‘நிலா’..ராத்திரி..எஸ்.ஜே.சூர்யா!

Tuesday, May 5, 2009


‘உனக்கான அரிசியில் உன் பெயர் எழுதியிருக்கும்’ங்கறது வேதவாக்கு. ஆனா..ஏ.ஆர்.ரகுமான் வீட்டு பிரியாணியில எஸ்.ஜே.சூர்யா பேரும்,என் பேரும் எழுதியிருந்துச்சு பாருங்க..அதை நினைச்சு இப்பவும் சப்புக்கொட்டுது நாக்கு!

டைரக்டர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யான்னாலே கொஞ்சம் பேஸ்து அடிச்சமாதிரி தெரியும். நல்லா பழகிட்டா அவரும் ஒரு நல்ல தோஸ்துனு புரியும். டபுள் மீனிங் இட்லியில.. செக்ஸ் சட்னி,விரச சாம்பார்னு குழப்பி அடிச்சு கிளப்பி விடறதுதான் சூர்யாவோட பட மெனு.
அப்படித்தான் இவரு ‘பி.எஃப்.’னு டைட்டில் வெச்சு கலாச்சார ஃபைட்டில் முடிஞ்சு..பிறகு ‘அ.ஆ’ படமா விடிஞ்சது. அந்த படத்தோட சென்சார் நடக்கறப்போதான்..சென்சார் அதிகாரி மேல கோபப்பட்டு,செல்போனை (வேற இடத்துல) வீசுனாருன்னு சூர்யாமேல வந்தது வம்பு வழக்கு.

இதுபோதாதா? அத்தனை பத்திரிகைகளோட ‘எழுத்துக்களுக்கு சூர்யா மையா’ ஆனாரு. அப்படித்தான் நானும் பேசினேன். ‘‘உங்க பேரென்ன சொன்னீங்க?’’ன்னு ரிபீட் கேட்டாரு. சொன்னேன். என்ன தோணிச்சோ..‘‘இன்னிக்கு நைட் பத்து மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோக்கு வாங்க’’ன்னார்.
போனேன். கேஸு கோர்ட்டுனு அலைஞ்சாலும் காஷுவலா தன்னோட மைத்துனரோட உக்காந்திருந்தாரு. அறிமுகப்படுத்திகிட்டேன். ‘‘காபியா..ஜூஸா..என்ன வேணும்?’’ன்னார். ‘‘பேட்டி வேணும்’’னேன். ‘ஹக்’னு சிரிச்சவர் ‘‘உண்மைய சொல்றேன். உங்க பேரை கேட்டதுமே..உங்களை பாக்கணும்னு தோணிச்சு. பாப்பாங்குளம் பாரதிகிட்ட(நம்ம நிருபர்) உங்களைப்பத்தி கேட்டேன். ‘ரொம்ப ஜாலியான டைப்’னு சொன்னாரு. ஒரு எடிட்டரா இல்லாம..பெஸ்ட் ஃபிரெண்டா பேசலாம்’’னாரு. ‘‘..லாமே’’ன்னேன்.
களைகட்டுச்சு கச்சேரி. அப்போ ஜூஸும்,காபியும் ஒண்ணா வந்தது. ‘‘ரெண்டையும் எப்படி குடிக்கறது?’’ன்னேன். ‘‘காமெடியா..காபி எனக்கு’’னு எடுத்து உறிஞ்சியவர்..அறிஞ்சும் அறியாம பண்ண விஷமங்களேர்ந்து, தெரிஞ்சே பண்ண விஷயங்கள்வரை மனசு திறந்து பேசுனாரு. ‘எஸ்.ஜே.சூர்யா..நடிகை நிலா காதல்’ கிசுகிசு அப்போ பரபரப்பா உலா வந்த நேரம்.
கோட்டைக்குள்ள பூந்து சேட்டை பண்றதுதான் நமக்கு வாய்வந்த கலையாச்சே! அன்னிக்கு பாத்து நல்ல நிலா வெளிச்சம் வேற. நைஸா நான் ‘‘ஏந் தலைவா(நெருங்கிட்டோம்ல!) இப்படி நிலாவை பாத்துகிட்டே பேசறதுன்னா உங்களுக்கு ரொம்ப புடிக்கும்போல!’’ன்னேன். ஒருநொடி ‘பக்’குனு ஆன சூர்யா ‘ஹக்’னு சிரிச்சுகிட்டே ‘‘கடவுளே! போண்டா கடிச்சு..ஃபேன்டா குடிச்சு..கடேசில அனகோன்டாவையே அடிக்கிறீங்களே’’ங்க..குபீர்னு சிரிச்சோம்.

அடுத்த சந்திப்பு..‘குங்குமம்’ இதழில் ‘மக்கள் பேட்டி’னு ஒரு பகுதியை ஆரம்பிச்சோம். அந்த பேட்டிக்காக சூர்யாவை ஃபிக்ஸ் பண்ணேன். அப்போதான் ‘தலைவா’னு நான் கூப்பிடப்போக..‘தலைவாழை இலை’ போட்டு இசைப்புயல் வீட்டு பிரியாணியை சாப்பிட கூப்பிட்டாரு சூர்யா.
‘ஒரு அரிசிக்கு ஒரு கறி’ன்னு எண்ணிப்போட்டு அபாரமா பண்ணியிருந்த பிரியாணியை சூர்யாவும் நானும் பின்னி எடுத்தோம். (நல்ல நண்பர்களை ‘கடவுளே’னு செல்லமா கூப்பிடறது சூர்யாவோட பழக்கம்!). ‘‘கடவுளே..இது லெக் பீஸ். நல்லா சாப்பிடுங்க. பர்சனாலிட்டியை மெய்ன்டெய்ன் பண்ணுங்க’’னு எல்லா கறியையும் எனக்கே சூர்யா பரிமாற..‘‘தலைவா..நீங்கதான் கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்க. நல்லா வெட்டுங்க’’னு நான் அவருக்கு அள்ளிவைக்க..‘சாப்பாட்டு ராமன்..லட்சுமணனா’ ஒரு பாசப்பந்தியே அங்கே நடந்துச்சு.
பிரியாணி செரிக்கணுமேனு ஃப்ரீயா பல மேட்டரை பிரிச்சு மேஞ்சோம். ‘‘தலைவா..உங்க படத்தோட ஹீரோயின்ங்களை ஏன் உரிச்ச கோழியா காட்டி உப்புக்கண்டம் போடறீங்க’’ன்னேன். ‘‘கடவுளே..ஏதோ முனியாண்டி விலாஸ் ஓனர்கிட்ட கேக்கறமாதிரி கேக்கறீங்களே! ஹீரோயின்னாலே கிளாமர் தூக்கலாத்தான் இருக்கணும். கோழின்னா குருமால வெந்துதானே ஆகணும்!’’னாரு சீரியஸா.

‘‘உண்மையை சொல்லுங்க..நீங்க ஒரு சக்சஸ்ஃபுல் ஹீரோவா?’’ன்னு கேட்டேன். கூலா சிரிச்சவர் ‘‘நம்புங்க கடவுளே! நான் தலைகாட்டற முதல் சீன்லயே..ஏதோ அம்பது படங்கள்ல நடிச்ச ஹீரோவுக்கு கிடைக்கற ரேஞ்சுக்கு கிளாப்ஸும்,விசிலும் தூள்பரத்துதே. இதுக்கு பேர்தானே சக்சஸ்ஃபுல் ஹீரோ’’ன்னு தனக்குத்தானே ‘பட்பட்’னு கைதட்டிகிட்டு சூர்யா பேசுனது சுவாரஸ்யம்!

கிளம்பறப்போ ஒரு கேள்வியை சவுண்டா கேட்டேன்..‘‘அது ஏன் உங்க படங்கள்ல கவுண்டமணி மாதிரி ஹைபிட்ச்சுல கத்தறீங்க?’’. பதிலுக்கு ‘‘நல்லா கேட்டீங்க! நாம எந்த வேலை செஞ்சாலும்..பெரிசா தண்டோரா போடமுடியலைன்னாலும், அட்லீஸ்ட் சின்னதா ஒரு தகர டப்பாவையாவது வெச்சு தட்டி சவுண்டு தரணும். இல்லேன்னா காதடைச்ச பூமியில கண்டுக்காம போயிடுவாங்கன்னு நீங்க அன்னிக்கு சொன்னீங்களே..அதே பாலிஸிதான் எனக்கும் கடவுளே!’’னு ‘பூமராங்’ விட்ட சூர்யாவுக்காக இந்த தடவை நான் கைதட்டினேன். எஸ்..ஜே!

19 comments:

vinoth gowtham said...

ஜாலியான மனிதர் தான்..

Indy said...

Me the second :-)
SJ is a hero hero hero!!!

M.P.UDAYASOORIYAN said...

VINOTH G..INDY..INDHA NILAA RAATHTHIRIYILA 'SOORIYAVAI' CHUDACHUDA PADICHCHADHU..
'NILAA CHORU' SAAPPITTA
MAADHIRI IRUKKU!

Sridhar said...

நிலா ராத்திரி தலைப்ப பார்த்தவுடன் செம லெக்பீஸ் காரசார மாட்டர்னு நினைச்சேன்.நீங்க நிஜ பிரியாணியை பிரிச்சு மேஞ்சிரிக்கீங்க.

வண்ணத்து பூச்சியார் வந்து வசபாட போறார்.

M.P.UDAYASOORIYAN said...

//வண்ணத்து பூச்சியார் வந்து வசபாட போறார்.//

சார்.. நிஜமா ஜாலி மேட்டர்தான்!
வண்ணத்துப்பூச்சியார் காரசாரமா நினைச்சு வந்து செமயா பிரிச்சு மேஞ்சுரப் போறார்! பார்த்துக்கங்க.

அப்பாவி தமிழன் said...

ஜூப்பர் தலிவா தமிளிஷ் மற்றும் தமிழ்10 ல ஒட்டு போட்டுட்டேன்

செந்தில்குமார் said...

தலைப்புல 'நிலா' 'ராத்திரி' & S.J.சூர்யா-னு படிச்ச உடனே... செமத்தியான ஏதோ மேட்டரு சொல்ல போறீங்க-னு ஆவலா வந்தேன்... :)

பிரியாணி விஷயத்த படிச்சுட்டு வாய்ல எச்சி ஊற பின்னூட்டமிடுகிறேன்.. ஹ்ம்ம்.. சிக்கன் பிரியாணி சாப்ட்டு ரொம்ப நாள் ஆன ஏக்கத்த உங்க பதிவு இன்னும் அதிகமாக்கிடுச்சு !!

Manikandavel said...

S.J. Surya ivlo jolly'ya person'a?,

M.P.UDAYASOORIYAN said...

//ஜூப்பர் தலிவா.. ஒட்டு போட்டுட்டேன்//

ஒட்டு போட்ட என் 'அப்பாவித்தமிலா'! நீதான் நிஜ 'உடன்பிறப்பூ'..
ரத்தத்தின் 'றத்தம்' !

M.P.UDAYASOORIYAN said...

//ஏதோ மேட்டரு சொல்ல போறீங்க-னு ஆவலா வந்தேன்... :)// செந்தில்..லெக்பீஸ் மேட்டர்ல!
செமயாதான் எதிர்பார்ப்பாங்க போல!
அப்பாவி வாலிபன்..what can i do?

தமிழ்ப்பறவை said...

’மேட்டர்’லாம் நல்லா ஜாலியா இருக்குது.

M.P.UDAYASOORIYAN said...
This comment has been removed by the author.
M Bharat Kumar said...

Anna...Naan thaan unga chinna thambi BHARATH................

Engalukku intha S J Suryah, Namitha pathivugal innum adhigam thevai.............Ungal sevai athigam thevai...........

M.P.UDAYASOORIYAN said...

//S J Suryah, Namitha pathivugal innum adhigam thevai..//

பரத்..வாம்மா செல்லம்!
'THAMBI'YODA VIRUPPATHTHAI
POORTHI PANRAHUDHAANE
'MOORTHIYODA'..SORRY..
ANNANODA VELAI. DONE!

M.P.UDAYASOORIYAN said...

//மேட்டர்’லாம் நல்லா ஜாலியா இருக்குது.//

பறந்து வந்த தமிழ் வருக!
படிச்சு சிரிச்சு வாழ்க!

Joe said...

ஒரு நடிகராக, இயக்குனராக அவரைப் பிடிக்காதவர்களுக்கு கூட எஸ் ஜே சூர்யாவை ஒரு ஜாலி-ஆன மனிதராக பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவரது பேட்டிகளில் பொதுவாக பாசாங்கில்லாத பதில்கள் கிடைக்கின்றன.

மஞ்சள் ஜட்டி said...

செம்ம கெளப்பி மேட்டர் ஆ இருக்கும் ன்னு நெனச்சி வந்தேன்..உதயா சார்!! சப்பையா ஆக்கிட்டீங்களே?? குரங்கு வாழ் கூட்டுக்குள்ள போயிடுச்சே??

வண்ணத்துபூச்சியார் said...

I am Pure Vegetarian. அதனால தான் இந்த பதிவு இப்படியா உதய் சார்..??

இருந்தாலும் நல்லாதான் இருக்கு வெஜ் பிரியாணி...

Anonymous said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

 
சுடச்சுட - by Templates para novo blogger