‘கிறுக்குச் சித்தர்’ கமல்ஹாசன்!

Monday, May 18, 2009

‘சிங்கத்தை அதோட குகையில சந்திக்கணுமா? இல்ல..கமல்ஹாசனை நேருக்கு நேரா பேட்டி எடுக்கணுமா?‘. ‘பேசாம‘ சிங்கத்தையே சந்திச்சிரலாம். ஏன்னா அதுக்கு தமிழ் தெரியாதே!
மத்த நடிகர்கள்மாதிரி மிக்ஸர் தின்னுகிட்டே வெட்டி லெக்சர் அடிக்கிற பிஸினஸ்லாம் கிடையாது. வேதாளம் மாதிரி கேள்விகள் கேக்கணும்..அப்போதான் பாதாளம்வரை பாய்ஞ்சு பதில் சொல்ற கலைஞானியோட மேதாவித்தனத்தை உணரமுடியும்!
அப்படியான அற்புத அனுபவம் ரெண்டுமுறை வாய்ச்சது எனக்கு. முதலாவது..நான் ‘ஆனந்த விகடன்’ நிருபராக இருந்தபோது. ரெண்டாவது..‘தமிழ் சிஃபி.காம்’ இணைய இதழில் எடிட்டராக இருந்தபோது! (‘உலகத் தமிழ் இணைய இதழ்களிலேயே முதல்முறையாக உலகநாயகன் சிறப்பு நேரடிப்பேட்டி தந்தது‘ நமக்குத்தான்!)

‘ஆழ்வார்பேட்டை ஆண்டவன்’ ஆபீஸ். மாடியறைக்கு சுழல் படிக்கட்டுல ஏறிப்போறப்பவே சுத்துது தலை. உள்ளே..கமல்ஹாசனின் அறை. காத்திருந்தேன். கதவு திறந்தது. ‘‘வாங்க’’னு வரவேற்றுகிட்டே உள்ளே வந்தார் கலைஞானி! பார்க்கிற நம்மை ‘ஏதோ ஒரு அவதார புருஷன்’போல ஆக்கிரமிக்கிற கம்பீர அழகு.
வெளிச்சமடிக்கிற கமலின் பார்வையில்..‘கிழிச்சு தொங்கவிடும்’ லேசர் கூர்மை! ‘சொல்லுங்க’ன்னாரு. ஆரம்பிச்சேன்...‘‘முன்னெல்லாம் ‘சுருக்’குன்னு குத்துறமாதிரி கவிதை எழுதுவீங்க. ‘காலையில் எழுந்தால் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’னு ஒரு கேள்விக்கு..‘காட்டில் கிடந்தால் நரி முகத்தில்! கட்டிலில் கிடந்தால் ஸ்த்ரீ முகத்தில்!’’னு பொட்டுல அறைஞ்சமாதிரி அபாரமா பதில் சொன்னீங்க. இப்பவும் எழுதறீங்களா?’’ன்னேன்.
லேசான சிரிப்போடு கமல் ‘‘இப்பவும் எழுதிகிட்டுதான் இருக்கேன். இதுவரைக்கும் எழுதினதை தொகுத்தும் வெச்சிருக்கேன். சுஜாதா முன்னுரையோட ரெடியா வெச்சிருக்கேன். என்னுடைய இந்த மறுபக்கம் நிறைய பேருக்கு தெரியாது!’’ன்னாரு.

அடுத்ததா ‘‘கமலுக்குள்ள இருக்கிற கவிஞனை சினிமாவின் பரபரப்பு சிதைத்துவிடாதா?’’ன்னு கேட்டேன். நாசியையும் மீசையையும் ஒருசேர வருடிகிட்டே கமல் ‘‘எனக்கு கவிதை எழுதற அளவுக்கு ஓய்வுப்பொழுதை தந்திருப்பதே சினிமாதான். இந்த சினிமாவே இல்லைன்னா ஏதாவது ஆபீஸ் போய்கிட்டு,சாப்பிட்டுகிட்டு சும்மா இருந்திருப்பேன்.எனக்கு குதிரைசவாரி தெரியும். ஜாக்கியா கூட ஆகியிருக்கலாம். ஆனா எனக்கு சினிமா மேலதான் ஆர்வம்!’’னு அழகா சொன்னாரு.
அப்போது கமலின் செல் சிணுங்கியது. எடுத்தவர் ‘தசாவதாரம்‘ ஃபிளெட்சர் மாதிரி ‘அமெரிக்க இங்கிலீஷ்‘ல பேசினாரு. அசந்து பாத்த என்கிட்ட ‘‘ஒரு ஃபாரினர் பேசினாரு. அவங்க பாஷைல பேசினா அவருக்கு சந்தோஷம். பெருசா படிக்கலை. எட்டாங்கிளாஸ்தான். ஆனா நிறைய கத்துகிட்டேன்’’னு சிரிச்சார்.

‘சினிமாவுக்காக உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திக்கறீங்களே! கஷ்டமா இல்லையா?’’ன்னேன். கும்முன்னு விம்மி புடைக்கற புஜங்களை கமல் தட்டிகிட்டே ‘‘ஒண்ணுமே பண்ணாம கையை காலை முறிச்சுக்கிறாங்க. அதைவிட தெரிஞ்சே முறிச்சிக்கறதுல சந்தோஷம்தான். உதாரணமா பத்ரிநாத் போற பெரியவங்களுக்கு மூட்டுவலி,தசைப்பிடிப்பு,சுளுக்கு எல்லாம்தான் வருது. அதை அவங்க வலியா நினைக்கறதில்ல. அந்த வலியை சுகமாத்தானே ஏத்துக்கறாங்க. அதேதான் எனக்கும்!’’னு எளிமையா சொன்னார்.
முக்கியமான கேள்விக்கு வந்தேன்.. ‘‘குணா படம் டி.வி.யில போட்டப்போ செம வரவேற்பு. ஆனா ரிலீஸானப்போ ஒடலை. அதேமாதிரி ‘ஹே ராம்..அன்பே சிவம்! ரசிகர்களை மலையேத்தி காட்டணும்னு ஆசைப்படறீங்க. ஆனா ‘தெனாலி’ காமெடி மூலம் தரைக்கே திரும்பி வந்துடறீங்களே! இது உங்களுக்கே முரண்பாடா இல்லையா?’’ன்னேன்.
ஆழமா ஒரு பார்வை பார்த்த கமல் ‘‘என்ன செய்ய? என்னோட மலையேறுபவர்கள் மைனாரிட்டிதான். மத்தவங்க மலையேறிவந்து ‘ஹே ராம்’ மாதிரி படங்களை பாக்கறதே இல்லை. கீழேயே தங்கிடறாங்க. எப்படியோ ‘அன்பே சிவம்’ பேர்ல மலையேறினவன்..‘தெனாலியா’ தரைக்கு திரும்பி வருவான். அப்போ பாத்துக்கலாம்னு இருந்துர்ராங்க. என்னை ஒரு ‘கிறுக்குச் சித்தர்’ மாதிரி பண்ணிட்டாங்க! இது எனக்கும் வசதியா போச்சு!’’னு சொல்லி வாய்விட்டு சிரிச்சார் கமல்.

இப்படி அணில் மரமேறுனமாதிரி பல விஷயங்களை ஆழமா பேசி அலசிட்டு கிளம்பறப்போ கேட்டேன்..‘‘கமல்..ஸ்ரீதேவி, கமல்..ஜோதிகா, கமல்..அசின். வருஷங்கள் ஓடினாலும் கமல்கிட்ட மட்டும் அதே இளமை..அதே துடிப்பு. உங்களோட காயகல்பம்தான் என்ன?’’ன்னேன்.
ரசிச்சு சிரிச்ச கமல் ‘‘காயகல்பமெல்லாம் எதுவும் கிடையாது! நல்ல ஆரோக்கியம்தான் காரணம். இன்னும் பத்துவருஷம் கழிச்சு இந்த கேள்வியை கேக்கமாட்டீங்க!’’ன்னு சொல்லிட்டு..தட்டுல இருந்த கடலை உருண்டைகளை எனக்கும் குடுத்து..தானும் எடுத்து ருசித்தார்!

14 comments:

வண்ணத்துபூச்சியார் said...

me the first..

இருங்க படிச்சிட்டு வரேன்.

வண்ணத்துபூச்சியார் said...

உங்களோட எழுத்துக்கள் தான் எங்களுக்கு காயகல்பம்...

சூப்பர்.

vinoth gowtham said...

//..‘தெனாலியா’ தரைக்கு திரும்பி வருவான். அப்போ பாத்துக்கலாம்னு இருந்துர்ராங்க. என்னை ஒரு ‘கிறுக்குச் சித்தர்’ மாதிரி பண்ணிட்டாங்க! இது எனக்கும் வசதியா போச்சு!’’னு //

Unmai thaan tala.."sagalakala sittar.."..avar..

வண்ணத்துபூச்சியார் said...

ஹையா..... அடுத்து "புத்தகப்பிரியர்"

Anonymous said...

உலகநாயகன்? எந்த உலகம்? கிறுக்கர் உலகம்?

கதிர்வீச்சு said...

இதுக்கு மேல நானும் கடலை உருண்டை தான் சாப்பிடப்போறேன். ரொம்ப நல்லதா சார்? சொல்லவேஇல்ல?

Anonymous said...

ஏய் அனானி! அவர் எப்பவுமே உலக நாயகன் தான். யார் கிறுக்கன்னு இந்த உலகத்துக்கே நல்ல தெரியும்.

ஏய் அந்த மெண்டல் நடிகரோட ரசிகனா நீ ?

சென்ஷி said...

/‘சிங்கத்தை அதோட குகையில சந்திக்கணுமா? இல்ல..கமல்ஹாசனை நேருக்கு நேரா பேட்டி எடுக்கணுமா?‘. ‘பேசாம‘ சிங்கத்தையே சந்திச்சிரலாம். ஏன்னா அதுக்கு தமிழ் தெரியாதே!//

அசத்தல் ஆரம்ப வரிகள்!

Kanna said...

// பெருசா படிக்கலை. எட்டாங்கிளாஸ்தான். ஆனா நிறைய கத்துகிட்டேன்’’னு சிரிச்சார் //

ithuthan avarin verriyin atipadai enru ninaikiren..

nalla pathivu

அன்புச்செல்வன் said...

நீங்க கமலிடம் கேட்பது இருக்கட்டும், நாங்கள் உங்களிடம் கேட்கிறோம் இவ்வளவு handsome-ஆ இருக்கிறீங்களே உங்க 'காயகல்பம்'தான் என்ன? மறைக்காமல் சொல்லுங்க...

vigneshwaran shanmugam said...

சகலகலா வல்லவர் .... தூளு

P.K.K.BABU said...

KAMALODA ILAMI, VETRIYIN RAGASYAM ELLAMAY CINEMA MEALA AVARODA 110% DEDICATION THAAN.ADHA ENDHA PERIYA NADIKANUNGA KITTAYUM PAARKKA MUDIYADHU.EXEPTION SIVAJI MATTUMAY. NADIGAN PUGAZH, AVAN LIMELITE-la IRUKKIRA VAIAKKUMDHAN ,AANA SIDDHAR PUGAZH.......INFINITY.

yrskbalu said...

uday - where is the second time talked matter with kamal

Shango said...

kamal pettigalai rasithu parpavan naan... nan padichu rasithathil idhu mukkiya pangu vagikkindradhu!! universal hero community kamal bhakthargaluku en manamaarndha nandri!!

 
சுடச்சுட - by Templates para novo blogger