அத்தை மகள்’ நயன்தாரா!

Sunday, May 10, 2009


நயன்தாராவின் பேரை உச்சரிச்சுட்டு ஒரு ‘மடக்கு’ பச்சத்தண்ணிய குடிச்சா..
வாயெல்லாம் பாயாசமா இனிக்கும். கிண்டலடிக்காம நீங்களும் ட்ரை பண்ணா உங்க வாய்க்கும் அந்த தித்திப்பு வாய்க்கும்!

நயன்தாரா மேல அதீத மயக்கம் நம்ம டீமுக்கே உண்டு, சுருக்கமா
சொன்னா.. ‘குணா’‘ கமலுக்கு அபிராமி. எனக்கு நயன்தாரா. நான் தயாரிச்ச ஒவ்வொரு ‘குங்குமம்’ இதழிலும் கவர்ஸ்டோரி, ஸ்பெஷல் ஸ்டோரி முதல்&நடு&கடைசிப் பக்கம் என நயனின் வசீகர ஸ்டில்களோடு ருசிகரமான செய்திகள் கட்டாயம் இருக்கும். வாசகர்களை வசியம் செய்யணும்னா நயன்தாரா அவசியம்!


ஒரு பிற்பகலில் ‘நயன்தாரா உங்கள சந்திக்க விரும்பறார்’னு அவரோட பி.ஆர்.ஓ. ஜான்சன் எனக்கு ‘செல்’ அடிச்சார். நம்ம பத்திரிகைக்கு ‘எக்ஸ்க்ளூசிவ்
ஸ்டோரி’யுமாச்சு.. நமக்கு ‘பர்சனல் சந்திப்புமாச்சு’னு குஷியா கௌம்பிட்டேன்.


ஏ.வி.எம்.ஸ்டுடியோ.. (பழைய) பிள்ளையார் கோவில் பக்கத்திலுள்ள மேக்&அப் ரூமுக்கு போனேன். ஜான்சன் என்னை அறிமுகப்படுத்த ‘ஹாய்’னு ‘ஹெராயின்‘ புன்னகையோடு கைகுலுக்கினார் ‘ஹீரோயின்’ தாரா. கையை இறுக்க்க்கமா பிடிச்சுகிட்டே அவரை பார்த்தேன். அழகான டிசைன்ல ‘சராரா’ டிரஸ் (பாவாடை&சட்டை)
போட்டு ‘இப்போதான் குளிச்சுட்டு வந்த மாதிரி பளிச்சுனு’ இருந்தார். அந்த அறையெல்லாம் இன்னதென இனம்புரியாத ஒரு உன்னத வாசம் கிறங்கடிச்சது.


விசிட்டிங்கார்டு கொடுத்து என்னைப் பத்தி சொல்லிட்டு.. ‘விசிலடிச்சான்
குஞ்சா’ மாறி நயனோட உதட்டு மச்சம்.. ஆறாவது விரல்னு நான் நுணுக்கமா ரசிச்சுபேச..(புலனாய்வு பத்திரிகையாளர்ல!) ‘‘என்னை இவ்ளோ ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே.. கங்க்ராட்ஸ்’’னு மெய்யாகவே புல்லரிச்சுப் போனார்
நயன்தாரா. அப்புறம் அவர் மனம்திறந்து பேச ஒரு ஸ்பெஷல் பேட்டியும் எடுத்து முடிச்சேன்.

ரசிகர்களை கிறங்கடிக்கற நயன்தாராவை பாங்காக்கில் நடுங்கவெச்ச அந்த
சம்பவத்தை நெனச்சு இன்னமும் நடுநடுங்கிப்போறாரு தாரா. ‘கள்வனின் காதலி’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவோட டூயட் பாட பாங்காக் போயிருக்காப்ல
நயன்தாரா. ஏர்போர்ட்ல இறங்கினா..செம அதிர்ச்சி. கூட்டிடுப்போக புரொடக்ஷன் ஆளுக யாருமே வரல. ஊர் பேர் தெரியாத சிட்டியில ஒத்தையா நிக்கிற
தாராகிட்ட ஏர்போர்ட் ஆபிஸருங்க கிடுக்கிப்பிடி போட்டு விசாரிக்க..விஷயத்தை சொல்லி புரியவைக்க தாராவால முடியல.

இதுக்கிடையில சென்னையிலேர்ந்து நயன்தாரா மேனேஜர் அஜித் பாங்காக் புரொடக்ஷன் பார்ட்டிகளை கான்டாக்ட் பண்ணா..‘நாட் ரீச்சபிள்’னே பதில் வருது. கேக்க நாதியில்லாத கொடுமையை நெனச்சு..பீதியில ஒண்ணல்ல..ரெண்டல்ல..
நாலுமணி நேரமா நடுங்கிப்போயிட்டாரு நயன்தாரா. கடைசியில ஒருவழியா
எஸ்.ஜே.சூர்யாவும், தயாரிப்பு நிர்வாகியும் ஏர்போர்ட் வந்துருக்காங்க.

பாதி நிம்மதியும்,பாதி கோபமுமா தாரா ‘‘உங்களை நம்பிவந்த என்னை இப்படித்தான் தவிக்கவிடுவீங்களா? இரக்கமே இல்லாம நடந்துகிட்டீங்களே’’னு அழுக..ஆறுதல் சொல்லவேண்டிய சூர்யாவோ ‘‘நடந்தது நடந்துபோச்சு. ஓவரா சீன் போடாதீங்க’’னு சொல்ல..கதறி அழுதுருக்காரு நயன்தாரா. அப்புறம் பஞ்சாயத்து பேசி ‘கொஞ்சாம கொஞ்சி’ நடிச்சு முடிச்சுருக்காங்க.

சூர்யா இப்படி தாராவை கண்டுக்காம கலங்கடிச்சதுக்கு ‘தாரா தாராளமா நடந்துக்கல’னு ஒரு ரகசிய கிசுகிசுப்பும் உண்டு. ‘தானா விழுந்தாத்தான் பரிசு!
தடியால அடிக்கறதா பெரிசு? ஆனாலும் நயன்தாரா ‘‘இதுக்கெல்லாம் இவங்கதான் காரணம்னு சொல்லி யாரையும் கஷ்டப்படுத்த விரும்பலை’’னு ‘பொன்மனசோட’ சொன்னப்போ..‘சிறகு முளைச்ச தேவதை மாதிரியே’ தெரிஞ்சாங்க.


நடுநடுவே அவர் என்னை உபசரிச்ச விதமும், பேச்சில் காட்டின இதமும்
பாக்க பாக்க.. ‘‘பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க’’னு ‘குணா’ பாட்டே என்
காதுகள்ல ரிபீட் ஆகிகிட்டிருந்துச்சு.
விடைபெறும் நேரம்.. ‘‘ஒரு ‘கேப்’புக்கு பிறகு என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டை மீட் பண்ணமாதிரி இருக்கு! வெரி ஹாப்பி’னு நயன்தாரா மீண்டும் கைகுலுக்க.. ‘சொந்த அத்தை மகளை விட்டு ஒத்தையா பிரிஞ்சு போற
மாதிரியான ஃபீலிங்ல’ எமோஷனலாயிட்டேன் நான். புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க!

27 comments:

Sridhar said...

/ நீங்களும் ட்ரை பண்ணா உங்க வாய்க்கும் அந்த தித்திப்பு வாய்க்கும்! /

ட்ரை பண்ணலாமா

/ ஒரு ‘கேப்’புக்கு பிறகு என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டை மீட் பண்ணமாதிரி இருக்கு! வெரி ஹாப்பி’னு நயன்தாரா மீண்டும் கைகுலுக்க /

நயன் உங்க ஃப்ரெண்ட் நான் உங்க ஃப்ரெண்ட் அப்போ நயன் என் ஃப்ரெண்டா

/ சொந்த அத்தை மகளை விட்டு ஒத்தையா பிரிஞ்சு போற
மாதிரியான ஃபீலிங்ல’ எமோஷனலாயிட்டேன் /

இருக்கும் இருக்கும். நல்லவேளை "தாரா சரசுக்கு ராரா " அப்படின்னு பாடலை.

சொம்புவும் புயலும் ஆட்டோ அனுப்ப போவதாக தகவல்.

anthanan said...

'ஒருவார்த்தை பேச ஒரு வருஷம்.....'ங்கிற பாட்டை திரும்ப திரும்ப போட சொல்லி 'பார் பையனோட' நோயர் விருப்பமா இருந்தமே, அதச் சொல்லலியே அண்ணா?

அந்தணன்

எம்.பி.உதயசூரியன் said...

//சொம்புவும் புயலும் ஆட்டோ அனுப்ப போவதாக தகவல்.//

சார்..பிச்சு பீஸ்ஸ் பிரிச்சுட்டிங்க! ஆட்டோல 'தாரா ராரா'வா?

எம்.பி.உதயசூரியன் said...

//ஒருவார்த்தை பேச ஒரு வருஷம்.....'ங்கிற பாட்டை போட சொல்லி 'பார் பையனோட' நோயர் விருப்பமா இருந்தமே, அதச் சொல்லலியே அண்ணா?//

அண்ணா...நீங்க'பார்'ப்பிங்கனு விட்டுட்டேன்!

செந்தழல் ரவி said...

அண்ணே,

பதிவை போட்டதும், தமிழ்மணம் கருவி பட்டையில் உள்ள அனுப்பு பொத்தானை ஒரு க்ளிக் செஞ்சுருங்க..!!!

Sukumar Swaminathan said...

ஓஹோ... அப்ப 'நயன்' பேட்டியில் ஒரு 'பயன்' இருந்ததுன்னு சொல்லுங்க

vinoth gowtham said...

//ஒருவார்த்தை பேச ஒரு வருஷம்.....'ங்கிற பாட்டை திரும்ப திரும்ப போட சொல்லி 'பார் பையனோட' நோயர் விருப்பமா இருந்தமே, அதச் சொல்லலியே அண்ணா?//

இது வேற நடந்து இருக்கா..

//சொந்த அத்தை மகளை விட்டு ஒத்தையா பிரிஞ்சு போற
மாதிரியான ஃபீலிங்ல’ எமோஷனலாயிட்டேன்//

அவங்களும் சொந்த அத்தை மகன விட்டு பிரிஞ்ச மாதிரி பீல் பண்ணதா கேள்வி..

எம்.பி.உதயசூரியன் said...

செந்தழல் ரவி.. வெரி ஹாப்பி!
க்ளிக் செஞ்சுட்டேன்.
சுடச்சுட அடிக்கடி வருக!

எம்.பி.உதயசூரியன் said...

//அப்ப 'நயன்' பேட்டியில் ஒரு 'பயன்' இருந்ததுன்னு சொல்லுங்க//


ஆஹா..ஓஹோ..சுகுமார்!
என் செல்வமே..'அயன்'மாதிரி
அசத்திட்டிங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//அவங்களும் சொந்த அத்தை மகன விட்டு பிரிஞ்ச மாதிரி பீல் பண்ணதா கேள்வி..//

வினோத்..புரிஞ்சுகிட்டிங்க!
தான் ஆடாவிட்டாலும் சதையாடும்ங்கறது
இதுதான்!

முரளிகண்ணன் said...

எங்கேயோ பார்த்த மயக்கம்

வண்ணத்துபூச்சியார் said...

‘‘பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க’’னு ‘குணா’ பாட்டே என் காதுகள்ல ரிபீட் ஆகிகிட்டிருந்துச்சு. /////////


காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க... இது அடுத்த வரி...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எவ்ளோ மச்சமய்யா இருக்கு இந்த உதயசூரியனுக்கு..?

அத்தை மகளுக்கு உதட்டுக்கு மேல..

இவருக்கு உடம்பு பூராம் இருக்கும் போலிருக்கு..

தமிழ்நெஞ்சம் said...


Politicians' Drama 2009

எம்.பி.உதயசூரியன் said...

தமிழ்நெஞ்சமே.. புரிஞ்சுக்கங்க!?!

எம்.பி.உதயசூரியன் said...

//காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க...//

காத்திருந்த ''வரிகள்''
இங்கு காண கிடைக்க..!
திருப்தி வண்ணத்துபூச்சியார்!

எம்.பி.உதயசூரியன் said...

//எவ்ளோ மச்சமய்யா இருக்கு //


உண்மைத்தமிழன் அண்ணே.. மச்சம்தான் மிச்சம்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

//எங்கேயோ பார்த்த மயக்கம்//

முரளிகண்ணன்.. 'நச்'சுனு சிச்சுவேஷன் சாங்.. பிச்சுட்டிங்க!

Bhuvanesh said...

//வினோத்..புரிஞ்சுகிட்டிங்க!
தான் ஆடாவிட்டாலும் சதையாடும்ங்கறது
இதுதான்//


அத்த மக.. சதை ஆடும்.. இதுக்கு என்னங்க அர்த்தம்?

vinoth kumar said...

very lucky man

வண்ணத்துபூச்சியார் said...

Sunday Present..

Monday Absent...

Why..????????

எம்.பி.உதயசூரியன் said...

// Sunday Present..

Monday Absent...

Why..???????//

வண்ணத்துபூச்சியார்..
b'coz 'SUN' DAY!
he..hee.. NAALAI SEMA JOLLY
MAATER VARUDHU..ENJOY!

Ananth said...

அதெல்லாம் சரி, நயன் ஏன் போட்டோவில் கோபமாக இருக்காங்க?

நெல்லைத்தமிழ் said...

நடுநடுவே அவர் என்னை உபசரிச்ச விதமும், பேச்சில் காட்டின இதமும்
பாக்க பாக்க.. ‘‘பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க’’னு ‘குணா’ பாட்டே என்
காதுகள்ல ரிபீட் ஆகிகிட்டிருந்துச்சு.
அண்ணே நீங்க உயர்ந்த பத்திரிகையாளர்... ஆனாலும் மனசில் தோன்றியதை பட்டவர்தனமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் எழுத்து நடை அழகு. அதுசரி விசிலடிச்சான் குஞ்சுங்கிற பேர்ல எழுதினது நீங்கதானா...

abarna said...

hi udhaya suriyan
enakku unga pathivum anthanan pathivum romba pidikkum
americala irukkara engalukku unga pathiva padicha ulloorela irukkara mathiri irukkum.nan pakkira ellarttayum tamilish.com site paththi sollraen.
regards
abarnashankar

எம்.பி.உதயசூரியன் said...

//விசிலடிச்சான் குஞ்சுங்கிற பேர்ல எழுதினது நீங்கதானா..//

தித்திப்பு நெல்லைத்தமிழ்!
எம்.பி.உதயசூரியன்ங்கிற சொந்த பேர்
தவிர மத்த எந்த பேரிலும் நான் எழுதறதில்லை.

எம்.பி.உதயசூரியன் said...

ANBU ABARNASHANKAR!

NEENGA AMRERICAVILA IRUNDHAALUM
ULLOORLA IRUKKARAMAADHIRI..
ADHUVUM NAMMA 'LOLLU OORLA'
IRUKKARA MAADHIRIYAANA
SANDHOSATHAI NAMMA EZUTHU
THARUDHUNNU SOLREENGALEE..

IDHUDHAAN ENGA PAAKKIYAM!
ENGAL ANBAIYUM NANDRIYAIYUM
SOLLA VERILLAI VAAKKIYAM!

 
சுடச்சுட - by Templates para novo blogger