ஹூசைனியின் ‘ஜப்பான் தம்பி’!

Tuesday, May 12, 2009


ஜட்டியை வெளியே மாட்டி..பேன்ட்டை உள்ளே போட்டு ‘சூப்பர்மேனா’ பறக்கணும்னுதான் நெனைப்பு. ஆனா லட்டியால முட்டிய பேத்துருவாங்களே..அதனால ‘விரல் சூப்பற மேனா’ சுத்திகிட்டு திரியற பொழப்பு!

இருந்தாலும் ‘வருந்தாதே மனுஷா’னு இதுலயும் கதிகலக்கற ஒரு விதிவிலக்கு ஆசாமி இருக்காரு. அவர்தான் நம்ம கராத்தே ஷீகான் ஹுசைனி! விட்டா..ஜாக்கிசானையே தூக்கி சாப்புட்டு ஏப்பம் விடுவாரு. சமயங்கள்ல ‘ஜோக்’கிசானா மாரி ஆப்பம் சுடுவாரு.

கராத்தே ஹுசைனி செம ‘பசை’யான பார்ட்டி.
அரசியல்வாதிகளுக்கே அச்சமூட்டற அளவுக்கு அடிக்கடி தன் படம் போட்ட
போஸ்டர்களை அச்சடிச்சு மானாவாரியா சென்னை மாநகர ஏரியா வாரியா மிச்சமில்லாம ஒட்டுவாரு. அசந்தா சீனப்பெருஞ்சுவர்லயே போஸ்டர் ஒட்டவும்
பசையோட நிப்பாரு.

‘‘ஏன் மாஸ்டர் இப்புடி ஒரு பப்புளிசிட்டி’’னு கேட்டேன். ‘‘மொதலாளி..(பாசமா கூப்பிடறது!) பொறந்ததிலேர்ந்தே போஸ்டர் பாத்து வளந்த ஜனங்க நாம! போஸ்டர் இல்லாத ஒரு உலகத்தை நெனச்சு பாருங்க..பக்கத்துல ஒபாமா வந்தாக்கூட ‘ஓரமா போமா’னு சொல்லிரமாட்டமா’’னு கில்லியா லாஜிக் பேசுனாரு. ‘வைகை எக்ஸ்பிரஸ்ஸும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸும்
ஒரே நேரத்துல ஒண்ணா ஓடுற ஸ்பீடுல ஹூசைனி பேசறது செம காமெடி! நிறையா வித்தை தெரிஞ்சவர். செமயா கத்த தெரிஞ்சவர்.
‘ஆனந்த விகடன்’ நிருபராக நான் இருந்தப்போ..நிர்வாக ஆசிரியர் பிரகாஷ் எம்.ஸ்வாமி என்னை கூப்பிட்டு ‘‘ஹுசைனியோட ஒரு அசைன்மென்ட் போங்க. உங்க ஸ்டைல்ல அதிரடியா எழுதுங்க’’னு சொன்னாரு.
போனேன். ஹுசைனியோடு அதுதான் நேரடி முதல் அறிமுகம்.

ரெண்டு பேருக்கும் ஒரே ஊரு..மதுரை. ‘வைகைப்பாசம்..நதியா (நடிகை இல்லிங்க..ஆறு) பாய..நம்ம நட்பு வட்டத்தோட
‘கட்டத்துரையா’ ஆகிட்டாரு ஹுசைனி. எனக்கு இங்கிலீஷ் ‘எஃப்’ எழுத்து மாதிரி ஒரு இரும்பு ஆயுதம் குடுத்தாரு. அதைவெச்சு ஒருதடவை ஒரு
‘சமூகவிரோதியோட’ மண்டைய உடைச்சுருவேன்னேன். இப்போல்லாம் வீட்ல தேங்காய் உடைக்கறது அதுலதான்.

‘‘மொதலாளி..கன்னியாஸ்த்ரீகளுக்கு கராத்தே கத்துத்தர்றேன். மேட்டர் எப்படி’’ன்னாரு. ‘‘சூப்பர்’’னேன். நானும், போட்டோகிராஃபர் கே.ராஜசேகரனும் (நம்ம ‘மாப்ளே’..நிறையா கதை இருக்கு!) ஹுசைனியோட ஜீப்ல கௌம்பினோம். மாதவரத்துல ஒரு சர்ச்ல அம்பது கன்னியாஸ்த்ரீகள் அணிவகுத்து நிக்கிறாங்க. மாஸ்டர் ஹுசைனி தற்காப்பு பயிற்சிகளை சொல்லித்தர..அக்கறையா கத்துக்கறாங்க.

பயிற்சியில ஒருகட்டமா..பாதி சிஸ்டர்க கையில பளீர்னு மின்னுது கத்தி. அதை மீதி சிஸ்டர்க எப்படி தடுத்து,மடக்குறாங்கங்கறதுதான் (கத்தியை அல்ல..கையை!) உத்தி. கையில கத்தியோட மிரட்டற ஹுசைனியை ஒரு சிஸ்டர் சடக்கென முறுக்கி..தன் முழங்காலை மடக்கி ‘ஆயுதபாணி’யான அவரோட அடிவயித்துல ஓங்கி ஒரு அட்டாக் தர..‘ஐயோ’னு அலறி சுருண்டு
விழுந்தாரு மாஸ்டர்.

அட்டாக் சிஸ்டர் ‘கத்திக் குமிக்க’..மற்ற சிஸ்டர்க அரண்டு பாக்க.. ‘க்ளிக்’குன ராஜசேகரும்.நானும் ஓட..கீழே கிடந்த ஹூசைனி ‘‘ஆக்ஷன்
ஓகே.ஆனா அடிவயித்துல பட்டுருச்சு’’னு சிரிச்சுகிட்டே எந்திரிச்சாரு. அப்புற அந்த ஸ்டோரி ‘அமைதிப்புறாக்களுக்கு ஆயுதம் ஏன்?’’ங்கற டைட்டில்ல ‘ஆனந்த விகடன்’ கவர்ஸ்டோரியா வந்து பரபரப்பை கௌப்பிச்சு.

ஒருநாள்..நூறடி ரோட்ல ஆட்டோல போய்கிட்டிருந்தேன். ‘சர்ர்’னு நம்மளை ஒட்டிவந்த ஜீப்புலேர்ந்து ஹுசைனி ‘‘மொதலாளி..அப்படியே ஜீப்ல ஜம்ப் பண்ணுங்க. சுடச்சுட ஒரு சமையல் சூட்டிங் போலாம்’’னாரு!
ஜம்ப்பா..எதுக்கு அந்த ‘ஜம்ப்’பமெல்லாம்’னு ஓரமா ஒதுங்கி ஜீப்ல ஏறினேன்.

ஒரு பங்களா கிச்சன்ல சூட்டிங். அதிரடி சமையல்
மாஸ்டரா ஹுசைனி அவதாரம் எடுத்திட்டாரு. அடுப்பை மூட்டி துடுப்பை
போடறாரு..‘‘அன்பு நேயர்களே..இப்போ நான் கேரட் ஆஃப்பாயில் போடப்போறேன்’’னு சொல்லி..நான்ஸ்டிக் தவாவுல முட்டைய உடைச்சு ஊத்தி,ஸ்டைலா ஓடை தூக்கிப்போட..எல்லோரும் ஏதோ ஒரு அவாவுல எட்டிப்பாக்க..அப்போ ‘ஜஜ்ஜஜ்ஜஜ்ஜ’னு அமானுஷ்யமா ஒரு அலறல் சவுண்டு கௌம்பிச்சு.

‘என்னடாது’னு பாத்தா..தவாவுல வெறும் வெள்ளைக்கருவை மட்டும் ஊத்திட்டு..உள்ளேர்ந்த மஞ்சக்கருவை ஹுசைனி தூக்கிவீசியிருக்காப்ல..அது குறி தவறாம நேரா கேமரா லென்ஸ்ல போய் அப்ப..அப்போ கேமராமேன் போட்ட அலறல்தான் அந்த சவுண்டு. இப்படி ‘கிச்சன் கில்லாடி‘யாவும் மாறி (அடிவயித்தை) கலக்குவாரு நம்ம மாஸ்டர்!

கொஞ்சநாளைக்கு முன்னால..திடீர்னு ஹுசைனிகிட்டேர்ந்து ஃபோன். ‘‘மொதலாளி..நம்ம கெஸ்ட் ஒருத்தர் உங்கள பாக்க ஆசைப்படறாரு. வீட்டுக்கு வர்றீங்களா?’’ன்னாரு. உடனே போனேன். உக்காரவெச்சு உபசரிச்சவரு நிக்காம கொள்ளாம எதையோ தேடிகிட்டே இருந்தாரு. ‘சட்’னு என்னைப்பாத்து கண்ணை சிமிட்டி சிரிச்சுகிட்டேயிருந்தாரு.

‘மனுஷன புழுபூச்சியா நெனைக்கிற உலகத்துல..மாஸ்டர்
நம்மமேல இவ்ளோ பாசமா இருக்காரே’னு எனக்கு அழுவாச்சியா வருது.
அப்போ ‘கண்ணியமான’ ஹுசைனி ‘‘டாய் செல்லம்..என்ன வேணும்?
மொதலாளிய உனக்கு ரொம்ப புடிச்சுபோச்சா? கெட்டியா ஒட்டிகிட்டயே?’’னு என் முகத்தைப் பாத்து ‘அந்நியனா’ பேச..எனக்கோ அடிவயித்துல ‘சங்குசக்கரம்’ சர்ர்ருனுது.

சரியா அதேநொடி யாரோ என் தோள்ல உக்காந்து
காதுக்குள்ள ‘புருபுரு’ செய்றமாதிரி இருக்க..‘சரட்’னு திரும்பிப்பாத்தா..ஐயையோ! பெரிய சைஸ் ஓணானோ..பச்சோந்தியோ..என் தோள்லேர்ந்து வாய் பொளந்து
‘ஹாய்’ சொல்லுது!
குளறி உளறிகிட்டே அலறியடிச்சு நான் ஓட..ஹுசைனி ‘கெக்கெக்கே’னு சிரிச்சுகிட்டே ‘‘மொதலாளி..அவன் நம்ம பையந்தான்(!?). ஜப்பான்காரன். ரொம்ப சாது’’னு சொல்லிகிட்டே அந்த பச்சோந்திய புடிச்சு தன்னோட
தோள்ல விட..அது பச்சக்னு குந்திகிச்சு!

நம்பமாட்டீங்க..அன்னிக்கு ஓடிவந்தவன்தான்! இன்னிக்குவரைக்கும் ஹுசைனி இருக்கற திசை பக்கமே திரும்பலை!

24 comments:

vinoth gowtham said...

எப்பொழுது சரி தமாசு தல நீங்க..பாருங்க சிரிச்சிக்கிடே இருக்கேன்..

Sridhar said...

// ..பக்கத்துல ஒபாமா வந்தாக்கூட ‘ஓரமா போமா’னு சொல்லிரமாட்டமா’’னு //

செம லாஜிக்

// ஏதோ ஒரு அவாவுல எட்டிப்பாக்க தவாவுல வெறும் வெள்ளைக்கருவை மட்டும் //

அருமையான வார்த்தை விளையாட்டு

// ஓணானோ..பச்சோந்தியோ..என் தோள்லேர்ந்து வாய் பொளந்து
‘ஹாய்’ சொல்லுது //

நல்ல திகில் அனுபவம்

prabu said...

padichen vairu kulunga sirichen.

Kanna said...

// ஜம்ப்பா..எதுக்கு அந்த ‘ஜம்ப்’பமெல்லாம்’னு ஓரமா ஒதுங்கி ஜீப்ல ஏறினேன்//

அருமை.. மிகவும் ரசித்தேன்...

// நானும், போட்டோகிராஃபர் கே.ராஜசேகரனும் (நம்ம ‘மாப்ளே’..நிறையா கதை இருக்கு!) //


சொல்லுங்க...சொல்லுங்க

Selva Kumar said...

Sir, neenga romba nalla eluthureenga. But enakku romba pidichadhu neenga title kudukkura vidham than. Hussainin Japan Thambi very nice.

Ukkanthu yosippengalo ?

MAHESHWAR said...

Sir, Vaigai puyal vadivelu & Chinna kalaivanar Vivek matter innum varalaye???? Election Time, Koncham namma arasiyal vathigal matter iruntha nalla irukkum.

எம்.பி.உதயசூரியன் said...

//எப்பொழுது சரி தமாசு தல நீங்க..//

வினோத்! இனம் படும் துயரம் மனசுல!
தினம் ஒரு தமாசு பதிவுல!

எம்.பி.உதயசூரியன் said...

//நல்ல திகில் அனுபவம்//

ஸ்ரீதர் சார்,பொளந்து கட்டறிங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//(நம்ம ‘மாப்ளே’..நிறையா கதை இருக்கு!)சொல்லுங்க...சொல்லுங்க //


கண்ணா.. 'மாப்ளே கதைகள்' கேக்க தயாரா இருங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//enakku romba pidichadhu neenga title kudukkura vidham than.//

selvakumar..namooru neenga!
adhaan 'thalaippu' pudichurukku!
romba sandhosamnga!

எம்.பி.உதயசூரியன் said...

//Koncham namma arasiyal vathigal matter iruntha nalla irukkum.//

THALAIVAA..MADHIPPIRKURIYA AYYA,AMMA,MARUTHTHUVAR,THOZHAR,
CAPTAIN..ATHTHANAI PIRAPALANGALIN
SANDHIPPUGALAIYUM ADUTHTHADUTHU
ANIVAKUKKUM. KAATHTHIRUNGAL!

வண்ணத்துபூச்சியார் said...

hahaha.. Super..

சென்னையில் கொஞ்ச நாளா இவரு போஸ்டரே காணலியே..??

அதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா..??

yrskbalu said...

UDAY- WRITE KAMAL MATTER.

GOOD GOING

அமர பாரதி said...

அருமை உதயசூரியன்.

Subash said...

ஹ1ாஹாஹ

சிரிப்ப நிறுத்த முடியலீங்க

எம்.பி.உதயசூரியன் said...

சென்னையில் கொஞ்ச நாளா இவரு போஸ்டரே காணலியே..??//


வண்ணத்துபூச்சியார்..செமயா வாட்ச்
பண்றிங்க! இதுக்கே சாருக்கு ஒரு போஸ்டர் போடுங்க!

எம்.பி.உதயசூரியன் said...

PRABU..YRSK BALU..

HAPPY. KAMAL SPECIAL STORY
COMING SOON!

எம்.பி.உதயசூரியன் said...

//சிரிப்ப நிறுத்த முடியலீங்க//

Subash..சபாசு!

செந்தில்குமார் said...

உதய் சார்... படிக்கப்படிக்க உங்க பதிவு ஒவ்வொன்னும் புடிக்க ஆரம்பிச்சிடுச்சு... நல்ல நகைச்சுவை.. படித்தேன் சிரித்தேன் !!!

மணல்கயிறு said...

முதல் பத்தியிய படிச்சி சிரிச்சி முடிக்கலாம்னு பார்த்தா அடுத்த பத்தியிலயும் சிரிப்பு பத்திய கொளுத்தி வெச்சு எனன கேப்பே விடாம சிரிக்க வெச்சுட்டீங்க.

அவாவுல பார்த்த தவாவும், ”ஓபாமாவ ஓரமா போமா”ன்னு சொன்னதும், ஜம்ப் அடிக்காம ஜீப்ல தாவினதும், வாய் பொளந்து ஹாய் சொன்ன ஜப்பான் தம்பியும் சூப்பரோ சூப்பர்.

அடிச்சு கிழிக்கற கிழியில சிரிச்சு சிரிச்சு அடிவயிறு கிழிஞ்சு போகுது.

மணல்கயிறு said...

ஃபோட்டோ ரொம்ப இஸ்டைலா இருக்குதுங்கண்ணா...

மணி பார்த்து உங்க சினிமா வாழ்க்கைக்கு மணி அடிச்சு விட்டாலும் ஆச்சர்யபடறதுக்கு இல்ல

வண்ணத்துபூச்சியார் said...

சென்னையில் போஸ்டர் பார்த்தே வளர்ந்தவன்...

அதுவும் ஹீசைனின் போஸ்டர்கள் கருப்பு வண்ணம் மட்டுமே.. தலையில ரிப்பனுடன் ஆக்ரோஷமாக அருள் பாலிப்பார்.

கலர் போஸ்டர்கள் வெகு சில தடவை மட்டுமே... அதுவும் பெசண்ட் நகர் பக்கம் வரிசையாக பார்த்த கவனம்..

என்ன உதய் சார் ...?? ரைட்டா..??

M Bharat Kumar said...

Anna neenga pona assignments ellam vedi sirippu........ahahahahahahahahaha...Ishaq Hussaini pathi sollunga

மணல்கயிறு said...

வ.பூ. சொல்றாப்ல ஹுசைனீ போஸ்டர்கள் வாய பிளந்துகிட்டு போஸ் கொடுக்கறத பார்த்தா நம்ம கையில இருக்குற இட்லி சட்னிய அலேக்கா முழுங்கறாப்லதான் இருக்கும்.

 
சுடச்சுட - by Templates para novo blogger