கவுண்டமணி காக்டெய்ல்!

Thursday, May 7, 2009


வருஷமெல்லாம் சிரிப்பா சிரிக்கற நம்ம மாதிரி ‘சிரி’யோர்கள்உலகம் பூராவும் ஜோரா கொண்டாடற நாள் மே 7ந்தேதி. அன்னிக்குதான் ‘உலக சிரிப்பு தினம்‘னு எனக்கு நற்செய்தி சொன்ன வண்ணத்துப்பூச்சியாரே..வந்தனம்!


‘32 பல்லும் தெரியறமாதிரி சிரிடா‘னு சொல்வாங்க. கூடவே ஒரு சிங்கப்பல்லும் சேர்ந்து சிரிச்சா சிறப்பா இருக்கும்ல. அதுமாதிரி..நம்ம ‘நகைச்சுவை வகையறா’வில ஸ்ரீதர் சார், அந்தணன், மகேஸ்வர், அன்புச்செல்வன், வண்ணத்துபூச்சியார், உண்மைத்தமிழன், ‘ஏ’, சதீஸ்கண்ணன், அருள், ராஜ், பரத்குமார், பாட்டாளி, ப்ரசன்னராஜன், பாலா, உலவு.காம், ரொம்ப நல்லவன்..ஸ்..சொல்லிமுடிப்பா...
..தலைவர், பிஸ்கோத்துபயல், கிளியனூர் இஸ்மத், அருள்பிரகாஷ், வெங்கிராஜா, ஜோ, ஹாலிவுட் பாலா, கார்த்திகேயன் ஜி, ரங்கராஜன் எஸ், பிரபாகர், வினோத் கௌதம், நவீனன், சுகுமார் ஸ்வாமிநாதன், கேபிள் சங்கர், வந்தியத்தேவன், அப்பாவித்தமிழன், காளி...இப்படியாக இன்னும் தேடிவந்து கூடிச்சிரிக்கற அத்தனை வலைஞர்களுக்கும் இந்த சிரிப்பு பதிவு உரித்தாகுக!

சிலபேரை பாத்தா சிரிப்பு வரும். சிலரோட பேச்சை கேட்டா சிரிப்பு வரும். ஆனா ஒருத்தரை நெனச்சாலே ‘லகலக’ன்னு சிரிப்பு வருதுன்னா.. அவர் சத்தியமா ‘கலகல’ கவுண்டமணிதான்! சிரிப்பு பக்தர்களோட ‘குலதெய்வம்’ நம்ம கவுண்டர்தான்னு சவுண்டாவே சொல்லலாம்.

அதுவும் கவுண்டமணியும் சத்யராஜும் சேர்ந்துட்டா..சிரிக்கற சிரிப்புல உதடுகளே கிழிஞ்சுபோகும்..உலகமே அழிஞ்சுபோகும். அப்படி ஒரு காமெடி இது. ‘அடிதடி’ படத்துக்கு முன்னால இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு படம் கிடையாதுல்ல. இதனால ‘காஞ்சு கருவாடாகி..தேஞ்சு திருவோடாகி’ போயிருவமோனு இவங்க பயந்த நேரத்துல..‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ படம் புக் ஆனது.

ஒருநாள்..அந்த ஷூட்டிங்ல கவுண்டமணியும்,சத்யராஜும் ரிலாக்ஸா உக்காந்துருக்காங்க. அப்போ அசிஸ்டண்ட் டைரக்டர் வந்து ‘‘ஷாட் ரெடி சார்’ன்னாரு, ‘சட்’னு சத்யராஜ் எந்திரிச்சதும்..‘சடக்’னு சத்யராஜோட கையை பிடிச்ச கவுண்டர் ‘‘ஏங்க சத்யராஜ்! உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு. அடுத்த மாச ஷூட்டிங்குக்கு வழியில்ல! கைவசம் புதுசா ஒரு படமும் இல்ல. இந்த லட்சணத்துல..இருக்கற இந்த படத்தையும் ‘விறுவிறு’னு நடிச்சு முடிச்சுட்டா..என்னாகறது நம்ம ஸ்டேட்டஸ்?’’னு காரசாரமா கேட்டுட்டு..

கமுக்கமான வாய்ஸ்ல ‘‘சொல்றத கேளுங்க. ஒவ்வொரு சீனுக்கும் பத்து டேக் வாங்குங்க! சாவகாசமா நடிங்க. அடுத்த படம் புக் ஆகறவரைக்கும் இந்தப் படத்துல நாம பிஸியா இருக்கறமாதிரி ஆக்ட் குடுங்க!’’னுஅட்டகாசமா ஆர்டர் போட..பொறிதெறிக்க சிரிச்சபடி பொட்டிப்பாம்பா அடங்கி டபுள் ஓகே சொல்லியிருக்காரு சத்யராஜ்.

அப்புறம் ஒருநாள்..இதே படத்தோட ஷூட்டிங் ப்ரேக்ல கவுண்டர்கிட்ட மாட்டி மிரட்சியா சிரிச்சிருக்காரு புரட்சித்தமிழன்! எப்படி தெரியுமா? அன்னிக்கு சத்யராஜை ஒரு டைரக்டர் சந்திக்க வரப்போறாரு. அதனால சத்யராஜ்..கவுண்டர்கிட்ட ‘‘அண்ணே..இன்னிக்கு ஏழுமணிக்கு கதை சொல்ல வர்றாங்க. சீக்கிரம் நான் வீட்டுக்கு போகணும்னே!’’னு ஏதோ ஒரு குஷியில ஏழெட்டு தடவை சொல்லிட்டாரு.
அம்புட்டுதான்! வீச்சருவா தூக்காத வீராச்சாமி மாதிரி சத்யராஜை பேச்சாலயே தாக்கி தகர்த்துட்டாரு கவுண்டரு..‘‘சத்யராஜ்! எப்படியும் இந்த கதையை நீங்க கேக்கத்தான் போறீங்க. வேற படமே இல்லாத இந்த சிச்சுவேஷன்ல..அவன் குப்பைக்கதையை சொன்னாலும்..‘ஆஹா! சூப்பர் ஸ்டோரி‘னு புளுகத்தான் போறீங்க. மூணாம்பேருக்கு தெரியாம கதவை சாத்திகிட்டு கதை கேக்கப்போறதுக்கு..எதுக்கு இம்புட்டு பந்தா காட்டறீங்க? ஓவர் பில்டப்ரா சாமீ!’’னு குதறிப்போட சும்மா கதறி சிரிச்சிருக்காரு சத்யராஜ்.

அதேமாதிரி கவுண்டருக்கு இன்னொரு கோவமும் அடிக்கடி வரும். சக ஹீரோக்கள் எல்லாம்,ஹீரோயினை கட்டிப்பிடிச்சதுமே..அடுத்த நொடியில ஃபாரின் போய் குத்துடான்ஸ் ஆடிட்டு வருவாங்க, அவங்க பட்ஜெட் அப்படி! ஆனா கவுண்டர் நடிக்கற கதைப்படி இவருக்கு வாய்க்கிற லொக்கேஷன் எல்லாம் லோக்கல்தானே. நேரா சென்னை டூ பொள்ளாச்சி..இல்லாட்டி கோபிசெட்டிபாளையம்.

இந்த கொலைவெறியோட ஒருதடவை கோபிக்கு கவுண்டர் கோவிச்சுகிட்டே..சத்யராஜோட கிளம்பியிருக்காரு. ஈரோடு ரயில்வே ஜங்ஷன் வந்து இறங்கியதுமே கவுண்டர்..சத்யராஜை பாத்து ‘‘ஆஹா..வந்துட்டோம்ப்பா நம்மளோட சுவிட்சர்லாந்துக்கு! இன்னிக்கு சாயந்திரம் ஆல்ப்ஸ் மலையில ஷூட்டிங்! நாளைக்கு தேம்ஸ் நதிக்கரையில! அடேங்கப்பங்கப்பா!’’னு ‘லவுடு ஸ்பீக்கர் வாய்ஸ்ல‘ சவுண்டுவிட..சுத்தி இருந்தவங்க சிரிச்ச சிரிப்புல காது செவுடு ஆகாத குறைதான்!
ஏழாந்தேதியை கொண்டாடுன ஜாலியோட அடுத்த மேட்டருக்கு போலாமா?

25 comments:

கவிதை காதலன் said...

கவுண்டமணிய நினைச்சாலே
கண்ணுல தண்ணி வந்திடும் சிரிச்சு சிரிச்சு...
அதுவும் வியட்நாம் காலனி படம் மாஸ்டர் பீஸ்.
கலக்கலோ கலக்கல் காமெடி. அது.
சத்யராஜ் படம் எல்லாம் சத்தியமா
கவுண்டமணிக்காகத்தான் ஓடுச்சி.

vinoth gowtham said...

நன்றி தல..
கவுண்டர் லொள்ளு பிடிச்ச ஆளு தான்..
நாளைக்கு எல்லோரும் சிரி சிரின்னு எல்லா பல்லும் தெரியுற மாதிரி சிரிக்கனுமுங்கோ..

vinoth kumar said...

arumai nanba

Sukumar Swaminathan said...

ஆஹா வழக்கம் போல அட்டகாசமான அருமையான மேட்டரு.. . இந்த சிரித்த பதிவை நமக்கு உரித்தாக்குனதுக்கு ரொம்ப நன்றி தல....

pappu said...

inஇந்த ஆல் இன் ஆல் அழகுராஜா ரேஞ்சுக்கு அமெரிகாவுல பொறக்க வேண்டியவன்,... தப்பித் தவறி இங்க பிறந்துட்டேன்..

அன்புச்செல்வன் said...

//தேடிவந்து கூடிச்சிரிக்கற அத்தனை வலைஞர்களுக்கும் இந்த சிரிப்பு பதிவு உரித்தாகுக!//

உங்க அனைத்து பதிவுகளுக்கும் நாங்க புரப்பல்லர்ங்க பாஸ்!

உலக சிரிப்பு தின வாழ்த்துக்கள்!

Sridhar said...

அருமை சார். வழக்கம் போல் கலக்கல்.

(உரிமை வண்ணத்து பூச்சியார்)

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா

Anonymous said...

கவுண்டமணி காமெடி - நெகடிவ் காமெடி. யாரையாவது உரக்க திட்டனும் அல்லது உதைக்கணும். அதிலும் செந்திலுடன் அவர் காமெடி எல்லாமே இந்த ரகம்தான். தமிழ் நகைச்சுவை பஞ்சம் கவுண்டமணி காலத்திலே இருந்துதான் ஆரம்பம். பிற்பாடு வடிவேலு, விவேக் காலங்களில் மாறுபடத் தொடங்கி, இப்போதுதான் தெளிந்து இருக்கிறது.
வாழைப்பழ காமெடி மட்டும்தான் சற்றே தேவலை.

Joe said...

அருமையான பதிவு.
கவுண்டமணி என்றாலே கத்தி பேசுவார், உதைப்பார் என்பது தவறான கருத்து.

அமைதியாக அவர் செந்திலை பார்த்தாலே அவரது முகபாவனை சிரிப்பை வரவழைக்கும்.

அருமையான நடிகர் அவர், நகைச்சுவையில் மட்டுமல்ல, குணச்சித்திர வேடங்களிலும் பரிமளிக்கக் கூடியவர்.

கடைக்குட்டி said...

ஹா ஹா...

செந்தில்குமார் said...

அருமையான பதிவு..

நீங்க சொன்ன மாதிரி கவுண்டர் ஸ்க்ரீன்-ல வந்தாலே சிரிப்பு தானா வந்துடும்... சத்யராஜ் & கவுண்டமணி மாஸ்டர்பீஸ்-ல 'நடிகன்' படமும் சூப்பர்..

உலக சிரிப்பு தின வாழ்த்துக்கள்!

sowri said...

He is one of the best Comedian esp dialogue delivery.

M Bharat Kumar said...

Gud morning pisarrrrrrr........Intha pathivu super...........

கிரி said...

யாருப்பா எங்க ஊரு கோபிய நக்கல் அடிக்கிறது..பிச்சு போடுவேன் பிச்சு :-)

கவுண்டரை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துடும் ..

எந்த காமெடிய சொல்ல..அனைத்தும் அருமை (உள்ளத்தை அள்ளித்தா வரை)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வருது சூரியன் ஸார்..!

ரொம்ப நல்லவன் said...

ஐ... என்ர பேரு "சுடச்சுட" வந்துருச்சுப்பா..

ரொம்ப நல்லவன் said...

ஹாஹாஹா... கவுண்டரு ரொம்ப வெவரமப்பு. புரட்யூசர்தான் பாவம்.

kalai said...

இந்த கவுன்டன் தொல்ல தாங்க முடியலடா சாமி,,
my blog: http://kalakalkalai.blogspot.com/

MAHESHWAR said...

Nanri Sooriyan Nanbare? Smile has got the long way because it has a "MILE" in between. Laughter is the best Medicine and you are doing the wonderful social cause by making others to laugh and keep them hale and healthy, by sharing your experiences. Keep Doing. All the Best. Camp: Mumbai

மாயவரத்தான்.... said...

என்ன ஒட்டன்சத்திரத்தாரே... வெல்கம் டு தமிழ் வலைப்பூ

மாயவரத்தான்.... said...

ஒட்டன்சத்திரத்தாரே... வெல்கம் டு தமிழ் வலைப்பூ

எம்.பி.உதயசூரியன் said...

//ஒட்டன்சத்திரத்தாரே... வெல்கம் //


மாயவரத்தாரே.. நலந்தானா?
''..'ரத்தாரை ரத்தாரே' காமுறுவர்'' என்பது இதுதானா?

வண்ணத்துபூச்சியார் said...

அருமை சார். வழக்கம் போல் கலக்கல்.

(உரிமை வண்ணத்து பூச்சியார்)

ஹா.. ஹா...

கவுண்டரின் காமெடியை விட இது சூப்பர்...

பொள்ளாச்சி போயிட்டு இன்னிக்கு தான் சென்னை திரும்பினேன்.

Vijayasarathy R said...

Yen PiranthanAlaikku Neenga Yellorum Sirichadha Ninaichadha Yenakku Romba Sandhooshama Irukku..

Nanri Suriyan..

 
சுடச்சுட - by Templates para novo blogger