞ்சாரு பாருங்க கவிஞர்..‘‘ஆம் நண்பர்களே! கலைஞருக்கு
மொத்தம் ஐந்து மகன்கள். மூத்தவர்..மு.க.முத்து. அடுத்தவர்..மு.க.அழகிரி.
மூன்றாமவர்..மு.க.ஸ்டாலின். நாலாவது..நம்ம மு.க.தமிழரசு. ஆனால்
இவர்களுக்கெல்லாம் மூத்த அந்த முதல்மகன் யார் தெரியுமா?’’னு மறுபடியும்
கொக்கியை போட..சஸ்பென்ஸ்ல சிக்கித்தவிக்குது கூட்டம்!

இன்னும் பின்றாரு கவிஞர்..‘‘பதினான்காம் வயதிலேர்ந்து கலைஞர் தன்னுடைய தோளில் தூக்கி, மார்பில் தாங்கி வளர்த்த ‘முரசொலி’ பத்திரிகைதான் அவருடைய மூத்தமகன்!’’னு சொல்லி முடிக்க..உணர்ச்சிவசப்பட்ட கலைஞர் கண்ணீர் வடிக்க..அரங்கமே நொறுங்கறமாதிரி கைதட்டல் வெடிக்க..
அப்போ வைரமுத்து பாத்த பார்வை இருக்கே..‘அங்கே பாரதி தெரிந்தான்!’

ரெண்டாவது சங்கதியும் கலைஞர் சம்பந்தப்பட்டதுதான். 2006 மே 11ம் தேதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட். அன்னிக்கு பொழுது விடிஞ்சதுமே கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு போயிட்டேன். தி.மு.க. கூட்டணி வெற்றியால் கோபாலபுரமே ‘கோலாகல‘புரமானது.

அப்போ நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர். வெற்றி பெற்ற அந்த முதல் நிமிஷங்கள்ல கலைஞரோட ரியாக்ஷனையும்.சிச்சுவேஷனையும் நேர்ல பாத்தேன். அதைவெச்சு ‘முதல்வரின் முதல் நிமிடங்கள்’னு ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி பண்ணேன். அந்த நிமிஷங்களை ‘கலைஞர் கூடவே இருந்த கவிப்பேரரசு
விவரிச்சா நல்லா இருக்குமே‘ன்னு வைரமுத்துகிட்டே பேசினேன்.

‘‘நேர அவகாசம் இல்லையே உதயசூரியன்!’’ன்னாரு. விடுவமா? ‘‘இதிகாசம் படைச்சவருக்கு அவகாசம் அவசியமா?’’ன்னேன். நம்ம ‘சகவாசம்‘ தெரிஞ்சு ரசிச்சு சிரிச்சவர்..ஃபோன்லயே அடுக்கடுக்கா விவரிச்சாரு. நானும் அந்த ஸ்பாட்ல இருந்ததால ஜோரா கட்டுரை எழுதி முடிச்சுட்டேன். வைரமுத்துக்கு
ஃபோன்ல படிச்சுக்காட்டறேன்..

‘‘முத்தமிழும் ஆசி கூற..நான்கு திசைகளும் பூத்தூவ..ஐந்தாம் முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்’’னு நான் எழுதின ஓப்பனிங்கை கேட்டதுமே..‘‘உதயசூரியன்..இது நீங்க சொல்வதா? நான்
சொல்வதா?’’ன்னாரு. ‘‘கட்டுரையோட ஆரம்ப வரிகள் சார்’’னேன். ‘‘அப்போ..இதை என் வரிகளாக வாசகர்கள் கருதிவிடக்கூடாது. உங்களுக்கான பாராட்டு
உங்களைத்தான் சேரவேன்டும்’’னு கம்பீரமா சொன்னாரு.

மூணாவது பாராவிலேர்ந்து கவிஞரோட விவரிப்பு
ஆரம்பமாகுது. அந்த பாராவை படிச்சதுமே ‘‘சரியான இடம். நில்லுங்கள். இந்த
பாராவின் தொடக்கத்தில் ‘இதை வைரமுத்துவே தன் வாய்மொழியால் விவரிக்
கிறார்’ என்று போடுங்கள்’’னாரு! சூப்பர்!

கட்டுரை ‘குங்குமத்தில்’ வெளியான நாள்..அதிகாலையிலேயே என் செல் குதித்தது! எடுத்தால்..கவிஞரின் உதவியாளர் பாஸ்கர் ‘‘சார் உங்ககிட்ட பேசறாங்க’’னாரு. பேசினார் வைரமுத்து...‘‘அருமை உதயசூரியன்! என் சொல்பேச்சை செல்பேச்சாக கேட்டு..நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை மிகப்பிரமாதம். தலைவர் கலைஞரிடம் இப்போதுதான் பேசினேன். உங்களைப்பற்றி சொன்னேன். மிகவும் பாராட்டினார். விகடன் தயாரிப்பல்லவா நீங்கள்! விரைவாக நிறைவாக செய்திருக்கிறீர்கள்!’’னு அந்த ‘கவிஞர் சிகரம்’ இந்த கூழாங்கல்லை குனிஞ்சு
பாராட்டினதுல மனசே கனிஞ்சுபோச்சு!

35 comments:

செந்தில்குமார் said...

மீ த ஃபர்ஸ்ட்.. பதிவு போட்ட உடனே.. 'சுடச்சுட' படிச்சுட்டேன் :)

வைரமுத்துவின் வரிகளை அழகா தொகுத்து குடுத்திருக்கீங்க.. மேடைல வைரமுத்து பேசறத கேக்கும்போது அப்படியே புல்லரிச்சிடும் எனக்கு.. கோடம்பாக்கத்துல நான் இருந்தப்போ காலைல வாக்கிங் போகும்போது பல முறை நான் இவரை பாத்திருக்கேன்.. 'தமிழ் நடந்து வந்தா இப்படி தான் இருக்கோமோ' -னு நினைக்கத்தோணும்.. வார்த்தைகளில் இருக்கற கம்பீரம் அப்படியே அந்த மனிதரிடமும் தெரியும்..

உங்களோட பதிவுகள படிக்கும் போது நெறையா கத்துக்க முடியுது. . எழுத்து நடை, அத சரியான அளவுல தொகுத்துக்குடுக்கற திறன்... அருமை.. அட்டகாசம்..

முரளிகண்ணன் said...

வழக்கம் போல கலக்கல்

Anonymous said...

இன்னிக்கு கோபாலபுரம் போகலியா?

அன்புச்செல்வன் said...

\\கவிஞர் சிகரம்’ இந்த கூழாங்கல்லை குனிஞ்சு பாராட்டினதுல மனசே கனிஞ்சுபோச்சு!\\
என்னா தன்னடக்கம்?, தல நீங்க கூலாங்கல்லா? யார் சொன்னது? மாணிக்கக் கல்லுங்க நீங்க...

(அந்தணன் அண்ணா கோவிச்சக்கப்போறாரு அவர் ஏரியா பக்கம் ஒரு எட்டு(?) போய்ட்டு வர்ரேன்)

எம்.பி.உதயசூரியன் said...

//'தமிழ் நடந்து வந்தா இப்படி தான் இருக்கோமோ' -னு நினைக்கத்தோணும்.. வார்த்தைகளில் இருக்கற கம்பீரம் அப்படியே அந்த மனிதரிடமும் தெரியும்..//

வைரங்களையும் முத்துக்களையும் வாரிவழங்குங்க.. செந்தில்குமாரின் இந்த வர்ணனைக்காக!

எம்.பி.உதயசூரியன் said...

முரளிகண்ணன்!
காலைல 'சுடச்சுட' படிச்சு..உடனே
கருத்தும் அனுப்பற உங்களோட ஃபாஸ்ட் புல்லரிக்க வைக்குது!

எம்.பி.உதயசூரியன் said...

//என்னா தன்னடக்கம்?, தல நீங்க கூலாங்கல்லா? மாணிக்கக் கல்லுங்க//

அன்பு அன்புச்செல்வன்... இந்த கூழாங்கல்லை பாராட்டியே மாணிக்கக் கல்லா சுடர்விடவச்சிட்டிங்க!

vinoth gowtham said...

//விகடன் தயாரிப்பல்லவா நீங்கள்! விரைவாக நிறைவாக செய்திருக்கிறீர்கள்!’’//

பெருந்தலயெ சொல்லிவிட்டார் நாங்கள் தனியாக சொல்லவேண்டுமா என்ன..

எம்.பி.உதயசூரியன் said...

//இன்னிக்கு கோபாலபுரம் போகலியா?//

நண்பா..அன்னிக்கு போனது பேட்டிக்காக!

எம்.பி.உதயசூரியன் said...

//பெருந்தலயெ சொல்லிவிட்டார் நாங்கள் தனியாக சொல்லவேண்டுமா என்ன..//

தல.. நீங்க சொன்னாதான இன்னும் நிறைவா இருக்கும்!

தீப்பெட்டி said...

சூப்பர்ப்...

வண்ணத்துபூச்சியார் said...

இதெல்லாம் படிச்ச என்னை போன்ற கூழாங்கல்லும் சலவை கல்லாகும்.

என்ன நடை... தமிழ் உங்களுடன் எல்லா டான்ஸும் ஆடுது..


புத்தக பிரியரின் பதிவுக்காக
வெயிட்டிங்...

Anonymous said...

//எம்.பி.உதயசூரியன் said...

//இன்னிக்கு கோபாலபுரம் போகலியா?//

நண்பா..அன்னிக்கு போனது பேட்டிக்காக!
//

இன்னிக்கும் பேட்டிக்கு நிறைய மேட்டர் இருக்குமே அதுவும் இந்த முறை தளபதிய பேட்டி எடுத்து போட்டீங்கன்ன சிறப்பா இருக்கும்

எம்.பி.உதயசூரியன் said...

//சூப்பர்ப்...//

தீப்பெட்டி!

அப்பப்ப வந்து இப்படி குப்புனு உரசிப்போடுங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//தமிழ் உங்களுடன் எல்லா டான்ஸும் ஆடுது..//

வண்ணத்துபூச்சியார் மாதிரி
ஊக்குவிக்க ஆளிருந்தால்..
என்னை மாதிரி
ஊக்கு விப்பவனும்
தேக்கு விப்பான்!

yrskbalu said...

uday - where is kamal matter

Fernando said...

Uthayasooriyan,
ungaludaya inisial mathiri
viraivil M P aaaaaaaga
vazhthukkal.
anbudan...
swiss fernando

எம்.பி.உதயசூரியன் said...

//uday - where is kamal matter//

YRSKBALU SIR..
INDRU IRAVU 'CHUDACHUDA'
'THALAIVAN IRUKKINDRAAN'!

எம்.பி.உதயசூரியன் said...

//ungaludaya inisial mathiri
viraivil M P aaaaaaaga
vazhthukkal.//

DEAR FERNANDO!
NEENGAL 'THEERKKADHARISI'
ENBADHAI KAALAM SOLLA
VAAZHTHUKKAL!(namma swiss
matter eppadi irukku?)

Suresh said...

கவிஞர் கவியும் உங்க நடையும் அருமை தோழா ;) வாழ்த்துகள் அருமையான பதிவு... உங்களை தொடர்கிறேன் இனி சேர்ந்து பயணிப்போம் இணையத்தில் நண்பர்களாய்

வெங்கிராஜா said...

ஐயா... உங்க காலை காட்டுங்க! என்ன அருமையான நடை! (ஹிஹி.. சும்மா சும்மா)
நிஜமாவே நெம்ப சுவையா இருந்துச்சுங்க... தொடருங்கோ..!

அமர பாரதி said...

//கொக்கோ கோலா நிறம்..கொட்ற கவிதைகளோ
உலகத்தரம்
..இவர் தமிழுக்கு கிடைச்ச தனி வரம்’னு //

//அங்கே பாரதி தெரிந்தான்//

தனி மனிதத் துதியில் தமிழனை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. அதெப்படி எல்லமே உலகத்தரத்தில் இருக்கிறது? கவிதை உலகத்தரம். நாயகன் உலக நாயகன்.

நெல்லைத்தமிழ் said...

‘அருமை உதயசூரியன்! என் சொல்பேச்சை செல்பேச்சாக கேட்டு..நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை மிகப்பிரமாதம். தலைவர் கலைஞரிடம் இப்போதுதான் பேசினேன். உங்களைப்பற்றி சொன்னேன். மிகவும் பாராட்டினார்.


அவர் செல்லியதை விட
நீங்க சொல்லுறதே கவிதை தானே சார். அப்புறம் பேரரசுவின் பாராட்டெல்லாம் பெருசா...

Guru said...

அண்ணே , கலக்குறீங்க. பலதரப்பட்ட நபர்கள், பன்முகமுள்ள கலைஞர்கள், சுவரஸ்யமான நிகழ்வுகள் அதை உங்கள் எழுத்துக்களால் விவரிக்கும் தன்மை வியக்க வைக்கிறது, மேலும் பல சிகரங்களை அடைய வாழ்த்துகிறேன். விவேக் அல்லது வடிவேலு உடனான ஏதேனும் சந்திப்புகள் இருந்தால் பதிவிட வேண்டுகிறேன். நாங்கெல்லாம் மதுரை காரங்கள்ள.

Anonymous said...

மொதலாளி! நான் நேற்றே சொன்ன மாதிரி கோபாலபுரம் போயிருந்தால் பல விஷயங்கள் கிடைத்து இருக்கும், மிஸ் பண்ணிட்டீங்களே

எம்.பி.உதயசூரியன் said...

//சேர்ந்து பயணிப்போம் இணையத்தில் நண்பர்களாய்//

வாங்க SURESH!
'சக்கரை' வரவு!
தொடரட்டும் நட்புறவு!

எம்.பி.உதயசூரியன் said...

//ஐயா... உங்க காலை காட்டுங்க! என்ன அருமையான நடை! (ஹிஹி.. சும்மா சும்மா)//


வெங்கிராஜா! நம்பளைவிட நிம்பள்கி நெம்ப நக்கல்!

எம்.பி.உதயசூரியன் said...

//அவர் சொல்லியதை விடநீங்க சொல்லுறதே கவிதை தானே சார்.//

நெல்லைத்தமிழ்ப்பேரரசுவின் பாராட்டுக்கு பாண்டியநாடு
தலைவணங்குகிறது!

எம்.பி.உதயசூரியன் said...

//நாங்கெல்லாம் மதுரைக்காரங்கள்ள.//

குரு அண்ணே! 'நாங்கெல்லாம்'
இல்ல..நம்மல்லாம்னு சொல்லுங்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

//மொதலாளி!மிஸ் பண்ணிட்டீங்களே//

ஆமா மொதலாளி ஆமா!
கோவிச்சுக்காதிங்க!

எம்.பி.உதயசூரியன் said...

YRSKBALU SIR..

தாமதத்திற்கு வருந்துகிறேன்.
நாளை காலை 'உலக நாயகன்' கமல்..
பதிவில் இருப்பார்!

வண்ணத்துபூச்சியார் said...

பார்த்திபன் மேட்டர் என்னாச்சு..???

எம்.பி.உதயசூரியன் said...

// பார்த்திபன் மேட்டர் என்னாச்சு?//

வண்ணத்துபூச்சியார்.. கமலுக்கு அடுத்து
'புத்தக பிரியர்' பார்த்திபன். PLEASE.

வண்ணத்துபூச்சியார் said...

என்றும் என் மனம் கவர்ந்த உலக நாயகன் மேட்டரா..??


நான் மட்டுமா என்ன..?? இந்த பதிவுலகமே காத்திருக்கும்..

abarna said...

ungal nadai arputham
anja nenjanai paetti eduthu potta innum nalla irukkum

 
சுடச்சுட - by Templates para novo blogger