ரஜினியின் ஜீபூம்பா!

Monday, May 4, 2009


‘திருப்பதிக்கு வந்தா உதைப்பேன்’னு தன் கல்யாணத்தப்போ நிருபர்களை எச்சரிச்ச அதே ரஜினி..‘‘வாங்க வாங்க’’னு திருப்பதியில எங்களை வாயார வரவேற்றது ‘சூப்பர் திருப்பம்’ல. அந்த அனுபவம் இது.

..அப்போ நான் ‘ஜுனியர் விகடன்’ நிருபர். இணை ஆசிரியர் மதன், துணை ஆசிரியர் ராவ்..ரெண்டு பேரும் என்னை கூப்பிட்டு ‘‘ரஜினி திருப்பதிக்கு போறாரு! நீங்களும் கூடப்போயி கலர்ஃபுல்லா ஒரு ரிப்போர்ட் குடுங்க’’னு அசைன்மென்ட் தந்தாங்க.

ரஜினியோட சேர்ந்து நானும்,ஃபோட்டோகிராபர் பொன்ஸீயும் திருப்பதிக்கு கிளம்பறதா திட்டம். ஆனா வேறொரு மேட்டர்ல நாங்க லேட்டாகிப்போக.. ரஜினி ‘ஆகாய வழியாவும்,நாங்க தரை வழியாவும்’ ஒருவழியா திருப்பதிக்கு போய்ச்சேர்ந்தோம். கீழ்திருப்பதியில ரூம் போட்டு கொஞ்சம் இளைப்பாறிட்டு..மலையேறிட்டோம்.

‘தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா’னு பாடுன ரஜினி முதல் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்,பழம்பெரும் நடிகை பானுமதி உட்பட 11 பேருக்கு தேவஸ்தான உறுப்பினர்களாக மேல்திருப்பதியில் பதவி ஏற்பு விழா! உலகம் முழுக்க உலாவற ரஜினி ரசிகர்களே..உங்களுக்கு தெரியும்ல.. ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு கிடைச்ச முதல் அதிகாரபூர்வ பதவி இதுதான்னு!
மலையில..‘கோயிந்தா கோயிந்தா‘னு ஒரு கோஷ்டியும்,‘பெத்தராயுடு’னு மறு கோஷ்டியும் ஓட..கோந்து போட்டு ஒட்டினமாதிரி பெத்தராயுடுகளோட சேர்ந்து ஓடினோம். (அப்ப தெலுங்குல ரஜினி,மோகன்பாபு நடிச்ச ‘பெத்தராயுடு’ செம ஹிட்!) ரஜினியை பாக்க கோயில்ல கட்டுக்கடங்காத கூட்டம். நல்லவேளை..ஜூ.வி. நிர்வாக ஆசிரியரா இருந்த பிரகாஷ் எம். ஸ்வாமி சார், கோயில் சீஃப் செக்யூரிட்டியான நாயுடுகிட்ட எங்களைப்பத்தி சொல்லியிருந்தாரு.

நாயுடு சாரை பாத்து பேசினதால..‘பெத்தராயுடு’ பக்கத்துல ஈஸியா போனோம். தர்மவாசல் கேட் வழியா வெள்ளைவெளேர் பட்டுவேட்டி,சட்டையோட ரஜினி வர..கூடவே லதாவும்,மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யாவும் வந்தாங்க. நாயுடு ரஜினிகிட்ட போய் ‘‘இவங்க ஜூனியர் விகடன். உங்கள பாக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தாங்க’’னு சொன்னார். உடனே ரஜினி ‘‘வாங்க வாங்க! எப்போ வந்தீங்க?எங்கே தங்கியிருக்கீங்க?’’னு விசாரிச்சுட்டு ‘‘எங்கூடவே வாங்க. கூட்டம் ஜாஸ்தி..ஜாஸ்தியா இருக்கில்ல’’னு கேட்டுட்டு வெளியே வந்தாரு.

ரஜினியோட ரெண்டு சைடும் செக்யூரிட்டிகள் மாதிரி நின்னுட்டிருந்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும்,சந்திரபாபு நாயுடுவும் எங்களையே ‘‘எவர்ரா நுவ்வு..ஏமிரா காவால?’’ங்கற மாதிரி பாக்க..நான் பொன்ஸீகிட்ட ‘‘என்னண்ணே..நம்மளையே முறைக்கிறாங்க. நாம ப்ரஸ்னு தெலுங்குல சொல்லுங்க’’ன்னேன்.

சட்னு இதை கவனிச்ச ரஜினி, அவங்களை பாத்து ‘‘இவங்க நம்ம ரிப்போர்ட்டர்ஸ். என்னோட பதவியேற்பு விழாவுக்கு மெட்ராஸ்லேர்ந்து வந்திருக்காங்க’’னு ஜாலியா சொல்லி சிரிக்க..அப்புறம்தான் ‘பாபுவும்,நாயுடுவும் நவ்லேரு’ (ஹிஹிஹி!). நுழைவாசல்லயே ரஜினி கால்மணி நேரமா ‘தேவுடு’ காத்திருக்க..கூலிங் கிளாஸ் போட்ட ‘தேவுடு’வா முதல்வர் என்.டி.ராமராவும், துணைவி சிவபார்வதியும் வந்தாங்க.
மூலவரோட கர்ப்பக்கிரஹத்துக்கு நேரெதிர்ல போர்வை விரிச்சிருக்க..அதுல உக்காந்து உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்தாங்க. தெலுங்குலயே பதவிப்பிரமாணம் எடுத்த ரஜினி சட்னு எமோஷனலாகி கண்ணு கசிய ‘‘ரொம்ப தேங்க்ஸ் அண்ணா! நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன்’’னு தமிழ்ல சொல்லிகிட்டே மூணு தடவை என்.டி.ஆரோட காலைத்தொட்டு கும்பிட..இதை எதிர்பாக்காத என்.டி.ஆர். அப்படியே பதறி ரஜினி கையை பிடிச்சிகிட்டாரு.

அந்த சமயம் பாத்து கீழே விழுந்த என் பேனாவை எடுக்க நான் குனிய..பக்கத்துலேர்ந்த ஒரு அர்ச்ச்கர் ‘‘நூறேல்லு ஆயுசு’’னு ஆசிர்வதிக்க..வேற வழி? அவர் காலை நான் தொட்டு கும்பிட..சிரிப்பை ‘ம்யூட்’ பண்ணி சிரிச்சாரு பொன்ஸீ.
அடுத்து நடந்ததுதான் செம காமெடி..திடீர்னு என்.டி.ஆர். ‘குடிக்க தண்ணி வேணும்’ங்கற மாதிரி தன்னோட சிஷ்யர் கிட்ட சிக்னல் காட்டினாரு. உடனே அவர் பக்கத்துலேர்ந்த அர்ச்சகர் பாய்ஞ்சுபோயி ஒரு செம்புல தண்ணிய கொண்டுவந்து தந்தாரு. அதே செகண்டு..அந்த சிஷ்யர் ஃபிளாஸ்க்கை திறந்து கஷாயம் போல ஒரு வஸ்துவை ஊத்தித்தர..‘ஏமிரா..மீ புத்தி செடி போயிந்தா’ங்கற மாதிரி என்.டி.ஆர். எரிச்சலா பாக்க..உஷாரான ரஜினி ‘தேவுடு’ கேட்டதை சிஷ்யர்கிட்ட கரெக்ட்டா சொல்ல..‘சொய்ங்’னு என்.டி.ஆர். கைக்கு வந்துசேர்ந்தது மைக்!

மைக்கை புடிச்ச என்.டி.ஆர். கொஞ்சநேரத்துக்கு ‘ஜெமினி சேனலை’ ஓட்டினாரு. பதவியேற்பு விழா முடிஞ்சு வெளியே வர்றப்போ..ஐஸ்,சௌந்தர்யா ரெண்டுபேரையும் கொஞ்சிகிட்டே சிவபார்வதியும்,லதாவும் பேசிகிட்டு வந்தாங்க. இந்த அட்டாச்மென்ட்டை பொன்ஸீ ஃபோட்டோ எடுத்ததுமே..சரட்டுனு ரஜினி கண்ணுல தீக்குச்சி உஷ்ணம்.(ரஜினி தன்னோட மகள்கள் பத்தின நியூஸோ,ஃபோட்டோவோ வர்றதை கண்டிப்பா தவிர்த்த காலகட்டம் அது!)
உடனே ஒரு ஸ்டெப் பின்னால வந்த ரஜினி என் தோளை அழுத்தித்தொட்டு ‘‘உதய்..(தலைவனோட ஞாபகசக்தி!) என் டாட்டர்ஸ ஃபோட்டோ எடுக்கறத நான் விரும்பல. எடுத்த ஃபோட்டோஸையும் போடவேணாம்..ப்ளீஸ்! ஓகே’’னு சொல்லிட்டு. பொன்ஸீயை பாத்தும் ‘கூடாது’ங்கற மாதிரி தலையை ஆட்ட..புரிஞ்சிகிட்டாரு பொன்ஸீ.

மலையிறங்கி வந்த எனக்கும்,பொன்ஸீக்கும் கொலைப்பசி. தலைவாழை இலை போட்டு ‘ஆந்திரா மீல்ஸையும்,கோங்குரா சட்னியையும்’ கலந்து அடிச்சிட்டு ரூமுக்கு வந்து கட்டையை சாச்சோம். சாயந்திரம் திருப்பதி ஸ்டேடியத்துல ரஜினி மீட்டிங்.
தமிழ்நாட்டுல ரஜினி..ஜெயலலிதா மோதல் உச்சகட்டமா இருந்த சிச்சுவேஷன் அது. திருப்பதியில மேடையேறும் ரஜினி..தான் அரசியலுக்கு வர்றது பத்தி சூப்பரா ஒரு அறிவிப்பு செய்வார்னு தமிழ்.தெலுங்கு ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் இப்போ மாதிரியே அப்பவும் ஆவலா காத்துகிட்டிருந்தாங்க!

மேடையேறுன ரஜினி அரள வைக்கப்போறார்னு பாத்தா..அஞ்சே நிமிஷத்துல பேசிமுடிச்சு கண்ணை இருள வெச்சுட்டாரு..‘‘அண்ணன் என்.டி.ஆர். இந்த கவுரவத்தை எனக்கு தந்திருக்காங்க. மக்களுக்கு சேவை செய்ய எந்த பதவியாக இருந்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன். இது என்னோட முதல் பதவிப்பிரமாணமா..இல்ல..கடைசி பதவிப்பிரமாணமாங்கறது ஆண்டவனுக்குத்தான் தெரியும்!’’னு வழக்கம்போலவே ‘ஆப்பு’ வெச்சிட்டு இறங்கிட்டாரு.

‘ரஜினியின் அரசியல் வரலாறு ஆரம்பமானபோது உதயசூரியனும்,பொன்ஸீயும் உடனிருந்தார்கள்’னு ஒரு தனி வரலாறு படைக்கலாம்னு நாங்க போட்ட கணக்கு..கடைசியில ‘மொட்டைக்கணக்கா’ போச்சு!

19 comments:

Sukumar said...

// அரசியலுக்கு வர்றது பத்தி சூப்பரா ஒரு அறிவிப்பு செய்வார்னு தமிழ்.தெலுங்கு ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் இப்போ மாதிரியே அப்பவும் ஆவலா காத்துகிட்டிருந்தாங்க! ///

எப்பயுமே காத்துகிட்டே இருக்க வேண்டியதுதான்னு நெனக்கிறேன்... சூப்பர் பாஸ்... நல்ல அனுபவம்....

Sridhar said...

இது என்னோட முதல் பதவிப்பிரமாணமா..இல்ல..கடைசி பதவிப்பிரமாணமாங்கறது ஆண்டவனுக்குத்தான் தெரியும்!’’னு வழக்கம்போலவே ‘ஆப்பு’ வெச்சிட்டு இறங்கிட்டாரு.

தலைவருக்கு எப்பவுமே ஒரே பேச்சுதான். இன்னுமா இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு!!!!!!!!!!!!

butterfly Surya said...

உங்களை மாதிரி ஆட்கள் தான் இப்படி உசு உசுப்பேத்திய அவரை ரணகளமாக்கிடிங்க...

அதுவும் ஜு.வி ... ஸ்... தொல்ல்லை தாங்க முடியலை அந்த காலகட்டத்துல...

உதய் சார்.. தெலுகு மீ கு பாகனே ஒஸ்துந்தி... மன்சிதி...

இங்க ஒக பிளாக் தெலுகுலோ ஒப்பன் செய்யண்டீ...

butterfly Surya said...

நியூட்டன் மூன்றாம் விதி ஸ்பெஷல்.. எஸ்.ஜே சூர்யா பற்றி பதிவேதும் இல்லையா..??

பங்காரு அடிகள் பதிவு மாதிரி சேம் சைட் கோல் போட கூடாது...

Anonymous said...

Athu bedrayuduvoda silver jubliee funcitionu nenaikuranga....NTR was heading the function.

Selva

எம்.பி.உதயசூரியன் said...

//எஸ்.ஜே சூர்யா பற்றி பதிவேதும் இல்லையா..??//

ஆகா..தலைவா!
அடுத்த பதிவு எஸ்.ஜே சூர்யா பத்திதான்! கில்லாடிங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//எப்பயுமே காத்துகிட்டே இருக்க வேண்டியதுதான்னு நெனக்கிறேன்//

வாங்க சுகுமார்!
சூப்பரா காத்துகிட்டேடேடேடேடே
இருக்கறதும் நல்ல அனுபவம்தான்!

எம்.பி.உதயசூரியன் said...

//தலைவருக்கு எப்பவுமே ஒரே பேச்சுதான். இன்னுமா இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு!!!!!!!!!!!!//

சார்..இதுதான் 'சூப்பர் ஆப்பு’ங்கிறதா?!

எம்.பி.உதயசூரியன் said...
This comment has been removed by the author.
செந்தில்குமார் said...

உதய் சார் .. பதிவ படிச்சு முடிக்கும்போது திருப்பதி-க்கே வந்து நேர்ல இதெல்லாம் பாத்த மாதிரி ஒரு உணர்வு கெடச்சுது... ரொம்ப அழகா, தெளிவா எழுதி இருக்கீங்க... இந்த மாதிரி படிச்சதுக்கு அப்புறமாவது நான் ஒழுங்கா எழுதறேனா-னு பாக்கறேன் :)

S.J.சூர்யா பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !!

ஈ ரா said...

//‘ரஜினியின் அரசியல் வரலாறு ஆரம்பமானபோது உதயசூரியனும்,பொன்ஸீயும் உடனிருந்தார்கள்’னு ஒரு தனி வரலாறு படைக்கலாம்னு நாங்க போட்ட கணக்கு..கடைசியில ‘மொட்டைக்கணக்கா’ போச்சு!//

----

தல ,

கவலைப்படாதீங்க....

உங்க கணக்கு கொஞ்சம் லேட்டா வொர்க் அவுட் ஆகும்...

அன்புடன்

ஈ ரா

எம்.பி.உதயசூரியன் said...

//திருப்பதி-க்கே வந்து நேர்ல பாத்த மாதிரி ஒரு உணர்வு கெடச்சுது.//

செந்தில் சார்.. நம்மகூட சேர்ந்து மலையேறிட்டிங்க! கமண்ட்டே இம்புட்டு அழகா,எழுதி இருக்கீங்க!'வெல்க'ம்!

வினோத் கெளதம் said...

Super Matter sir..

Nags said...

ஆஹா .. தலைவர் பற்றிய பதிவு.. நல்ல பதிவு. நன்றி உதய்..

KADKAT / Qatar said...

Interesting to read. He is in right path. I like him.

கிரி said...

அப்படியே சைக்கிள் கேப்ல தலைவரை வாரி இருக்கீங்க.. இருக்கட்டும் இருக்கட்டும்

எம்.பி.உதயசூரியன் said...

//சைக்கிள் கேப்ல தலைவரை வாரி இருக்கீங்க//

கிரியும்.. ஈரா வும் கில்லாடிங்க! VINOTH GOWTHAM..NAGS நம்ம மாதிரி அப்பாவிங்க! இருக்கட்டும் பாஸ்!

Simple_Sundar said...

அதென்னவோ தலைவரை பத்தின பதிவு என்றாலே அதுக்கு ஒரு தனி எதிர்பார்ப்பு வந்துடுது.

படிக்க வர்ற ரஜினி ரசிகர்களை மனசுல வெச்சுக்கிட்டு சொல்ல நினைச்ச சில விஷயங்களை அமுக்கின மாதிரி தெரியுது....

எப்படியோ, தலைவர் ரொம்ம்ம்ம்ப லேட்டா வந்தாலும் நிச்சயம் லேட்டஸ்ட்டா வருவார்.

- சுந்தர்

Anonymous said...

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! செம காமெடி !

 
சுடச்சுட - by Templates para novo blogger