தம்பிக்கு’ ஒரு பாட்டு!

Tuesday, May 19, 2009


நான் செத்துப்பொழைச்சவன்டா...எமனைப்
பாத்து சிரிப்பவன்டா!
வாழைபோல வெட்டவெட்ட முளைச்சு
சங்குபோல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா!...வந்தா
தெரியும் சேதியடா!

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு...மக்கள்
சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு!
குண்டுகள் போட்டு துளைச்சாங்க...ஆனா
காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க!
சந்தனப்பெட்டியில் உறங்குகிறார் அண்ணா..
சரித்திரப்புகழுடன் விளங்குகிறார்!
எதையும் தாங்கும் இதயம் கொண்டு...‘அண்ணன்’
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு!

‘அண்ணன்’ அன்று நல்ல நல்ல கருத்து
அழகுத்தமிழில் சொல்லிசொல்லிக் கொடுத்து
வளர்ந்த ‘பிள்ளை’யடா...அதனால்
தோல்வி இல்லையடா!

பரம்பரை ரத்தம் உடம்பிலேதான்...அது
முறுக்கேறிக் கிடப்பது நரம்பிலேதான்!
கொடுப்பதைக் கொடுத்தா தெரியுமடா...உன்
இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா!

காலம்தோறும் குட்டக்குட்டக் குனிந்து
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டுக் கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா...எதிர்த்தால்
வாலை நறுக்குமடா!

படம்: எங்கள் தங்கம் பாடல்: வாலி

14 comments:

vigneshwaran shanmugam said...
This comment has been removed by the author.
vigneshwaran shanmugam said...

வீரவணக்கம்!

ருத்ரன் said...

மீண்டும் வருவோம்;
துரோகிகள் கூட்டம் ஒழிப்போம்.

Karthikeyan G said...

வீரவணக்கம்!

வினோத் கெளதம் said...

தல

அவர்கள் வாழ்வில் அமைதி பிறக்க வேண்டும்..
அவர்களும் மற்றவர்களோடு சேர்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும்..

butterfly Surya said...

மாவீரர்களுக்கு மரணமில்லை.

வீரர்கள் புதைக்கபடுவதில்லை.
விதைக்கப்படுகிறார்கள் - பகத்சிங்

biskothupayal said...

வீரவணக்கம்!

ரொம்ப நல்லவன் said...

>>வாழைபோல வெட்டவெட்ட முளைச்சு
>>சங்குபோல சுடச்சுட வெளுத்து
>>வளரும் ஜாதியடா!...வந்தா
>>தெரியும் சேதியடா!

வழிமொழிகிறேன்.

Sridhar said...

வீரவணக்கம்!

Anonymous said...

மொதலாளி! ரொம்ப டைமிங்கா பாட்டு எல்லாம் போட்டு அசத்துறீங்க

அன்புச்செல்வன் said...

நானும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

வீரனுக்குச் சாவே இல்லை. வீரமும், நெஞ்சின் உறுதியும் மரணத்தை வென்று நிலைத்த புகழ் தரும்.

வீரவணக்கம்!

MAHESHWAR said...

Veera Vanakkam

எம்.பி.உதயசூரியன் said...

வாய்மொழி மவுனமானதுல
மறுமொழிக்கு வாய்ப்பில்லை!
"மாவீரரோடு" மீண்டும் சந்திப்போம்!

Joe said...

நன்றி உதயசூரியன் அண்ணே!
பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.

இப்போது நாம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவுவது என்று சிந்திக்க வேண்டும்.

 
சுடச்சுட - by Templates para novo blogger